தேசம் தனக்கு எந்த அரசியலும் கிடையாது என்கின்றது. அரசியல் கிடையாது என்றால், அதன் அர்த்தம் நிலவுகின்ற பாசிசத்தை நடுநிலையுடன் ஆதரிப்பது தான். இதைத் தான் ஊடகவியல் என்று கூறுவதுடன், இதை நியாயப்படுத்தவே 'தொழில் நேர்மை" என்கின்றனர். இதுவல்லாத சமுதாய நலனா தேசத்திடம் உண்டு? சொல்லுங்கள்?
தேசத்தில் புல்லுருவியாக வாழ நினைக்கும் நீங்கள், எந்த சமுதாய நலத்துடன் செயல்படுகின்றீர்கள். அதையாவது சொந்த பெயரில் சொல்லுங்கள். உங்களுக்கு ஒரு அரசியல் முகமிருந்தால், ஒரு துளி நேர்மையிருந்தால் அதைச் சொல்லுங்கள். மானம் ரோசமற்ற, மக்களின் அவலத்தை வைத்து பிழைக்கின்ற சொறி நாய்கள் தான்டா நீங்கள்.
தேசம் சொறிவதன் மூலம் 'தொழில் நேர்மை" என்று அரசியல் பேசுகின்றது. நீங்கள் அதையே சொறிவதன் மூலம், தமிழ் மக்களின் அவலத்துக்கு தீர்வு காண்கின்றீர்கள்!
கொசிப்பும், வம்பளப்பும், தூற்றலும், அவதூறுமின்றிய, ஒரு தேசம் நெற்றை கற்பனை பண்ணி பாருங்கள். எத்தனை பேர் அதைப் பார்ப்பார்கள் என்று? நீங்கள் எத்தனை பேர் அதில் சென்று வம்பளப்பீர்கள்? தேசம் மக்கள் கருத்தை வைத்தால், நீங்கள் அதற்காக முக்கியா முனைவீர்கள்! தேசம் நெற் உங்களைப் போன்ற பொறுக்கிகளை நம்பி, உங்களைப் பொறுக்க வைக்கின்றது.
கிழக்கு பாசிட்டுகளின் இணைய ஊடகமான விழிப்பு, ஆபாச சினிமா இன்றி கிழக்கு மக்களுக்காக இயங்க முடியவில்லை. அது செய்யும் மக்கள் சேவையை, சினிமா ஆபாசம் ஊடாகத் தான் உங்களைப் போன்றவர்களை கொசிக்க அழைக்க முடிகின்றது. கிழக்கு பாசிட்டுகளால் கிழக்கு மக்களின் வாழ்வைப் பேசி, மக்களை அணுக முடியாது. இப்படித்தான் யாழ் மேலாதிக்க வடக்கு பாசிட்டுகளின் சில இணையங்கள் இயங்குகின்றது.
இப்படித் தான் தேசமும். அது அவதூறுகளும் கொசிப்புகளும், வம்பளப்புகளுமின்றி, அதனால் ஒரு இணையமாக உயிர் வாழவே முடியாது. ஏன் சமூக அக்கறை கொண்ட எந்த நோக்கமும், அதனிடம் கிடையாது. இதனால் கொசிப்பை ஊக்குவிக்க, சேறடிப்பது அவசியம்.
உதாரணமாக பாரிசில் என்ன நடந்தது என்பதை அறிய, தேசத்திடம் தொலைபேசி தொடர்பு எண் இல்லை. பலருக்கு தொலைபேசி எண் கொடுத்தவராச்சே. அண்மையில் கிழக்கில் நடந்த பாலியல் வன்முறைகளை மறுக்கவும், தேசத்தின் முதுகெலும்பான கிழக்கு பாசிட்டுமான ராஜேஸ்வரியை பாதுகாக்க தொலைபேசி மூலம் உண்மையை 'தொழில் நேர்மை" யுடன் அறிந்தவராச்சே. ஆனால் பக்கத்து பாரிசில் நடந்ததை அறிய முடியவில்லை. தேசம் என்ன நடந்தது என்பதை வீடியோ மூலம் பார்வையிடவும் முடியாமல் போய்விட்டது! இங்கு இதை வைத்து அவதூறை கட்டமைப்பது தேசத்தின் அவதூறு அரசியலுக்கு தேவையாக இருந்தது.
இதற்கு மருத்துவம் கிடையாது. இங்கு 'தொழில் நேர்மை" என்பது, இதை ஊக்குவிப்பதும் தொழிலை வளர்க்கும் 'தொழில் நேர்மை" யுமாகும். கொசிப்பும், வம்பளப்பும், தூற்றுவதுமே இணையத்தின் வாசகர் எண்ணிக்கையை உயர்த்தும் எனபதே, தேசத்தின் ஊடகத் தத்துவமாகும். இதைவிட தேசத்திடம் வேறு என்ன தான் சரக்கு இருக்கின்றது. இந்த அவதூறும் கொசிப்புமின்றி, திரோஸ்க்கி அன்னக்காவடி சேனனால் கொசித்தவர் பற்றிய புள்ளிவிபரக் கணக்கை சொந்தப் பெயரில் ஆய்வாக எழுத முடியும்.
