சமூக நோக்கமற்ற புலித் தேசியம். சமூக நோக்கமற்ற புலியெதிர்ப்பு ஜனநாயகம். சமூக நோக்கமற்ற 'தொழில் நேர்மை". இவைக்கு பின்னால், தெளிவான மக்கள் விரோத நோக்கங்கள் தெளிவாக உண்டு.
இங்கு சொந்த சுயநலம் உண்டு. அதுதான் சொந்த 'தொழில் நேர்மை" பற்றி பேச வைக்கின்றது. மக்களுக்கு எப்படி நேர்மையாக செயல்படுகின்றீர்கள்? அதை முதலில் சொல்லுங்கள்;. மக்களுக்கு எதிரான இரண்டு பாசிசத்தையும், எப்படி நேர்மையாக எதிர்த்துப் போராடுகின்றீர்கள்? அதைச் சொல்லுங்கள். இதுவல்லாத ஊடகவியல் நேர்மை என்பது, பாசிசத்தை ஆதரித்து பூசிப்பது தான். இரண்டு பாசிசத்தை எதிர்த்து, அந்த வகையில் கருத்தாளரைக் கொண்டிராத தேச 'தொழில் நேர்மை"யைக், கொண்டு போய் குப்பையில் போடுங்கள். அது யாருக்குத் தான் தேவை. இது சொந்த சுயநலத்துக்கு வேஷம் போட்டுக் காட்ட உதவும் என்று, கனவு காணாதீர்கள்.
இங்கு சுயநலம் தான் 'தொழில் நேர்மை" என்கின்றது. தொழில் வளர்ச்சி, தொழில்சார் பிரபல்யம் தான், தேச ஆசிரியரின் முதன்மையான நலனாகின்றது. இங்கு சமூக நோககமல்ல. சமூக விடையத்தை தனது 'தொழில் நேர்மை"யின் பெயரில், பயன்படுத்தவே முனைகின்றனர். இதனால் புலியெதிர்ப்பையும், இடதுசாரியத்தையும் கூட சந்தைப்படுத்தியவர்கள்.
இதற்கு ஏற்ப இந்தப் பொறுக்கி காலத்துக்கு காலம் ஆட்களையும், அவர்களின் சொந்த பலவீனங்களையும் தனது சொந்தத் தேவைக்கு பயன்படுத்தியதுடன், பயன்படுத்தவும் முனைகின்றான். மனித அவலத்தை கேலிசெய்யும் இந்த பொறுக்கியுடன் சேர்ந்து பொறுக்கும் கூட்டத்தையும், இந்த பொறுக்கியின் பல்லாக்கை தூக்கும் சுயநலக் கூட்டத்தை 'தொழில் நேர்மை" ஊடாக தான் எப்படி பயன்படுத்திக் கொள்கின்றேன் என்பதையும் கேலிசெய்து விடுகின்றான். இடதுசாரியம், அரசியல் எல்லாம் 'தொழில் நேர்மை" ஊடாக விலை போகின்றது.
இப்படி சமூக நோக்கமற்ற வகையில் அரசியலை தேசம் வியாபாரமாக்கும் போது, இதன் பின்னால் பொறுக்கும் கூட்டம் இருப்பது இன்றைய பாசிசத்தின் மகத்தான வெற்றியாகும். இதை முற்போக்கு என்று பீற்றுவதும், மயங்குவதும் பொறுக்குவதால் ஏற்படும் இயல்பாகின்றது.
தேசத்தின் கருத்துப் பகுதியை பாருங்கள். கருத்துச்சொல்லும் 99 சதவீதமானவர்கள் யார்? அவர்கள் எதார்த்தமான சமூக அமைப்பில் எங்கே? எப்படி? எந்த நிலையில் உள்ளனர்? யாராலும் காட்ட முடியுமா? மக்களின் சொந்த விடுதலைக்கான குரல்கள் எங்கே? அவை எப்படி? எந்த வழியில் வெளிப்படுகின்றது? மக்கள் விரோத பாசிட்டுகள் தான், எங்கும் கருத்துக் கூறுபவர்களாக உள்ளனர்.
இப்படி புலி, புலியெதிர்ப்பும் மற்றும் மக்கள் அரசியலை முன்வைக்காத அலிகளும் தான், தேசம் கருத்துப் பகுதி ஊடாக பாசிசத்தை பிரச்சாரம் செய்கின்றனர். இவர்கள் தான், இதை ஜனநாயகம் சுதந்திரம் என்கின்றனர். இப்படி சமூக விரோத காடையர்களும், லும்பன்களும், பாசிட்டுகளும், கொசுறுகளும் கூடும் இடம் தான் தேசம்நெற்.
பாசிசத்துக்கு கருத்துச் சுதந்திரம் வலியுறுத்தும் இவர்கள், எதார்த்தத்தில் புலி – புலியெதிர்ப்பு அரசியல் ஊடாக மக்களுக்கு சுதந்திரத்தை மறுப்பவராக உள்ளனர். தேசம்நெற் இந்த பாசிசத்தை எதிர்க்காது, அதை பாதுகாப்பதால் தான் புலியும்-புலியெதிர்ப்பும் தேசத்தின் சுதந்திரத்துக்காக அதன் பாசிச வழியில் அதை ஆதரிக்கின்றது. தேசம்நெற்றை தமது சொந்த ஊடகமாக அது அடையாளம் காண்கின்றது. அதை ஆதரித்து புலிக்கும் புலியெதிர்ப்பு சார்பாக தமது சொந்த பாசிசக் கருத்தையிடுகின்றது.
