தேவதாசி முறையை விபச்சார நிலைக்கு இட்டுச் சென்ற பார்ப்பனியம் தமது ஆணாதிக்க வக்கிரத்தைத் தீர்த்துக் கொள்ள இதை ஊக்குவித்தனர். உடல் சேர்க்கை மூலம் மோட்சத்தை அடையமுடியும் என்ற மதக்கோட்பாட்டை முதன்மைப்படுத்தி, பெண்ணைப் பக்தியின் பின்னால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தினர். தமிழில் ~தேவரடியாள்| (தேவ அடியாள்) என்ற சொல்லின் மொழி பெயர்ப்பே தேவதாசியானது. தேவதாசி முறை கி.பி. 19-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னால் இந்து மத ஆதிக்க வெற்றியின் விளைவாகியது. பார்ப்பன இரத்தத்தில் பிறப்பவர்கள் மட்டுமே அறிவையும், செல்வத்தையும் பெறுகின்ற இறைவன் அருள் கிடைக்கும் என்று கூறினர். அதைத் தாண்டி உருவான அறிவாளிகளைத் தமது உறவின் விளைவாகப் பிறந்தவர்கள் எனக் காட்டி, பெண்களைப் பாலியல் ரீதியில் சுரண்டினர். இன்று பாலியல் விடுதலையைச் சுதந்திரத்தின் அடிப்படை என்று எப்படிக் கூறுகின்றனரோ அப்படித்தான், பக்தியின் பின்னால் பார்ப்பனருடனான உடலுறவு பெண்ணின் மோட்சத்துக்கும், நிகழ் உலகச் செல்வத்துக்கும் திறவு கோள் என்று கூறி ஆணாதிக்கம் கொழுசாக வாழ்ந்தது. தஞ்சாவூரில் இருக்கும் பெரிய கோயிலில் ''400 தேவதாசிகள்"7 இருந்தனர்.
விபச்சாரம் என்பது ஆணாதிக்கத்தின் பலதார மணத்தின் ஒரு வடிவமாகும். இதை அடைவதில் ஆணாதிக்கம் பெண்ணைப் பலியிடவும் தயாராக இருந்தது. இந்த விபச்சாரம் பலவழியில் சமூக அங்கீகாரத்துக்கு உட்பட்டது. இந்த வகையில் இந்து மதம் ஊடாக விபச்சாரத்தை ஏற்படுத்தினர். இதை இறைவனின் கன்னிகை என்ற பெயரில் பார்ப்பனர்களும், அதிகார வர்க்கமும் அப்பெண்கள் மீது பாலியல் வக்கிரத்தைப் கோயிலில் வைத்தே புரிந்தனர், புரிகின்றனர். ஊரில் அழகான பெண்கள் மீது இந்த ஆணாதிக்கக் கூட்டத்தின் கண்பட்டால் அப்பெண் கடவுளின் கன்னிகையாக வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை.
இதையொட்டி, கடவுளின் பெயரில் விபச்சாரம் என்ற கட்டுரையில் பெண்கள் விபச்சாரத்துக்கும், சிறுவர்கள் ஓரினச் சேர்க்கைக்கும் பயன்படுத்தப் படுகின்றனர். (1.3.1990)6 கலாச்சாரம் என்ற பெயரில் ஐந்து தேவதாசிகளை 1997-இல், நேர்கண்டு கடவுளின் பெயரில் அமர்த்தியது. மீளவும் 1995-இல,; ஐந்து பேரை அமர்த்த ஒரிசாவில் உள்ள பூரி ஜெகந்நாதர் ஆலயம் முயற்சி செய்தது. (15.10.1995)6 தேவதாசி முறையை ஆந்திராவில் நடைமுறைப்படுத்தி அமுலில் உள்ளது அண்மையில் அம்பலமானது. 2 முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இதற்குப் பலியிடப்பட்டது தெரிய வந்துள்ளது. இவர்கள் பார்ப்பனருக்கும், முக்கிய புள்ளிகளுக்கும் விபச்சாரத்துக்கு விடப்படுபவர்கள். அத்துடன் பரதம் என்ற நடனமும் இவர்களால் அவர்களுக்கு ஆடிக் காண்பிக்கப்படுகின்றது.20 (1.7.1999). இவை அண்மைக்கால இந்து ஆணாதிக்க ஆதாரச் செய்திகள் ஆகும்.
