நாயும் மனிதனும்

படுபயங்கரமான ஓநாய், சாதுவான செல்ல நாயாக உருமாற்றமும் மன மாற்றமும் அடைவதற்கு குறைந்தது 15000 ஆண்டுகள் முதல் ஒரு லட்சம் ஆண்டுகள் வரை பிடித்தன என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

கடித்துக்குதறி, மனிதனுடைய சதையைத் தின்று மகிழ்ந்த ஓநாய், மனிதனிடைய கட்டளைக்குக் கீழ்ப்படியும் நல்ல தோழனாக மாறியதற்கு மனிதனிடைய சகவாசமே காரணம் என்கிறார்கள்.

 

மனிதன் முதலில் நாய்களைத்தான் வசப்படுத்தி, வேட்டையாடவும் ஆடுமாடுகளை மேய்ப்பதற்கு உதவவும் பயன்படுத்தினான் என்கிறார்கள். இவ்வாறு மனிதனுடன் சேர்ந்து வாழத் தொடங்கியதால் நாய்க்குணம் மாறி விட்டது.

 

சில சமயங்களில் பரிமாற்றம் ஏற்பட்டு விட்டது என்று சொல்லலாமா?அது தான் சிலர் நாய்போல வள்வள் என்று வி முந்து பிடுங்குகிறார்களே!சரி விடுங்கள்.

 

மனிதனுடன் சேர்ந்து வாழத் தொடங்கியதால் நாய்க்கும் மனிதனைப் போலவே மரபணுக்கள் அனமயத்தொடங்கி விட்டன. மஸா சூஸட்ஸ் தொழில் நுட்பக் கழகத்திலும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும் கெர்ஸ்ட்டின் லின்ட் பிளாட் தோ தலைமையில் ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் நாய்களிடம் 39 ஜோடி குரோமோ சோம்களும், மனிதனிடம் 23 தோடி குரோமோசோம்களும் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

 

மேலும், நாயின் 240 கோடி DNA எடுத்துக்களை வரிசைப்படுத்தி நாய் மரபணுக் குறியீடு ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த எழுத்துக்களில் ஒன்று இடம் மாறினாலும் போதுமாம் நாயின் குணம் மாறிவிடுமாம்.

 

முடிப்பதற்கு முன்னால் ஒரு துவைக்கச் செய்தி.

 

இன்றைக்கு உலகில் சுமார் நாற்பதாயிரம் கோடி நாய்கள் இருக்கின்றன என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

 

http://tamil.cri.cn/1/2006/03/20/இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.