இன்று உலகின் தனிச் சொத்துரிமையை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகம் மீதான நம்பிக்கைகள் இந்த அமைப்பின் அச்சாணியாக உள்ளது. இந்த ஜனநாயகம் மிக்க சிலருக்கு, பலர் உழைக்கும் சுரண்டலில் தன்னை நியாயப்படுத்துகின்றது. பெண்கள் இந்த அமைப்பில் போட்டி போடுவதன் மூலம், சலுகை பெறுவதன் மூலம், போராடி வெல்வதன் மூலம், ஆணுக்கு நிகராக விடுதலை பெற முடியும் என்ற கோட்பாடுகள் மீது உலகமயமாதல் முகத்தைப் பொத்தி அடிப்பதைப் பார்ப்போம். 1990-இல், 120 கோடி வறிய மக்கள் 130 கோடி டொலரை மட்டுமே வருவாயாகக் கொண்டுள்ளனர். 1998-இல், 120 கோடி டொலராக குறைந்து வறுமை சமூகமயமாகி அதிகரித்துள்ளது. இந்த வறுமையில் சிக்கியுள்ளோரில் பெரும் பகுதி பெண்கள் ஆவர். இவர்கள் நாள் ஒன்றுக்கு 70 டொலரை உற்பத்தி செய்வதுடன், உலக உற்பத்தியில் 78 சதவீதத்தைப் ப+ர்த்தி செய்கின்றனர். ஆனால் உலக வருமானத்தில் 6 சதவீதத்தையே பெறுகின்றனர். இதிலும் நேரடியாகப் பெறுவது 3 சதவீதத்தையே. அதாவது ஒரு டொலரைவிட குறைவாகும். (4.2000)42
வறுமை உலகமயமாகிச் செல்வம் குவிகின்ற ஜனநாயகத்தில், பெண்கள் தமது செல்வத்தை இழந்து செல்லுகின்ற போது, எப்படி பெண்ணின் விடுதலையை, தனிச்சொத்துரிமையை அழிக்காமல், அதைக் கைப்பற்றாமல் பெறமுடியும்? இங்கு பெண் சொத்தை இழந்துவருவதால், ஆணாதிக்க அடிமைத்தனம் சுரண்டல் வடிவில் மேலும் தீவிரமாகி அதிகரிக்கின்றது.
செல்வத்தைச் சமூகம் கைப்பற்றாதவரை, செல்வம் தனிமனிதர்களை நோக்கி குவியும் போது, ஆணாதிக்கம் மேலும் விகாரமாகப் பெண்கள் மீது பாய்கின்றது. உலகமயமாதல் ஜனநாயகத்தில் 1970-களில், உலகில் செல்வந்தருக்கும், பரம ஏழைக்கும் இடையிலான வித்தியாசம் 30 பேருக்கு ஒன்று என்ற விகிதாசாரத்தில் இருந்தது. 1990-இல், 60 பேருக்கு ஒன்றாகவும், 2000-இல் 74 பேருக்கு ஒன்றாக அதிகரித்துள்ளது என்று பிரிட்டீஸ் பத்திரிக்கையான த கார்டியன் பத்திரிக்கைச் செய்தி வெளியிட்டுள்ளது. பெண்ணின் சொத்திழப்பு அதிகரிக்க, ஆணாதிக்கம் கோரமாவதை மூடி மறைக்க, பெண்ணை நிர்வாணப்படுத்தி அதை விடுதலையாகக் காட்டுவதன் ஊடாக, பெண்ணை விபச்சாரியாக்கும் தன்மையைத்தான் மார்க்சியமல்லாத பெண்ணியங்கள் விடுதலையாகக் காட்டி, தம்மை ஆணாதிக்கத்துக்கு நிர்வாணப்படுத்துகின்றனர். இதையே ஆணாதிக்க ஒழிப்பாகப் பிரகடனம் செய்யவும், எச்சில் ஒழுக விளக்கவும் செய்கின்றனர்.