பெண்களின் விழிப்புணர்ச்சி, மதத்துக்கு எதிரான போராட்டம், பார்ப்பனியத்தின் அம்பலமாகி வரும் நிர்வாணம் போன்றன தேவதாசி ஒழிப்பை வேகப்படுத்தியது. ஆனால் ஆணாதிக்கம் அனுபவித்த சுகத்தை என்றுமே விட்டுக் கொடுக்க தயாராயில்லை என்பதை மேல் உள்ள ஆதாரம் காட்டுகின்றது. இப்பெண்கள் தமது உடலால் மட்டுமல்ல... ஆடல் - பாடல் ஊடாகவும் ஆணாதிக்கப் பிரிவை மகிழ்ச்சியூட்ட வேண்டியிருந்தது. இந்த வகையில் பரதம் என்ற நடனம் இவர்களின் கலையாக வளர்ந்தது. தேவதாசியின் ஒழிப்பு சட்டப்படி வந்து அமுல்படுத்தப்பட்ட பின் பார்ப்பனியம் தமது மனைவிகளை ஆட வைத்து இன்பம் காண அதைச் சுவீகரித்துக் கொண்டது.
ஆரம்பத்தில் கோயிலில் இறைவனை நோக்கியும், பார்ப்பனியத்தின் பாலியல் வக்கிரத்தை நோக்கியும் ஆடிய ஆட்டம் பின்னால் பாப்பாத்திகள் மட்டும் ஆடுவது மரபாகியது. இன்று இவை மெல்ல மெல்ல மேல்தட்டு வர்க்கத்தின் நடனமாக மாறியுள்ளது.
கோயிலுக்கு விடப்பட்ட பெண்களின் கண்ணீர் என்பது இந்து மதத்தின் வக்கிரமான ஆணாதிக்கமாகும். இதை இன்றும் கடைப்பிடிப்பதுடன், அதைக் கோரி நடைமுறைப்படுத்துவதையும் காணமுடிகின்றது. இந்து இராஜ்ஜியம் கோரும் இன்றைய இராமன் வானரங்களின் ஆட்சி பாசிசத்தில் அரங்கேறின் வேதாளம் மீள ஏறிய கதையாகவே மாறும்;. பெண்களின் விபச்சாரம் கோயிலின் மையத்தில் முழுமையாக நிறைவேற்றப்படும். இது இந்து இராஜ்ஜியத்தின் கனவும் கூட.
உலகமயமாதலை விரிவாக்கி ரஷ்யாவில் சுரண்டும் ஜனநாயகத்தை ஏற்படுத்திய போது விபச்சாரம் சமூக அந்தஸ்து பெற்றுள்ளது. அங்கு மேல்நிலை கல்வி கற்கும் மாணவிகளிடையே செய்த ஆய்வில், 25 சதவீதமானோர் விபச்சாரத்தை ரஷ்ய வாழ்க்கையின் முக்கியமான அம்சமாகக் கருதுகின்றனர். 1990-இல், 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் கருச்சிதைவு ஐந்து வருடத்தில் இரட்டிப்பாகியுள்ளதை ஐக்கிய நாட்டுப் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. ஜனநாயகம் என்பது தனிச்சொத்துரிமை அமைப்பில், ஆணாதிக்கப் பலதார மணத்துக்குத் தேவையான இளமை கொண்ட விபச்சாரிகளை உருவாக்குவதே ஆகும். பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தில் இதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ஆனால் இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தில் இதுவே அடிப்படை மனித உரிமையும், சுதந்திரமுமாகும்.
1991-இல், பாகிஸ்தான் மனித உரிமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் 2 இலட்சம் வங்கதேசப் பெண்கள் பாகிஸ்தானில் கட்டாய விபச்சாரத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளனர். தாய்லாந்தில் 15 முதல் 35 வயதுக்கு இடையில் உள்ளோரில் 8.2 சதவீதம் பேர் விபச்சாரத்தில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இங்கு அதைவிட எட்டு இலட்சம் சிறுமிகள் - சிறுவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரேசிலில் 25,000 சிறுமிகள் அமேசன் தங்கச் சுரங்கத்தில் அரசாங்கத்தின் உறுதுணையுடன் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.57
முஸ்லிம் தேசமும், முஸ்லிம் மதமும், முஸ்லிம் ஆணும் ஒழுக்கத்தின் வழிகாட்டி என்ற மதப் பிரமைகளைத் தகர்க்கும் வகையில், பாகிஸ்தான் மனித உரிமைக் கழகம் வெளியிட்ட அறிக்கை அமைந்துள்ளது. ஒரு பெண் விபச்சாரத்துக்குத் தள்ளப்பட்டுச் செல்வது ஒரு வழி. ஆனால் கட்டாயமாக விபச்சாரத்தை நடத்தக் கடத்தி வருவது மற்றொரு வழி. இந்த வகையில் முன்னாள் வங்கத்தேசத்தில் இருந்து பெண்களைக் கடத்தி வந்து கட்டாயமாக நடத்தப்படும் விபச்சாரத்தை எந்தப் புனித நபர்களும் எதிர்த்துப் போராடவில்லை. மாறாக அதே ஆணாதிக்கத்தின் பிரதிநிதியாக இருந்து அங்கீகாரம் வழங்கி பாதுகாக்கின்றனர்.
இன்று வறுமை, சுதந்திர வர்த்தக வலையம், உல்லாசப் பிரயாணிகளின் வரவேற்பு இடங்கள், அமைதி காக்க செல்லும் இராணுவ முகாம்கள், தேசம் கடந்த நிறுவனங்களின் சுற்று வட்டாரங்கள்..... எங்கும் விபச்சாரம் வேர் விட்டு வளருகின்றது. இதற்கே உரிய வறுமையை உருவாக்கி, விபச்சாரத்துக்கு அழைத்துச் செல்கிறது. விபச்சாரத்தில் அனைத்துச் சலுகைகளும் கிடைக்கின்றது. சட்டம் இடம் விட்டு நகர்கின்றது. இதற்குத் தேவையான சிறுவர் - சிறுமிகள் தாராளமாக மூலதனச் சந்தையால் வழங்கப்படுகின்றது. அங்கு தொழில் புரியும் பெற்றோரை வறுமைக்குள் திட்டமிட்டே நகர்த்தும் ஏகாதிபத்தியம் குழந்தைகளைத் திட்டமிட்டே விபச்சாரத் தொழிலில் இறக்குகின்றது. சிறுவர் உழைப்பு பற்றி (இது ஏகாதிபத்தியச் சந்தை விரிவாக்கத்திற்குத் தடையாக உள்ளதால்) புலம்பும் ஏகாதிபத்தியம் சிறுவர் விபச்சாரம் பற்றி புலம்புவதை மட்டுப்படுத்துகின்றனர். தாய்லாந்திலும், வியட்நாமிலும்; ஜனநாயகத்தை நிலைநாட்ட சென்ற அமெரிக்க இராணுவத்தின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்யும் ஜனநாயகமாக அந்த நாட்டுச் சிறுமிகள் இருந்தனர். இது போல் கம்போடியா நாட்டில் போல்பாட் ஏற்படுத்திய பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை ஒழித்து ஜனநாயகத்தை நிலைநாட்ட அமெரிக்க இராணுவத்துக்குத் தாய்லாந்து, கம்போடியா சிறுவர் - சிறுமிகள் பாலியல் ஜனநாயக ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டனர். இவை எல்லாம் மேற்கின் ஜனநாயகம் ப+த்துக்குலுங்க மற்ற நாட்டுக் குழந்தைகள் பலியிடப்பட்டனர்.
பிரான்சில் விபச்சாரம் மூலம் ஆண், பெண் விதிவிலக்கின்றி பாலியலை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் அனுபவித்தீர்களா? என்ற கேள்வி கேட்ட போது அளித்த பதில்களை அட்டவணை: 19-இல், காணலாம் (15.5.2000)33
அட்டவணை - 19
ஆம் 16 சதவீதம்
இல்லை 74 சதவீதம்
பதில் அளிக்காமை 10 சதவீதம்
இந்தச் சுதந்திரமான ஜனநாயக வளர்ச்சியில் நெதர்லாந்து அரசு 1992-இல், விபச்சாரத்தைச் சட்டப்பூர்வமாக அங்கீகரித்ததன் மூலம் வருடம் 83.8 கோடி டொலர் பணத்தைத் திரட்ட திட்டம் தீட்டியுள்ளது. (1.7.1992)54 சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பதன் மூலம் விபச்சாரத்தைத் தொழிற்சாலையாக்கி, அதில் பெண்ணை இயந்திரமாக்கிப் பணம் சம்பாதிக்கச் சுதந்திர அரசு சுதந்திர ஆணாதிக்கத்தைச் சட்டப்பூர்வமாக்கியது. இவை மேற்கில் பல கோடி பணத்தைத் திரட்டித் தருவதாக மாறியது. இந்தப் பணம் சிறு நாடுகளின் தேசிய வருமானத்தையும் விஞ்சி நிற்கின்றது. இதன் போக்கில் உல்லாசத் துறையை ஊக்குவிக்க மூன்றாம் உலக நாடுகளில் விபச்சார விடுதிகளை ஊக்குவிக்கின்றது. இதன் மூலம் உல்லாசத்துறை கொழுக்கின்றது. இதைப் பாதுகாக்கும் ஜனநாயக வடிவத்தை உலகமயமாதல் ஊடாகவும், ஆக்கிரமிப்பு இராணுவத்தின் ஊடாகவும் உல்லாசமாக வாழக் கவலைப்படும் பணமுதலைகள் கோருகின்றனர்.
மேற்கில் உல்லாசத்துறை மூன்றாம் உலகப் பெண்ணின் நிர்வாணத்தை முன்னிறுத்தி விளம்பரம் செய்வதன் மூலம் ஆணாதிக்க உல்லாசம் கொடிகட்டிப் பறக்கின்றது. வெள்ளை சீமான், பச்சிளம் குழந்தைகளின் சட்டையைத் திறந்து படுப்பது பின்நவீனத்துவ ஜனநாயகமாகும். ஆணாதிக்கம் தன்னை மறுவாசிப்பு செய்து அதை நிலைநிறுத்துகின்றது. சிறுபான்மையான வெள்ளைப் பன்றிகளின் ஜனநாயகம் முக்கியத்துவம் வாய்ந்தது அல்லவா? அதனால்தான் பின்நவீனத்துவ (ஏகாதிபத்திய) உலகைப் பாதுகாக்க முதலாளிகளும், பின்நவீனத்துவக் கோட்பாட்டாளர்களும் தலைகீழாகக் கவட்டைக் கிழித்து நிற்கின்றனர்.
இந்தச் சட்டப்பூர்வமான விபச்சார அங்கீகாரத்தின் பின், நெதர்லாந்து அரசு 24 மணி நேர விபச்சாரத்தை 1999-இல், நேரக் கட்டுபாட்டுக்கு உள்ளாக்கியது. இதை எதிர்த்து விபச்சாரிகள், விபச்சாரர்கள் தொழில் நஷ்டம் கோரி, போராட்டத்தை நடத்தினர். இதை அடுத்து நஷ்டஈடு தொடர்பாக அரசு ஆலோசிக்கின்றது. இந்த வகையில் பாலியலைத் தொழிற்துறையாக அங்கீகரிப்பதும், உடலை இயந்திரமயமாக்குவதும் சட்ட வடிவமாகி தொழிற்துறை போன்று வடிவம் பெறுகின்றது. மனித உணர்வுகள், பண்புகள் எல்லாம் சிதைந்து போவதையே பாலியல் தொழிற்துறை துல்லியமாக்குகின்றது.
இந்தப் பின்நவீனத்துவ (ஏகாதிபத்திய) மேற்கு நாடுகளில் இரண்டு பேருக்கு ஓர் ஆண் பாலுறவுக்காகச் சொந்த நாட்டிலேயே பணம் செலுத்தியிருக்கின்றார். 15 முதல் 20 சதவீதமான ஆண்கள் தொடர்ச்சியாகப் பாலுறவுக்;குப் பணம் செலுத்துகின்றனர். இந்தப் பிரிவில் உள்ளோரில் 5 முதல் 10 சதவீதம் பேர் தொடர்ச்சியான பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்கள்.2 ஐரோப்பாவில் ஐந்து இலட்சம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். இதில் அறுபது சதவீதம் பேர் 19 வயதிற்கும் 24 வயதிற்கும் உட்பட்டவர்கள். பெரும்பாலான பெண்கள் கம்யூனிசச் சர்வாதிகாரிகளிடம் இருந்து கிடைத்த ஜனநாயகத்தில் உற்பத்தியான கிழக்கு ஐரோப்பியராவர்.1
மேற்கில் ஆணின் நடத்தையை இது காட்டுகின்றது அல்லவா. அரைக்கு அரைவாசி பேர் பாலுறவுக்குப் பணம் செலுத்தியது மட்டுமின்றி, 20 சதவீதமானோர் பாலுறவுக்காகப் பணம் கொடுக்கின்றனர் என்பதன் அர்த்தம்தான் என்ன? இது இந்த ஜனநாயகத்தின் விபச்சாரத்தைத் தானே காட்டுகின்றது. இது இந்த ஜனநாயகத்தில் மனிதத்தன்மை அற்றுப் போனதைத் தானே காட்டுகின்றது. இது இந்த ஜனநாயகம் பாலியல் வன்முறைக்கு வித்திடுவதைத் தானே காட்டுகின்றது. நிலைமை இப்படி இருக்க இந்த ஜனநாயகம் பெண்ணை எப்படி, எந்த வழியில் தேற்றுகின்றது? ஆண் - பெண் உறவுக்குப் பதில் இந்த ஜனநாயகம் ஓரினச் சேர்க்கையைக் கோருகின்றது. இந்த ஜனநாயகம் சிறுவர் சிறுமி மீதான பாலியல் வன்முறையைக் கோருகின்றது.
ஒருபுறம் விபச்சாரத்துக்குச் சட்டப்பூர்வமான ஜனநாயக அங்கீகாரம் கிடைத்து உள்ளது. இதற்கு உதவ, ஜனநாயகத்தைத் தொடர பெண்ணை வழங்குவது முன்னாள் கம்யூனிச நாடுகளும், இன்றைய ஜனநாயக நாடுகளும்;; தான். பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை ஒழித்து மீட்கப்பட்ட ஜனநாயகம் ஆணாதிக்கத்துக்குப் பெண்களைத் தீனியாகப் போடுகின்றது. மேற்கு நாடுகள் சுரண்டுவதற்கு பொருளாதாரச் சுதந்திர ஜனநாயகம் கிழக்கிலும் அவசியமாகின்றது. ஜனநாயகம் நிலவ முதலாளியின் பணமூட்டை பெருக்கின்றது. அங்கு பெண்களின் ஆணாதிக்க ஜனநாயகம் கிடைக்க இங்கு ஆண்களின் பாலியல் ஜனநாயகம் தீர்க்கப்படுகின்றது. விபச்சாரம், பெண் உடலை மட்டும் விற்றுக் கிழக்கு நாடுகள் வாழவில்லை, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை இழந்தபோது எல்லாவற்றையும் விபச்சாரமாகியது எதார்த்தமாகியுள்ளது.
