கற்பழிப்பு என்பது வரலாற்று வழியாகக் காலாகாலமாக ஆணாதிக்கச் சமுதாயத்தின் விளைவாக உள்ளது. ஆண் சமுதாயத்தின் சுதந்திரமான ஆணாதிக்கப் பிறவியாக இருந்தபடி, அதன் அதிகாரப்படி நிலையில் பெண் மீதான வன்முறையைக் கையாளுகின்றனர். இதன் போது சமுதாயம் எதிர்த்து நிற்கின்றது. இது வரலாற்றின் படி நிலையில் எங்குமே நீடித்துக் கிடக்கின்றது. இந்த வன்முறையின் போது எதிர்த்துப் போராடியவர்கள் கடவுளாக்கப்பட்டு வழிபாட்டுக்கு உரியவரானார்கள். இந்த வகையில் பணங்குடியில் வசித்த இஸ்லாமிய தையற்காரன் போராடி மடிந்த சம்பவத்தைப் பார்ப்போம்.
அந்த ஊரில் அழகான தயிர்க்காரி தினசரி காலையில் தயிரை ஊரிலிருந்து எடுத்துச் செல்வது வழக்கம். இந்தத் தயிர்க்காரியைக் கற்பழிக்க ஒருவன் முயன்ற போது, அவள் அந்தத் தையற்காரன் கடையில் அடைக்கலம் புகுகின்றாள். அந்த நிலையில் தையற்காரன் அப்பெண்ணைப் பாதுகாக்க முயல அவனைக் கொன்று விடுகின்றான் கற்பழிக்க வந்தவன். இதைத் தொடர்ந்து அந்தத் தையற்காரன் அந்த மக்களின் "வழிபாட்டுக்குரிய மாடனாக (இறைவனாக)''51 இன்றும் இருக்கின்றான். இந்தச் சம்பவம் ஆணாதிக்கத்துக்கு எதிரான மக்களின் பொதுத்தன்மையைக் காட்டுகின்றது. ஆனால் இந்தக் கொடுமை முன்பைவிட அதிகரித்துச் செல்வது மட்டும் உண்மையாகும். அதை நாம் ஆராய்வோம்.
கனடா, நார்வே, நியூசிலாந்து, நெதர்லாந்து, பார்ப்படாஸ் ஆகிய நாடுகளில் மூன்றில் ஒரு பெண் பிள்ளைப்பருவத்தில் பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர். ஆசியா மற்றும் பல இடங்களில் வருடம் 10 இலட்சம் பெண்கள் புதிதாக விபச்சாரத்தில் தள்ளப்படுகின்றனர். உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான பெண்களின் பெண் உறுப்புகள் வெட்டப்படுகின்றன. கொரியா, சிலி, பாப்புவா நியூ கினி, மெக்ஸிகோ ஆகிய இடங்களில் திருமணமான பெண்களில் மூன்றில் இருவர், வீட்டு வன்முறைக்கு உள்ளாகின்றனர்.
அமெரிக்கா, நியூசிலாந்து, கனடா, பிரிட்டீஸ் ஆகிய நாடுகளில் ஒவ்வொரு ஆறு பெண்களுக்கு ஒரு பெண் வீதம் கற்பழிக்கப்படுகின்றாள். கென்யா, தாய்லாந்து, பாப்புவா நியூ கினி, பிரேசில், வங்காளத் தேசம் ஆகிய நாடுகளில் கொல்லப்பட்ட பெண்களில் பாதிப் பேர், கடந்த கால அல்லது தற்காலக் கணவனால் கொல்லப்படுகின்றனர்.31 உலகமயமாதலின் கொடூரமான சொந்த ஆணாதிக்க ஜனநாயகத்தையே மேலே நாம் காண்கின்றோம்.
இந்தப் பெண்களின் துயரத்தை இந்த அமைப்பும், இந்த ஆணாதிக்கச் சட்டமும், இந்தப் பண்பாட்டுப் பொருளாதாரமும் தீர்க்கும் தகுதியை இழந்த, இழிந்து போன மனித வரலாற்றில் நாம் நிற்பதை நிர்வாணமாக்குகின்றது. இந்த அமைப்பில் எமக்கு முன்னால் அமைதியான, சுதந்திரமான, ஜனநாயகமான வாழ்க்கை என்பது அப்பட்டமான ஏமாற்று என்பதைப் புள்ளிவிபரங்கள் தெளிவாக நிரூபிக்கின்றன. வாழ்க்கையின் மாயை கண்ணீரின் பின்னால் கானல்நீராகின்றது. நாகரிகமான பகட்டுத்தனமான ஆடம்பரத்தில் சொக்க வைத்து, சூறையாடி ஆணாதிக்க அடக்கமுறையை நிறுவும் இந்த உலகத்தில், எமது மௌனங்கள் அதன் அங்கீகாரமாகி விடுகின்றன. இது சமூக நடைமுறையாகி விடுகின்றது. இது அனைத்துத் தளத்திலும் தனது வரைமுறைக்குட்பட்டுத் தன்னை வெளிப்படுத்துகின்றது.
