அமெரிக்காவில் 1995-இல், 50,000 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் 8,000 குழந்தைகள் உள்நாட்டில் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். டைம் பத்திரிகை செய்தியின் படி 25 வருடங்களில் 1,40,000 குழந்தைகள் தத்து எடுக்கப்பட்டுள்ளனர். இது சுவீடனில் 32,000-ஆகவும், ஹாலந்தில் 18,000-ஆகவும், ஜெர்மனியில் 15,000-ஆகவும், டென்மார்க்கில் 11,000-ஆகவும் இருக்கின்றது.31 தத்தெடுப்பு நாகரிகத்தின் பண்பாட்டில் அதிகரிப்பது பொதுப் பண்பாடாகின்றது.


பிரான்சில் பிள்ளையைத் தத்தெடுத்தல் வருடாவருடம் 5,000-ஆக உள்ளது. இதில் வெளிநாட்டுக் குழந்தை 3,500 ஆகும்.80 ~~குழந்தை வேணுமா, குழந்தை?|| என்ற கட்டுரையில், வறுமையின் கொடுமையால் 20 ரூபாய், 100 ரூபாய் என குழந்தையை பெற்ற தாயே விலை பேசி விற்பதை இந்தியா டுடே எழுதுகின்றது. (6.2.1993)34


1997-இல், 70 நாடுகளில் இருந்து பிரான்சுக்கு 3,528 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் வியட்நாமில் இருந்து 1,328 குழந்தைகளும், கொலம்பியாவில் இருந்து 234 குழந்தைகளும், மடகஸ்காவில் இருந்து 174 குழந்தைகளும், ரஷ்யாவில் இருந்து 173 குழந்தைகளும், பிரேசிலில் இருந்து 167 குழந்தைகளும், குவாத்தா மாலாவில் இருந்து 161 குழந்தைகளும், ருமேனியாவில் இருந்து 132 குழந்தைகளும், பல்கேரியாவில் இருந்து 121 குழந்தைகளும்,  எதியோப்பியாவில் இருந்து 110 குழந்தைகளும்,  மாலியில் இருந்து 92 குழந்தைகளும் கொண்டு வரப்பட்டது. வருடாவருடம் 6,000 ஒப்பந்தங்கள் தத்தெடுப்பில் நடைபெறுகின்றது. 12,000-14,000 குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் குழந்தையை எதிர் பார்த்து வருடாவருடம் காத்துக் கிடக்கின்றனர். (14.4.1999)1


~~அப்பா எதுக்கப்பா|| என்ற தலைப்பில், திருமணம் செய்யாத பெண்கள்  பிள்ளைகளைத் தத்தெடுத்து வளர்க்கின்றனர் என்று குறிப்பிடுகிறது இந்தியா டுடே. (5.11.1997)34  இந்தியாவில் ~~தத்து எடுத்தல் சமுதாய அங்கீகாரம் புதிது|| என்ற தலைப்பில், 1988-இல், 398-உம், 1989-இல், 757-உம், 1990-இல் 2,300-உம் தத்து எடுக்கப்பட்டுள்ளது என்று இந்தியா டுடே சுட்டுகின்;றது. (21.3.1991)34


தத்தெடுப்பு என்பது குழந்தையானது தாய் தந்தையை இழந்து பரிதவிக்கும் நிலையில் என்பதில் இருந்து மாறி, இதை ஏகாதிபத்திய ஆணாதிக்கம் புதிய வடிவத்துக்கு மாற்றியுள்ளது. ஏழ்மையைக் கொண்டு குழந்தையை விலைபேசும் பணக்காரக் கும்பல் தனது வக்கிரமான சீரழிவுக் கலாச்சாரத்துக்குக் கிடைத்த பரிசாகக் காண்கின்றது. பெண்ணின் தாய்மையையும், அதன் பாதுகாக்கும் உயிராற்றலையும், அதன் உணர்ச்சியையும் பாலியலில் நலமடித்த ஆணாதிக்கச் சொத்துரிமை, குழந்தை மீதான தாய்மையைப் பணத்தைக் கொண்டு சிதைக்கின்றது. இதை அருமையாக நாட்டுப்புறப் பாடல்கள் விளக்குவதைக் கீழே உள்ள பாடலிலிருந்து பார்ப்போம்.