''விபச்சாரத்திற்கு எதிரான ஐந்தாவது சர்வதேச காங்கிரஸ்" பற்றி லெனின் ''ஒரு nஐர்மானியப் பாதிரியார் இன்றைய பொருள் முதல் வாதத்தை அபவாதம் செய்தார், அது மக்களை ஈர்த்த சுதந்திரமான காதலை வளர்க்கிறது என்றார்... விபச்சாரத்தின் சமூகக் காரணங்கள், தொழிலாளி வர்க்கக் குடும்பங்களின் தேவை, அனுபவிக்கும் வறுமை, குழந்தை உழைப்பு சுரண்டப்படுவது, சகிக்க முடியாத வீட்டு வசதிநிலை முதலியன பற்றிய பிரச்சனையை ஆஸ்திரியா நாட்டுப் பிரதிநிதியான கார்ட்னர் எழுப்ப முயற்சித்த பொழுது, எதிர்ப்புக் குரல்களால் அவர் வாய் அடைக்கப்பட்டது... nஐர்மன் சக்ரவர்த்தினி பெர்லினிலுள்ள பிரசவ மருத்துவமனைக்கு வருகை தந்தபொழுது தவறான முறையில் பிறந்த குழந்தைகளினுடைய தாய்மார்களின் விரல்களில் மோதிரங்கள் அணிவிக்கப்பட்டிருந்தன. ஏனெனின் இந்த மேன்மை தங்கிய சக்ரவர்த்தினி திருமணமாகாத தாய்மார்களைப் பார்த்து அதிர்ச்சியடையாதிருப்பதற்காக!"60
விபச்சாரத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ச்சியாக வரலாற்றில் நடத்தப்பட்டன. இவை ஆணாதிக்கத்தின் பலதாரமணத்தால் ஒழிக்கப்பட முடியாத விடயமாக வரலாற்றில் நீடிக்கின்றது. விபச்சாரத்தில் எப்போதும் ஆண் செல்வது என்பது ஆணாதிக்கச் சமூகத்தால் மறைக்கப்பட்டு, பெண் குற்றவாளி ஆக்கப்பட்டாள். பெண்ணின் மீதான ஆணாதிக்கம் திருமணத்தைச் சிறையாக்குகின்றது. அங்கும் பாலியலைப் பெண்ணுக்கு மறுக்கின்றது.
பெண்ணுக்கு மறுக்கப்பட்ட பாலியல், பொருளாதாரம், மறுமணம்... போன்றவை விபச்சாரத்தை ஊக்குவிக்கின்றது. ஒழுக்கம் என்பது இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்த ஒழுக்கம் இருந்த அதிகார வர்க்கத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டது.
நிலப்பிரபுத்துவ ஒழுக்கம் பூர்சுவா ஒழுக்கத்தைக் கொச்சைப்படுத்தியது. பூர்சுவா வர்க்கம் கோரிய சுதந்திரக் காதலை நிலப்பிரபுத்துவ மதவாதம் மறுத்து எதிர்வாதம் புரிந்தது. இதை லெனின் கிண்டல் செய்து அம்பலப்படுத்தினார். ஆனால் பூர்சுவா காதல் பூர்சுவா பொருளாதார ஆதிக்கத்தால் வெற்றி பெற தொடர்ந்து போராட வேண்டி ஏற்பட்டது.
1968-ஆம் ஆண்டில் மாணவர் கிளர்ச்சிகள் பூர்சுவா சுதந்திரக் காதலை மேலும் வளர்த்தெடுத்தது. இந்தக் காதல் வாழ்க என்ற கோஷங்கள் சுதந்திரமற்ற மனிதர்களுக்குள் விபச்சாரமாகியது. பூர்சுவா சுதந்திரம் ஆணாதிக்கம் சார்பானது, சுரண்டல் வர்க்கம் சார்பானது. பரந்துபட்ட மக்களின் சுதந்திரமான காதல் என்பது ஆணாதிக்க மயமாகி விபச்சார நிலையை அடைந்தது.
இது சாதாரணக் காதல் திருமணத்தைக் குறித்து சொல்லவில்லை. மாறாக வரைமுறையற்ற காதல் பற்றிய சுதந்திரத்தின் மீது விபச்சாரத்தை அம்பலப்படுத்துகின்றது. அத்துடன் சாதாரணக் காதல் திருமணத்தில் காணப்படும் வர்க்கம், நிறம், இனம், சாதி... போன்ற வரையறைக்குள் செய்யும் பூர்சுவா காதல் விபச்சாரத்தையும் அம்பலப்படுத்துகின்றது.
