09272023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

இலங்கையின் பாற்பண்ணைத் துறை 

அனைத்து கால்நடை உபதுறைகளிலும் பாற்பண்ணைத் துறை முக்கியமான ஒரு துறையாகும். இது கிராமிய பொருளாதாரத்தில் அதி்களவு செல்வாக்கு செலுத்துகின்றமையே இதற்குக் காரணமாகும். இலங்கை ஏறக்குறைய 65,000 மெட்ரிக் தொன் பால் உற்பத்திப் பொருட்களை விசேடமாக FCMP போன்றவற்றை இறக்குமதி செய்கிறது. மிகப் பாரியளவிலான இறக்குமதி தொகையை பதிலீடு செய்வதற்கும், கிராமிய தொழில் வாய்ப்பை உருவாக்குவதற்கும், பாற்பண்ணைத் துறை அபிவிருத்தி பிரதான கருவியாக பயன்படுத்தப்படுகி்ன்றது. பல்வேறு மத, சமூக, கலாசார காரணிகளின் கட்டுப்பாடுகளின் நிலவும் பன்றி மற்றும் கோழி வளர்ப்புத்துறைகள் போலன்றி பாற்பண்ணைத் துறையானது அனைத்து இனங்களினாலும் மதப் பிரிவுகளினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு துறையாகும். 

 

 

உள்நாட்டு பாலுற்பத்தி, மொத்த பால் தேவையில் 17 வீதத்தை மட்டுமே நிவர்த்தி செய்கின்ற அதேவேளை மிகுதி இறக்குமதி செய்யப்படுகிறது. பாலுற்பத்தி பொருட்களின் மொத்த இறக்குமதி செலவு 15 மிலியன் ரூபா அல்லது ஏறக்குறைய 13 மிலியன் ஐ.அ.சடொ. ஆகும்.அரசு பாற்பண்ணைத் துறை மீது முக்கியம் கவனம் செலுத்துவதன் காரணம் இத்துறையை ஒரு உள்நாட்டு கைத்தொழில் ஆக விருத்தி செய்வதன் பொருட்டாகும். பாற்பண்ணை அபிவிருத்தி துறையில் அரசாங்கத்தின் பிரதான கொள்கையாக விளங்குவது, 2015 ஆம் ஆண்டளவில் நாட்டின் பால் தேவையி்ல் 50% ஐ பூர்த்தி செய்வதாகும். இதனால் பொதுத்துறை முதலீட்டு நிகழ்ச்சித் திட்டத்தில் பாற்பண்ணை அபிவிருத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் அதேவேளை பாற்பண்ணை துறையில் ஈடுபடுவதற்கு தனியார் துறைக்கும் பல்வேறு ஊக்குவிப்புகள் வழங்கப்படுகின்றன. 

 

பாற்பண்ணை துறையானது உள் வலயம் தவிர்ந்த ஏனைய விவசாய – காலநிலை வலயங்களில், 2 – 5 பசுக்களை வைத்திருக்கும் சிறு பண்ணையாளர்களிலும் ஊழியர்களினதும் அடிப்படையில் தங்கியுள்ளது. உலர் வலயத்தில் மிகக் குறைந்த பால் விளைச்சலை உடைய உள்நாட்டு இனப் பசுக்களை கொண்டு காணப்பட்டாலும், இப்பகுதிகளில் மந்தைகள் பெரியனவாக உள்ளன. நாட்டினுள் மதிப்பிடப்பட்டு வருடாந்த பால் உற்பத்தி 350 மிலியன் லீட்டராக காணப்படும் அதேவேளை இது அநேகமாக எல்லா மாவட்டஙகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. கணிசமான பாலுற்பத்தியைக் கொண்ட மாவட்டஙகளான குருணாகல், பதுளை, அநுராதபுரம் மற்றும் நுவரெலியா ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

 

கிடைக்கப் பெறும் மொத்த பாலில் வருடாந்தம் 100 மிலியன் லீட்டர் அளவே உள்நாட்டு பாற் சந்தைக்கு வருகிறது. ஏனையவை வேறு வழிகளிலும் வீட்டு நுகர்விற்கும் உட்படுத்தப்படுகிறது. புற் தரைகளுக்கான நிலப் பற்றாக்குறை நிலவுவதனால் பிரதான பால் உற்பத்தி பிரதேசங்கள் இடைநிலை மற்றும் உயர்நிலைப் பகுதிகளில் இருந்து வடமேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு அண்மையில் மாற்றப்பட்டன. 2006 இல் பதிவு செய்யப்பட்ட ஆகக்கூடிய பாற் சேகரிப்பு வடமேல் மாகாணத்தில் காணப்பட்ட அதேவேளை இவ் ஆண்டில் சேகரிக்கப்பட்ட மொத்த பாலில் இது 18.9% ஆக அமைந்தது. மரபு ரீதியான பால் கிடைக்கப் பெறும் மூலங்களில் மலைநாடு மற்றும் இடைநிலை ஆகியவற்றில் சேகரிக்கப்பட்ட பாலின் அளவு முறையே 7.1% மும் 15.7% மும் ஆகும்.

http://www.livestock.gov.lk/livetamil/index.php?option=com_content&task=view&id=37&Itemid=51