அமெரிக்காவின் ஆணாதிக்கத் தந்தை அமைப்பில் தொழில்புரியும் பெண்கள் மீது, மூலதனத்தின் காவலர்கள் தமது ஜனநாயகத்தில் நடத்திய பாலியல் தொல்லைகள் எல்லையற்று விரிந்து செல்லுகின்றது. 1990-இல், தொழில் சம்பந்தமான கமிசனுக்குப் பாலியல் தொல்லை சார்ந்து வந்த புகார்கள் 6,127 ஆகும். இது 1993-இல், 11,903 என அதிகரித்தது. பாலியல் வன்முறை, தொல்லைப் புகார்கள் பொதுவாக வந்துவிடுவதில்லை. அற்பக்கூலியை இழந்து நடுவீதியில் விபச்சாரியாக வாழ்வதைவிட, மூலதனத்தின் சொந்தக்காரர்களின் ஆசைக்கு இணங்கிப்போவது அல்லது மௌனமாகச் சகித்துப் போவதே இந்த ஜனநாயக உலகத்தில் குறைந்த பட்சம் உயிர்வாழத் தகுதியாகி விடுகின்றது.
கனடாவில் தொழில் சார்ந்த மூலதன ஆணாதிக்க அதிகாரத்தில், கையாளப்படும் ஜனநாயகப் பாலியல் வன்முறைக்கு 10 உழைக்கும் பெண்களுக்கு 4 பேர் சந்திக்கின்றனர். ஜப்பனில் 1991-இல், நடந்த ஆய்வில் 70 சதவீதமான பெண்கள் இக்கொடுமைகளைச் சந்தித்தனர். அதேநேரம் வேலைக்குப் போகும் போதும், வரும் போது 90 சதவீதமான பெண்கள் பாலியல் தொல்லையைச் சந்தித்தனர். ஆஸ்தி;ரேலியாவில் 31 சதவீதமான பெண்கள் வேலை செய்யும் இடத்தில் பாலியல் தொல்லையைச் சந்தித்ததுடன், அதைப் புகார் மனுவும் செய்தனர். பிரான்சில் 1991-இல், செய்த ஆய்வில் 21 சதவீதமான பெண்கள் இந்தத் தொல்லையை அனுபவிப்பதாகக் கூறினர். இதுவே நெதர்லாந்தில் 58 சதவீதமாக இருக்கின்றது.
பாலியல் தொல்லை, வன்முறை என்பது சுதந்திரமான மூலதன ஜனநாயக அமைப்பின் பொது வடிவமாகும். பெண்கள் வேலைக்குச் சேர்க்கின்ற போது நடத்தப்படும் அணிவகுப்புத் தேர்வுகளில் (நேர்முகத் தேர்வு) பெண்ணின் பாலியல் இணக்கத் தன்மை வேலைக்கான நியமனமாகின்றது. இந்த இணக்கத் தன்மையை வெளிப்படுத்தும் மறைமுகக் கல்வி மேற்கில் ஊக்குவிக்கப்படுகின்றது. எப்படி ஒரு அதிகாரி முன் நடக்க வேண்டும்? எப்படி கவர வேண்டும?; என்ற எண்ணற்ற வழிமுறைகள், அதாவது மற்ற போட்டியாளனிடம் இருந்து எந்த வகையில் தகுதியுண்டு? என்பதை நிறுவுவது அவசியமாக உள்ளதைக் கல்வி அமைப்புகள் கூறத் தயங்கவில்லை. மேல் அதிகாரிகளினதும், மூலதனத்தின் தந்தையினதும் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்வது ஒரு ஜனநாயக வடிவமாகி விடுகின்றது. கிளிண்டன் (மோனிகா லெவின்ஸ்கி) கதையும் இந்த வகைப்பட்டதே. எதிர்த்து வரும் புகார்கள் விதிவிலக்கானவை மட்டுமே.
அடுத்து கற்பழிப்புகளைப் பற்றி ஆராய்வோம். அண்மையில் ருவான்டாவில் 10 இலட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது, பெண்கள் பாரிய கற்பழிப்புக்கு உள்ளானார்கள். பெண்களைப் பிடித்து கற்பழித்ததன் தொடர்ச்சியில் பலர் கொல்லப்பட, தப்பியவர்களில் 3.5 சதவீதப் பெண்கள் கர்ப்பமானார்கள். பல ஆயிரம் பெண்கள் கருச்சிதைவைச் செய்ய, பிறந்த குழந்தைகளைச் சிலர் அனாதை இல்லத்தில் சேர்க்க, சிலர் வீதியோரத்தில் விட்டுச் சென்றனர். வீதியோரத்தில் விடப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2,000 முதல் 5,000 வரை என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கற்பழிப்பில்; ஆணாதிக்க இனவாதத்தையும், அதன் பிரமாண்டமான பாலியல் வன்முறையையும் மீண்டும் ஒருமுறை உலகுக்கு நிர்வாணமாக்கியுள்ளது.
1990-இல், அமெரிக்காவில் கற்பழிப்பு 4 மடங்கு அதிகரித்ததுடன் 5 பெண்களுக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகின்றாள். வருடம் 30 முதல் 40 இலட்சம் பெண்கள் அடித்துத் துன்புறுத்தப்படுவதுடன் இதனால் 10 இலட்சம் பெண்கள் மருத்துவத் தேவைக்கு மருத்துவமனைக்குச் செல்கின்றனர். இந்த வகையில் 1,000 பெண்களுக்கு 23.5 சதவீதமாக வெள்ளை இனப் பெண் அனுபவித்த இந்த சித்திரவதையைக் கறுப்பு இனப்பெண் 35.3 சதவீதமாக அனுபவிக்கின்றாள்.48 அமெரிக்காவில் 12 வினாடிக்கு ஒரு பெண் தாக்கப்படுகின்றாள். ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு பெண் கற்பழிக்கப்படுகின்றாள்.42 உலகில் உன்னதமான ஜனநாயகம் பூத்துக் குலுங்கும் நாடாகவும், உலக பொலிஸ்காரனாகவும் உலவும் சொர்க்கப் பூமியில் ஒவ்வொரு நிமிடமும் பெண் தாக்கப்பட்டுக் கற்பழிக்கப்படுகின்றாள். எதையும் சொல்ல, செய்ய உரிமையின் பிறப்பிடமாக உதித்த பன்னாட்டு நிறுவனங்களின் நுகர்வுப்பண்ட விற்பனையைப் பெருக்க பெண்கள் பாலியல் நுகர்வுப் பண்டமாகக் காட்டியும், ஏமாற்றியும் பாலியல் உச்சத்தில் பணம் திரளும் போது பெண்களை அநாதைகளாக்கி வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதையே இது காட்டுகின்றது. இதை மற்ற நாடுகளில் பார்ப்போம்.
பிரெஞ்சு சிறைகளில் தண்டனை அனுபவிப்பவர்களின் பாலியல் குற்றம் முதன்மையானதாக உள்ளது. (12.4.2000)44
அட்டவணை - 10
கற்பழிப்பு மற்றும் பாலியல் குற்றம் 22 சதவீதம் (6,763 பேர்)
களவு 17 சதவீதம்
போதை வஸ்து கடத்தல், விற்பனை 15 சதவீதம்.
பாலியல் சார்ந்த குற்றங்கள் சமூகமயமாகி வருவதை இது காட்டுகின்றது. சுதந்திரம், ஜனநாயகம் எந்தளவுக்குத் தனிமனித வாதத்தால் வக்கிரப்படுகின்றதோ, அந்தளவுக்குப் பாலியல் வன்முறை வளர்ச்சி காண்கின்றது. 1984-இல், இருந்து 1997 வரை கால இடைவெளியில் 15 வயதிற்கு உட்பட்ட பெண்களின் கற்பழிப்பு 700 சதவீதம் அதிகரித்துள்ளது. 1998-இல், 7,828 பொலிசில் பதிவான பாலியல் வன்முறை கடந்த 25 வருடத்தில் ஐந்து மடங்காக அதிகரித்துள்ளது. பாலியல் குற்றத்திற்காக வருடாவருடம் தண்டனை வழங்கப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்படுவது அதிகரித்துச் செல்வதைப் புள்ளிவிபர ரீதியாகப் பார்ப்போம்.
அட்டவணை - 11
ஆண்டுகள் 1987 1988 1989 1990 1991 1992 1993 1994 1995 1996 1997 1998
மொத்தப் பாலியல் 574 644 677 731 913 892 1045 1061 088 1278 1469 1636
வன்முறைகள்
15 வயதுக்குட்பட்ட 94 1 55 159 234 329 359 295 271 303 335 399 475
வன்முறைகள்
பாலியல் வன்முறை அதிகரித்துச் செல்ல உலகமயமாதலின் பண்பாட்டு வீக்கம் காரணமாகும். காதலை வக்கிரமாக்கி, பெண்ணின் உறுப்பைப் பண்டமாக்குகின்ற போது, அதை நுகர வன்முறை ஓர் ஊடகமாகின்றது.
பிரான்சில் 70 சதவீதமான கற்பழிப்பு குடும்பத்துக்குள் நடக்கின்றது. வியட்நாமில் 70 சதவீதமான விவாகரத்து கணவனின் கற்பழிப்பால் நடக்கின்றது. குவாத்தமாலாவில் 49 சதவீதமான கற்பழிப்பு வீட்டுக்குள் நடக்கின்றது. வீட்டில் நடக்கும் கற்பழிப்பு கோஸ்ரோரிக்காவில் 54 சதவீதமும், ஜப்பானில் 59 சதவீதமும், தான்செனியாவில் 60 சதவீதமும், பாகிஸ்தானில் 80 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவில் வருடம் 5,000 பெண்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். 30 ஆப்பிரிக்க நாடுகளில் 13 கோடி பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்த நாடுகளில் ஒவ்வொரு நாளும் 2,000 பெண்கள் பல்வேறு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.2 அமெரிக்காவில் 1993-இல், அறிவிக்கப்பட்ட கற்பழிப்பு 1,50,000 ஆகும். வளரும் நாடுகளில் மூன்றில் ஒரு பெண் ஆண்களால் துன்புறுத்தப்படுகின்றாள். அதே நேரம் உலகில் ஒவ்வொரு 2,000 பெண்ணுக்கும் ஒரு பெண் கற்பழிக்கப்படுகின்றாள்;. (15.4.1995)6
அட்டவணை - 12
1987 முதல் 1993 வரை இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த 1,688 கற்பழிப்பு வழக்குகளில் 27 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். இது போன்று மராட்டிய மாநிலத்தில் விசாரணைக்கு வந்த 68 வழக்குகளில் 14 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்தவகையில் கற்பழிப்பு வழக்குகளில் பெண்களை விபச்சாரிகள் என நிறுவுவதும், அவர்களை அவமானப்படுத்துவதன் மூலமும் நீதிமன்றம் ஆணாதிக்க நீதிமன்றமாகவே செயற்பட்டு வருகின்றது.. இது போன்று பல கற்பழிப்புகள் வெளியில் வராமல் இருப்பதுடன், பொலீஸ் வழக்கைப் பதிவு செய்ய மறுப்பதும், மருத்துவர்கள் கற்பழிப்பை உறுதி செய்ய மறுப்பதும், பொலீசே கற்பழிப்பதும் சர்வ சாதாரணமான ஓர் இயல்பான விடயமாக மாறிவிடுகின்றது. இந்தியாவில் வருடம் 20,000 கற்பழிப்பு வழக்குகள் வருவதுடன் அதில் 100 பேர் தண்டிக்கப் படுவதே அப+ர்வம் என்ற நிலைக்கு இன்று ஆணாதிக்க ஆட்சி நடக்கிறது.48
பெண் மீதான வன்முறை வீட்டில் இருந்து தொடங்குவது பொது நிகழ்வாக உள்ளது. மேல் உள்ள புள்ளிவிபரம் அதைத் துல்லியமாக்குகின்றது. குடும்பத்தில் ஏற்பட்டு வரும் அன்னியப்படல் பாலியல் மீது அதிருப்தியைத் தோற்றுவிக்கின்றது. உலகளாவிய நுகர்வுக் கலாச்சாரம் வீட்டுக்குள் புகுந்த நிலையில் குடும்பத்தில் அதன் தாக்கம் குடும்ப அமைப்பை நொறுக்குகின்றது. இது எல்லாத் துறையிலும் தனிமனித வாதத்தை முதன்மைப்படுத்துகின்றது. இந்த முதன்மைப்படுத்தல் பாலியலில் புதிய நெருக்கடியைத் தோற்றுவித்து ஆண் பெண் விலகலைப் பறைசாற்றுகின்றது. பரஸ்பரம் இருவரும் நிம்மதியை இழந்த வாழ்க்கை பாலியலால் மேலும் நெருடலுக்குள்ளாகின்றது. இதனால் பெண் மீதான வன்முறை நிகழ்வது குடும்பத்தில் அதிகமாக உள்ளது. அது சொந்தக் கணவன், சொந்த உறவினர், சொந்தத் தந்தை, சொந்தச் சகோதரன் என்ற இடத்தில் இருந்தே தொடங்குகின்றது. இது அடுத்தக் கட்டமாக பெண்ணால் ஆண்களுக்கு நிகழ்வது அண்மைக்காலமாகப் பதிவாகுவது அதிகரித்துள்ளது.
