Language Selection

பி.இரயாகரன் -2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புலம்பெயர் இலக்கியமும், புலம்பெயர் ஜனநாயகமும், படிப்படியாக இன்று அரசு சார்பான ஒரு  நிகழ்ச்சிகளாகிவிட்டது. இனி அரசுக்குத் சார்பாகத்தான், புலியெதிர்ப்புக் கூட்டங்கள் நடக்கும். பேரினவாத அரசுக்கு எதிராக, இவர்கள் எதையும் முன்னெடுக்க முடியாது. அரசுக்கு சார்பு எடுபிடிகளாக, அரச கூலிக்கும்பலாக புலம்பெயர் புலியெதிர்ப்பு கும்பல் சீரழிந்து விட்டது. இதற்கு வெளியில் வேறு எந்த அரசியலும் யாரிடமும் கிடையாது. ஜனநாயகம் என்பது, பேரினவாத அரசைத் தொழுவது தான்.

 

இப்படி ஜனநாயகத்தின் எதிரிகள், அரச பாசிசத்தின் எடுபிடிகளாக அம்பலமாகி வருகின்றனர். புலிப் பாசிசத்திடம் இருந்து கோரிய ஜனநாயகம், மக்களுக்கானதல்ல என்பது இந்த கும்பலின் பொது நிலைப்பாடு. இந்த நிலையில் எந்த அரசியலும், பேரினவாத அரசு சார்பானதாக மாறி விடுவது ஆச்சரியமானதல்ல. இதில் சிலர் வெளிப்படையாக அரச கூலிக்குண்டர்களாக, சிலர் இந்த அரசியல் எல்லைக்குள் கும்மியடிக்கின்றனர்.  

 

இப்படி தான், இதற்குள் தான் '1983-2008 நெடுங்குருதி" நிகழ்வு பாரிசில் துப்பாக்கி வேட்டுடன் அரங்கேறியது. பேரினவாத கூலிக் குண்டனாக அரசியலுக்குள் வந்த கிழக்கு ரவுடி பிள்ளையானின் எடுபிடிகள் ஊளையிட, ஏகாதிபத்திய தேசிய எதிர்ப்பு புலியெதிர்ப்பு கோஸ்டிகள் சலசலக்க கூட்டம் பேரினவாதக் கூட்டமாக அரங்கேறியது. இப்படி பேரினவாத அரசின் புலியொழிப்பும், தமிழ் தேசிய அழிப்பும், இங்கு தமது சொந்த நிகழ்ச்சி நிரலாகி,  மீண்டும் அவை 'நெடுங்குருதி"யாக அரங்கேற்றப்பட்டது. 1983 இல் தமிழ் மக்களுக்கு எதிராக பேரினவாதம் எதைச் செய்ததோ, அதை மீண்டும் 2008 இல் '1983-2008 நெடுங்குருதி" நிகழ்ச்சி ஊடாக, தமிழ் மக்களுக்கு எதிராக பேரினவாத எடுபிடிகள் அரங்கேற்றினர். 

 

இப்படி புலிக்கு எதிரான பேரினவாத பாசிச அரசை ஆதரிப்பதற்காகவும், நக்குவதற்காகவும், இடம்வலம் தெரியாத இந்த பேரினவாத அரச சார்பு நாய்கள் எல்லாம் ஒன்று கூடினர். அ.மார்க்ஸ் என்ற மார்க்சிய விரோதி, ஏகாதிபத்தியம் முன்வைக்கும் தேசிய எதிர்ப்பை தேசிய விரோதத்துடன் வாந்தியெடுக்க, பாசிச பேரினவாதத்தைப் பலப்படுத்தும் ஒரு புலியெதிர்ப்பு அரசு சார்புக் கூட்டமாக அது அரங்கேறியது. இந்த இந்தியப் பிரமுகர்கள் ஓசியில் சுற்றுப் பிரயாணம், ஒசி குடியில் அரசியல் விபச்சாரம் செய்ய  வாய்ப்பளிக்கும் கூட்டத்தில், ஒருவரை படுகொலை செய்ய முயன்ற மனித உரிமை மீறல் மேல் எந்தக் கண்டனமுமின்றி அ.மார்க்ஸ் தனது அரசியல் வங்குரோத்தை அரங்கேற்றினார். அ.மார்க்ஸ் இந்தியாவில் மனிதவுரிமைக்கான ஒரு கண்காணிப்பு அமைப்பில் இருப்பதும், இங்கு அவ்வுரிமையை மீறுவோர்  கூட்டத்தில் பங்கு கொண்ட போக்கிலித்தனத்தை என்ன என்பது. அத்துடன் கூட்டமே பேரினவாத அரசு சார்புக் கூட்டம். சோபாசக்தி, சுகனினதும் அரசியல் விபச்சாரத்தில், விபச்சாரம் செய்வது தான் அ.மார்க்ஸ்சின் அரசியலாகும்.      

