Language Selection

பி.இரயாகரன் 2001-2003
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உலகில் ஒவ்வொரு ஆண்டும் ஒன்று முதல் 1.2 கோடி ஆண்கள், இளம் குழந்தைகளைப் பாலியல் ரீதியாக அணுகுகின்றனர்.31 யுனிசேவ் விடுத்த அறிக்கையில், ஒவ்வொரு வருடமும் 10 இலட்சம் ஆண் - பெண் குழந்தைகள் (16.5.2000)42 பாலியல் சந்தையில் பாலியல் தேவைக்காக மூலதனமாக்கப் படுகின்றனர். 1970 முதல் 1990 வரையிலான காலத்தில் விபச்சாரச் சந்தையில் மூன்று கோடி பெண்கள் முதலீடாக்கப்பட்டுள்ளனர். 10 இலட்சம் பெண்கள் ஒவ்வொரு வருடமும் பாலியல் முதலீட்டில், புதிதாக மூலதனமாக்கப்படுகின்றனர். இது பல்வேறு துறை சார்ந்தும், குறிப்பாக உல்லாசப் பயணத்துறை சார்ந்து விரிவாகின்றது.


மேற்கு ஆணாதிக்கப் பாலியல் ஜனநாயகச் சுதந்திரத்தைப் பூர்த்தி செய்ய பலியிடப்படும், இந்த அற்ப மனிதர்களின் வாழ்க்கையையிட்டு எந்த இலக்கியமும் பேசுவதில்லையே ஏன்? எந்தப் பெண்ணியமும் புலம்புவதில்லையே ஏன்? சுதந்திரமான வாழ்வின் விளைவுகள் இப்படித்தான் பிரதிபலிக்கின்றது. இதை ஜனநாயகவாதிகள் மனித உரிமை மீறலாக எடுப்பதில்லை. இது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு விரிவாகி வருகின்றது. உடல் ரீதியாகத் தனிச் சுதந்திரம் பெற்றதாக நினைப்பவர்கள், ஆண் - பெண் வேறுபாடின்றி தமது வக்கிரமான பாலியல் தேவைக்குத் தமது சொந்தக் குழந்தையையே பயன்படுத்த பின் நிற்காதவர்களால் நாகரிக நாற்றம் உலகமயமாகி திணற வைக்கின்றது.


கென்யா நாட்டில் பெண் குழந்தைகள் பிறந்தவுடன் அக்குழந்தையின் உறுப்பைத் தைத்து விடுகின்றனர் ஆணாதிக்கவாதிகள். அவளின் திருமணத்தின்போதே தையல் அவிழ்க்கப்படுகின்றது. (1.4.1993)6


ஆணாதிக்கக் கற்பைப் பாதுகாக்கும் அடிப்படையில் உலகில் 11.5 கோடி பெண்களின் பாலுணர்வு உறுப்புகள் அறுக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டுள்ளது. ஆணாதிக்க ஒருதாரமணத்தைப் பெண்ணுக்குக் கட்டாயப்படுத்திய வழியில் இவை சமூக நடைமுறையாக நிகழ்கின்றன. கட்டாயத் திருமணங்களிலும், சடங்குகளிலும் பெண்களின் உறுப்பை வெட்டுவது நிகழ்கின்றது. சிறு குழந்தையில் தொடங்கும் வேறுபட்ட பலவடிவச் சடங்குகளில் வெட்டும் வடிவமும் ஒன்றாகும். பெண் குழந்தைகளில் இருந்தே பெண்ணின் கற்பைப் பாதுகாக்கும் ஆணாதிக்க வழிமுறைகளே இவை. இது அநாகரிகமான காட்டுமிராண்டித்தனமாக நமக்குத் தெரியலாம். ஆனால் தமிழ்ப் பண்பாட்டிலும் சரி, மற்ற பண்பாட்டிலும் சரி, பெண்கள் மீதான கற்பைப் பாதுகாக்கக் கோரும் பண்பாடுகள், ஒழுக்க விதிகள், பரிசோதனைகள் எல்லாம் ஒரே அடிப்படை நோக்கத்தைக் கொண்டவைதான். ஆனால் இதை அமுல்படுத்திப் பாதுகாக்கும் வழிமுறைமட்டுமே நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது.


