புலி – அரச ஆதரவு பாசிட்டுகளும், புலியெதிர்ப்பு கோஸ்டிகளும், தங்கள் முரண்பாடுகளை தீர்த்துக் கொண்டு கொசிக்கும் இடம் தான் தேசம் நெற். இதைத் தவிர இதனிடம் வேறு எந்த சமுதாய நோக்கமோ, சமூக விழுமியங்களுமோ கிடையாது. இதை வைத்து தேசம் நெற் ஆசிரியர், தொழில் என்ற பெயரில் வியபா(பச்சா)ரம் செய்கின்றார். 'தொழில் நேர்மை" என்ற பெயரில், சமூக அவலத்தை தொழில் மூலதனமாக்கும் ஒரு பொறுக்கியாக தேசம்நெற் ஊடாக உலா வருகின்றார். 

பாரிஸ் கூட்டத்தை திரித்தும், புரட்டியும், தேசம்நெற்றை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக விளம்பரப்படுத்த முனைந்தனர். இதை ஜனநாயகத்தின் பெயரில், அதன் ஜனநாயக விரோதத்தை இட்டுக்கட்டுவது கூட பாசிசம் தான்;. (இதை எழுதிய சுரேஸ் பினாமியா? அண்மையில் கள்ள கிரடிற்காட்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டதற்காக, இதே சுரேஸ் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையில் இருந்தது பலர் அறிந்ததே. இதில் இவர் அறியா வண்ணம் பினாமியாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. அப்படி தேசநெற்றிலும் இவர் பினாமியா? என்ற சந்தேகம் உண்டு.) 

 

கேள்வியே இது தான். தேசம்நெற்றை கண்டிப்பது, இதற்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வருவது, அதை பார்க்க வேண்டாம் என்று கோருவது கூட, ஒரு ஜனநாயக உரிமையா? இல்லையா?. இங்கு  இதை மறுப்பது தான் பாசிசம்.

 

தேசத்துக்கு எதிராக ஏன் எதற்கு இவை கோரப்படுகின்றது என்பது தான், அதாவது மக்கள் நலனுடன் தொடர்புடையாத இல்லையா என்பது தான், இதன் நோக்கத்தை தீர்மானிக்கின்றது.  ஆனால் தேசம்நெற் சதியாளர்கள், இதை மறுக்கும் ஜனநாயக உரிமையையே ஜனநாயகம் என்கின்றனர். இந்த உரிமையை மறுக்கும் பாசிசத்தை, ஜனநாயகம் என்றனர். இதைத்தான் தேசம்நெற் வளர்க்கின்றது. வெட்கக் கேடான மனித விரோத பாசிச காழ்ப்;புகளாகவே, அவற்றைக் கொட்டி தமது பாசிச அரிப்பைத் தீர்க்கின்றனர்.

 

தமது இந்த பாசிச காழ்ப்புகளை, முன்னைய இயக்க அடையாளத்தின் ஊடாக முத்திரை குத்துவதாக மாறியது. நாயைவிடக் கேவலமான பாசிசக் குலைப்பு. அவர்களின் அரசியலை வைத்து விவாதிக்க முடியாது, அவதூறுகள் மூலம் பினாற்றுவது தான், இவர்களின் மொத்த அரசியல் ஆகிவிட்டது. அவர்கள் என்ன அரசியலைக் கொண்டுள்ளனரோ அதே அரசியலைத் தான், இந்த புதிய பாசிச 'ஜனநாயக" ஜாம்பவான்கள் கொண்டுள்ளனர் என்பதே உண்மை. 

 

சமுதாயத்தின் தேவையுடன் இயங்காத எவையும்;, சமூகத்துக்கு தேவையற்றவை. அவை சமுதாயத்துக்கு எதிரானவை. இவையோ சமுதாயத்துக்கு எதிராக நஞ்சிடுபவை தான். பொருளை உற்பத்தி செய்தாலும் சரி, கருத்தை உற்பத்தி செய்தாலும் சரி, அது சமுதாய நலனுக்கு எதிரானது என்றால், அவை இந்த சமூக அமைப்புக்கு தேவையற்றது.