 

மக்களின் அடிப்படை உரிமை பற்றி, இந்த புலியெதிர்ப்பு பேசும் பேரினவாத அரச சார்பு கும்பலுக்கு எந்த ஒரு அக்கறையும் கிடையாது. புலியைப் போல் தான் இவர்களும்.

   

இந்த அரச ஆதரவுக் கூட்டத்திற்கு முன்னும், கூட்ட ஏற்பாட்டாளரால் ஒரு படுகொலை முயற்சி அரங்கேறியது. துப்பாக்கி கொண்டு நடந்த படுகொலை வெறியாட்டத்தை, மூடிமறைத்து மூடுமந்திரமாக பூட்டிவைக்கவே, இந்த அரச நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் முனைந்தனர். இறுதியில் காயப்பட்டவரின் துணையுடன், பொலிசார் படுகொலை முயற்சி செய்தார் என ஈரோஸ் குகனை கைது செய்தனர். இதைத் தொடர்ந்தே இந்த வன்முறை நிகழ்ச்சியை அரசுசார்பு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஒத்துக்கொண்டனர். இப்படுகொலை முயற்சியைக் கண்டிக்காது 1983 இனக்கலவரத்தை கண்டிப்பதற்காக மட்டும் அரசுசார்பு கூட்டத்துக்கான அழைப்பை விடுத்தனர். பின் கூட்டம் இச்சம்பவத்தினைக் கண்டிக்க கூட முனையவில்லை. இப்படி இவர்களோ, அரசு சார்பாக செயற்படும் கடைந்தெடுக்கப்பட்ட பச்சைப் பொறுக்கிகள்.

 

இந்த கூட்டத்தை சேர்ந்த கும்பல்கள், அண்மையில் ஈ.பி;.டி.பியைச் சேர்ந்த மகேஸ்வரியை புலிகள் கொன்றதற்கு எதிராக கண்டனக் கூட்டங்கள் நடத்தியவர்கள். அதன் பின் அதே  ஈ.பி;.டி.பி கிழக்கில் வர்த்தகர் ஒருவரைக் கொன்று புதைத்ததற்கு எதிராக, கண்டிக்க கூட முடியாத 'ஜனநாயக" பன்னாடைகள் கொண்ட ஒரு பச்சோந்திக் கூட்டம் தான்.

 

இந்த பன்னாடைகள் எல்லாம் கூடி சலசலக்க, பேரினவாத அரச ஆதரவுக் கூட்டம் அரங்கேறியது. மகிந்தாவின் எடுபிடிகள் எல்லாம் கூடி, பேரினவாத அரச செய்யும் கொலை, கொள்ளை, கப்பம், கடத்தல், கற்பழிப்பு என அனைத்துக்கும் ஆதரவாக கூச்சலிட்டனர். குறிப்பாக தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து, பேரினவாதிகளாக தொங்கினர். புலம்பெயர் ஜனநாயகம் இப்படி கற்பழிக்கப்பட்டது. 

  

இந்த அரசு சார்புக் கூட்டம் மாபெரும் வன்முறைக் கலாச்சாரப் பின்னணியுடன், தான் கூட்டப்பட்டது. இவர்களோ கொலைகார அரசியலை நிகழ்ச்சியாக கொண்டு, அரசுடன் சேர்ந்தியங்கும் கிழக்கு பிள்ளையான், வடக்கு டக்கிளஸ் முதல் இந்தியாவின் மடியில் படுத்திருக்கும் ராஜன் கும்பல்களின் மொத்த வாரிசுகளாக இருப்பது புதிரற்ற ஒன்றாகிவிட்டது. 