பாலியல் வன்முறை ஆண்களால் நிகழ்த்தப்படுவது என்ற பொதுப்பார்வை இன்று மாறியுள்ளது. ஆண்கள் மீது, குறிப்பாகச் சிறுவர் மீது தாய், சகோதரி, உறவினர் என்ற வகையில் வீட்டுக்குள்ளான பாலியல் வன்முறை அதிகரித்துள்ளது. இதைச் சிறுவர் பகுதியில் மேலும் பார்ப்போம்;. முதலில் ஆண் பெண்ணுக்கிடையில் தொடர்புள்ள குடும்பம் இன்று வன்முறைக்கான பொதுவிடயமாக மாறியுள்ளது. பெண்களின் விழிப்புணர்ச்சி மற்றும் பெண் ஆணாதிக்க மயமாதல் போன்ற விளைவால் குடும்பத்தில் பாலியல் நெருக்கடி வன்முறை மூலம் தீர்க்க இன்றைய ஏகாதிபத்தியக் கலாச்சாரம் உந்துதல் அளிக்கின்றது. இந்த நிலைமை மாற்றம் அடைய முடியாத வகையில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரிப்பு நாலுகால் பாய்ச்சலில் எகிறிச் செல்லுகின்றது. இதை ஆராய பிரான்சின் பாலியல் வன்முறை பற்றிய புள்ளி விபரத்தைப் பார்ப்போம்;.
பிரான்சில் பெண்கள் மீதான பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்முறைகளை அட்டவணை: 13-இல், காணலாம்..52&33
அட்டவணை - 13
வகை ஆண்டு 1993 1994 1995 1996 1997
கற்பழிப்பு 5,605 6,526 7,350 7,191 8,213
மற்றவை (கடுமையானது) 11,192 12,661 11,503 12,056 13,923
இதில் சிறுமிகள் மீது - - 61.58% 60.76% 61.67%
(சதவீதத்தில்)
ஜனநாயகம் இந்தச் சமூகத்துக்கே உரிய வகையில் நிலவும் பட்சத்தில் கற்பழிப்பு மற்றும் வன்முறை குறைந்து செல்ல வேண்டும்;. ஆனால் அதிகரித்து செல்லும் போது நமக்குக் காட்டுவது இந்த ஜனநாயகம் பெண்ணுக்கு எதிரானது என்பதையே. இது போல் அனைத்தும் இறுதியில் சுரண்டும் வர்க்கத்துக்கான ஜனநாயகமாகி விடுகின்றது. இது இந்த அடைப்புக்குள் தீர்வு காணமுடியாததை வேறு காட்டுகின்றது. இதற்கான தண்டனைகள், உளவியல் கல்விகள் என்று ஏகாதிபத்தியத்தின் (பின் நவீனத்துவத்தின்) அனைத்து வளர்ச்சியையும் பயன்படுத்தி பிறகும்கூட இது அதிகரிக்கின்றது. ஏனெனின் இதன் உட்கூறுகள் இந்த நுகர்வுப் பொருட்களின் சந்தைப்படுத்துதலில் மண்டிக் கிடக்கின்றது. நுகர்வு மீதான மனிதனின் கண்ணோட்டம் மாறாத வரை பெண் மீதான நுகர்வுப் பண்பாடும் மாறாது. ஒரு பெண்ணுக்குப் பதில் பல பெண்களை அனுபவிக்கத் தூண்டும் பொருட்கள் மீதான நுகர்வுக் கண்ணோட்டம், அந்த நுகர்வை நோக்கிய கவர்ச்சி பெண்ணின் போலியான கவர்ச்சி இன்பம் மாயையாக உள்ள போது நுகர்வு மீதான மோகமும் தீர்க்கமுடியாத உளவியல் சிக்கல் ஆகின்றது. இதை நோக்கி ஓடுவதும், அனுபவிக்கத் துடிப்பதும், பலாத்காரப் படுத்துவதும் எதார்த்தமாக உள்ளது. இன்று திரைப்படம் முதல் அனைத்திலும் பெண் காட்டப்படும் வடிவத்தில் இது புளுத்துப் போயுள்ளது. இது மேற்கில் மட்டுமல்ல மூன்றாம் உலகிலும் காணப்படும் எதார்த்தமாகும். இதைப் பார்ப்போம்.