 

சமுதாய நலனுடன் ஈடுபடாத எவையும், சமுதாயத்துக்கு எதிரானவை. இந்த நிலையில் அவை சமுதாய தேவையுடன் மாற்றி அமைக்கப்பட வேண்டும் அல்லாது போனால் அவை இல்லாது ஒழிக்கப்பட வேணடும். இந்த வகையில் தான், எதையும் பகுத்தறிவுடன் பார்க்கவேண்டும். 

 

ஆனால் எங்கும் எதிலும் சமூக விரோத பாசிசக் கூறுகளே பலம் பெற்ற ஒன்றாக உள்ளது. அதுவே எல்லாமாகி, அது சமூகத்தினுள் ஊடுடுவி இயங்குகின்றது. சமூக விரோதம் என்பது, அரச பாதுகாப்பில், கருத்துச் சுதந்திரத்தின் பெயரில், ஜனநாயகத்தின் பேரில், தேசியத்தின் பெயரில், தொழிலின் பெயரிலும், இப்படி எத்தனையோ விதத்தில் தன்னைத்தானே நியாயப்படுத்தியபடியே சமுதாயத்துக்கு எதிராக இயங்குகின்றது. இந்த நிலையில் தான், மக்கள் போராட்டங்கள் இதற்கு எதிராக நடக்கின்றன. நேபாளத்தில் மன்னர் ஆட்சியை ஒழித்தாலும் சரி, இந்தியாவில் பெண்; ஆபாச போஸ்ட்டர்களுக்கு எதிராக போராடினாலும் சரி, இவை எல்லாம் சில உதாரணங்கள் தான்.   

 

பொருள் அல்லது கருத்து உற்பத்தியின் பின் இலாபம், சுயநலம்;, பொறுக்கித்தனம், அற்பத்தனம் எல்லாம் பொங்கி வழிய, மனித குலத்தை தமது காலுக்கு ஏற்ற செருப்பாக்குகின்றனர். இதையே தேசம்நெற் தனக்கு ஏற்ப செய்கின்றது.  இதை எப்படியும் எந்த வகையிலும் தனக்கு ஏற்ப நியாயப்படுத்தலாம் என்பதே, இந்த பொறுக்கிகளின் பிழைப்புத்தனமாகும்;. பொறுக்கிகளுடன் சேர்ந்து பொறுக்குபவனாக மாறிவிடும் போது, இது கருத்துத் தளத்திலோ அரசியல் விபச்சாரமாகின்றது.  

 

இவை எல்லாம் எப்படி எந்த சமுதாய நோக்கத்துடன் இயங்குகின்றது? இதையெல்லாம் சமூதாய நோக்கில் பார்க்காமல் இருத்தலே, சமுதாய அக்கறை என்கின்றனர். கருத்துரைப்பவர்கள், இதில் அக்கறை காட்டுபவர்கள் வைக்கும் அரசியல் தான் என்ன? யாருடன் சேர்ந்து, எப்படி ஏன் நிற்கின்றனர்? எதற்காக கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம் என்று புலம்புகின்றனர்? எதை அடைய இப்படி முனைகின்றனர்? அப்படி அவர்கள் புலம்புவது தான் என்ன? இது எந்த வகையில் மக்களின் விடிவிற்காக எப்படி உழைக்கின்றது?

 

புலியல்லாத புலியெதிர்ப்பு கும்மியடிப்போ, அனைத்தையும் புலியை வைத்துப் பார் என்கின்றது. இந்த புலியெதிர்ப்பு லூசுகளின்;; கருத்துக்களோ. இன்னுமொரு புலியிசம் தான்.  கருத்துக்கள், நடைமுறைகள் சமுதாயத்தை மேம்படுத்த உதவுகின்றதா இல்லையா என்பது பார்க்க கூடாத ஒரு விடையமாக, பார்க்க வைப்பதே இவர்களின் 'ஜனநாயக" கூத்து. இந்த புலியெதிர்ப்பு 'ஜனநாயகத்தின்" பின்னால் தான், தேசம்நெற் இரண்டு பாசிசத்துடன் கூடி மனித அவலங்களை அரட்டை அடிக்கவும் கொசிப்படிக்கவும் வைக்கின்றது.

