கடவுள் மனிதனைப் படைத்தார் என்பது, உலகப்பொது நம்பிக்கை, இந்த நம்பிக்கை தொய்ந்து துவண்டு போகாமல் இருப்பதற்காக, ஏதேன் தோட்டம், ஆதாம் ஏவாள், ஆப்பிள் என்று ஏதேதோ கதை கட்டி மக்களைக் கற்பனை உலகில் ஆழ்த்தினர் மதவாதிகள்.

 

ஆனால், இத்தகைய மத அடிப்படை வாதிகளின் கற்பனாவாதத்தைத் தவிரு பொடியாக்கும் வகையில், இந்தப் பூமியில் உள்ள உயிர் நிலையானதல்ல. என்றென்றும் மாறிக்கொண்டே இருப்பது என்ற திடுக்கிடும் ஒரு உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டினார், சார்லஸ் சார்வின் என்ற விஞ்ஞானி. அவர், உயிர்களின் பரிணாம வளர்ச்சியை ஆராய்வதற்காக கரபகோஸ் தீவுகளை தனது ஆய்வுக் கூட்டமாக்கினார். 1860ம் ஆண்டில் உயிர்களின் பரிணாம வளர்ச்சி என்ற கோட்பாட்டை டார்வின் முன்வைத்த பிறகு, மனிதர்களும் எண்ணற்ற உயிரினங்களும் எவ்வாறு தோன்றின என்ற பழமைவாதக் கண்ணோட்டத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. எந்த ஒரு மாற்றம் ஏற்பட்டது. எந்த ஒரு விஷயத்தையும் அறிவியல் நோக்கோடு ஆராயும் ஒரு போக்கு உருவெடுத்தது.

 

ஆனால் இந்த முன்னேற்றப் போக்கில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தும் ஒரு முயற்சி அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. அறிவுத் திட்டம் என்ற பெயரில், அமெரிக்காவிலுள்ள பொதுப் பன்னிகளில் அறிவியல் வகுப்புக்களை நடத்தும் போது, கோட்பாடுகளைக் கற்பிக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். மனிதனுடைய பரிணாமம் பற்றி மாணவர்களுக்கு விளக்கும் போது, இறுதியிலே ஒரு படைப்பாளி இருந்தார் என்ற எண்ணத்தை அவர்களின் உள்ளத்தில் பதிய வைப்பதே, இந்த முயற்சியின் நோக்கம் என்று டார்வின் ஆதரவாளர்கள் கூறி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தங்களது எதிர்ப்புக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில், அண்மையில், நியுயார்ககிலுள்ள அமெரிக்க இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் டார்வின் பொருட்காட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளனர்.

 

2006 மே 29 வரை தொடர்ந்து நடைபெற உள்ள இந்த டார்வின் பொருட்காட்சியில், டார்வினின் ஆராய்ச்சியுடன் தொடர்புடைய பல பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவர் ஆராய்ச்சிக்காக முதலில் கரபகோஸ் தீவுக்கும், இதர தென்னமெரிக்க ஊர்களுக்கும் சென்ற போது சேகரித்த பொருட்கள் இவை. இவற்றிலே முக்கியமானவை உயிருள்ள இரண்டு ஆமைகள், ஒரு பச்சோந்தி, கொம்பு முளைத்த தவளை போன்றவை. இந்தப் பொருட்காட்சி ஒரு தலைப்பட்டமாக எந்தக் கோட்பாட்டையும் ஆதரிக்க வில்லை என்று அருங்காட்சியக அதிகாரிகள் கூறினாலும், புஷ் மற்றும் மதத்தலைவர்களின் அறிவுத்திட்டத்திற்கு எதிரானது இது என்று பத்திரிகையாளர்கள் கருதுகின்றனர்.

 

அறிவியல் மற்றும் டார்வின் பற்றப் பேசும் நாம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய வேளை வந்து விட்டது என்று அமெரிக்க இயற்கை அறிவியல் அருங்காட்சியகத்தின் புரவலர் TOM BROKAW கூறுகிறார்.

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.