ஆதிகாலத்தில் அடிபட்டாலும் இடிபட்டாலும், முறிவு ஏற்பட்டாலும், மற்றும் வர்ம மருந்து ரீதியாக புற மருத்துவம் அக மருத்துவமும் இயற்கையில் கிடைக்கும் பச்சிலைகளைக் கொண்டும், கார சார மருந்துகளைக் கொண்டும். எந்த பக்க விளைவுகளும் இன்றி மருந்துகளைக் கொடுத்து வந்தனர். இது போக அங்கங்கள் முடம் ஏற்படாத வண்ணம், நரம்புகளை சீர் செய்தும், அவைகளை பலம் உண்டாக்குவதற்கு எலும்பு முறிவுகளை தசை பிசகல்களையும் நன்றாகப் பாதிக்கப் பட்ட இடங்களை அழுத்தம் கொடுத்தும், கூர்மையான ஊசி போன்றவைகளைக் கொண்டும், நன்றாக தடவியும், பற்றுக்கள் பூசியும் குணப் படுத்தி வந்தனர்.

பின்பு இறை ஞான சித்தர்கள் அகத்தியர் போகர் முதல் பதினெட்டு சித்தர்கள் முறையாக வர்ம திரவுகோல் முறைகளை உலகுக்கு தெளிவு படுத்தினர்.போகர் காலத்தில் யுவான் சுவாங் என்ற புத்த சீன யாத்திரிகள் மூலம் சீனாவுக்குச் சென்று முறையே அக்குபஞ்சர், அக்குப் பிரசர், என்றும் அதற்கு வர்மக்கலை அடிப்படையாக கொண்டு மருத்துவம், பற்றிடல், மூலிகைப் பூச்சு, தைலம், ஊசி குத்துதல் முறைகளைக் கையாண்டு வைத்தியம் செய்துவந்தனர். ஆக வர்ம முறைகளில் சில மாற்றங்களை உண்டுபண்ணி அக்குபிரசர், அக்குபஞ்சர் முறைகளைக் கையாண்டு வந்தனர்.

நாளடைவில் கொஞ்சம் வித்தியாசமாக வர்ம தாக்குண்டவர்களை புதிய முறைகளைக் கண்டு வர்ம வைத்தியம் நரம்பு சம்பந்தமாக அவையங்களையும், எலும்பு முறிவு முதலிய நோய்களையும் வர்மரீதியாக சரி செய்ய கற்றுக் கொண்டன்ர். சில கட்டுப் பாடும் இக்கலை மருத்துவத்தை இரகசியமாக குடும்ப, குடும்பமாக வைத்திருந்தனர்.

 

http://acuvarmatherphy.blogspot.com/2008/01/blog-post.html