 

தேசம் நெற் வரலாற்றுச் சாதனை என்ன? சில புலி மற்றும் புலியெதிர்ப்பு (உதாரணமாக நிதர்சனம் டொட் கொம், விழிப்பு ...) இணையங்கள் நடத்திய அரசியல் அவதூறுகளையும், கொசிப்புகளையும் வாசகர் மட்டத்துக்கு அதைக் கொண்டு வந்து, அதைக் கருத்து சுதந்திரமென்றது தான். நிதர்சனம் டொட் கொம், விழிப்பு எதை செய்கின்றதோ, அதை கீழ் இருந்து செய்வது. இது ஒரு புதிய பாசிசப் பரிணாமம். இப்படி பாசிசத்தை, வாசகர் பெயரில் மக்கள் மயப்படுத்த முனைகின்றனர். இது நபர்களை மட்டுமல்ல, கருத்தையும் கொசிப்பாக்கி, அதையும் அவதூறு செய்கின்றது.

 

தமிழ் மக்கள் விடுதலை என்பது, இந்த அவதூறுகளும் கொசிப்புகளும் தான் என்கின்றது. இதைத் தான் இந்த இணையப் பொறுக்கிகள், மாற்றுக் கருத்து என்றனர். இதையே தமது 'தொழில் நேர்மை" என்கின்றது தேசம்.

 

புலியல்லாத அரசியலைப் பாருங்கள். இந்த புலியெதிர்ப்பு கூறுகின்றது ஜனநாயகம் என்பது, அரசை ஆதரிப்பதே என்கின்றது. இதுவோ இன்று புலியல்லாத தளத்தின் பொதுக் கருத்தாகியுள்ளது. தேசம்நெற் பொறுக்கிகளோ மாற்றுக் கருத்து என்பது, கொசிப்பதும் தூற்றுவதும் என்கின்றனர். இதைத் தான் தேசம்நெற் புலி மற்றும் புலியெதிர்ப்பு வாசகர்கள் மூலம் நிறுவியுள்ளனர். இந்தப் பாசிசத்தைத் தான், இன்று பலரும் மாற்றுக் கருத்து என்று புலி மற்றும் புலியெதிர்ப்பின் பொதுக் கருத்தாகிவிட்டது.

 

புலம்பெயர் இலக்கிய சந்திப்பு முதல் இது நடத்திய கூட்டங்கள் வரை மாற்றுக் கருத்து என்று கூறியது, ஆளுக்கு ஒழிய, (மக்கள் நலனைக் கோரும்) கருத்துக்கு அல்ல. இன்று அது தேசம்நெற்றில் பாசிச வடிவில் அரங்கேறுகின்றது. இப்படி இந்த பாசிட்டுகள், மொத்தத்தில் கருத்துச் சுதந்திரத்தை மறுக்கின்றனர். மக்கள் வாழ்வை ஒட்டிய கருத்துக்கல்ல, அவனவனின் அரிப்பே, கருத்துச் சுதந்திரம் என்று கூறி அது தேசத்தில் அம்மணமாக சீரழிந்துள்ளது.

 

மொத்தத்தில் இந்த பின்னணியில், ஏகாதிபத்தியம் முதல் இந்தியா இலங்கை வரை வௌ;வேறு முகத்துடன் ஊடுடுவி நிற்கின்றது. எந்த சமூக நோக்கமற்றதாகவும் கூறும் தேசம்நெற்றின் பாசிசப் பின்னணி இப்படிப்பட்டதே. பொதுவான பாசிச சமூக இருத்தலில், அந்த பாசிசத்தின் துணையுடன், மனித அவலத்தை தேசம் நெற் வியாபாரம் செய்கின்றது. இதைத்தான் தேசம் 'தொழில் நேர்மை" என்கின்றது. பாசிசத்தை எதிர்ப்பது, 'தொழில் நேர்மை"க்கு முரணல்லவா!

 

பி.இரயாகரன்
16.06.2008

மற்றொரு தலைப்பில் தொடரும்