உலகச் சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி இன்று வருடம் 76 இலட்சம் குழந்தைகள் பிறந்த முதல் மாதத்திற்குள் இறக்கின்றனர். இதில் 40 சதவீதம் உணவு இன்மையால் இறக்கின்றனர். அதாவது பிறக்கும் 1,000 குழந்தையில் 57 குழந்தைகள் இறக்கின்றன. பிறக்கும் போதும், பிறந்த பின்புமாக ஒரு கோடி குழந்தைகள் இறக்கின்றனர். 50 இலட்சம் குழந்தைகள் வயது குறைந்து வாழத் தொடங்குகின்றனர்43 15 இலட்சம் குழந்தைகள் தாய்ப்பால் இன்மையால் வருடா வருடம் இறக்கின்றனர்.44
உலகில் சரிபாதியான பெண்கள் நேரடியாக ஆண்களின் அடிமையாக விளங்கிய போதும் உண்மையில் சுரண்டும் அமைப்பின் அடிமைத்தனத்தின் விளைவாகவே இது உள்ளது. இன்று மறைமுக வரிகளைப் பொருட்களின் ஊடாக மூன்றாம் உலக அடிமைகள் செலுத்தும் அதே நேரம் இதன் நேரடி எதிரியாகக் காண்பது சொந்தநாட்டு முதலாளியே. ஆனால் உண்மையான விலையைத் தீர்மானிப்பவன் பின்னால் இருப்பது தெரியாதது போல், இன்று பெண்களின் பின்னும் ஆணாதிக்கம் உள்ளது. ஆண்களின் வடிவில் ஆணாதிக்கம் வெளிப்பட்டாலும் இதன் வேர் இந்தச் சுரண்டல் அமைப்பு என்பதை நாம் புர்pயாத வரை ஆணாதிக்கத்தை ஒழிக்க முடியாது. உலக மொத்த உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கைப் பெண்கள் உற்பத்தி செய்தபோது அவர்கள் உலகச் செல்வத்தில் பெறுவது பத்து சதவீதம் மட்டுமேயாகும்.45 உலகச் சொத்தில் பெண்கள் வைத்து இருப்பது ஒரு சதவீதம் மட்டுமேயாகும். (இதழ்-1998: 4.4)46 1993-இல், ஒரு நாளைக்கு ஒரு டொலர் வீதம் பெற்று வறுமையில் வாடியோர் 130 கோடியாக இருந்தது. 1998-இல் 150 கோடியாக அதிகரித்துள்ளது.47
இந்தப் பொருளாதார ஆணாதிக்க அமைப்பில் பெண் சொத்துரிமை பெறுவது எப்படி சாத்தியம்? ஏழைக்குப் பங்கிடவே மறுக்கும் ஆணாதிக்கம், இருப்பதைப் புடுங்கும் ஆணாதிக்கம், பெண்ணின் சொத்துரிமையைப் பறித்து பட்டினியில் தள்ளத்தான் செய்யும்;. எல்லாப் பூர்சுவா பெண்ணியல்வாதிகளும், அராஜகப் பெண்ணியல்வாதிகளும் நாய் வாலை நிமிர்த்த காட்டுக்கூச்சல் எழுப்பும் இன்றைய உலகில், புரட்சிகர வாய்வீச்சை மீறியது உலகமயமாதல். வர்க்கப் போராட்டத்தை அதன் உட்கூறில் இருந்தே அரித்து தின்னும் சொத்துரிமை ஆணாதிக்க ஜனநாயகம் பெண்ணின் தனிச் சொத்துரிமையை இந்த உலகமயமாதலில் எப்படி அனுமதிக்கும்?
