ஆடு உற்பத்தியானது விசேடமாக உலர்வலயப் பகுதிகளில் வலங்குப் பண்ணையாளர்களிடையே கால்நடை விவசாயத்தில் ஒரு மரபு ரீதியான துறையாக விளங்குகிறது. ஆடுகளின் சனத்தொகையில் 70% ஆனவை இலங்கையின் உலர்வலயப் பகுதிகளிலும் இடைவலயப் பகுதிகளிலும் காணப்படுவதுடன் அநேகமாக இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் பரந்து காணப்படுகின்ற ஒரு கைத்தொழிலாக இது விளங்குகிறது.

 

 

எவ்வாறாயினும் பல்வேறு உற்பத்தி முறைமைகள் காணப்பட்டபோதும் ஆடு வளர்ப்புப் பண்ணை முறைமையானது விவசாய காலநிலை வலயங்கள் மேய்ப்பு நில கிடைப்பனவு உற்பத்தி முறை சமூகத்தின் சமூக கலாசார பாங்குகள் ஆகியவற்றின் பிரகாரம் இடத்துக்கிடம் வேறுபடுகிறது. விசாலமான நிலப்பரப்பில் வளர்க்கும் முறை அநேகமாக உலர்வலயத்திலும், இடைநிலவலயத்திலும் காணப்படும்.

 

அதே சமயம் நடுத்தர உள்ளக வேளாண்மை முறை தென்னை முக்கோணத்தில் பிரதானமாகிக் காணப்படுகிறது. உள்ளக வளர்ப்பு முறை நகர மற்றும் உப நகர பகுதிகளிலும், மலைநாடு இடைநிலை மற்றும் யாழ்ப்பாணத் தீபகற்பம் ஆகிய பகுதிகளிலும் காணப்படுகின்றது.

 

விசாலமான நிலப்பரப்பில் வளர்க்கும் முறை நடுத்தர உள்ளக வளர்ப்பு முறை ஆகியவற்றினூடாக வளர்க்கப்படும் விலங்குகள் இறைச்சிக்காகவே வளர்க்கப்படுகின்றன. எவ்வாறையினும் கடந்த தசாப்த காலத்தில் நாட்டினுள் ஆடுகளின் மொத்த சனத்தொகையில் குறிப்பிடக்கூடிய வளர்ச்சி தென்படவில்லை.

http://www.livestock.gov.lk/livetamil/index.php?option=com_content&task=view&id=37&Itemid=51