தமிழ்நாடு சி.பி.எம் பாசிசக் குண்டர்கள் (ம.க.இ.க ஆதரவு அமைப்பு தோழரைக் கொன்றதுடன், வேறு சில தோழர்கள் உயிர் ஆபத்தான் நிலையில்) நடத்திய படுகொலை

நந்திகிராமத்திலிருந்து விழுப்புரம் வரை சிபிஎம் ரவுடிக் கும்பலின் கொலைவெறித் தாண்டவம்....

"இந்தியாவுக்கான புரட்சிப் பாதை ஆயுதம் தாங்கியதாக ஒருபோதும் இருக்க முடியாது. சுதந்திர இந்தியாவில், மக்களுக்கான ஜனநாயகம் தழைத்தோங்குகின்ற நமது தேசத்தில் சமாதான முறையிலேயே அரசியலை வழிநடத்தி புரட்சியை வென்றெடுக்க முடியும்" என்று அடிப்படையான மார்க்சிய லெனினியத்துக்கே கொள்ளிவைத்தனர் சிபிஐ/சிபிஎம் போலி கம்யூனிஸ்டுகள்.

 

ஆயுதமேந்திய புரட்சியை வலியுறுத்துவதாலேயே நக்சல்பாரிகளை இழிவுபடுத்திப் பேசுவதோடு; அவ்வப்போது நக்சல்பாரிகளுக்கு எதிராக ஆளும்வர்க்கத்துக்கு அன்னிய/இந்திய முதலாளிகளுக்கு கைக்கூலிகளாகவும் செயல்பட்டு வருகின்றனர். சட்டீஸ்கர் மாநில அரசால் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக திட்டமிட்டே உருவாக்கப் பட்டுள்ள 'சல்வாஜூடும்' போன்ற கூலிப்படை அமைப்புகளுக்கு ஆதரவாகவும் இப்போலிகள் நடந்து வருகின்றனர்.

 

இவற்றையெல்லாம் நாம் கேள்வி கேட்டால், "ஆயுத கலாச்சாரம்" இருவருக்குமே ஆபத்தானது" என்கிற உபதேசம் வேறு. இப்படிப்பட்ட 'சைவ பூணைகள்' இப்போது ஆயுதமில்லாமல் அரசியலே நடத்துவது கிடையாது. இதுபற்றிகூட நாம் விரிவாக எதையும் எழுதவேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது. அனைத்துமே உலக அளவில் சந்தி சிரித்த விசயம்தான் ஏற்கெனவே.

 

மேற்குவங்கத்தில் இவர்களது அரசும் கட்சியும், தரகு முதலாளியான டாடாவுக்கும், இந்தோநேசியாவில் சுமார் பதினைந்து இலட்சம் கம்யூனிஸ்டு தோழர்களை நரவேட்டையாடிய சுகர்தோ வுடைய 'சலீம் குழும'த்துக்கும் அடியாளாக மாறி சேவை செய்துவருவது அனைவருக்கும் தெரிந்த விசயம்தான். இப்படிப்பட்ட ஒரு குண்டர் அமைப்பு முதலாளிகளுக்கு எதிராக சாதாரண உழைக்கும் மக்கள் மீது ஏவிய அக்கிரமங்களை இந்த ஒரு பதிவுக்குள் பட்டியலிட்டுவிட முடியாது. குறிப்பாக நந்திகிராம போராட்டங்களின் போது இக்கட்சியைச் சார்ந்த குண்டர்களால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் ஏராளம். இக்குண்டர்படை செய்த அட்டூழியங்களில் காணாமல்போன குழைந்தைகள் முதியவர்கள் நூற்றுக் கணக்கான பேர்.

 

இப்படி சாதாரண உழைக்கும் மக்களுக்கு எதிராக, குழந்தைகள், பெண்கள் என்று அனைவரின் மீதும் தனது வக்கிரங்களைக் கட்டவிழ்த்துள்ள அக்கட்சி கையில் உயர்த்திப் பிடித்திருப்பது ஆயுதங்களைத்தான், வேறெதையுமில்லை.

 

சமூக மாற்றத்திற்கான போராட்டங்களில் ஆயுதமேந்திய போராட்டத்தை மறுதளிக்கும் இப்போலிக் கூட்டம்; முதலாளிகளிடம் பெறும் சில தனிப்பட்ட ஆதாயங்களுக்காக கூலிப்படையாக மாறி ஆயுதங்களோடு கொக்கரிக்கிறது. இவ்வாறு இவர்கள் ஆளுகின்ற மாநிலங்களிலெல்லாம் ஆயுதங்களோடு பொறுக்கித்தனம் செய்து வரும் இக்கும்பல், நமது தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை.