கற்பு பற்றிய ஆணாதிக்கப் புனைவு என்பது ஓர் ஆணின் வாரிசைப் பெற்றெடுக்க ஓர் ஆணுடன் மட்டும் பெண் உடல் உறவைக் கோரும் எல்லைக்கு உட்பட்டது. ஒருதாரமணத்தில் பெண் மீதான ஆணின் பாலியலைப் பூர்த்தி செய்யும் வடிவத்தை (கணவனை) மீறும் அனைத்தும், கற்பை மீறும் செயலாக ஆணாதிக்கச் சமூகச் சட்டக் கோவை கூறுகின்றது. நடைமுறையில் இருக்கும் சமூகத்தில் உள்ள சட்ட அமைப்பு எப்படியோ அதன் வடிவில் இருக்கும் சமூகச் சட்டமே கற்புக் கோட்பாடாகும்;. இதைப் பாதுகாக்க அப்பெண் மட்டுமல்ல, அவளின் பெற்றோரும் அரும்பாடுபட வேண்டியுள்ளது. அதைச் சமூகம் துல்லியமாகக் கண்காணிக்கின்றது. இதில் இருந்து மீறும் பெண்ணின் வாழ்க்கை கண்ணீரில் பெருகி துன்ப ஆறாகின்றது. பெண் பொருளாதார ரீதியாகப் பலமற்று ஆணின் தயவில் வாழ்க்கைப்பட்டு வாழ்பவள் என்ற நிலையில், குறித்த ஆணுக்குத் தனது கற்பை உறுதி செய்வது மட்டுமே அவள் வாழ்க்கையின் ஆதாரமாகின்றது. பெண்ணும் பொருளாதாரப் பலம் பெறும் போது கற்புக் கோட்பாடுகள் நொறுங்குகின்றன. பெண் தனது சொந்தக் காலில் நிற்கமுடியும் என்பதால் ஆணின் தயவை எதிர்பார்த்து, காத்துக் கிடக்க வேண்டியிருப்பதில்லை. கற்பு பற்றிய ஆணாதிக்கக் கண்ணோட்டத்தை அதன் தனிச் சொத்துரிமை வாரிசுக் கண்ணோட்டத்தில் இருந்து தகர்க்க, பெண் பொருளாதார ரீதியில் தன்னை விடுவிப்பதுடன், அதன் பண்பாட்டுத் தளம் மீதான தாக்குதலைப் பெண்ணின் பொருளாதாரப் பண்பாட்டால் தாக்க வேண்டும். இன்று உலகமயமாதலால், உலகம் தலைகால் புரியாத வேகத்தில் ஓடும்போது, சொத்துரிமை குவிப்பால் ஆணின் சொத்துரிமைகள் கூட விரல்விட்டு எண்ணக்கூடிய சில பிரிவினரால் பறித்தெடுக்கப்படுகின்றது. இது ஆணின் சொத்துரிமை சார்ந்த வாரிசு கண்ணோட்டத்தை உள்ளடக்கி இரண்டையும் தகர்க்கின்றது. பெண் சொத்துரிமையை இந்தத் தனிச் சொத்துரிமை சமூகத்திற்குள் பெறமுடியாது என நிலைமை வேகம் அடைகின்றது. இது ஆணின் சொத்தையும் வேட்டு வைத்து தகர்க்கின்றது. பெண் இன்று இந்த உலகமயமாதலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் போது, சொத்துரிமை இழந்து வரும் ஆண் தனது சொத்துரிமை மற்றும் வாரிசுரிமைக் கண்ணோட்டத்தைக் கைவிட்டுப் பெண்ணுடன் இணைந்து போராட முன்வருவது சமூகப் போராட்ட வடிவமாகின்றது. இது கற்பு பற்றிய கோட்பாட்டையும், பிரமைகளையும், பண்பாடுகளையும் சிதைத்துப் பெண்ணை விடுவிக்கின்றது.


பிரான்சில் ஓரினச் சேர்க்கைக்குச் சிறுவர்கள் உள்ளாக்கப்படுவதைச் சதவீதத்தில் பார்ப்போம். (26.2.1998)44


அட்டவணை - 47

ஆண்டு            தந்தை      தாய்     சகோதரர் சகோதரி     பாடசாலை  நண்பர்கள்      கதாநாயகர்கள் 

1985                   15%            27%                  32%                                       35%                                          41%
1991                    23%           37%                  44%                                       43%                                          56%
1995                    27%           43%                  49%                                       45%                                          62%


1987-க்கும் 1997-க்கும் இடையில் பிரான்சில் நீதிமன்றத்தில் எந்த விடயம் அதிகரித்துள்ளது எனப் பார்ப்போம்.81


அட்டவணை - 48


விடயம்                                                                 அதிகரிப்பு சதவீதம்
தவறான பயன்பாடு                                                          42 % 
போதையில் வாகனம் ஓட்டுதல்                             110 % 
போதை வஸ்து                                                                144 % 

 பாலியல் வன்முறை சிறுவர்கள் மீது                 467 % 
 வெளிநாட்டவர் களவாக வேலை செய்தல்  1,986 %  

இந்தியாவில், ''பதுங்கியுள்ள பேராபத்து" என்ற கட்டுரையிலும் ''பாலுறசு (ளுநஒ) வக்கிரங்களுக்குள்ளாகும் சிறுவர்கள்" என்ற கட்டுரையிலும் பல்வேறு ஆய்வுகளை தொகுத்துள்ளது. இந்தியாவில் சிறுவர் மீது பாலியல் வன்முறை ஒன்று பகிரங்கமாக வெளி வரும் போது 100 சம்பவங்கள் மறைக்கப்பட்டு விடுகின்றது. புதுதில்லியில் பதிவான 143 கற்பழிப்புகளை ஆய்வு செய்த போது 54 சதவீதம் 15 வயதிற்கு உட்பட்ட சிறுமிகள் ஆவர். இதில் 80 சதவீதமானவைத் தமக்குத் தெரிந்த மிக நெருங்கியவர்களால் நடத்தப்பட்டுள்ளது.


