மக்களின் விடுதலைக்கான கருத்து சுதந்திரத்தையல்ல. அதை அது பேசுவதும் கிடையாது. சமூக நோக்கமற்ற கருத்துச் சுதந்திரம் என்பது, அரட்டையும், கொசிப்புமாக, அது காழ்ப்பாக தூற்றுவதுமாக மாறுகின்றது. இப்படித்தான் தேசம் நெற் புழுத்துக் கிடக்கின்றது. இப்படிச் செய்வதையே தேசம் தனது 'தொழில் நேர்மை" என்கின்றது.

 

இந்த 'தொழில் நேர்மை" க்கு ஏற்ற அரட்டைக் கும்பல், புலிகளை வைத்து ஜனநாயகத்துக்கு நீளம் அகலம் சொல்லுகின்றனர். உலக ஜனநாயகத்துக்கு வரைவிலக்கணம் எழுதும் தமிழ் வல்லூறுகள், அனைத்தையும் புலியில் அமர்ந்தபடி தான் கொத்திக் கிளறுகின்றது. புலியல்லாத அனைத்து மக்கள் விரோதத்தையும், தனக்கு பிடித்ததையும் சீவி சிங்காரிக்க வைக்கின்றது. ஆகா ஆகா இதுவல்லவோ ஜனநாயகம், என்ன அழகு என்கின்றது. மனித குலத்துக்கு எதிரான தனது சொந்த வக்கிரங்களை எல்லாம், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம் என்று போற்றுகின்றது. புலியின் அரசியலை மறுக்காது, அதே அரசியலை உலையில் போட்டு புலியையே நக்கி உண்ணுகின்றது. தமது பாசிச 'தொழில் நேர்மை"க்கு ஏற்ப, கருத்துச் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் தமக்கேயான பாணியில் புரட்டிப் போடுகின்றனர்.

 

தேசம்நெற்றின் 'தொழில் நேர்மை" என்பது, இரண்டு பாசிசத்துக்கும் இடையால் ஒட்டுவது. இந்த இரண்டு பாசிசத்தையும் நம்பியே இருப்பது, ஊடகவியல் தர்மமாம். இவர்களை தனது சொந்த வாசகர்களாகக் கொண்டு கும்மியடிப்பது தான் அரசியலில் 'தொழில் நேர்மை" என்கின்றனர். இப்படி பாசிசத்திற்கும் தான் வடிகாலாக இருந்து பிழைக்கும் தொழிலைத் தான், தேசம் நெற் 'தொழில் நேர்மை" ஊடாகச் செய்கின்றது. தேசமும், தேசம்நெற் பொறுக்கிகளும் இதை 'தொழில் நேர்மை" என்று சொல்ல, மற்றப் பொறுக்கிகளோ இதை ஜனநாயகம் கருத்துச் சுதந்திரம் என்கின்றனர்.

 

வாசகர்களுக்கு பின்னால் இருந்து லூட்டி அடிப்பது, அதை நியாயப்படுத்துவது' தொழில் நேர்மை"யாகின்றது. சினிமா உலகில் ஆபாசத்தை சினிமா ஆக்கிவிட்டு, அதை ரசிகரின் விருப்பமாக கூறி நியாயப்படுத்துவது போன்றது. தேசம்நெற் வாசகர் பகுதி, அசல் நிதர்சனம்டொட்கொம், விழிப்பு போன்ற இணையங்களாக உள்ளன. தமது சமூக விரோதத்துடன், கழிசடைத்தனமான வகையில் காழ்ப்புகளைக் கொட்டியும், காழ்ப்;புகளை விதைத்தும், பொய்யையும் புரட்டையும் அள்ளி தெளித்தே அவை இயங்குகின்றன. தனிமனித முரண்பாடுகளையும், குழு வக்கிரங்களையும் தூவி, அவை அதைத் தூண்டுகின்றன. இது சமுதாயத்துக்கு தேவையா? இதன் சமூக நோக்கம் தான் என்ன? இதில் இருந்து தேசம்நெற் எப்படி வேறுபட்டது? அது இயங்கும் செய்திகளின் அடிப்படை தான் என்ன? நிதர்சனம்டொட்கொம், விழிப்பில் இருந்து தேசம்நெற் எப்படி வேறுபடுகின்றது?

 

இந்த வகையில் தான் தேசம் நெற்றின் சமுதாயத் தேவை என்ன? தேசம்நெற் சமூதாய தேவையுடன் தான் இயங்குவதாக கூறுகின்றதா! அது 'தொழில் நேர்மை" பற்றி, புல்லரிக்க புலம்புகின்றது. 'தொழில் நேர்மை" பேசி அரசியலை விற்கின்ற தேசம், மக்களின் அவலத்தை தனக்கு மூலதனமாக்குகின்றது. இந்த தேசம் மனித விடுதலைக்காக போhராடாது, அவதூறுகளையும் மனிதர்களுக்கு இடையில் காழ்ப்புகளையும் விதைக்கின்ற போது, இந்த தேசம் சமூகத்துக்கு தேவையா?

மனிதர்களை தனிமனிதர்களாக, ஒற்றைத் துருவங்களாக மனிதர்களையே பிளந்து போடும் தேசத்துக்கு நிச்சயமாக அரசியல் பின்னணியுடன் கூடிய சதி ஒன்று உள்ளது. இந்த வகையில் தேசம் பேசும் கருத்துச் சுதந்திரம் என்பது, மற்றவனை தூற்றுவதற்கான உரிமையைத்தான்;. மக்களின் வாழ்வை அடிப்படையாக கொண்ட கருத்து சுதந்திரத்தை முன்வைக்கவல்ல.  

   

போதை பொருளைக் கடத்தி விற்பவன், பெண்ணைக் கடத்தி விபச்சார விடுதி நடத்துபவன், பாலியல் ஆபாசத்தை கருத்தாக்கி சந்தைப்படுத்துபவன், என்ற எண்ணுக்கணக்கற்ற மனித விரோதங்கள், சமூக நோக்கில் தடை செய்யப்பட வேண்டியவை. ஆனால் அவை ஏதோ ஒரு வகையில் இந்த சமூக அமைப்பில் இயக்கப்படுகின்றது. இப்படி தான் தேசமும்.


 
புலிகள் என்ற அமைப்பு மக்களுக்கு எதிராகவே இயங்கி, இன்று அது மக்களுக்கு தேவையற்ற ஒரு அமைப்பாகவே உள்ளது. மக்களுக்கு நன்மை செய்வதற்கு பதில், பாதகமானதாக விபரீதமான விகாரம் கொண்ட ஒன்றாக இயங்கின்றது. இந்த வகையில் புலிகளின் தேவை பற்றிய விவாதம், அதற்கு எதிரான அரசியலாக எழுகின்றது. தேவையற்றது என்ற அடிப்படையில் மக்கள் புலியை வெறுக்கின்றனர். இதுவே புலிகளின் படுகொலை அரசியலாக மாறுகின்றது. இதே அளவுகோல் தான் அரசுடன் இயங்குகின்ற அனைத்து துரோகக் குழுக்களுக்கும் பொருந்தும்.

 

இவை அனைத்தும் அன்றாடம் மக்களை கொன்று குவித்தன, குவித்து வருவன. இப்படி மக்கள் விரோத அமைப்புகள் அனைத்தும், மக்களுக்குத் தேவையற்ற ஒன்று. மக்களை கொல்வதைத் தவிர, வேறு எந்த மக்கள் அரசியலும் கிடையாது. இதன் மூலம் தான் மக்களைக் கட்டுப்படுத்தி, தமக்கு அடிமைப்படுத்துகின்றனர். இதே அளவுகோல் தேசத்துக்கும் பொருந்தும். 'தொழில் நேர்மை" பேசும் அதே நேரம், சமுதாய நோக்கமற்றதாக தேசம் உள்ளது. அவதூறுகளையும் காழ்ப்புகளையும் கொட்டி, மனிதர்களிடையே பகைமையை விதைத்து பலரை ஒற்றைத் துருவமாக்கி, தன்னைத் துருத்த முனையும் ஒன்று இந்த சமூகத்துக்கு தேவையற்றது. 

 

இயக்கங்களின் இருப்பு அவசியமின்மை என்பது நிறுவப்பட்ட ஒன்று. கொலை, கொள்ளை கற்பழிப்புகள் என்று இந்த இயக்க அகராதிகளைப் புரட்டினால், எத்தனை எத்தனை சம்பவங்கள் உண்டு. இந்த அடிப்படையில் அதன் இருப்பை யாரும் நியாயப்படுத்த முடியாது. இப்படி சமுதாயத்துக்கு தேவையற்ற பல, சமுதாயத்தின் ஓட்டுண்ணிகளாக, களைகளாகவும் உள்ளது. இவை சுதந்திரம், ஜனநாயகம், விடுதலை, கருத்துச்சுதந்திரம், ஊடகவியல், 'தொழில் நேர்மை" என்ற பல முகமூடிகளை தனக்குத்தானே போட்டுக்கொள்கின்றது. இதனுடன் மட்டும் நிற்பதில்லை, தான் தப்பிப் பிழைக்க வன்முறை, படுகொலை, திரிப்பு, அவதூறு, காழ்ப்புகளையும் சாhந்தே இயங்குகின்றது. இப்படி தேசம் சுயநலம் கொண்ட 'ஊடகவியல்" தர்மம், 'தொழில் நேர்மை" தொழில் என்ற அளவுகோலைத் தவிர, அதனிடம் சமூக நோக்கம் எதுவும் கிடையாது. காழ்ப்பையும், அவதூறையும் ரசிக்கின்ற வக்கிரம் பிடித்த வாசகரைக் கொண்டு அது இயங்குகின்றது.

 

தேசத்தை இந்த அளவுகோலைக் கொண்டு தான், தேசம்நெற்றை நாம் பரிசீலிக்க முடியும்;. இது எந்த வகையில் சமுதாயத்துக்கு அவசியமானது என்பதை, சமுதாய நோக்கில் இருந்து தான் நாம் பரிசீலிக்க முடியும்.

 

பி.இரயாகரன்
16.06.2008

மற்றொரு தலையங்கத்தில் தொடரும்