1986 ஜனவரி முதல் ஜுன் வரை இந்தியா முழுக்க 936 பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இதில் தாழ்த்தப்பட்ட பெண்கள் 492 பேர் ஆவர்.
1966 முதல் 1980 வரை 828 பெண்கள் பொலிஸ் நிலையங்களில் கற்பழிக்கப்பட்டனர். இதில் தாழ்த்தப்பட்ட பெண்கள் 210 பேர் ஆவர். இதில் ஒரே ஒரு பொலிஸ்காரன் மட்டும்தான் தண்டனை பெற்றான்.
1982 முதல் 1986 வரை 4,400 தாழ்த்தப்பட்ட பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.
1987-இல், உத்திரப் பிரதேசத்தில் 229 தாழ்த்தப்பட்ட பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்;.
1987-இல், மத்தியப் பிரதேசத்தில் 151 தாழ்த்தப்பட்ட பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.
1987-இல், பீகாரில் 73 தாழ்த்தப்பட்ட பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.53
இலங்கை பொலிஸ்சில் பதிவான கற்பழிப்புகளின் எண்ணிக்கையை அட்டவணை: 14-இல், காணலாம். (இலக்கம்-67)11
அட்டவணை - 14
ஆண்டு எண்ணிக்கை
1990 369
1991 375
1992 410
1993 (முதல் ஆறு மாதம்) 162
இராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த கற்பழிப்பு மற்றும் வன்முறையை அட்டவணை: 15-இல், பார்ப்போம். (இலக்கம்-136);11
அட்டவணை - 15
ஆண்டு 1994 1995 1996
கற்பழிப்பு 1,002 1,036 1,162
வரதட்சணைக் கொலை 330 369 349
வரதட்சணைத் தற்கொலை 69 91 99
வரதட்சணை சித்திரவதை 2,608 3,203 3,920
1980-இல் இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் பதிவான கற்பழிப்பு குற்றங்கள் 5,023 இல் இருந்து 1990-இல், 10,068-ஆக மாறியுள்ளது.
1990-இல், பெண்கள் மீதான பாலியல் வன்முறை 362 இல் இருந்து. 1991-இல் 391-ஆக அதிகரித்தது. (16.3.1992)6
இந்தியாவில் 56 நிமிடத்துக்கு ஒரு கற்பழிப்பும், 26 நிமிடத்திற்கு ஒரு பலாத்காரமும், 102 நிமிடத்திற்கு ஒரு வரதட்சணைக் கொலையும் நடக்கின்றது. (ஜன-1995)54
பீகார் மாநிலத்தில் பாலியல் கற்பழிப்பு என்பது சமூக அங்கீகாரமாகவும், அதிகாரத்தை அடைய வீரத்தின் போக்காகவும் அரசு, பொலிஸ் ஆதரவுடன் கற்பழிப்பு அரங்கேறுகின்றது. இது பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட இளம் சிறுமிகள் முதல் அனைவர் மீது கையாளும் புதுப்பணக்காரக் கும்பல் முதல் ஆதிக்கச் சாதிகளின் எல்லை கடந்த பாலியல் வன்முறை 6 மணிக்கு ஒன்று என்ற விகிதத்தில் இன்று தலை விரித்தாடுகின்றது. அதைக் கீழ் உள்ள புள்ளிவிபரம் மேலும் நிறுவுகின்றது. (4.11.1998)34
பீகாரில் பாலியல் கற்பழிப்புகள்
பாலியல் ரீதியில் துன்புறுத்துவது, கற்பழிப்பது மேற்கில் மட்டுமல்ல மூன்றாம் உலகிலும் நடக்கும் ஒரு விடயமாகவே உள்ளது. இந்தியா தொடர்பான கற்பழிப்பில் பதிவானவைகளே இவ்வளவு எனின் பதிவாகாமல் போனவைகளைக் கற்பனை பண்ணி பார்க்கமுடியுமா?