இந்தியச் சிறைகளில் உள்ள பெண் குற்றவாளிகளை ஆராய்ந்த போது 67 சதவீதம் பேர் சிறு பெண்ணாக இருந்த போது பாலியல் கொடுமைகளை அனுபவித்தவராக உள்ளனர். ஒரு குழந்தையுடன் உறவு கொண்டால் ஆண்மை அதிகரிக்கும், பால் நோய்கள் தீரும் என்ற இந்தியாவின் காட்டுமிராண்டித்தனமான மூட நம்பிக்கைகள் ஆணாதிக்கத்தை வக்கிரமாகத் தீர்த்துக் கொள்ளும் இந்துப் பண்பாடாகின்றது. கொல்கத்தா புகையிரத நிலையத்தில் (சுயடைறயல ளுவயவழைn) வாழும் 700 அநாதைக் குழந்தைகளில் 90 சதவீதமான சிறுமிகளும், 25 சதவீத சிறுவர்களும் பாலுறவு வன்முறைக்கு உள்ளாகியுள்ளது தெரியவந்துள்ளது. மோசமான வாழ்க்கையைக் கொண்ட மூன்றில் ஒருபகுதி பிரிவினர் சிறு வயதில் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியதை ஆய்வுகள் நிறுவுகின்றன. (21.10.1992)34


அண்மையில் பிரான்சில் பாடசாலைக்குள் நடக்கும் வன்முறையை முதன்முதலாக பிரான்சு அரசு ஒத்துக்கொண்டு விசாரணைக் கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது. சிறுமிகளில் முதல் 18 வயதிற்கு இடையில் 10 சதவீதமானோர் பாலியல் வன்முறையைப் பாடசாலையில் அனுபவிப்பதுடன், இது இரகசியமாக மாறிவிட்டதையும் பிரான்சு அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு நாளும் இரண்டு பாலியல் வன்முறைகளைப் பாடசாலை மாணவர் எதிர் கொள்வதுடன், ஒவ்வொரு ஒன்பது நாளுக்கும் ஒரு கற்பழிப்பு சக மாணவனால் நடத்தப்படுகின்றது. இந்த வகையில் முதல் தவணையில் 242 சம்பவம் நடைப்பெற்றதை கல்வி அமைச்சகம் ஒத்துக் கொண்டதுடன் இதைவிட மேலும் பிரான்சு அதிகமாகவே இருக்கும் என்பதையும் ஏற்றுக் கொண்டனர். இந்த 242 சம்பவத்திலும் 7 சதவீதம் கற்பழிப்பு, 12 சதவீதம் கற்பழிக்கும் முயற்சிக்கு வன்முறையைக் கையாண்டவை. 29 சதவீதம் பாலுறவு வன்முறைக்கு உள்ளாக்கியவை. மிகுதி மற்ற பாலியல் வன்முறைகள் ஆகும். இதில் பாதிக்கப்பட்டோர் 30 சதவீதம் 12 வயதிற்கும் குறைவு. 13 சதவீதத்தினர் 11 வயது உடையோர். 35 சதவீதத்தினர் 13 வயதிற்கும் குறைவு. 18 சதவீதம் பேர் 11 வயதிற்கும் குறைவு. இதில் 8 முதல் 9 வயது குழந்தைகளும் பாதிக்கப்படுவதாக ஒப்புக் கொண்டதுடன், 5 முதல் 11 வயது குழந்தைகள் பல்வேறு பாலியல் வதைக்கு உட்படுவதை கல்வி அமைச்சகம் ஒப்புக் கொண்டு ஒரு விசாரணைக் கமிட்டியை அமைத்துள்ளது. (18.2.1999)33


பிரேசில் செய்திப் பத்திரிக்கையான ~ஆ எஸ்டாடா டா சாவ்ன் பாவ்லூ| குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தொடர்பான தகவல் ஒன்றை வெளியிட்டு இருந்தது. பாலியல் சம்பந்தப்படாத தாக்குதலில் ஆண் - பெண் எண்ணிக்கை சமமாக இருக்க, பாலியல் சம்பந்தப்பட்ட தாக்குதலில் 23 சதவீதம் ஆண் குழந்தையாகவும், 77 சதவீதம் பெண் குழந்தையாகவும் இருக்கின்றது. மனிதக் கொலைக்குப் பலியாவோரில் 10 வயதுக்கு உட்பட்டோரில் 30 சதவீதம் குடும்ப அங்கத்தவர்களால் நடத்தப்படுகின்றது. 29 சதவீதமான பெண் குழந்தைகள், தகப்பன், சித்தப்பா, சகோதரன், மாற்றாந்தகப்பன் மூலம் கற்பழிக்கப்பட்ட பின்பே கொல்லப்படுகின்றனர். 90 சதவீதமான வன்முறை வெளியில் தெரியவருவதில்லை என்ற தகவலையும் அறிவித்துள்ளனர்.31 குடும்பங்கள், உறவுகள் ஆணாதிக்கச் சந்தைத் தளத்தில் வக்கரித்து இயந்திரமாக, குழந்தைகள் பண்பாட்டு வன்முறைக்கு உள்ளாகி, மூலதனமாகி சிதைந்து மடிவதைக் காட்டுகின்றது.