பெண் பெற்று இருந்த சொத்துக்களையும் விழுங்கி ஏப்பமிட்டதற்கு அப்பால் உலகமயமாதல் எதையும் விட்டுச் சென்றதில்லை. உலகில் மூன்றில் இரண்டு பங்கை உற்பத்தி செய்யும் பெண், பாட்டாளியைப் போல் சொத்தற்ற வர்க்கமே. இதை மறுக்கும் பூர்சுவா பெண்ணியம் ஏகாதிபத்திய ஆணாதிக்க அமைப்பில் முன்னேறிவிட முடியும் என்று கனவு காண்கின்றனர். ஆனால் எதார்த்தம் சொத்துரிமையை ஒரு சதவீதத்தில் இருந்து அதைப் பூச்சியமாக்குவதில் உலக வர்த்தக நிறுவனம், உலக வங்கி தலைகால் புரியாது கொட்டமடிக்கின்றது. இந்தப் போக்கில் பெண்ணின் வறுமை அதிகரிக்கின்றது. வறுமையில் உள்ளோர்களில் 70 சதவீதத்துக்கு அதிகமான அதாவது, 91 கோடி பெண்கள் நாள் ஒன்றுக்கு ஒரு டொலர் வீதம் பெற்று வறுமையில் வாடியவர்கள், கடந்த ஐந்து வருட உலகமயமாதல் வேகத்தில் 105 கோடியாக அதிகரித்துள்ளனர்.
சொத்துரிமை ஆணாதிக்க ஆண்வழியில் குவிவதும், பெண்வழியில் ஏழையாவதும் நேர்எதிர் திசையில் செல்லுகின்றது. 1960-இல், இந்த அடிமட்டப் பிரிவைச் சேர்ந்த 20 சதவீத மக்கள் உலக வருமானத்தில் பெற்றது 2.3 சதவீதம் மட்டுமே. இது 1996-இல், 1.1 சதவீதமாகக் குறைந்து போனது. இந்த வகையில் பெண்ணின் சொத்துப் பறிப்பை வர்க்கப் போராட்டம் அற்ற எந்த வழியிலும் போராடிச் சொத்துரிமையை மீட்கமுடியாது. பாட்டாளிக்கும், பெண்ணுக்கும் உள்ள ஒரே பாதை வர்க்கப் போராட்டமேயாகும். இவை போன்ற உலகளாவிய ரீதியில் பெண்களுக்கு எதிரான புள்ளிவிபரங்கள் எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கக் கூடியவை. அதை கீழ்வரும் அட்டவணை: 9-இல் ஆராய்வோம்.
1.பாலியல் வன்முறை லட்சம் பேரில்
2.கற்பழிப்பு லட்சம் பேரில்
3.விவாகரத்து
4.விவாகரத்து ஒரு லட்சத்துக்கு
5.பிரசவத்தின் போது தாயின் இறப்பு, லட்சத்துக்கு
6.பெண்களின் கல்வி வீதத்தில்
7.பெண்ணுக்கான சராசரி பிறப்பு எண்ணிக்கை
8.திருமணம் செய்தோரில் கருத்தடை பாவிப்போர்.வீதத்தில்
9.பெண்ணின் சராசரி ஆயுள்
10.பெண்ணுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு
11.முதல் பெண் அங்கத்துவம்
12.1993 ,ல் பெண் அங்கத்துவம் வீதம்
நாடுகள் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
அப்கானிஸ்த்தான் - - - - 640 14 6,21 2 44,72 - - -
தென்னாபிரிக்கா - - - - 84 75 4,31 50 68,25 1950/84 1933 2,8
அல்பேனியா 7,9 3,5 2628 75,08 - 63 2,71 - 77,02 1945 1945 5,7
அல்ஜிரியா 12 0,9 - - 140 46 3,7 51 69,13 1962 1962 10
ஜேர்மனி 55 7,8 - - 5 - 1,5 75 79,92 1918 1919 20,5
அன்டோரா 32 4 - - - - 1,71 - 81,66 - - -
நோர்மன்டிதீவு - - - - - - - - - - - -
அங்கோலா 4,9 2,5 - - - 28 6,42 1 48,49 1975 1980 9,5
அங்குயிலா - - 6 66 - 95 3,05 - 76,91 - - -
