காடுகளில் புலி வேட்டாக்குப் போவார்கள். மான் வேட்டைக்கும், பறவைகளை வேட்டையாடவும் பெரிய மனிதர்கள் போவார்கள். ஆனால், சீனாவில் ஒருவர், கடந்த இரண்டாண்டுகளாக காடுகளில் சுற்றித்திரிந்து கொசு வேட்டையாடிக் கொண்டிருக்கிறார். இவருடைய நோக்கம் கொசுக்களை வேட்டையாடிக் கொல்வது அல்ல. அவற்றைப் பிடித்து ஆராய்கிறார்.

 

இந்தக் கொசு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர் லியாங்கோதூங். கிருமி இயல் கழகத்தில் துணை இயக்குநராக இருக்கும் இவர் தலைமையில் ஒரு ஆராய்ச்சியாளர்களின் குழு, பூச்சிகளின் மூலமாகப் பரவும் நோய்க் கிருமிகள் பற்றி ஆராய்ச்சி செய்துவருகிறது. இதுவரை, இத்தகைய நூற்று இருப்பதி மூன்று நோய்க்கிருமிகளைக் கண்டறிந்துள்ளநர். இவற்றில் ஐந்பத்தொன்று கிருமிவகைகள் இதற்கு முன்பு அறியப் படாதவை.

 

கொசு ஈ, அந்துப் பூச்சி, மூட்டைப் பூச்சி என்று ரத்தத்தை உறிஞ்சும் பூச்சி வகைகள் பயங்கரமான நோய்க்கிருமிகளைப் பரப்புகின்றன. இந்தப் பூச்சிகளின் உடம்பில் ஏறும் கிருமிகள், பூச்சிகளின் உடம்பிலேயே பல்கிப் பெருகுகின்றன. ஆனால் பூச்சிகளைப் பாதிப்பதில்லை. அவற்றின் மூலமாக மற்ற பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் தொற்றுகின்றன. இவ்வாறு பரவும் நோய்களில் முக்கியமானவை ஜப்பானிய மூளைக் காய்ச்சல் டெங்கு காய்ச்சல், மேற்குநேல் கிருமிக் காய்ச்சல், பிளவுப்பள்ளத் தாக்கு காய்ச்சல், கொசுக் கடித்து அதனால் பரவும் இந்த நோய்களின் பொதுவான அறிகுறி சாதாரணக் காய்ச்சலும், தடுமம் பிடிப்பதும் தான் ஆகவே மக்கள் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. கொசு கடித்தது கண்டிலர், இறந்தது கேட்டனர் என்ற நிலையில் அடுக்கடுக்காக ஆட்கள் சாகும் போது தான் குய்யோ முறையோ என்று புலம்புகின்றனர்.

 

கிழக்கு சீனாவின் செச்சியாங் மாநிலத்தின் ஒரு கிராமத்தில் ஒரு கோடைகாலத்தில் இரண்டு பேருக்கு திடீரென செங்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதன் அறிகுறி மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை காய்ச்சல், கடுமையான தலைவலி, வயிற்றுக்கோளாறு, தோலில் தடிப்புக்கள் இதை உறவினர்கள் கண்டுகொள்ள வில்லை. என்ன செய்யும், காய்ச்சல் தன்னால் போயிரும் என்று அலட்சியமாக இருந்தனர். கடைசியில் சில நாட்களில் அந்தக் கிராமத்தில் பாதிப்பேர் பலியாகி விட்டனர். அந்த இரண்டு பேரைத் தடைக்காப்பில் வைத்து பராமரித்திருந்தால் கிராமத்தைக் காப்பாற்றி இருக்க முடியும் என்று கூறுகிறார் லியாங் கோ தூங்.

 

பறவைகள் மூலம் கிருமிகளால் சீனாவில் லட்சக்கணக்கான சாவுகல் நிகழ்ந்துள்ள போதிலும், 1950களில் முப்பதைந்து வகைக் கிருமிகள் தான் கண்டறியப்பட்டன.

 

அதன் பிறகு நுண்ணுயிரி ஆராய்ச்சியில் தீவிர முன்னேற்றம் ஏற்பட்டதாலும், இராணுவத்தின் கிருமி ஆயுதத் தடுப்பு முயற்சிகளாலும் பூச்சி மூலம் பரவும் 1992க்குள் 1535 வகைக்கிருமிகள் கண்டறியப்பட்டன. இவற்றில் நூறு வகை மனிதர்களுக்கு நோய் வெப்ப மண்டல நாடுகளில் தான் இந்தக் கிருமிகள் மும்முரமாகப் பரவுகின்றன.

 

நோய் தொற்றிய பகுதிகளுக்கு லியாங் கோ தூங் தலைமையிலான குழு சென்று கொசுக்களைப் பிடித்து ஆராய்ச்சி செய்கிறது. கண்ணை மூடித்திறப்பதற்குள் மாயமாய் மறைந்து விடும் கொசுக்களை பாடிப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அவற்றைப் பிடித்தவுடனே திரவனநட்ரஜன் உள்ள கெட்டிலில் போட்டால் தான், கிருமி உயிருடன் இருக்கும். ஆனால், அதற்குள் பிடிப்பவர்களின் கைகளை யே பதம் பார்த்து விடும் கொடுக்களால், கிருமி தொற்று உண்டாகிவிடுகிறது. கனமான திரவநேட்ஜன் கெட்டில்களை சுமப்பதோடு, முழுக்கைச் சட்டைகளை அணிய வேண்டியுள்ளது. வெப்பமண்டலக்காடுகளில் முழுக்கைச் சட்டை அணிந்து அலைந்தால், வியர்வையில் கசகசக்கிறது. இவ்வளவு கஷ்டங்களுக்கு இடையிலும் கடந்த இரண்டாண்டுகளில் ஒரு லட்சத்து பத்தாயிரம் பூச்சிகளை வியாங் கோ தூங் சேகரித்துள்ளார். இப்போதைய நிலைமையில், பூச்சிமூலம், பரவும் கிருமிகளைத் தடுப்பதற்கு தடுப்பூசிமருந்து தான் சிறந்த வழி என்கிறார் லியாங்.

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.