''கருகிப் போன குழந்தைப் பருவம்" என்ற தலைப்பில் வெளியான செய்தியில் சர்வோதயா என்ற அமைப்பு பெங்கள+ரில் இருக்கும் 12 பாடசாலைகளிலுள்ள 348 மாணவிகளிடம் ஆய்வு செய்தனர். ஒவ்வொரு 20 பெண் குழந்தைகளில் மூவர் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவருக்கு 10 வயதிற்குள்ளேயே நடந்துள்ளது. 10 பேரில் ஐந்து பேர் குழந்தையாக இருந்த போது பலாத்காரப்படுத்தலுக்கு முயற்சிக்கப்பட்டுள்ளது. 10 பேரில் எட்டுப் பேர் சிறுவயதில் மார்பகங்களைக் கசக்குவது, பின்பக்கத்தைக் கிள்ளுவது போன்ற வதைகளைச் சந்தித்துள்ளனர். இதில் ஈடுபடுவோரில் 50 சதவீதம் பேர் அப்பா, சகோதரன் மற்றும் நெருங்கியோரே என்பது குறிப்பிடத்தக்கது. (21.8.1994)34


இந்தியாவில் ''தளிர்களின் மீது தாக்குதல்" என்ற தலைப்பில் பதிவான குடும்பத்திற்குள்ளான கற்பழிப்புகளை வயது ரீதியாக காணலாம். (2.5.1995)34

அட்டவணை - 49


வயது ரீதியாக
ஆண்டு           7க்குள்        8 முதல் 10       11 முதல் 16         17 முதல் 25       26 முதல் 35      35க்குமேல்
1994                    23                     18                             50                                37                          12                             5

அட்டவணை - 50

 ஆண்டு (கற்பழிப்புகள்)      தந்தை              சகோதரன்               மாமா              பிறர்
1990                                                 2                               -                               1                         -
1991                                                 3                               -                               2                        1
1992                                                1                                -                               2                        2
1993                                                4                                -                               2                        1
1994                                                7                               1                               4                        4
1995                                                4                               -                                2                        1

 

பாங்காங்கில் 93 சதவீதமான சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி உள்ளதைப் புள்ளி விபரம் காட்டுகின்றது. இவை ஆசிரியர் மற்றும் சமயக் குருமார்களால் நடத்தப்படுகின்றன. 200 சிறுமிகளை எடுத்து ஆய்வு செய்த போது 110 பேர் 150 தடவை கற்பழிக்கப்பட்டுள்ளனர். 64 சதவீதம் சிறுமிகளுக்குப் பெற்றோர் அல்லது உறவினர் மூலம் இவை நிகழ்ந்;துள்ளது. 90 சதவீதமானோர் சட்டத்தில் இருந்து தப்பிவிடுகின்றனர்.55


1990-இல், இந்தியா முழுக்க பதிவான 10,000 கற்பழிப்பில் 25 சதவீதம் 16 வயதிற்கு உட்பட்டோர் ஆவர். மொத்தத்தில் ஐந்தில் ஒன்று பத்து வயதுக்கு உட்பட்டோர் ஆவர். தலைநகர் தில்லியில் நான்கு நாட்களுக்கு ஒரு பெண் குழந்தை கற்பழிக்கப்படுகின்றாள். (1.2.1993)6


மேலுள்ள பல்வேறு பதிவான புள்ளிவிபரங்கள் நமக்கு அதிர்ச்சியளிப்பனவாக இருக்கலாம். ஆனால் இதுதான் இந்த ஜனநாயக அமைப்பின் ஆணாதிக்கத்தின் கொடை ஆகும். பாசிசம் எப்படி ஜனநாயகத்தின் கொடையோ அது போல பாலியலில் சிறுமிகளுக்கும் - சிறுவர்களுக்கும் ஆணாதிக்கம் கொடுக்கும் கொடையாகும். பதிவாகாத எண்ணிக்கை மேலும் அதிர்ச்சியளிக்கக் கூடியவையாக இருக்கும்.