அன்ரிக்குவா 84 39 22 36 - 88 1,68 - 75,57 1951 1980 0
அன்ரீல்-நெதர்லான்ட் - - 409 204,5 - 99 1,9 - 79,3 - - -
சவுதி அரேபியா 20 0,4 - - 41 48 6,48 - 70,3 இல்லைஇல்லைஇல்லை
ஆர்ஜென்ரீனா 0,1 0,1 - - 140 95 2,65 74 74,97 1947 1952 5
ஆர்மேனியா 0,9 0,9 - - - 98 3,06 - 75,95 - - -
அறுபா 18 7,7 196 272,22 - - 1,82 - 80,42 - - -
அஸ்ரல் தீவுகள் - - - - - - - - - - - -
அவுஸ்ரேலியா - - 42635 236,86 3 100 1,82 76 81,04 1901/67 1943 8,2
ஒஸ்ரியா 47 7,1 16282 201,01 8 - 1,48 71 80,27 1918 1919 21,3
அஜர்பெய்சான் 2,2 1,1 - - - 96 2,64 - 74,97 - - -
பகாமா - - 275 100,73 - 89 - - - 1962/64 1977 -
பாரெய்ன் 80 1,6 590 103,5 77 3,12 - 76,49 - - - -
பங்களாதேஷ் 0,7 0,5 - - 600 22 4,39 40 55,22 1947 1975 10,3
பாறியர் தீவுகள் 63 32 511 96,53 - 99 1,18 - 77,06 - - -
பெரியருசியா - - - - - 96 1,87 - 75,93 - - -
பெல்ஜியம் 34 7,8 18316 179,56 3 - 1,62 79 80,67 1919/48 1921 9,4
பெலிஸ் - - 95 45,23 - 91 4,25 - 70,36 1945 1984 -
பெனின் 1,1 0,6 - - 160 16 - - 54,2 1956 1979 6,3
பெமூட்டாஸ் 136 27 172 245,71 - 99 1,81 - 76,97 1951 1951 3,6
பூட்டான் - - - - 1310 - 5,39 2 50,48 1953 1975 0
B.I.O.T. - - - - - - - - - - - -
பர்மா - 1,8 - - 460 72 - 3,58 - - - -
பொலிவியா - - - - 600 72 4,1 30 66,43 1938/52 1966 -
பொஸ்னி - - - - - - 1,65 - 78,37 - - -
பொற்ஸ்வானா 80 69 - - 250 16 3,86 33 66,67 1965 1979 5
பிறேசில் - - 66070 41,86 200 80 2,39 66 67,32 1934 1934 6
புறாணை 8,1 5,8 190 65,51 - 82 3,41 - 72,91 - - -
பல்கேரியா 15 11 11341 133,42 9 97 1,71 76 77,1 1944 1945 12,9
பூர்கினாபாசோ - - - - 810 9 6,88 8 47,51 - - -
புறூண்டி - - - - - 40 6,63 9 41,95 - - -
கைகோஸ்தீவு 61 3,4 91 293,54 - 98 6,72 - - - - -
கம்போடியா - - - - 500 22 5,81 - 51 - - -
கமறூன் 1,7 0,5 - - 430 45 5,8 16 59,6 1946 1962 12,2
கனடா 148 132 80716 272,68 5 - 1,83 73 81,81 1917/18/50 1921 13,2
காப்வேர்ட்தீவு - - - - - 53 6,23 - 65,01 1975 1975 7,6
மத்திய ஆபிரிக்கா - - - - 600 25 5,37 - 43,67 - - -
சிலி 28 - 6048 42,29 35 94 2,49 43 78,01 1931/49 1951 5,8
சீனா - - - - 95 68 1,84 83 69,16 1949 1954 21
சைப்ரஸ் 2,7 1,5 300 39,63 - 91 2,3 - 78,85 1960 1963 5,4
கொலம்பியா 3,7 2,3 - - 200 88 2,4 66 75,38 1947 1948 4,3
கமறூஸ் - - - - - 40 6,73 - 6057 - - -
கொங்கோ - - - - 900 49 5,23 - 49 1963 1970 -
குக்தீவுகள் - - - - - - - - - - - -
வடகொரியா - - - - 41 99 2,34 - 73,29 1946 1948 20,1
