ஒவ்வொரு குடும்பத்தினரும் அடிக்கடி பயன்படும் மருந்துகளை வீட்டில் வைத்திருப்பது வழக்கம். தடுமன் போன்ற பொது நோய்களால் பீடிக்கப்படும் போது மருத்துவ மனைக்குச் செல்லாமல் மருந்து உட்கொண்டால் சரியாகிவிடும். ஆனால் சிலர் மருந்துகளை சரியாக பயன்படுத்தாத காரணத்தால் நோயைக் குணப்படுத்துவதற்கு பதிலாக மருந்துகளால் ஏற்படும் சில பாதகமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவார்கள். சில சமயம் அது உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தும். அப்படியிருக்க வீட்டில் எத்தகைய மருந்துகளை வைத்திருக்க வேண்டும்?இந்த மருந்துகளை எவ்வாறு வைத்திருப்பது?மருந்துகளின் பயன்பாடு பற்றிய அடிப்படை அறிவு என்ன?என்பன பற்றி இப்போது கூறுகிறோம். அறிவிப்பாளர்.

 

பொதுவாக கூறின், ஒவ்வொரு குடும்பமும் தமது வீட்டில் ஒரு சிறிய மருந்து பெட்டியை வைத்திருப்பது வழக்கம். அனைவரின் மருந்து பெட்டிகளில் என்ன என்ன மருந்துகளை வைத்திருப்பது என்பது பற்றி எமது செய்தியாளர் வீதியில் செல்லும் சிலரை பேட்டி கண்டார்.

 

என் வீட்டில் வலியையும் காய்ச்சலையும் நீக்கும் மருந்துகள் இருதய மற்றும் ரத்த நாள நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகள் ஒவ்வாமை என்னும் அலர்ஜி தடுப்பு மருந்துகள் போன்ற மருந்துகளை வைத்திருக்கிறேன் என்றார் ஒருவர். "என் வீட்டில் தடுமன் தடுப்பு மருந்துகள் உண்டு" என்றார் இன்னொருவர். உண்மையில் வீட்டில் எத்தகைய மருந்துகளை வைத்திருப்பது நல்லது என்பது பற்றி பெய்சிங் ராணுவ ஆணை வட்டாரத்தின் பொது மருத்துவ மனையின் மருத்துவர் லியூ துவான் சி கூறியதாவது.

 

"வீட்டில் சின்ன மருந்து பெட்டி பற்றி குறிப்பிடும் போது சில கோட்பாடுகளைப் பின்பற்றிச் செயல்பட வேண்டும் என்று நான் கருதுகின்றேன். முதலில் குறைவு அதே வேளையில் தலைசிறந்தது என்ற கோட்பாடு. ஏனெனில் சாதாரண நாட்களில் நாம் அதிகமான மருந்துகளைப் பயன்படுத்த தேவையில்லை. ஒவ்வொரு வகை மருந்திலும் 3-5 நாட்களுக்குத் தேவையான அளவு மருந்து இருந்தாலே போதும். காலம் இடம் தனித்தன்மை ஆகியவற்றுக்கு ஏற்ப செயல்படுவது என்பது இரண்டாவது கோட்பாடாகும். எடுத்துக்காட்டாக கோடைகாலத்தில் கொசுக்கள் அதிகம். அப்போது கொசுக் கடிக்கு எதிரான மருந்துகளை வைத்திருக்க வேண்டும். குளிர்காலத்தில் இருமல் தடுப்பு மருந்துகளை வீட்டில் வைத்திருக்க வேண்டும். நீங்கள் வாழும் இடம் மாநகரமாக இருந்தால் பெரிய மருந்து பெட்டிகளை வைத்திருக்க தேவையில்லை. காரணம் மாநகரங்களில் மருந்து விற்கும் கடைகள் அதிகம்"என்றார். அப்படfயிருக்க மருந்துகளை வைத்திருக்கும் போது என்னென்ன முனெச்சரிக்கைகளைக் கவனிக்க வேண்டும்? முதலில் தமது வீட்டிலுள்ள சிறிய மருந்து பெட்டிகளை ஒழுங்குசெய்ய வேண்டும். பொதுவாக கூறின், 3-6 திங்களுக்கு ஒரு முறை சரிப்படுத்த வேண்டும். சில பயனற்ற மருந்துகளை வீசிவிட்டு சில மருந்துகளை மாற்ற வேண்டும்.