ஆணாதிக்கக் கற்புக் கோட்பாட்டிற்குப் பயந்து மறைப்பதும், குடும்பத்தில் குடும்ப உறுப்பினரால் நடத்தப்படும் கற்பழிப்பில் மானத்தைப் பாதுகாக்க மறைப்பதும், தாழ்ந்த சாதிகள் மீது நடத்தும் கற்பழிப்புகள், அதிகார வர்க்கம் நடத்தும் கற்பழிப்புகள் எல்லாம் இந்தியாவில் இன்னும் பதிவாகி விடுவதில்லை. நீதிமன்றத்தில் ஆணாதிக்கத் திமிரும், பார்ப்பனியப் பண்பாடும் பெண்களை நரக வேதனையைத் தரும் வகையில் மீளக் கற்பழிப்பதில் தயங்கியதில்லை. பின் இந்த இரண்டாம் முறை கற்பழிப்பின் பின் நீதி கிடைத்ததாக வரலாறு இருப்பின் அது ஓர் அதிசயமாகவே இருக்கும்.
உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று போற்றும் ஏகாதிபத்தியங்களின் சிபாரிசு பெற்ற நாட்டில் பெண்கள் மீதான பாலியல் கற்பழிப்புகளுக்குக் கூட நீதி கிடைத்ததில்லை. கற்பழிப்பு எல்லை கடந்த வேகத்தில் அதிகரிக்கின்றது. அதே போல் நீதி கோரி வருவது அற்றுப் போகுமளவுக்குப் பார்ப்பனிய ஆணாதிக்கம் தனது மனுதர்மக் கோட்பாட்டில் பெண்ணை இழிவுபடுத்தித் தன்னை நிலைநிறுத்துகின்றது. தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்கள் உயர்சாதி ஆண்களின் சாதி ஆணாதிக்கத்தால் சூறையாடப்படுகின்றனர். ஏகாதிபத்தியப் புதிய உலகமயமாதலில் பணத்தில் மிதப்பவர்கள் முதல் இரவுடித்தனமான மாஃபியாத் தனத்திலும் ஊழல் மூலம் புதுப்பணக்காரராவோர் கன்னிகழியப் பெண்ணைச் சுவைப்பது முதல் விளம்பரத்தில் நிர்வாணமாக்குவது வரை இந்தியக் கட்டுடைக்கப்பட்ட பாலியல் புரட்சியாக உள்ளது. இதை ஒட்டி எழுதும் எழுத்தாளர்கள் எல்லாத் தளத்திலும் புற்றீசல் போல் புறப்பட்டுள்ளனர்.
எதார்த்தம் இவைதான் என்றும், ஊர் உலகத்தில் இல்லாததா என்றும் எழுதுவது புரட்சியாகிப் போனது. இப்படி எழுதுவது தான் இன்றைய புரட்சி எழுத்து என்று புறப்பட்டோர் கற்பழிப்பு, வன்முறையில் ஈடுபடுபவனின் குருவாக உள்ளனர். இன்று கற்பழிப்பு அதிகரித்துள்ள நிலைமைக்கு இந்த மாதிரியான எழுத்துகள், காட்சிகள்.... பொதுவான காரணமாக உள்ளது. இது போலித்தனமான வாழ்க்கையை நோக்கிய கனவுகள் எதார்த்த உலகுக்கு எதிராக உள்ளது. திரையிலும், விளம்பரத்திலும் காண்பதைச் சொந்த மனைவியுடன் அனுபவிக்க முடியாத பரிதாபம் மனைவி மீதான வெறுப்பாக மாறுகின்றது. இதேபோல் பெண்ணுக்கும் ஆணைப் போல் ஏற்பட்டுக் கணவன் எதிர்ப்பாக மாறுகின்றது. பாலியல் வாழ்க்கை போராட்டத்துடன் ஒன்று கலந்தது என்பதைக் காட்டாத காட்சிகளும், எழுத்துகளும் எதார்த்தத்தில் வெறுப்பாக மாறுகின்றது. இந்தக் கற்பனையை நோக்கிய தேடுதலில் ஒருவருக்கு ஒருவர் தெரியாத உறவுகளையும், அது முடியாத அல்லது அதிலும் திருப்திப்படாத போது கற்பழிப்பு என்று இப்பாதை மனிதச் சமுதாயத்தில் பல கிளை கொண்டு அகன்று செல்கின்றது. இது இந்தியப் பெண் முதல் அமெரிக்கப் பெண்வரை பொதுவான அம்சமாக உள்ளது. இதை அமெரிக்காவில் ஆராய்வோம்.