தென்கொரியா 8,9 4,9 32474 72,97 26 94 1,66 79 74,29 1948 1948 1
கோஸ்ரோரிக்கா 4 2,7 3282 100,36 36 93 3,01 75 80,1 1949 1953 12,3
கோட்ஈவார் - - - - - 23 6,61 3 51,29 1952 1965 4,6
குறொற்ரியா - - - - - 95 1,62 - 77,65 - - -
கியூபா - - 43488 395,34 39 - 1,63 70 79,37 1934 1940 22,3
டென்மார்க் 54 11 15152 - 3 - 1,69 78 79,16 1915 1918 33,3
டிஜிபோர்டி 6,2 6 - - - 34 6,15 - 51,62 - - -
டொமினிக்கன் குடியரசு - - 7808 100,61 - 82 2,72 - 70,99 1981 1980 12,9
டொமினிக் 88 39 - - - 94 1,95 - 80,2 1942 1946 11,7
எகிப்து 0,4 0 68735 112,68 270 34 3,67 47 63,16 1956 - 2,2
ஜக்கிய அரபுகுடியரசு30 2,5 - - - 69 4,53 - 74,71 1918/28 1919 9,2
ஈக்குவடோர் 4,8 2,6 5663 47,19 170 84 2,97 53 72,99 1946 1957 5,2
எரித்திரியா - - - - - - 6,53 - 51,78 - - -
ஸ்பெயின் 14 4 23063 58,83 5 94 1,41 59 81,39 1931 1931 16
எஸ்தோனியா 6,9 4,8 - - - 100 1,98 - 75,39 - - -
அமெரிக்கா - 43 1187000 451,33 8 97 2,08 74 79,7 1920 1924 10,8
எதியோப்பியா - - - - 560 16 7,07 2 51,78 - - -
போக்லன்ட்தீவுகள் - - - 7 350 - - - - - - -
பெரோயிதீவுகள் - - - - - - - - - - - -
பிஜி 35 10 - - - 84 2,87 - 67,82 - - -
பின்லாந்து 19 7,3 14365 281,11 11 - 1,79 80 80,11 1906 1906 39
பிரான்சு 44 9,3 105813 182,12 9 - 1,8 80 82,44 1944 1945 6,1
காபோன் 0,8 0,1 - - 190 48 3,93 - 58,06 1956 1961 5,8
காம்பி - - - - - 16 6,23 - 52,82 1960 - 7,8
ஜோர்ஜியா - - - - - 98 2,16 - 76,95 - - -
கானா - - - - 1000 51 6,09 13 57,88 - - -
ஜிப்ரோல்ரர் - - 93 290,62 - 98 2,29 - 79,48 - - -
கிறீஸ் 11 2,6 8650 82,53 5 93 1,46 - 73,17 1952 1952 5,3
கிறனாட்தீவு - - - - - - 2,25 - 71,98 1951 1976 -
கிறீன்லாந்து - - 132 240 - - 3,85 - 80,59 - - -
குவாட்டலூப் - - 511 124,63 - 90 1,95 - 80,38 - - -
குயாம் - - 1279 913,57 - 99 2,32 - 76,13 - - -
குவாட்டாமாலா - - 1614 15,22 200 47 4,63 23 67,56 1945 1954 5,2
கினியா 0,7 0,3 - - 800 13 5,79 1 46,95 - - -
கினிபிசு 0,8 0,5 - - 700 24 5,43 1 49,57 1977 - 12,7
கினிஈக்குவற்றோறியல்- - - 48 5,23 - 54,79 - - - -
குயானா - - - - - 95 2,23 - 68,5 1953 1953 -
பிரஞ்குயானா - - 34 24,28 - 82 3,46 - 78,94 - - -
தாயிட்டி - - - - 600 32 5,82 10 46,59 1950 - 3,6
கொண்டூராஸ் - - 1520 27,14 220 71 4,55 47 70,55 1957 1967 11,7
கொங்கொங் 35 2 5551 92,51 6 64 1,39 81 83,79 - - -
கங்கேரி 18 4,2 24863 243,75 15 98 1,82 73 76,06 1945 1945 7,3
இந்தியா 1,2 1,2 - - 460 39 3,4 43 59,61 1950 1952 7,3