ஜனநாயகம் பற்றிய விளக்கங்கள் எவ்வளவுக்குக் கட்டற்ற சுதந்திரமாகின்றதோ, அந்தளவுக்கு அந்தந்த துறைசார்ந்து அவை விகாரமாகின்றது. பொருளாதாரத்தில் கட்டற்ற தன்மை ஏழைகளைப் பெருக்கி அவர்களைக் கொன்றொழிக்கின்றது. பாலியலில் கட்டற்ற தன்மை குழந்தைகளையும், பெண்களையும் வன்முறைக்கு உள்ளாக்குகின்றது. இது மேற்கில் இருந்து மூன்றாம் உலகம் ஈறாகச் சர்வதேசமயமாகி உள்ளது. இது சொந்தக் குடும்பம் சார்ந்த தொடர்புகளில் வக்கிரமடைந்து செல்லுகின்றது. ஜனநாயகம் பற்றிய பிரமைகள் அதிகரிக்க, மற்றவர்கள் மீதான வன்முறை மறுதளத்தில் விரிவாகி அதிகரித்துச் செல்லுகின்றது. பெற்றோர் தமக்கிடையில் உள்ள பாலியல் நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ள பலவீனமான குழந்தைகள் மீது ஆண் - பெண் வேறுபாடின்றியே இலகுவாகவே பாலியல் வன்முறையை ஏவுகின்றனர்.


சமுதாயத்தில் குழந்தைகள் பற்றிய எதிர்க் கண்ணோட்டம் அதிகரிக்க, அதாவது குழந்தை வாழ்க்கைக்கு இடைஞ்சல், தொந்தரவு போன்ற சிந்தனைகள் குழந்தை நுகர்வதை இலகுவாக்குகின்றது. நிலப்பிரபுத்துவக் கலாச்சாரத்தில்; வாரிசாகக் குழந்தையை இனம்கண்ட சமூகம், ஏகாதிபத்தியப் பண்பாட்டில் எல்லாம் நுகர்வுக்குரியதாகக் காணும் போது குழந்தைகளை இலகுவாகப் பாலியல் நுகர்வுக்குப் பயன்படுத்துகின்றனர்.


இங்கு குழந்தைகளை ஆண் - பெண் வேறுபாடின்றி ஓரினச் சேர்க்கைக்கும், எதிர் பால் உறவுக்கும் பயன்படுத்துகின்றனர். இதனால் பாதிக்கப்படும் குழந்தைகள் சமுதாயத்தில் முடமாக்கப்பட்டு அல்லது எதிர்வக்கிரத்துடன் சமூக வெறுப்பை வெளிப்படுத்தி, குற்றவாளிகளாக அல்லது அதை அவர்களே செய்பவர்களாக உருவாகின்றனர்.


முன்பு ஆண் வன்முறை பற்றி மட்டும் சமூகம் எதிர் கொண்டது போய் இன்று பெண் வன்முறையும் புதிய சமூக விளைவாகியுள்ளது. பெண் இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தில் பெற்ற சுதந்திரம் ஆணிடம் இருந்து ஆணாதிக்கமயமாதல் ஊடான பெண்ணியல் எதிர்க் கண்ணோட்டமாகும்;. ஆணாதிக்கத்திற்கு மாற்றான பெண்ணாதிக்கம் சமுதாயத்தில் பலம்குன்றிய பிரிவுகளைச் சிதைக்கின்றது. ஆணாதிக்கம் பெண்களையும், குழந்தைகளையும் சிதைக்க, பெண்ணாதி;க்கம் குழந்தைகளைச் சிதைக்கின்றது. சாதி அமைப்பில் பலமான சாதிகள் பலமற்ற சாதிகளை அடக்க, பலமற்ற சாதிகள் பலவீனமான உட்சாதிகளை நசுக்குகின்றது. இதுவே பாலியலில் பெண் பெற்ற சுதந்திரம் என்ற ஆணாதிக்கம் பெண்ணை வழிநடத்துகின்றது.


இந்த ஆணாதிக்க ஜனநாயகம் நொறுக்கப்படாத வரை குழந்தைகள் நுகர்வுப் பண்பாட்டில் சிதைக்கப்படுவது அதிகரித்துக் கொண்டே இருக்கும். தனிப்பட்ட ஆணிடம் இருந்து பெறுவதே சுதந்திரம் எனக் கருதும் பெண், ஆணுடன் போட்டி போட்டுக் குழந்தையைச் சிதைப்பது அதிகரித்துச் செல்லுகின்றது. ஆணாதிக்கத்துக்கு எதிரான விடுதலை என்பது இந்தச் சூறையாடும் சுரண்டல் சமூகத்தில் பெண்ணாதிக்கமும் கொண்ட ஆணாதிக்க மயமாதலே எஞ்சும். ஆணாதிக்கம் என்பது சுரண்டல் அமைப்பின் வடிவில் நீடிப்பதால் அதைத் தகர்க்க போராடாதவரை இந்த அமைப்பில் போராடும் வடிவங்கள் பெண்ணையும் உள்ளடக்கி ஆணாதிக்கத்தை விரிவுபடுத்துகின்றது. ஆணாதிக்கத்தை ஒழிப்பதற்குப் பதில் விரிவாக்கம் இந்த அமைப்பின் பொருளாதார வடிவில் சூல் கொள்கின்றது. இதை எதிர்த்துப் பெண்ணியம் போராடாத நிலையை விமர்சித்தபடிதான், பாட்டாளிவர்க்கம் இந்த ஆணாதிக்கக் கூறுகளை எதிர்த்து தலைமை தாங்கி, போராடுவது நிகழ்கின்றது.