 

மகஇக, மற்றும் அதன் தோழமை அமைப்புகள் எதுவும் ஆயுதங்களோடு களத்தில் இல்லை. நாங்களும் மக்கள் மத்தியில்தான் இயங்கிவருகிறோம் என்பதை பல்லாயிரம் முறை தெளிவாக நாம் சொல்லியாகிவிட்டது. ஆனால், இன்று வரை நமது தோழமை அமைப்புகளை 'ஆயுதமேந்திய நக்சல் பயங்கரவாதிகள்' என்று அவதூறு செய்வதை அவர்கள் நிறுத்தியதாகத் தெரியவில்லை. இணையத்திலும் இதற்கெதிரான விவாதங்களை நமது தோழர்கள் விரிவாக நடத்தியிருக்கின்றனர். ஒரே பொய்யைத் திரும்பத்திரும்ப அழுத்திச் சொல்வதனால் அது உண்மையாக மாறிவிடாதா என்று முயன்று கொண்டிருக்கின்றார்கள் போலிகள்.

 

இப்போது தமிழகத்திலும் இவர்கள் ஆயுதமேந்திச் சுற்றத் தொடங்கிவிட்டனர். இவர்கள் இங்கே உயர்த்திப் பிடித்திருக்கும் ஆயுதம் யாருக்கு எதிராக என்றால்; நமக்கு எதிராகத்தான். விழுப்புரம் அருகில் உள்ள காரப்பட்டு கிராமத்தில் ஏற்பட்ட அரசியல் மோதலில் எமது தோழர்களை சித்தாந்த ரீதியில் எதிர்கொள்ளத் திராணியற்ற சிபிஎம் ரவுடிக் கும்பல், சென்றவாரம் ஒரு பொதுக்கூட்டத்திலேயே எமது தோழர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு "வெட்டி வீசுவோம்" என்று கொக்கரித்திருக்கிறார்கள் அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள்.

 

எமது தோழர்களோ, இதனைக் கண்டுகொள்ளவில்லை. பொதுவாக சிபிஎம் கட்சியின் இதுபோன்ற வெற்று சவடால்கள் விடுவது ஒன்றும் புதிதல்ல. எனவே, எமது தோழர்களும் சற்று கவனக் குறைவாக தத்தமது பணிகளில் இருந்துவிட்டனர். இதனையறிந்து கொண்ட இந்த போலிகம்யூனிச பாசிசக் கும்பல், முறையாகத் திட்டமிட்டு, நேற்று இரவு எமது தோழர்களின் மீது கொலைவெறி ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியிருக்கிறது.

 

அதில் தோழர் இராசேந்திரன் என்ற எமது அமைப்பின் ஆதரவாளர் கொடூரமான தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளார். மேலும் மூன்று தோழர்கள் கடுமையான காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமணையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

 

பாஜக பயங்கரவாதிகள் தமது தில்லி தலைமை அலுவலகத்தைத் தாக்கியதை எதிர்த்து அதற்கு பதிலாக, சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் மாநில அலுவலகங்கலால் சூழப்பட்டிருக்கின்ற, பாஜக வின் சென்னை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு அடையாள ஆர்ப்பாட்டம் கூட நடத்த முடியாத அந்த சொரனையற்ற சிபிஎம் தொடைநடுங்கிக் கும்பல், நிராயுதபானிகளாகக் களத்தில் பணியாற்றும் எமது பாட்டாளி வர்க்கத் தோழர்களை தனது வர்க்க எதிரியாகக் கொண்டு இப்படிப்பட்ட தாக்குதல்களை நடத்துகிறார்கள்.

 

இத்தாக்குதலுக்கு தக்க எதிர்விணையாற்றுவதோ பதிலடி கொடுப்பதோ நமக்கொன்றும் கடினமான காரியம் இல்லை. ஆனால், இந்த நிமிடம் வரை சிபிஎம் என்ற கடைந்தெடுத்த போலிக்கும்பலை கம்யூனிஸ்டுகளாகப் பார்க்கிற அக்கட்சியின் உண்மையான தோழர்கள், இப்படிப்பட்ட ஒரு இழிவான செயல் அம்பலமான பிறகும் அக்கட்சியை ஒரு கம்யூனிஸ்டு கட்சி என்று நம்புவார்களா? ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளாக எம்மைத் தொடர்ந்து சித்தரித்துவரும் சிபிஎம் தலைமையின் கோரமான கொலைமுகத்தை இனியேனும் அறிவார்களா??

http://yekalaivan.blogspot.com/2008/06/blog-post_21.html