 

இரண்டாவதாக மருந்துகளை வைக்கும் இடங்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும். காகித பொட்டலத்திலோ லாட்சிக்குள்ளோ வைத்திருக்கத் தேவை இல்லை. காகித பெட்டியில் வைத்திருந்தால் ஈரம் பிடிக்கும். லாச்சிக்குள் வைத்திருந்தால் தூசி படியும். மருந்துகளுக்கு மாசு ஏற்படும். துருபிடியாத உருக்குகளால் அல்லது பிளாஸ்டிக்களால் செய்யப்படும் பெட்டிகளில் வைத்திருப்பது மிகவும் நல்லது. தவிரவும் மருந்து பெட்டிகளை வெயில் படாத படி காற்றோட்டமுள்ள இடங்களில் வைத்திருக்க வேண்டும். சில சிறப்பு மருந்துகளை குளிர் பதன பெட்டியில் வைத்திருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அவற்றை குழந்தைகளுக்கு எட்டாத இடங்களில் வைத்திருக்க வேண்டும். தவிரவும் சிலர் மருந்துகளைச் சேமித்து வைத்திருக்கும் போது இட பரப்பைச் சிக்கனப்படுத்தும் வகையில் மருந்து பயன்பாடு பற்றிய குறிப்பேடுகளை வீசியெறிவர்.

 

உண்மையில் இப்படி செய்வது தப்பு. ஏனெனில் இது மருந்துகளின் பாதுகாப்பான பயன்பாட்டுக்குத் துணை புரியாது. மருந்து குறிப்பேடானது நோயாளிகள் மருந்து உட்கொள்வதற்கு உறுதுணை புரியும். அத்துடன் அது குறிப்பிட்ட சட்டத் தன்மையும் பெற்றுள்ளது. எனவே மருந்து உட்கொள்ளும் போது குறிப்பேடுகளை ஆதாரமாக கொள்ள வேண்டும். குறிப்பாக மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்துகள் பற்றி மிகவும் விபரமான குறிப்புகள் உள்ளன. பெய்சிங் ராணுவ மருத்துவ மனையின் மருத்துவர் சோ சூ மின் அம்மையார் எமது செய்தியாளரிடம் கூறுகிறார்.

 

 மருந்து உட்கொள்ளும் போது மருந்து குறிப்பேட்டின் படி மருந்து உட்கொள்ளும் நல்ல பழக்கத்தை வளர்க்க வேண்டும. தற்போது ஒரு மருந்துக்கு பல பெயர்கள் உண்டு என்பதை அனைவரும் அறிவோம். நீங்கள் ஒன்று மட்டும் அறிந்து கொண்டால் போதாது. இந்த மருந்தில் என்னென்ன பொருட்கள் கலந்துள்ளன என்பதை அறியாமல் உட்கொண்டால் தவறாக உட்கொள்ள நேரிடும் என்றார் அவர். எடுத்துக்காட்டாக ஒருவர் பல் நோவால் ஒரு மணி நேரத்திற்குள் மருந்து குரிப்பேடுகளைப் படிக்காமல் 4-5 வகை வெப்வேறான பெயரிட்ட மருந்துகளை உட்கொண்டார். ஆனால் இந்த மருந்துகளின் முக்கியமான வீதப் பங்கு ஒரே வகையான வலி நீக்கும் மருந்து என்பதை அவர் அறிந்து கொள்ள வில்லை. இதன் விளைவாக அவர் தீவிர சிறு நீரக பலவீன நோயால் பீடிக்கப்பட்டார். மருந்துகளைச் சேமித்து வைத்திருப்பது பற்றிய அறிவை தவிர, நாம் எல்லோரும் மருந்துகளை உட்கொள்ளும் போது பல விஷயங்களை கவனிக்க வேண்டும். முதன் முதலாக மருந்துகளை உட்கொள்வதற்கு முன் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். சில மருந்துகளை எந்த நாள் வரை பயன்படுத்தலாம் என்ற குறிப்பில் குறிக்கப்பட்ட நாளுக்குள் இருந்த போதிலும் அவற்றின் சுவையும் நிறமும் மாறினால் அவற்றை உட்கொள்ள கூடாது. தவிரவும் மருந்து உட்கொள்ளும் போது மது குடிக்கவோ புகை பிடிக்கவோ கூடாது. இப்படி செய்தால் மருந்துகளின் பயனை எளிதில் வீனாக்கவோ மருந்துகளிலுள்ள நச்சு பொருட்களை உட்கொள்ளவோ கூடும். குறிப்பாக நோயாளிகள் தூக்க மாத்திரை உட்கொண்ட பின் மது குடிக்க கூடாது. மருந்துகளை  உட்கொள்ளும் போது சுடு நீருடன் உட்கொண்டால் நல்லது. பழச்சாறு தேநீர் அல்லது பாலில் உட்கொள்வது நல்லதல்ல. காரணம் தேநீரில் உள்ள தேநீர் காரம் பாலிலுள்ள புரதச்சத்து பழச்சாற்றிலுள்ள அமிலப் பொருட்கள் ஆகியவை மருந்துகளுடன் கலந்தால் மருந்துகளின் பயன் பாதிக்கப்படும்.

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.