சிறுவர் விபச்சாரம் வௌ;வேறு நாடுகளில் எப்படி உள்ளதென்று காணலாம்..(55), (79)
அட்டவணை - 51


நாடுகள்                                 எண்ணிக்கை
பிலிப்பைன்ஸ்                   6.5 இலட்சம்
இந்தியா                                4 இலட்சம்
அமெரிக்கா                         3 இலட்சம்
சீனா                                        5 இலட்சம்
தாய்லாந்து                         3 இலட்சம்
கிழக்கு ஐரோப்பா           1 இலட்சம்
பிரேசில்                              2.5 இலட்சம்
தைவான்                             60 ஆயிரம்
பாகிஸ்தான்                      40 ஆயிரம்
நேபாளம்                            30 ஆயிரம்
இலங்கை                           30 ஆயிரம்
டொமினிக்கன்                25 ஆயிரம்
பங்களாதேசம்                15 ஆயிரம்


சிறுவர் மீதான பாலியல் வக்கிரத்தையொட்டி, ''சுவீடன் பொலிசார் 1992 ஜுன் மாதம் தனியார் வீடொன்றில் 300 மணிநேரம் ஓடக்கூடிய பாலியல் வக்கிர வீடியோக்களைக் கைப்பற்றினர். இதில் பெரும்பாலானவை இலங்கையைச் சேர்ந்தவை." இதழ்-3.246 அமெரிக்காவில் 40 வினாடிக்கு ஒரு குழந்தை காணாமல் போகின்றது. (16.12.1998)82


இலங்கையில் ஓரினச் சேர்க்கைக்குப் பயன்படுத்தப்படும் சிறுவர் - சிறுமிகளின் எண்ணிக்கை 40,000 பேர் ஆவர். இந்தியாவில் நான்கு இலட்சம் சிறுவர் - சிறுமிகளும,; பிரேசிலில் 2.5 இலட்சம் சிறுவர் - சிறுமிகளும், பிலிப்பைன்சில் 60,000 சிறுவர் - சிறுமிகளும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தாய்லாந்தில் 12 வயதுக்கு உட்பட்ட ஆறு இலட்சம் சிறுமிகள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம் 18 வயதிற்கு உட்பட்ட 18 இலட்சம் பேரை ஆணாதிக்க அதிகார அமைப்பு விபச்சாரத்தில் ஈடுபட வைத்துள்ளது. தாய்லாந்தில் 6,000 டாலர் வீதம் ஒரு சிறுமியை வாங்கி ஜப்பானில் 14,000 டாலருக்கு விற்கப்படுகின்றனர். அச்சிறுமி 30,000 டாலர் கட்டியே தன்னைத்தானே மீட்க முடியும். (3.4.1995)54 பிலிப்பைன்ஸ் நாட்டில் வீதியில் வசிக்கும் 50 ஆயிரம் வீதிச் சிறுவர்கள் - சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்குப் பயந்து இரவில் சுடுகாடுகளில் வாழ்கின்றனர். (12.12.1998)47 வளர்ச்சியடைந்த 25 நாடுகளை எடுத்து ~த டாலாஸ் மார்னிங் நியூஸ்| பத்திரிக்கை செய்த ஆய்வில், அமெரிக்கச் சிறுவர்களின் நிலைமை மோசமாக இருப்பதை வெளிக் கொண்டு வந்துள்ளது. வெடிகளால் இறக்கும் சந்தர்ப்பம் 12 ஆகவும், கொலை செய்யப்படும் சாத்தியம் ஐந்தாகவும், தற்கொலை சாத்தியம் இரண்டு மடங்காகவும் இருக்கின்றது.31


இந்தியாவிலுள்ள மாமல்லபுரத்தில் ''கேளிக்கையின் கொடுமை" என்ற தலைப்பில் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் சில்லறைக்குச் சிறுவர், சிறுமிகள் பாலியல் கேளிக்கைக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்ற தகவலை இந்தியா டுடே வெளியிடுகின்றது. (21.3.1999)34


சுவீடனைச் சேர்ந்த சிறுவருக்கு எதிரான பாலியல் நிபுணர்கள், இணையத்தில் நான்கு வலையத்தில் சிறுவர் சம்பந்தமான பாலியல் காட்சிகளை எண்ணிய போது, வாரம் ஒன்றுக்கு 5,651 பாலியல் வக்கிரம் சார்ந்த புதிய நிகழ்ச்சிகள் புகுத்தப்படுவதை அம்பலப்படுத்தியுள்ளனர்.31 இதைத் தடுக்க ஜனநாயகச் சட்டமும், இதை அழிக்க உலகமயமாதல் ஜனநாயகமும் மறுப்பதால், பாடசாலை இணையத்திலும் இவை ஜனநாயகமாகி, மாணவ - மாணவிகளை சிதைக்கின்றது.