''மரக்கால் உருண்ட பஞ்சம் மன்னவரைத் தோத்த பஞ்சம்
 நாழியுருண்ட பஞ்சம் நாயகனைத் தோத்த பஞ்சம்
 ஆழாக்குரண்ட பஞ்சம் ஆலினைத் தோத்த பஞ்சம்
 தாலி பறிகொடுத்தும் தனிவழியே நிண்ண பஞ்சம்
 கூறை பறி கொடுத்துக் கொழுந்தனைத் தோத்த பஞ்சம்
 கணவனைப் பறிகொடுத்துக் கைக்குழந்தை வித்த பஞ்சம்"38


உலகத்தில் வறுமையும், நோயும் கோடிக்கணக்கில் குழந்தைகளைக் கொன்றுவிடுவதற்கு, இந்தப் பணக்காரக் கும்பல் எப்படி நேரடியாகவும், மறைமுகமாகவும் காரணமாக இருக்கின்றதோ, அந்தக் கும்பலே தாயிடம் இருந்து குழந்தைகளைப் பிரித்து தமது நலன்களை ஈடுசெய்கின்றனர். பத்து பதினைந்து ரூபாய்க்குச் சொந்தக் குழந்தையை விற்று வாழ நிர்ப்பந்திக்கும் இந்த நாகரிக ஜனநாயகம் அந்தத் தாயின் சோகத்தை என்றும் எடுத்துச் சொன்னதுமில்லை, எடுத்துக் காட்டியதில்லை. மாறாக அதைப் பறித்தெடுத்த கொடுமையை மனிதாபிமானமாகக் காட்டி அதைப் போற்றும் நாகரிகம்தான் ஆணாதிக்கத்தின் வக்கிரக் கொடூரமாகும்;. வறுமைப்பட்ட நாடுகளில், வறிய குடும்பங்களில் இருந்து பால் மணம் மாறும் முன்பே பிரித்தெடுக்கும் நாகரிகம், சந்தைத் தளத்தில் மிருகத்திடம் இருந்து குட்டியைப் பிரித்து பணம் சம்பாதித்த ஜனநாயகத்தில் மனிதக் குழந்தைகள் வாரிசுகளை உற்பத்திச் செய்கின்றனர். பெற்ற தாயின் சோகத்தை எந்த ஜனநாயகமும் கண்டு கொள்வதில்லை.


குழந்தைகள் சமூகத்தின் சொத்தென்பதை மறுக்கும் தனிச் சொத்துரிமைக் கும்பல்தான் குழந்தைகளை மாற்றான் மனப்பான்மையில் அணுகுகின்றது. ஒருபுறம் கோடிக்கணக்கில் குழந்தைகளை வருடாவருடம் கொன்று போடும் இந்தச் சீமான்கள், மறுபுறம் தனிச்சொத்துரிமை வாரிசுகளை அபரிதமான வசதியில் சீரழிக்கின்றது. தத்தெடுப்பது ஊடாக இப்படி இயற்கைக்குப் புறம்பாக, சமுதாய நலனுக்குப் புறம்பாகப் பணக்காரக் கும்பல் செய்யும் கூத்துக்கள் ஆணாதிக்கத்தின் வக்கிரமான கொடூரப் பக்கங்களாகும். அநாதைக் குழந்தைகளைச் சமுதாயம் பொறுப்பேற்காத நிலையில் தனிமனிதர்கள் அதைப் பராமரிக்கும் போது, அது இந்தப் பணக்காரக் கூத்துகளில் இருந்து வேறுபட்டது. ஆனால் பெற்ற தாயிடம் அவளின் வயிற்றுச் சூடு ஆறும் முன்பே தொப்புள் கொடி வெட்டியவுடன் பிரித்து வரும், இந்த நாகரிகக் கட்டற்ற சுதந்திரம் ஆணாதிக்கத்தின் மற்றொரு கொடூரமான பக்கமாகும்;. இது அந்தத் தாய்மையின் பரிவுக்கூறுகளை நாசமாக்கிச் சிதைக்கின்றது. இந்தத் தாயின் சொந்த உடல் சார்ந்த குழந்தையின் உரிமை பற்றி எந்தப் பெண்ணியமும் மறந்தும் கூட புலம்புவதுமில்லை, புலம்பியதுமில்லை.