இந்தியாவில், வீட்டில் பெண்கள் மீதான துன்புறுத்தல் 13.2 சதவீதத்தால் அதிகரிக்கின்றது. இந்தியாவில் குடும்பப் பெண்கள் ஒவ்வொரு நாளும் 53 பேர் தற்கொலை செய்கின்றனர் என என்.சி.ஆர்.பி. அறிக்கை தெரிவிக்கின்றது. நீதிமன்றத்தில் பெண்கள் மீதான துன்புறுத்தல் வழக்கு இழுத்து அடித்தே (தாமதப்படுத்துதல்) தாக்கல் ஆகின்றது. இப்படி தாக்குதலுக்கு உள்ளாகும் போது 40 சதவீதமான பெண்கள் இறந்து விடுகின்றனர். (9.12.1998)34
அட்டவணை - 17
துன்புறுத்தல் மற்றும் கொடுமைகள் சதவீதத்தில்
குற்ற வகைகள் சதவீதத்தில்
கணவன் கொடுமைகள் 30 %
வரதட்சணை சாவுகள் 5 %
கற்பழிப்புகள் 5 %
கடத்தல்கள் 5 %
பாலியல் வன்முறை, துன்புறுத்தல் 13 %
பிற குற்றங்கள் 8 %
அட்டவணை - 18
பெண்களுக்கு எதிரான குற்ற அதிகரிப்பு
குற்ற வகைகள் சதவீதத்தில்
கற்பழிப்புகள் + 17.7 %
கணவன் கொடுமை + 13.2 %
வரதட்சணை கொலைகள் + 8.3 %
பாலியல் வன்முறைகள் + 7.9 %
கடத்தல்கள் + 5.8 %
பாலியல் துன்புறுத்தல்கள் + 1.6 %
பிற - 8.8 %
பெண்களுக்கு எதிரான மொத்தக் குற்றங்கள் + 5.9 %
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் 1978-இல், பெண்களை வீதியில் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் பேரில் 10,800 பேரை பொலிஸ் கைது செய்துள்ளது. (6.11.1992)34
இந்தியப் பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரிக்கும் போக்கில் ஜனநாயகம் சந்தி சிரிக்கின்றது. பார்ப்பனிய இந்து வானரங்களின் அதிகரித்த இன்றைய செல்வாக்கும் இந்து தருமத்தின் வண்டவாளமும் பெண்ணை சூறையாடுகின்றது. முழுமையான இந்துதர்மப் பாசிசம் ஏற்படின் பெண்கள் நிலை மேலும் மோசமாகும் என்பதைப் புள்ளிவிபரம் காட்டுகின்றது. இன்று ஆப்கானிஸ்தானில் என்ன நிகழ்கின்றதோ அதுவே இந்தியப் பார்ப்பனர்களின் இந்துச் சட்டத் தொகுப்பும் பெண்களை அடக்கி அடிமையாக்கும்.
இன்று இந்தியாவில் பெண்கள் மீதான ஆண்களின் வன்முறையை பொலிசிலோ, நீதிமன்றத்திலோ பதிந்து வழக்கு தாக்குதல் செய்வது சாத்தியமற்றது. அப்படி சாத்தியமானால் தீர்ப்பு பெறுவது சாத்தியமில்லை. வழக்கு போட்ட பின் 40 சதவீதத்தினர் முடிவு இன்றி இறந்து போவதை மேலுள்ள புள்ளிவிபரம் நிறுவுகின்றது. அந்தளவுக்குப் பார்ப்பனிய இந்துதர்ம ஆணாதிக்க ஜனநாயகம் காவிக்கொடி கட்டிப் பறக்கின்றது. பெண்கள் இன்று வாழ வழியற்று பட்டினியிலும், ஆணாதிக்கக் கொடூரத்திலும், சாதி ஆதிக்கத்திலும், மதவெறியிலும் சிக்கித் திணறுகின்றனர். நாள் ஒன்றுக்குத் தம்மைத் தாம் மாய்த்துக் கொள்வது குடும்பப் பெண்ணின் விதியாகிப் போனது. வீட்டில் இந்து ஆணாதிக்கத்தால் சுரண்டல் சமூகத்தால் மாய்வதா? அல்லது உயிரை விட்டு மாய்வதா என்பதே பெண்ணின் தெரிவாகி விடுமளவுக்குத் தற்கொலைகள் விண்ணை முட்டுகின்றன. சட்டத்தின் முன் வரும் சில புள்ளி விபரங்களே எமக்கு அதிர்ச்சி அளிக்கும் போது இதன் உண்மையான விபரங்கள் வெளிவரின் எம் இதயமே நின்றுவிடுமளவுக்குப் பிரமாண்டமானதாக இருக்கும்.
பாகிஸ்தானில் மனித உரிமைக்கான பெண் உரிமை அமைப்பு ஒன்று, திரட்ட முடிந்த தகவல் ஒன்றின்படி, ~நேர்மைக்கான கொலைகள்| என்ற பெயரில், பெண்கள் மீதான ஆணின் சந்தேகமே கொலை செய்ய போதுமானதாகும். சகீதா பிரவீனை அவள் கணவன் ~இன்று இரவே உனது கடைசி இரவு| எனக் கூறி அங்கம் அங்கமாக வெட்டி எறிந்தான். காரணம் மைத்துனனுடன் தகாத உறவு கொண்டிருந்தாள் என்ற ஊகம். இதுவே ~நேர்மையான கொலை|க்கு அடிப்படையாகும்.
பெண்கள் அமைப்பு திரட்டிய தகவலின்படி, 1994 முதல் 1999 வரை 3,560 பெண்கள் சந்தேகத்துக்காக எரிக்கப்பட்ட நிலையில், உயிருக்குப் போராடிய படி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதைப் புள்ளிவிபர ரீதியாக, இஸ்லாமிய ஆணாதிக்க ஜனநாயகத்தை அம்பலப்படுத்தியுள்ளனர். அத்துடன் 1998 முதல் 1999 வரை இதற்காகக் கொல்லப்பட்ட பெண்கள் எண்ணிக்கை 850 ஆகும். இஸ்லாமிய ஆணாதிக்க ஒழுக்கம், இதை நிபந்தனையின்றி அங்கீகரிப்பதன் அடிப்படை இதன் விளைவாகும். (25.5.2000)20
இது போன்று பிரான்ஸ் நாட்டின் புள்ளி விபரம் ஒன்றில் 15 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் 16 சதவீதத்தினர் தாம் ஏதோ ஒரு வகையில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டதை உறுதி செய்கின்றனர். பெண்ணின் மீதான ஆணாதிக்கப் பலாத்காரம் சுதந்திர ஜனநாயகச் சமுதாயத்தில் இயல்பான பண்பாடாக, கலாச்சாரமாக இருப்பதை நாட்டு எல்லைகள் கடந்து
நிறுவுகின்றன.