நிலப்பிரபுத்துவம் மறுக்கும் காதல் சுதந்திரத்தை எதிர்த்து பாட்டாளிவர்க்கம் போராடும் அதே நேரம், சுதந்திரத்தின் பின் வரைமுறையற்ற காதல் சுதந்திர விபச்சாரத்தையும் பாட்டாளிவர்க்கம் மறுக்கின்றது. இந்தச் சுதந்திரம் தன்னளவில், தனக்குள், காதலை இந்தச் சமூகத்தின் ஆணாதிக்கத்துக்குள்ளும், ஏகாதிபத்திய எல்லைக்குள்ளும் கோருவதாகும். இதை விமர்சிக்க மறுத்து அதன் பிரதிநிதியாகச் சுதந்திரக் காதல் மாறுகின்றது. பூர்சுவா சுதந்திரக் காதல் தனது பூர்சுவா ஜனநாயகத்தை மற்ற பிரிவுக்கு மறுப்பதால் மேலும் வளர்ச்சியுற்று ஏகாதிபத்திய மயமாகியுள்ள போக்கில் மேலும் சிலருக்கான வகையில் மையப்படுகின்றது. இது இன்று தேசப் பொருளாதாரச் சுதந்திரத்தை மறுத்து, ஏகாதிபத்தியச் சுதந்திரத்தை வரைமுறையற்று கோருவது போல், பாலியலில் ஏகாதிபத்தியக் காதல் சுதந்திரம் வரைமுறையற்ற புணர்ச்சியை முன்வைக்கின்றது. இதைப் பலர் காதல் சுதந்திரத்தின் பின் ஜனநாயகமாகக் காட்டி விபச்சாரத்தைக் கோருகின்றனர். இதையொட்டி எழுத்தாளர்கள் இன்று புற்றீசல்போல் புறப்பட்டுள்ளனர். தேசியப் பொருளாதாரத்தை ஜனநாயக விரோதமாக்கி மறுக்க, நாட்டில் ஏகாதிபத்தியப் பிரிவு எப்படி வளர்ச்சி பெற்றதோ, அதுபோல் வரைமுறையற்ற பாலியலை நியாயப்படுத்த மிகவேகமான வளர்ச்சியில் படைப்புகள் வெளிவருகின்றன.
சுதந்திரம் என்பது எல்லைப்படுத்த முடியாதது, வரைமுறையற்றது என்ற கோரிக்கைகள், அனைத்தையும் சூறையாடக் கோருகின்றது. சுதந்திரம் என்பது வர்க்கச் சமூகத்துக்கே உரிய ஒன்றாகும். ஏதோ ஒன்றை மறுக்கும் போது மட்டும் சுதந்திரம் என்ற கோரிக்கையும், அதைப் பெறுவதும் அதன் நிபந்தனையாகும். இந்தச் சுதந்திரத்தை வரைமுறையற்று கோரும்போது மறுக்கப்படும் சுதந்திரம், வரைமுறையற்று இன்னுமொரு பகுதிக்கு மறுக்கப்படுகின்றது. இது பொருளாதாரத்தில் சிலருக்கு வரைமுறையற்ற சூறையாடலை ஏற்படுத்த, மக்களுக்கு வரைமுறையற்ற வறுமையை விளைவாக்குகின்றது. அதாவது வரைமுறையற்ற சுதந்திரச் சூறையாடல் வரைமுறையற்ற பணக் குவிப்பை ஏற்படுத்துகின்றது. அதேநேரம் வரைமுறையற்ற வறுமைக்குள் மக்கள் சொத்தைப் பறித்து வரைமுறையற்ற அடக்குமுறையைப் பலதளத்தில் விரிவாக்குகின்றது. இது பாலியலில் வரைமுறையற்ற ஆணாதிக்கத்தை ஏற்படுத்துகின்றது. மறுதளத்தில் வரைமுறையற்ற விபச்சாரத்தை நிபந்தனையாக்குகின்றது.