1996-இல், ஆசியாவில் சிறுவர் மீதான பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டோரில் அமெரிக்கர் 24 சதவீதம், ஜெர்மனியர் 15 சதவீதம், பிரிட்டீஸ்சார் 13 சதவீதம், ஆஸ்திரேலியர் 11 சதவீதம், பிரான்சு தேசத்தவர் 7 சதவீதம், ஜப்பானியர் 7 சதவீதம் ஆகும். முக்கியமாக மேலே குறிப்பிட்ட முன்னணி மேற்கு நாட்டவர் 77 சதவீதத்தினர் ஆவர். இதில் மற்ற மேற்கு நாடுகளையும் சேர்த்தால், ஆசியாவின் சிறுவர் விபச்சாரம் மற்ற உற்பத்தி நுகர்வுகளைப் போல் இவை எல்லாம் மேற்கின் வெள்ளையருக்கே என்பது புரியும். சிறுவர் விபச்சாரம் ஆசியாவில் அதிகரிக்க, அதன் நுகர்வுக்கான விலை குறைந்துள்ளது. இதனால் ஜெர்மனியில் இருந்து இரண்டு இலட்சம் பேர் பாலுறவுக்காக உல்லாசப் பயணம் செய்கின்றனர். இதனால் பாதிக்கப்படும் சிறுவர் - சிறுமிகள் 10,000 பேராவர்.2


வெள்ளை இன ஆணாதிக்க வக்கிரத்துக்காக மூன்றாம் உலகச் சிறுவர் - சிறுமிகள் பாலியல் சந்தையின் நுகர்வுப் பண்டங்களாகின்றனர். சுற்றுலாத் துறையின் சர்வதேச ஏகாதிபத்தியப் பன்னாட்டு நிறுவனங்களும், விமானச் சேவை நிறுவனங்களும் மூலதனத்தைத் திரட்ட, மேற்கின் ஆணாதிக்க நுகர்வை உந்தித் தள்ளுவது அவசியமாகும். இது தேசம் கடந்த பாலியல் நுகர்வை ஊக்குவிக்கின்றது. விமானத்துறையை வளர்த்தெடுக்கவும். இந்தத் துறையினதும், சுற்றுலாத் துறையினதும் இலாப வேட்கை பூர்த்தி செய்ய மூன்றாம் உலகில் சிறுவர் - சிறுமிகளின் பாலியல் சந்தை விரிவாக்கப்படுகின்றது.


ஜனநாயகத்தையும், அமைதியையும் நிலைநாட்ட தேசம் கடந்து செல்லும் ஆக்கிரமிப்பு இராணுவங்களின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்ய உருவான விபச்சார மையங்கள், மூலதனத்தைத் திரட்டியதன் தொடர்ச்சியில் இத்துறை உல்லாசத் துறையாக வளர்ச்சி பெற்றது. உழைக்கும் மனிதனின் அற்பச் சேமிப்பையும் பிடுங்கும் உல்லாசத்துறை ஊக்குவிப்பு விளம்பரமாக, அதற்குத் தேவையான பாலியல் வக்கிரத்தையும் புகுத்தியது.


இதற்கு எதிரான போராட்டங்கள் ஒருபுறம் நடக்க, மூன்றாம் உலகத் தரகு அரசுகள் உல்லாசத் துறையைத் தேசிய வருமானத்திற்கான ஊக்குவிப்பாகப் பிரகடனங்களைச் செய்கின்றனர். சொந்த மனைவியை விபச்சாரத்திற்கு அனுப்பி சம்பாதிக்கும் கணவன் போல், சொந்த நாட்டுச் சிறுவர் - சிறுமிகளைப் பாலியல் சந்தையில் புணரவிட்டுச் சம்பாதிக்கக் கோருவதுதான் தரகுத்தனத்தின் ஜனநாயகத் தேசப்பற்றாகும்;. எதிர்ப்புகளை மூடிமறைக்க கைதாகும் நபர்கள் பெரும்பான்மையானோர் மேற்குப் பன்றிகளே என்பது இந்தப் பாலியல் சுற்றுலாவை எமக்குத் துல்லியமாகத் தோலுரிக்கின்றது.


குழந்தை உழைப்பு பற்றி மூக்கால் அழும் ஏகாதிபத்திய வேட்டை நாய்கள், இந்தப் பாலியல் விடயத்தில் மௌனம் சாதிப்பதன் மூலம் ஏகாதிபத்திய நலன்கள் துல்லியமாகின்றன. விளையாடியே சந்தோசமாக இருக்க வேண்டிய குழந்தைகளை, படுக்கையில் படுக்க வைக்கும் உலகமயமாகும் ஜனநாயகத்தின் நுகர்வுப் பண்பாட்டு நாற்றம்தான், இந்த விபச்சார வடிவத்தில் சீழ்ப்பிடிக்கின்றது.


