சலவாயில் சுரப்பியின் தீங்கற்ற மிகைவளர்ச்சி


Benign Prostatic Hypertrophy [BPH]

தேங்கு பையிற்குக் கீழே இலந்தைப் பழ அளவுள்ள சிறுநீர்ப்பை சலவாயில் சுரப்பி வீக்கமடைதலே சலவாயில் சுரப்பியின் தீங்கற்ற மிகைவளர்ச்சி (Benign Prostatic Hypertrophy [BPH]) எனப்படும்.

 

இதன் போது உண்டாகும் இவ்வீக்கம் சலவாயில் சுரப்பியினூடாக செல்லும் சிறுநீர் வடிகுழாயை அழுத்துவதனால் இதில் நடைபெறும் நீரோட்டத்தினளவைத் தடை செய்யும். ஆனால் இது சிறுநீர்ப்பை சலவாயில் சுரப்பிப் புற்று நோயல்ல. இது பொதுவாக 50 வயதிற்கு மேற்பட்ட 25 வீதமான ஆண்களைப் பாதிப்பதாகும்.

 

சலவாயில் சுரப்பியின் தீங்கற்ற மிகைவளர்ச்சி நோய் புற்று நோயாக மாறக்கூடியதா?

 

இது நோயாளியின் வயது, சலவாயில் சுரப்பியின் வீக்கத்தின் அளவு, பரம்பரையாக உண்டாகியிருந்த புற்று நோய், புகைபிடித்தல் போன்றவற்றைப் பொறுத்தது.

 

நோயின் அறிகுறிகள்

 

சிறுநீர் கழித்தல் கடினமாக இருத்தல்.
இரவில் சிறுநீர் கழித்தலினளவு கூடியிருத்தல்.
அத்துடன் சிறுநீர் கழித்தலின் போது இடையில் நிறுத்தி மீண்டும் கழிக்க முற்பட்டால், சிறுநீர் மீண்டும் வெளியேறுவது கடினமாக இருக்கும்.

 

மருத்துவர் இந்நோயை கண்டுபிடிப்பதற்கு கையாளும் முறைகள் என்ன?

 

சிறுநீர்ப்பை சலவாயில் சுரப்பியின் விறைவியத்திற்கான இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளுதல்.


மருத்துவர் குதவாயினுள் தனது விரலை உட்செலுத்தி அதன் மூலம் சிறுநீர்ப்பை சலவாயில் சுரப்பியின் வீக்கத்தினளவை அறிந்து கொள்வார்.


மூல நோயிற்கான கதழ் ஒலிப்பரிசோதனை செய்தல்.
நரம்புவழி சிறுநீர்நாள ஊடுகதிர் படம். (Intravenous Urogra)
சிறுநீர் வெளியேறும் அளவையறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளுதல்.

 

நோய் தீவிரமாவதை தடுப்பதற்கான வழிவகைகள் என்ன?

சிறுநீரை கூடுதலான நேரம் தடுத்து வைக்காதிருத்தல்.
ஏனெனில் இதனால் தொற்று நோய், சிறுநீர்க்குழாய் நிரந்தரமாக அடைபட்டுவிடல், சிறுநீரகம் பழுதடைதல் போன்றன ஏற்பட வாய்ப்புண்டு.

 

நோயிற்கான சிகிச்சை முறைகள்

மாத்திரைகள் எடுத்தல்
அறுவைச்சிகிச்சை அல்லது வீச்சுமிழ் ஒலி அறுவைசிகிச்சை.

ஆண்களுக்கு சிறுநீர்ப்பை சலவாயில் சுரப்பி மிகவும் பெரிதாக வீங்கியிருந்தால் சிறுநீர்ப்பை வாயில் சுரப்பி அறுவைசிகிச்சை என அழைக்கப்படும் மாபெரும் அறுவைசிகிச்சை செய்ய வேண்டிவரும். ஆனால் பொதுவாக செய்யும் சிகிச்சை முறை புறச் சிறுநீர்க்குழல் வழி அறுத்து நீக்குதல் அறுவை சிகிச்சையாகும்.

 

அறுவை சிகிச்சையின் பின்பு

இதன் பின்பு உண்டாகக்கூடிய நோவு சிறிது வித்தியாசமானதாகும். அத்துடன் வடிகுழலும் இருப்பதால் மிகவும் அசொளகரியமாக இருக்கும். அத்துடன் உங்களுக்கு இயல்மருத்துவர் உடற்பயிற்சிகள் சிலவற்றை செய்வதற்கு சொல்லித்தருவார். சில கிழமை நாட்களிற்கு பாரம் தூக்குதல், கடினமான வேலைகள் செய்தல் போன்றவற்றை தவிர்த்தல் வேண்டும்.

 

http://www.tamilhealth.net/index.php?option=com_content&task=view&id=147&Itemid=62