டோக்கியோ, ஜுன். 19-

பெட்ரோல் டீசல் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. வாகனங்கள் வைத்திருப்ப வர்கள் என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஜப்பானை சேர்ந்த ஜெனி பாக்ஸ் என்ற நிறுவனம் மகிழச்சியான தகவலை வெளியிட்டு இருக்கிறது.

 

இந்த நிறுவனம் தயாரித்துள்ள காரை ஓட்ட பெட்ரோல் தேவை இல்லை. தண்ணீரை பயன்படுத்தினாலே போதும். தண்ணீரில் உள்ள ஹைட்ரஜனை பிரித்து எடுத்து அதில் இருந்து மின்சா ரத்தை தானே தயாரித்து காரை இயக்கும். சுத்தமான தண்ணீர்தான் வேண்டும் என்பதில்லை 1 லிட்டர் தண்ணீருக்கு 10 கிலோ மீட்டருக்கு மேல் ஓடும். சோதனை ரீதியில் இதில் வெற்றி கிடைத்துள்ளது. விரைவில் வர்த்தக ரீதியில் இந்த தண்ணீர் கார் உற்பத்தி தொடங்க உள்ளது.

http://www.viparam.com/index.php?news=13750