 

இவர்களால் தமது சொந்த தேவைக்கு ஏற்ப உருவேற்றப்பட்டவர் தான் "ஈரோஸ்" குகன். உண்மையில் தனிப்பட்ட குகன் வன்முறையில் ஈடுபட்டதால் குற்றவாளி என்ற போதும், இங்கு ஈரோஸ் குகனல்ல உண்மைக்  குற்றவாளி. அப்படியாயின்; யார் குற்றவாளிகள். ஈரோஸ் குகனை மக்கள் பற்றி சிந்திக்க விடாது, அது நோக்கிய வழியை அடைத்து அவரை அப்படியே பயன்படுத்தி அரசியல் செய்தவர்கள் தான் குற்றவாளிகள்.

 

திடீர் ஜனநாயகம் பேசிய கும்பல்கள், அண்மைக் காலமாக ஈரோஸ் குகனை தமது பொடிக்காட் அரசியலுக்கு பயன்படுத்தத் தொடங்கினர். இப்படி அவரின் ரவுடிசத்தை, அரசியலாக மீண்டும் உருவேற்றி உருவாக்கியவர்கள் தான், இந்த திடீர் ஜனநாயகப் பேர்வழிகள். இதன் பின்னுள்ள சூக்குமமே, மக்கள் போராட்டம் சாத்தியமில்லை என்று புலம்பும் புலியெதிர்ப்பு அரசியலின் வழியில் உருவான பொடிகாட் அரசியல் தான். இந்த அரசியல் தான், ஈரோஸ் குகனை குற்றவாளியாக்கியுள்ளது. அவனின் பணம், ரவுடிசம் சார்ந்த ஆட்பலம், இதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, அவனின் தனிப்பட்ட அரசியல் சார்பை தமது மக்கள் விரோத அரசியலுக்கு பயன்படுத்த முனைந்தனர். சொல்லப்போனால் அரசியலில் உள்ள சமூகவிரோதி, ரவுடியாக உதிரி வன்முறையில் ஈடுபட்ட குகனை தமது சொந்த அற்ப  தேவைக்குப் பயன்படுத்தினர். 

 

ஈரோஸ்; குகனின் அப்பாவித்தனத்தை, இப்படி தமது சமூகவிரோத அரசியலுக்கு பயன்படுத்தியவர்கள் யார்?  

 

இயக்கங்களின் அரசியல் செயல்பாடு என்பது, குகனின் வழியிலானதே. மண்ணில் இப்படியான நடைமுறைகள், அது நடத்திய நடத்துகின்ற அடாவடித்தனங்கள் என்பன அங்கீகரிக்கப்பட்ட அரசியல். குகன் என்ன செய்தானோ (துப்பாக்கிப் பிரயோகம் மட்டுமல்ல, அவன் துண்டுப்பிரசுரங்களை ஓட்டிய விதம் முதல் கொண்டு… இவர்கள் நிறை போதையில் அரசியல் செய்வது வரை), இது தான் இயக்கங்களின் பொது அரசியல் மரபு. சோபாசக்தி முதல் கொண்டு தேசம்நெற் வரை விதவிதமாக, மக்கள் விரோத அரசியலை அரங்கேற்றுகின்றனர்.

 

ஈரோஸ் குகன் பாரிசில் வன்முறை கும்பலாக, ஒரு குழுவாக நடத்திய வன்முறைகள் அனைவரும் அறிந்ததே. அவன் மண்ணில் ஈரோஸ் இயக்கத்தில் இருந்த அதே வன்முறை வாழ்வியலை இங்கும் அப்படியே கையாண்ட போது, அது கோஸ்டியாக சமூக விரோதக் கும்பலாக வளர்ச்சியுற்றது. இந்த ரவுடிசமும,; கோஸ்டி வன்முறைகளும் தான், எம்மண்ணில் தேசிய போராட்டமாக அங்கீகரிக்கப்பட்டு இருந்தது, இருக்கின்றது.

 

இதன் ஒரு பிரதிநிதியாக, இதை ஈரோஸ்சின் அரசியலாக கருதி செயல்பட்ட குகனின் அரசியல் அடிப்படையே இப்படிப்பட்டது தான். இதை பயன்படுத்தியவர்கள், அவனைவிட கேவலமான அற்ப புத்திகொண்ட ஈனர்கள் ஆவர்.  

 

இப்படி திடீர் ஜனநாயகம் பேசிய கும்பல்கள், தமது பொடிக்காட்டாக ஈரோஸ் குகனை பயன்படுத்தத் தொடங்கினர். ஈ.என்.டி.எல்.எவ் ச் சேர்ந்த பொறுக்கி ராம்ராஜ் முதல் ரி.பி.சி சிவலிங்கம் என பலரும் ஈரோஸ் குகனை பொடிக்காட்டாக பயன்படுத்தினர். இதன் மூலம், இதுதான் புலிக்கு மாற்று அரசியல் என்று ஈரோஸ் குகனின் ரவுடிசத்தையே ஊக்குவித்தனர். இவர்களின் அரசியலுக்கு ஏற்ப, ஈரோஸ் குகனின் பணம், கூட்டம் போடும் தாதாத் தகுதியை வழங்கியது. இப்படி மாற்று அரசியலுக்கு தாதாவாக்கப்பட்டான். 

 

அவனின் அறியாமை, அப்பாவித்தனத்தையும், இவர்கள் மிக கேவலமாக தமது சொந்த சுய வக்கிரத்துக்காக பயன்படுத்தினர். அவன் இப்படி உருவேற்றப்பட்டு திரிந்த போது, அவன் துப்பாக்கியும் கையுமாகத் திரிந்தது இப்போது நிருபணமாகியுள்ளது. குடிபோதையும் துப்பாக்கியுமாய் திரிந்த அவனுடன், கூடிக் கும்மாளம் அடித்த பலருக்கு இது நிச்சயமாக தெரிந்திருக்கும்.

 

குகனை அரசியல் வழியில் வழிகாட்ட, இந்த கும்பலில் யாருக்குத் தான் தகுதி இருந்தது. நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு, பிழைக்கும் சந்தர்ப்பவாத கும்பலால் குகன் சூழப்பட்டிருந்தான். சோபாசக்தி முதல் ரவுடி பிள்ளையானின் மதியுரைஞர் ஞானம் வரை இதற்குள் அடங்கும்.   

   

அவனை அனைத்து மக்கள் விரோதிகளும் தமது சொந்தத் தேவைக்காக பயன்படுத்தியதுடன், இதுவே இந்த வழியே சரியான புலிக்கு மாற்றான மாற்று அரசியல் என்று அவனுக்கும் திணித்து வந்தனர். இப்படி அவனை குற்றவாளியாக்கியதே இந்தக் கும்பல்கள் தான்.

 

அவன் இப்படி தனிப்பட்ட ரீதியில் குற்றவாளியாக உள்ள போதும், உண்மையான குற்றவாளிகள் மாற்று அரசியல் வழியைக் காட்டத் தவறியவர்கள் தான். அவனை அதற்குள் இட்டுச்செல்ல மறுத்தவர்கள் தான்.  அவனை அரசியல் ரீதியாக மக்களுக்காக செயல்பட வைக்காத, ஒரு மக்கள் விரோத அரசியலை வைத்திருந்தவர்கள் தான் உண்மைக் குற்றவாளிகள். இவனுடன் குடியும் கும்மாளமுமாக கூத்துப் போட்டவர்கள் தான், உண்மைக் குற்றவாளிகள். 