தேசம்நெற் எப்படி மக்களுக்காக அரசியல் செய்கின்றது என்பதற்கு பதிலளிப்பதில்லை. இந்தக் தேசக் கும்பல் நடத்துகின்ற பல பத்திரிகைகள், அது பேசும் அரசியல் என்ன? அதற்கு பணம் கொடுப்பது யார்? அதன் நோக்கம் என்ன? எதையும் யாரும் கேள்வி கேட்பதில்லை. தேசம் கூறுவது போல் இது 'தொழில் நேர்மை" என்ற விபச்சாரத்தில் தான் புழுக்கின்றது. விபச்சாரிக்கும் கூடத்தான் 'தொழில் நேர்மை" உண்டு. தேசத்துக்காக இது இல்லாமல் போய்விடுமா! இதற்குள் துரும்பாக உள்ள திரோஸ்கிய அன்னக் காவடியான சேனனுக்கும் கூடத்தான் 'தொழில் நேர்மை" உண்டு. எல்லாம் மக்களை விற்றுப்பிழைக்கும் தொழில் தான்;. நாளை தேசம் தொழில் சார்ந்து, பெண்ணின் சதை ஆபாசமாகக் கொண்ட, ஒரு ஆபாச பத்திரிகையைக் கொண்டு வந்தாலும் ஆச்சரியமில்லை. அதுவும் ஜெயபாலன் இன்று செய்வது போல் ஒரு தொழில் தானே. அதற்கென்றும் 'தொழில் நேர்மை" தேசம் கூறுவது போல் உண்டு தானே. தேசம் தமது வெளியீட்டுப் பட்டியல் என்று பெருமையாக அறிவிக்கும் பத்திரிகைக்கு, கோயில் முதலாளிகள் பணம் கொடுப்பது போல் எதுவும் சாத்தியமானது. சாதியமே இந்துத் தத்துவமாக கொண்ட கோயில் முதலாளிகளின் பணத்தில் தேசத்தின் பத்திரிகை, அதே நேரம் சிறப்பு தலித் வெளியீடுகளை தேசம் கொண்டு வரவில்லையா? இப்படி இந்துத்துவத்தை வைத்து தேசம் வியாபார விபச்;சாரம் செய்யவில்லையா? எல்லாம் தொழில் தானே!
தேசம் நாளை 'தொழில் நேர்மை"யுடன் ஆபாசப் பத்திரிகை நடத்த மாட்டாது என்று, யாராலும் கூற முடியுமா? இந்த தேசம்நெற் வாசசர்கள் அங்கும் வரமாட்டார்கள் என்று யாராலும் சொல்ல முடியுமா? தேசத்தை சுற்றி உள்ள வெளியீடுகள், அதன் பின்னணி, அதன் கருத்துக்கள், இது கொண்டுள்ள அரசியல் இதை மறுத்துவிடவில்லை.
இங்கு தேசம் மற்றும் தேசம்நெற்றின் நோக்கம் வெளிப்படையானது. அரசியலை வியாபாரம் செய்வது. அதற்காக அரசியலை விபச்சாரம் செய்வது. அதையொட்டி ஒட்டி 'தொழில் நேர்மை"யுடன் பிரபல்யமாவது. இதுதான் தொழில் நேர்மை பற்றி தேசத்தின் சொந்த அளவுகோல்;. இங்கு புலி ஆதரவு, புலியெதிர்ப்பு என்பது, அவர் தனது சொந்தத் தொழிலை வளர்க்கும், பாசி;ச படிகற்கள் தான்.
இதற்கு பொருத்தமான உதாரணம் உண்டு. அண்மையில் கொல்லப்பட்ட மண் எண்ணை மகேஸ்வரனின் வாரிசுகள் தான் இந்த பொறுக்கிகள். அவரும் இவரைப் போல் 'தொழில் நேர்மை"யுடன் யுத்தத்தைப் பயன்படுத்தி, தமிழ் மக்களைக் கொள்ளையடித்து பெரும் கோடிஸ்வரனாவன். யுத்தம் மூலம் அற விலையில் தமிழ் மக்களைக் கொள்ளை அடித்து, இலங்கையில் முதல்தரமான கோடீஸ்வரனான ஒரு தமிழன். இவனும் தமிழ் மக்கள் பற்றி 'தொழில் நேர்மை" உடன், தேசம் ஜெயபாலன் போல் கதைத்தவன். புலியுடன், அரசுடன், எதிர் கட்சியுடன், துரோகிகளுடன் தனது தொழிலுக்காக 'தொழில் நேர்மை"யைக் கையாண்டவன். இதைத்தான் தேசம் நெற் ஜெயபாலன் என்ற பொறுக்கி 'தொழில் நேர்மை"யுடன் செய்கின்றான். மக்களின் அவலத்தை தொழிலாக்குகின்ற, கிரிமினல்கள் தான் இவர்கள். பல கிரிமினல்கள் பொறுக்கிகளினதும் தமது அரிப்பைத் தீர்க்கும் மடம் தான் தேசம் நெற்.
பி.இரயாகரன்
16.06.2008புதிய தலைப்பில் தொடரும்
சமூக நோக்கமற்ற 'தொழில் நேர்மை"
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode