மனித அவலத்தையே சமூகமாக்கிவிட்ட பாசிசத்தை, எதிர்க்காத ஒரு ஊடகவியலை 'தொழில் நேர்மை" என்ற பெயரில் நடத்துவதே பாசிசம் தான். பாசிசத்தை இப்படியும் அரங்கேற்ற முடியும் என்பது, பொறுக்கிகளினதும் கிரிமினல்களினதும் வக்கிரமாகும். புலி - புலியெதிர்ப்பு பாசிட்டுகளுடன் கூடி, நடத்துகின்ற அரசியல் விபச்சாரம் தான், அவரின் 'தொழில் நேர்மை" யாகின்றது.
இந்த தேசம்நெற்றுக்கு என்று எந்த சமுதாய நோக்கமும் கிடையாது. இதை நடத்தும் ஜெயபாலனோ, மனிதாபிமானமற்ற ஒரு பாசிச வியாபாரி. 'தொழில் நேர்மை" பேசும் வண்ணம், பாசிசம் பெற்றெடுத்த ஒரு பொறுக்கி. இதற்குள் சில வலது இடது பேசும் தரகர்கள். தனது சொந்த வியாபாரத்தைச் செய்ய, இடதுசாரியம் முதல் வலதுசாரியம் வரை, இவருக்கு தேவைப்பட்டது, தேவைப்படுகின்றது. அன்று முதல் இன்றுவரை அவன் செய்ததும், செய்து வருவதும் இதைத்தான். இதை புரிந்து கொண்ட சிலர், இதில் இருந்தே விலகிவிட்டனர்.
இந்த பொறுக்கியுடன் யாரெல்லாம் சேர்ந்து பொறுக்க முடியுமோ, அவர்கள் கூடுகின்றனர். முன்பு தேசம் பத்திரிகையில் இருந்தவர்கள் ஏன் விலகினர் என்று ஆராயாது, பொறுக்கியுடன் சேர்ந்து வலதுகள் இடதுகள் தத்தம் பங்குக்கு பொறுக்க முனைகின்றனர்.
இங்கு அரசியல் பேசாத தேசத்தின் 'தொழில் நேர்மை" என்பது, அரசியல் அவதூறாக அரசியலைக் கட்டமைப்பதாகும். மக்களின் விடுதலைக்கான எந்த சமூகக் கூறும் வளர்ந்துவிடக் கூடாது என்பதே, இதன் அரசியல் இலக்காகும்;. அரசியல் பேசாத இந்தத் தேசம் தான், 'இரயாகரன் - அவரது புனைவுகளும் அவர் கட்டமைக்கும் விம்பமும்" என்ற கட்டுரை ஊடாக, தனது அரசியல் முகத்தையும் இலக்கையும் வெளிக் காட்டியது.
இங்கு இதன் மூலம் இரண்டு விடையங்களை தேசம் அரங்கேற்றிக் காட்டியது.
1. நான்(ங்கள்) மட்டும் வைக்கும் அரசியலை மறுப்பது. இதைத்தான் அவர் 'புனைவு" என்றார். அதாவது மக்கள் போராட்டம் என்ற ஒன்று, அரசியலில் கிடையாது என்றார். இதையே அவர் 'புனைவு" என்றார். இதன் அடிப்படையில் தான், கருத்துத் தளம் இயங்குகின்றது. இதன் மூலம் தேசம், புலி – புலியெதிர்ப்பு பாசிசத்தை அரசியலாக வளர்ப்பதை குறிக்கோளாகப் பிரகடனப்படுத்தினர். நான்(ங்கள்) வைக்கும் மக்கள் கருத்தை 'புனைவு" என்றவர், எதைத் தான் அதற்கு மாற்றாக புனைவின்றி வைத்தார் என்றால், பாசிசத்தைத் தான். அதை அவர் காழப்;புகள், அவதூறுகள் வடிவில் அரங்கேற்றினார்.
தாம் ஊடாகவியலாளர்கள், தாம் எந்த சார்புமற்றவர்கள், எதையும் எதிர்க்க மாட்டோம் என்று கூறிக்கொண்டு, புலி-புலியெதிர்ப்பு பாசிசத்தின் பின்னால் நின்று மக்களைத் தூற்றுகின்றனர். வாசகர் கருத்து என்று கூறிக்கொண்டு, அந்த பாசிசத்தை வளர்த்துக் கொண்டு, தாமும் தம்மை புனைபெயரில் நின்று சேறடிக்கின்றனர். எனக்கு எதிரான தனிப்பட்ட அவதூறுகள் பெரும்பாலானவை, 8 பேரைக்கொண்ட தேசம் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்களின் கைவரிசை தான். இப்படி தவறுகளையும், குற்றங்களையும் வாசகரின் குற்றமாக காட்டுகின்ற பொறுக்கிகளுக்கே உரிய 'தொழில் நேர்மை" பேசி, தமது பாசிசத்தை பண்படுத்துகின்றனர்.
2. நான் மட்டும் இந்த போராட்டத்தில் முன்னணி பாத்திரத்தை வகித்ததால், என்னைத் தனிப்பட்ட நிலையில் தூற்றவே இரயாகரனின் 'விம்பம்" பற்றி ஒரு அவதூறை கட்டமைத்தனர். ஆதாரமற்றதும், அடிப்படையற்றதுமான அவதூறுகள் மூலம், என் மீது காறித்துப்பினர். இதனால் மக்கள் போராட்டம் என்ற அரசியல் இல்லாமல் போய்விடாது என்பது, இந்த பொறுக்கிகளுக்கு தெரியவில்லை.
இப்படி தேசம்நெற்றின் அரசியல் இலக்கு, மக்கள் அரசியலை தூற்றுவதும், அதை வைப்பவர்கள் மீது தனிப்பட்ட ரீதியில் தூற்றுவதும் தான். இதைவிட வேறு எந்த அரசியல் இலக்கும் இதனிடம் கிடையாது. இது தான் தேசம் நெற்றின் மையமான அரசியல். இதை எனக்கு எதிராக 'தொழில் நேர்மை" ஊடாக, அவர் வெளிப்படுத்தி வளர்த்தெடுக்க முனைந்தார். ஆனால் பாசிசத்தின் உட்கூறுகளின் முரண்பாடு, தேசம்நெற் கொண்டுள்ள 'தொழில் நேர்மை"யை புரிந்து கொள்ளாது முந்திக்கொண்டு, அதுவாக வெளிவந்து நாறுகின்றது.
தேசம்நெற் என(ம)க்கு எதிராக மீண்டும் மீண்டும் கட்டமைக்கின்ற அவதூறுகள் மூலம், பாசிசத்தை எமக்கு எதிராக நெறிப்படுத்த முனைகின்றது.
தேசம்நெற் சொல்லுகின்ற செய்தி தெளிவானது. மக்கள் அரசியல் என்பது ஒரு 'புனைவு", அதை வைப்பவர்கள் 'விம்ப"த்தை தகருங்கள் என்பதே. இந்த எல்லையில் தான் தேசம், ஒட்டுமொத்த மனித அவலத்தையும் கேலிசெய்கின்றது. புலி- புலியெதிர்ப்பு கும்பல், இப்படி தேசம் நெற்றில் மக்களின் வாழ்வை கேலிசெய்து பந்தாடுகின்றது. பாசிசம் கருத்துச் சுதந்திரத்தின் பெயரில், இப்படியும் இயங்குகின்றது.
பி.இரயாகரன்
16.06.2008மற்றொரு தலையங்கத்தில் தொடரும்
பாசிசத்தை எதிர்க்காத 'தொழில் நேர்மை"
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode