06032023
Last updateபு, 02 மார் 2022 7pm

இலங்கையின் பன்றி வளர்ப்பு 

பன்றி வளர்ப்பு மேல் மற்றும் வடமேல் மாகாணங்களி்ன் கரையோரப் பகுதிகளில் பிரதானமாக மேற்கொள்ளப்படுகின்றது. இத்துறையில் விசாலமான நடுத்தர உள்ளக, உள்ளக வளர்ப்பு போன்ற முறைமைகள் காணப்படுகின்றன. நிகழ்கால பன்றி சனத்தொகையில் ஏறக்குறைய 80,000 ஆகவும், வருடாந்த பன்றியிறைச்சி உற்பத்தி 9,500 மெ.தொ. ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பன்றியிறைச்சி 1% ஐ செலுத்துகிறது. ஆடு வளர்ப்புத் துறையை போன்றே பன்றி வளர்ப்புத் துறையும் கடந்த சில தசாப்பங்களாக குறிப்பிடக்கூடிய வளர்ச்சி எய்தவில்லை.

 

 

பன்றியிறைச்சி மற்றும் அதன் உப உற்பத்தி பொருட்களுக்கான கணிசமான கேள்வி காணப்பட்ட போதிலும் சந்தை விருத்தி பற்றாக்குறை மற்றும் பல்லினத்தன்மை காரணமாக இக் கைத்தொழில் விரிவாக்கப்பட முடியாதுள்ளது. இது தவிர சூழலியல் பிரச்சினைகளும், நகர மற்றும் உப நகர பகுதிகளில் பன்றி வளர்ப்பிற்காக பாரிய அச்சுறுத்தலாக காணப்படுகின்றன.

http://www.livestock.gov.lk/livetamil/index.php?option=com_content&task=view&id=37&Itemid=51