02082023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

உலக மக்கள் தொகை - ஒரு பார்வை

ஜூலை 11ம் நாள் உலக மக்கள் தொகை நாள். 1987ம் ஆண்டு ஜூலை 11ம் நாளன்று உலக மக்கள் தொகை 5 பில்லியன் அதாவது 500 கோடியை தொட்டது. அந்நாளான ஜூலை 11ம் நாளை உலக மக்கள் தொகை நாளாக அறிவித்து, உலக மக்கள் தொகையின் மாற்றம் மற்றும் போக்கை அறிந்துகொள்ளவும், அதன் பாதிப்புகள் மற்றும் விளைவுகளை ஆய்வு சேய்யவும் ஐ.நா மக்கள் தொகை நிதியம் முடிவெடுத்தது. தற்போது உலக மக்கள் தொகை சுமார் 650 கோடி. ஆண்டுதோறும் 1.14 விழுக்காடு இத்தொகை அதிகரித்து வருகிறது. 1804-ல் 100 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை, 1927-ல் 200 கோடியாகி, 1960-ல் 300 கோடியாகி 39 ஆண்டுகள் கழித்து 1999ல் இரண்டு மடங்கானது, அதாவது 600 கோடியானது. 2050ம் ஆண்டில் 900 கோடியாக உலக மக்கள் தொகை பதிவாகும் என்று கணிக்கப்படுகிறது. அதிலும் பெரும்பாலான மக்கள் தொகை அதிகரிப்பு ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க பகுதிகளில் அமையும் என்கிறார்கள்.

 

தற்போதைய உலக மக்கள் தொகையில் பாதியளவு 25 வயதுக்கு உட்பட்டோம். இளைமையான உலகம் நம் உலகம் அல்லவா. அதிலும் 57 வளரும் நாடுகளில் 40 விழுக்காட்டுக்கு மேலான் மக்கள் தொகையினர் 15 வயதுக்கு உட்பட்டவர்கள். ஏறக்குறைய 3 பில்லியன் அதாவது 300 கோடி குழந்தைகள் அல்லது இளைஞர்கள் குழந்தை பெறும் பருவத்தினர் அல்லது குழந்தை பெறும் பருவத்தை, நிலையை விரைவில் அடையவுள்ளனர். இதற்கு பொருள்...உலக மக்கள் தொகையை பெருக்குவதும், சுருக்குவதும் இளைஞர்களின் கையில்தான் உல்ளது என்பதாகும். இளைஞர்கள் வருங்காலத்தூண்கள் என்று சொல்வது சாலப்பொருந்தும் வார்த்தைகள்தான்.

 

வளரும் நாடுகளில் உள்ள 10லிருந்து 24 வயதுடைய 150 கோடி இளைஞர்கள் மத்தியில் குழந்தை பெறுவது, தாம்பத்திய உறவு, இல்லற வாழ்க்கை இவைபற்றிய அறிவும், விழிப்புணர்வும் அவர்கலின் எதிர்கால வளர்ச்சிக்கும், உலகின் எத்ரிகாலத்திற்கும் அவசியமானவையாகின்றன.

 

அந்தக் காலத்தைப்போல் சிறுவயதிலேயே திருமணம் முடிக்கும் வழக்கம் தற்போது பரவலாக இல்லை. பெரும்பாலான நாடுகளில் சராசரியாக 18 வயது கடந்த பின்னரே திருமணத்தைப் பற்றி யோசிக்கின்றனர். அதிலும் நவநாகரீக, கணிப்பொறி யுகத்தில் திருமணங்கள் இளைஞர்களைப் பொறுத்தவரை 20தின் இறுதியில் அல்லது 30தின் தொடக்கத்தில்தான் சரியென்று நினைக்கின்றனர். என்றாலும் புள்லீவிபரப்படி பெரும்பாலான மக்கள் பெண்களுக்கு உரிய திருமண வயது 18 என்ற சிந்தனையில் இருக்க, வளரும் நாடுகளில் தற்போது 10 முதல் 17 வயது வரையுள்ள 8.2 கோடி பெண்கள் தங்களது 18வது வயதில் திருமணமாகிவிடும் நிலை உள்ளது.

 

20 வயதுகுட்பட்ட பெண்கள் குழந்தை பெறுகின்ற நிலை வளரும் நாடுகளில் காணப்படுகிறது. இளம்வயதில் மகப்பேறு என்றால், அவர்களுக்கும் சரி, அவர்கலுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் சரி உடல் ரீதியில் அப்யகரமான ஒன்றே. உலக அளவில் 15 முதல் 19 வயது வரையுள்ள பெண்களில் ஏற்படும் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் கர்ப்பம், குழந்தைபேறு அக்கியவை. குறிப்பாக குழந்தைபிறப்பிலான சிக்கல், பாதுகாப்பற்ற கருக்கலைப்பு ஆகியவை உயிர்பலிவாங்குகின்றன.

 

இதைவிட கொடுமையான ஒரு புள்ளிவிபரம், ஒவ்வொரு நாளும் ஏற்படும் எய்ட்ஸ் உயிர்கொல்லி நோய் நிலையின் மூலமாகிய எச் ஐ வி வைரஸ் தொற்றின் பரவலில் பாதியளவு, எறக்குறைய 6000 பேர் இளம் வயதினர். அதிலும் விகிதாச்சார அளவின்றி இலக்காவது பெண்கள். 24 வயதுகுட்பட்ட எச் ஐ வி,எய்ட்ஸ் உள்லவர்களில் 3ல் 2 பங்கினர் பெண்கள்.

 

http://tamil.cri.cn/1/2006/07/17/இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.