உலகின் முன்னணி ஜனநாயக நாடு எனக் கட்டமைக்கப்பட்ட உலக பொலிஸ் வல்லரசான அமெரிக்க இராணுவத்தில் இருபது சதவீதம் பெண்கள் உள்ளனர். இந்த இருபது சதவீதப் பெண்களில் 55 சதவீதமான பெண்கள் உயர் அதிகாரிகளின் பாலியல் வன்முறைக்குப் பலமுறை பயன்படுத்தப்பட்டு உள்ளனர்.20 அமெரிக்காவில் 1,96,000 பெண்கள் இராணுவத்தில் உள்ளனர். 50,000 பெண்களை ஆய்வு செய்த போது 52 சதவீதமான பெண்கள் பாலியல் ரீதியில் உயர் அதிகாரிகள் துன்புறுத்தியது அம்பலமானது.55
அதிகாரம் பெண்ணின் மீதான ஆணாதிக்கப் பாலியல் அதிகாரமாகின்றது. ஆணாதிக்க அமெரிக்க ஜனநாயகம் பெண்களைக் கற்பழிக்கின்றது. உலகை ஆளப் பிறந்த, ஜனநாயகத்தைக் காப்பாற்றப் புறப்பட்ட இராணுவத்தில் பணியாற்றும் பெண்களின் கதிதான் மேல் உள்ளது. இப்படி சொந்த இராணுவத்தில் உள்ள பெண்களுக்கே இந்தக் கதி என்றால்; ஜனநாயகத்தைப் பூத்துக்குலுங்க வைக்க துப்பாக்கி முனையில் ஆக்கிரமிக்கப்படும் நாட்டுப் பெண்களின் நிலையை எண்ணிப் பாருங்கள். அந்த நாட்டுப் பெண்களை அமெரிக்க இராணுவப் பெண்ணால் கூடப் பாதுகாக்க முடியாது. ஏனெனின் சொந்த இராணுவத்திடம் இருந்து தன்னைப் பாதுகாக்க முடியாதவள் எப்படி மற்ற நாட்டுப் பெண்ணைப் பாதுகாக்க முடியும்? தேவை எனின் கூட்டிக் கொடுக்க முடியும். அவைகளை எந்த சி.என்.என். (C.N.N.) என்ற செய்தி ஊடகமாயினும் சரி உலகின் வேறு செய்தி ஊடகமாயினும் சரி, பின்நவீனத்துவமும் சரி செய்தியாகத் தரப் போவதில்லை. இந்தச் செய்திகளையும் கூடத் தருவதற்குப் பாட்டாளி வர்க்கம் மட்டுமே இன்று எஞ்சியுள்ள ஒரே ஊடகமாகும்.
உலகைச் சூறையாடி ஜனநாயகத்தை நிலைநாட்ட எல்லாவற்றையும் பயன்படுத்தும் இந்தச் சுரண்டல் வர்க்கம் உள்ளவரை அமெரிக்க இராணுவமும் சரி, அனைத்துச் சுரண்டும் வர்க்க இராணுவங்களும் சரி, பெண்ணைக் கற்பழிப்பதைத் தடுத்து நிறுத்தி விடமுடியாது. இங்கு பெண்கள் இணைந்தால் அமெரிக்க இராணுவம் எதைச் செய்து பெண்ணின் ஜனநாயகத்தைக் கற்பழிப்பாக்கியதோ அதுவே நிகழும்;. இந்திய இராணுவமும் சரி, பொலிசும் சரி, அமெரிக்க இராணுவமும் சரி எந்த இராணுவமும் சரி மேல் உள்ள புள்ளி விபரம் போல் ஆணாதிக்க இராணுவக் குணத்தையே வெளிப்படுத்த முடியும்;. இதைத் தகர்க்காத எந்தக் கோட்பாடும் ஆணாதிக்க இராணுவ இருப்பைத் தற்காப்பதுதான். இந்த ஆணாதிக்க இராணுவத்தின் இருப்பு தனிச் சொத்தைப் பாதுகாக்க, சுரண்டலைத் தொடர தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிராக நிறுத்தியுள்ளது. இந்த ஆணாதிக்க இராணுவத்தை ஒழித்துக்கட்ட வேண்டுமாயின் சுரண்டலை ஒழித்துக் கட்ட போராடவேண்டும். இதைச் செய்யாத எந்தப் பெண்ணியமும் சுரண்டல் அமைப்பால் வாழும் கோட்பாட்டுத் தளத்தில் ஆணாதிக்கத்தைப் பறைசாற்றுபவைதான்.