ஆனால் இந்த கணக்கு ஆய்வில் விடுபட்டுப் போன உண்மைகள் பல உண்டு. எத்தனை பெயர் ஒரே பெயரில் விதவிதமாக எழுதுகின்றார்கள் என்பதையும், தேசம் நெற்றில் உள்ள நீங்கள் எத்தனை பேர் புனைபெயரில் உங்கள் அரிப்பை புனை பெயரில் எழுதுகின்றீர்கள் என்றும் அந்த புள்ளிவிபரம் ஆய்வுத்தரவைத் தரவில்லை. அத்துடன் ஒருவர் எத்தனை தரம் தங்கள் கொசிப்பைப் பார்க்கவும், எழுதவும் ஒரு நாளைக்கு மீள மீள வருகின்றனர் என்பதையும் எழுதியிருக்கலாமே! மற்றும் எத்தனை பெயர், உண்iமான வாசகர் என்பதையும். அதாவது எத்தனை கம்யூட்டரில் இருந்து எத்தனை பேர் பார்க்கின்றனர் என்ற விபரத்தையும். ஒருவர் பல கம்யூட்டரின் ஊடாக பார்ப்பது கண்டறிய முடியாது, ஆனால் மற்றவை தெரிந்து கொள்ள முடியும். இப்படி எழுதினால் தேசம் வளர்க்கும் தொழில், 'தொழில் நேர்மை" ஊடாகப் படுத்துவிடும். இதனால் இந்த உண்மையை 'தொழில் நேர்மை"யுடன் மூடிமறைத்து விடுகின்றனர். இதற்கு ஆய்வு என்று சிலர் டாக்டர் பட்டம் கொடுக்கின்றனர்.
இதை ஆய்வாக்கிய சேனனே, புனைபெயரில் தனது சொந்த வக்கிரத்தை கொட்டும் போது, இங்கு கருத்துக்கு எது இடம். திரொக்சியம் பேசிய சேனனின் அரசியல் என்பது கொசிப்பும் வம்புமாகும் போது, 'தொழில் நேர்மை" பேசும் தேசம், எப்படித் தான் மக்களுக்காக நிற்கும். அன்று சோபாசக்தி எனக்கு கல்வெட்டை எழுதிய போது, இதே சேனனும் சேர்ந்து தான் எழுதினார். இப்படி பின்னுக்கு நின்று கூட்டிக் கொடுக்கும் திரோக்சிய மாமா தான், இன்று தேசத்திலும் அதைச் செய்கின்றார்.
தேசத்தின் குழுவே தேசத்தில் போலிப் (புனை) பெயரில் இயங்குவது என்பது நஞ்சிடுவதாகும். இங்கு கருத்தின் மீது எந்த நேர்மையும் இருப்பதில்லை. சொந்த பெயரில் எழுதும் யாருக்கும், போலிப் (புனை) பெயர் தேவைப்படுவது ஏன். இது சமூதாயத்தின் பாலான எந்த அக்கறையிலும் இருந்தல்ல. சமுதாயத்தின் பாலான கருத்தை சொந்தப் பெயரில் சொல்லுவார்கள். ஆனால் அவதூறை அள்ளிக் கொட்டுவதற்கும், அதை ஊக்குவிப்பதற்குமே இவர்களுக்கு புனைபெயர் உதவுகின்றது. இப்படி அவதூறை லாடமாக்கி, கொசிப்பில் தேசத்தை ஓட்ட முனைகின்றனர். தேசத்தின் பின்னுள்ளவர்கள் தான், கொசிப்பை எழுதுவதில் முனைப்பாக உள்ளனர். தேசம் நெற்றில் உள்ளவர்களுக்கே, போலிப் பெயர் தான் அவர்களை வாழவைக்கின்றது.
மக்கள் அரசியல் பேச, பொதுவாக போலிப்பெயர் அவசியமிருப்பதில்லை. பாசிசத்தை ஆதரிக்க, மற்றவனை வரைமுறையின்றி கொசிக்கவும் தூற்றவும், அவதூறைப் பொழியவும் தான், இங்கு போலிப்(புனை)பெயர் உதவுகின்றது. இது தான் தேசம் நெற். சிலர் வாசகர் பகுதியை தணிக்கை செய்யக் கோருகின்றனர். ஏதோ தேசம் புனை பெயரில் ஆபாசத்தையும் அவதூறையும் செய்யாதவர்கள் என்று கருதுகின்ற அறியாமை இது. தேசத்தின் பெரும்பான்மையான அவதூறுகளும், கொசிப்புகளும் தேசத்தில் இருப்பவர்களின் சொந்த திருவிளையாடல் தான்.
பி.இரயாகரன்
16.06.2008
தொடரும்