சிறுவர்கள் மீதான தாக்குதல்கள் பலதுறை சார்ந்து விரிவாகின்றது. பெரியோர்கள் தமது குழந்தை பற்றிய எதிர்மனப்பான்மையை இந்த ஜனநாயகப் பண்பாட்டால் உள்வாங்கிய போது மனிதனின் இயற்கை மீதான உயிராற்றல் சிதைக்கப்படுகின்றது. குழந்தையின் பராமரிப்பு பெற்றோரின் இயற்கைக் கடமைகள் நுகர்வுத் தளத்தில் சிக்கிச் சிதைகின்றது. இதனால் குழந்தைகளைக் கைவிடுதல் அல்லது வறுமையின் கோரம் குழந்தைகளை வீதிக்குத் துரத்துகின்றது. அத்துடன் ஏகாதிபத்திய நுகர்வைத் தேடி குழந்தைகள் வீதிக்கு வருகின்றனர்.


உலகில் 4 கோடி சிறுவர் - சிறுமிகள் வீதியில் வாழ்கின்றனர். வீதிக்கு வந்தவர்கள் எதையாவது பொறுக்கி வாழவும், சமூகத்தின் அவலத்தில் தத்தளித்தும் சிதைந்து போகின்றனர். இந்த நிலையை ஜனநாயகத்தால் அலங்கரித்து பாதுகாத்து நிற்கும் அரசுகள், மறுதளத்தில் ஜனநாயகவாதிகளின் அழகின் கலை இரசனைக்கு முன் இவை அழுகுவதால், இவற்றை அகற்றிச் சிறையில் இடப்படுகின்றனர். அல்லது தீர்வாக வீதிகளில் படுகொலை செய்யப்படுகின்றனர்.


பிரேசிலில் ஒவ்வொரு நாளும் நான்கு வீதிச் சிறுவர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். இது 1993-1994-இல், 40 சதவீதம் அதிகரித்துள்ளது. (15.4.1995)6 இது உலகநாடுகள் பலவற்றின் பொதுவிதியாக உள்ளது. சூறையாடும் சுரண்டும் வர்க்கம் தனது மூலதனத்தைத் திரட்டிக் கொழுக்க, மக்களைப் பட்டினியில் ஆழ்த்திய படி கடலில் கொட்டியும், புதைத்தும், எரித்தும் அழிப்பது போல் நகரத்தை அழகுபடுத்த சிறுவர் - சிறுமிகளைக் கொன்று விடுகின்றனர். அதேநேரம் உலகச்சந்தையான விபச்சார விடுதிகளில் தள்ளி, படுப்பதற்காகப் புனர்வாழ்வு அளிக்கின்றனர். இதன் மூலம் உல்லாசப் பயணத்துறை மூலதனத்தைப் பெருக்குவதன் மூலம் தேசத்தின் தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பித் தேசாபிமானியாகின்றனர்.


பெற்றோர்களின் நுகர்வும், அதனடிப்படையிலான கண்ணோட்டமும் குழந்தைகளை நுகர்வுச் சந்தையில் மூலதனமாக்குகின்றனர். குழந்தையை மூலதனத்தின் இலாபகரமான வடிவமாகக் காணும் பெற்றோர், குழந்தைகளை இயந்திரத்தனத்துக்குள் அழுத்திப் பிழிகின்றனர். குழந்தைகளின் அழகுராணி போட்டிகள், மொடலாக வடிவமைத்தல் என்ற உயர் மட்டக் குடும்பத்தில் இருந்து மத்தியத்தர வர்க்கத்தின் கனவுகள் மாறுபட்டுச் செல்கின்றது.


இந்தியாவில் ''பதினாறடி பாய வேண்டும்..." என ''பேராசை பெற்றோர்கள்" தாம் விரும்புவதைக் குழந்தைகள் மீது திணிக்கின்றனர்.(21.1.1996)34 குழந்தைகள் பெற்றோரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் இயந்திரமயமாகின்றனர். சோதனைக்கும், பழக்கத்துக்கும் உள்ளாக்கும் நல்ல இயந்திரம் போல், குழந்தை தனது சிறுவயதில் இயந்திரத்தனத்தில் சிக்கி மூச்சுத் திணறுகின்றது. இயல்பான, இயற்கையான வளர்ச்சிக்குப் பதில் திணிக்கப்படும் கல்வி, பழக்கவழக்கங்கள், நடத்தைகள் எல்லாம் இந்த நுகர்வுச் சந்தையில் அந்தக் குழந்தையின் இடத்தை முன்கூட்டியே பதிவு செய்வதை அடிப்படையாகக் கொண்டது. இதன் மூலம் பெற்றோர் இந்த நுகர்வுச் சந்தையில் இலாபகரமான இடத்திற்குப் போட்டி போட குழந்தைகளைப் பயன்படுத்தி போட்டிப் போடுகின்றனர்.