 

எம்முடன் இதே ஈரோஸ் குகன் தொலைபேசியில் தொடர்புகொண்ட போது, அரசியல் ரீதியாக நாம் அணுகினோம்;. '1983-2008 நெடுங்குருதி" நிகழ்ச்சி பற்றி, என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, எங்கள் முதன்மைப் பங்களிப்பைக் கோரினான்;. 30 நிமிட உரையாடலின் போது, நாம் பல விடையத்தைச் சுட்டிக்காட்டி, அரசியல் ரீதியாக அவ்விடயங்களைப் பார்க்க கோரினோம்;. அவன் அதை எழுத்தில் கோரினான்;. இரண்டாம் நாளே அது எழுத்தில் வைக்கப்பட்டது. (பிரான்சில் பேரினவாத அரச ஆதரவுக் கும்பலுடன் கூடிய 25ம் ஆண்டு யூலைப் படுகொலை நினைவு நிகழ்ச்சி )  இதன் பின், அவன் எம்முடன் தொடர்பு கொள்ளவில்லை. எமக்கு அவனை பயன்படுத்த முதல் சந்தர்ப்பம் கிடைத்த போதும், இந்த அரசியல் வழிமுறையை நாம் நிராகரித்தோம்.

 

நாம் கோரும் மக்கள் அரசியலை நிராகரிக்கும் வண்ணம், அவனை சுயமான சிந்திக்கா வண்ணம் குறுகிய எல்லையில் தான் மற்றவர்கள் பயன்படுத்தினர். இது எம்முடனான அரசியல் விவாதத்தை அவனுக்கு அவசியமற்றதாக்கியது. எமது விமர்சனம் சார்ந்து, அவன் சுயமாக கற்பதற்கு கிடைத்த சிறு சந்தர்ப்பத்தைக் கூட அவனுக்கு அவர்கள் இல்லாதாக்கினர். அவனை ஒரு ரவுடியாக, பொடிகாட்டாக, கொடை வழங்கும் ஒரு தாதாவாக, குடித்து தம்முடன் கூத்தடிக்கும் ஒரு குடிகாரனாக வைத்துக்கொண்டு, தமது குறுகிய அரசியலுக்கு எடுபிடியாக பயன்படுத்தினர். இது அவனின் குற்றறமா? எனின் இல்லை. மாறாக அவனை இப்படித் தான் என்று வழிகாட்டி, பயன்படுத்தியவர்களின் குற்றமாகும். 

 

நாம் முன்வைத்த கோரிக்கைகளை நிராகரிக்கும் வண்ணம், அரச சார்புக் கும்பல், புலியெதிர்ப்பு தேசிய எதிர்ப்புக் கும்பல் எல்லாம் சேர்ந்து அவனை தவறாக இட்டுச்சென்றனர். இப்படி இரண்டு குற்றவாளிகள் இதன் பின்னணியில் இருந்தனர்.

 

1. அவனின் ரவுடிசத்தை பொடிகாட் அரசியலாக்கி, அவனை இதனுள் குற்றவாளியாக்கினர்.

 

2. மக்களுக்காக அவனை சிந்திக்கவிடாது, மக்களி;ல் தங்கியிருக்கா வண்ணம் வெறும் ஒரு ரவுடியாக வைத்துக்கொண்டு, கூட்ட ஏற்பாட்டாளன் என்ற தாதாத் தகுதி வழங்கி அவனை குற்றவாளியாக்கினர்.

 

இப்படி அவன் சாதாரண ஒரு மனிதனாக மாறவிடாத வகையில், ஈரோஸ் குகனை அதே ரவுடியாக பயன்படுத்திய அனைவருமே இதன் பிரதான குற்றவாளிகள் தான். இந்த குற்றவாளிகளின் அரசியலோ, இலங்;கை முதல் இந்திய அரசியல் பின்னணியைக் கொண்டது. அதுவோ கொலைகார அரசியலாகும். கூலிக்கு மாரடிக்கும், துரோக அரசியலாகும். இவர்களால் மனிதனைச் சரியாக வழிகாட்ட முடியாது. இவர்கள் ஒரு காலமும் மக்களைச் சார்ந்து இருக்க முடியாது. இப்படி மக்களுக்கு எதிரான குற்றவாளிகள் தான், தனிமனித குற்றங்களுக்கு பொறுப்பாளிகளாவர். இந்தக் குற்றவாளிகள் தான், ஈரோஸ் குகனை குற்றவாளியாக்கினர்.

 

பி.இரயாகரன்
30.07.2008