இந்தோனேசியா 1,2 - 131886 66,6 450 75 2,74 50 63,42 1945 1945 12,2
ஈராக் 2,4 - 1476 7,2 120 88 6,56 18 67,56 1980 1980 10,8
ஈரான் - - 33943 55,37 120 56 4,93 49 68,22 1963 1963 3,4
அயர்லாந்து 13 3,6 - - 2 - 1,95 - 79 1918 - 12,1
ஜஸ்லாந்து - - 580 223,07 - - 2,06 - 81,39 1915 - 21,8
இஸ்ரேல் 49 7,9 6000 109,09 3 93 2,81 - 80,33 1948 1948 9,2
இத்தாலி 1,4 - 27836 48,24 4 96 1,41 78 81,23 1945 1946 8,1
ஜமேக்கா 45 23 672 27,76 120 86 2,42 66 77,01 1944 - 11,7
யப்பான் 4 1,2 157608 125,88 11 - 1,56 64 82,42 1945/47 1947 2,3
ஜோர்தேனியா 26 0,9 - - 48 75 5,25 35 74,21 - - -
கஸாக்ஸ்தான் - - - - - 96 2,43 - 73,13 - - -
கென்யா 6,9 2,5 - - 170 62 5,76 33 54,16 1963 1969 3
கிர்ஷியா - - - - - 96 3,31 - 72,56 - - -
கிரிபாட்டி - - - - - - 3,37 - 55,78 - - -
குவைற் - - 2987 157,21 6 69 2,93 35 78,06 இல்லை இல்லை இல்லை
லாவோஸ் - - - - 300 35 5,98 - 53,81 1958 - 9,4
லிசோதியா 58 43 - - - 68 4,41 23 64,63 - - 17
லெதோனி - - - - - 99 1,97 - 74,95 - - -
லெபனான் - - - - - 73 3,31 55 72,28 1926 - 2,3
லைபீரியா - - - - - 29 6,3 6 60,75 1946 1964 6,1
லிபியா 16 - 2264 43,53 70 42 6,32 - 66,57 1969 - -
லிசென்ஸ்தியன் 11 7,1 29 96,66 - 100 1,47 - 81,17 - - -
லிதுவேனியா 6,1 5 - - - 98 2 - 76,3 1984 1986 4
லக்ஸம்பேர்க் 35 5,3 436 111,79 - 100 1,65 - 80,75 1919 1919 13,3
மக்காஓ 6,3 - 70 17,5 - 86 1,49 - 82,43 - - -
மசதோனி - - - - - - - - - - - -
மடகாஸ்கர் 1,1 0,7 - - 570 73 6,62 17 56,48 1959 1965 -
மலேசியா 7 3,7 - - 59 70 3,47 48 72,56 1957 1959 5
மாலாவி 21 1,2 - - 400 34 7,36 13 39,76 1964 1964 11,6
மாலைதீவு - - 4010 1542,3 - 92 6,17 - 67,07 1932 - 4,2
மாலி - - - - 2000 12 7,33 5 48,09 - - -
மோல்ற் 34 6,2 - - - 82 1,92 - 79,48 1947 1947 1,5
மான்தீவுகள் - - - - - - - - - - - -
மாறியன் - - 62 137,77 - 96 2,69 - 69,8 - - -
மொறோக்கோ 23 3,2 - - 330 38 3,69 42 70,02 1963 0 0,7
மார்ஷல்தீவுகள் - - - - - 88 6,89 - 65,11 - - --
மாற்றினிக் - - 264 67,69 - 93 1,81 - 51,54 - - -
மொறிஷியஸ் 14 4,4 692 62,9 99 75 6,92 75 74,95 1956 - 3
மொறிற்தானியா 1 1 - - - 25 2,02 4 51,54 - - -
மயோட்டி - - - - - - - - - - - -
மெக்ஸிக்கோ - - 54012 57,64 110 85 3,09 53 77,11 1947 1952 7,6
மெக்ரோனிசியா தீவுகள் - - - - 88 - - - - - - -
மோல்தாவியா - - - - - 94 2,16 - 71,8 - - -
மொனாக்கோ 20 3,3 - - - - 1,7 - 81,8 1962 1963 5,6
மங்கோலியா - 19 1000 42,01 200 - 4,26 - 68,92 1923/24 1924 3,9
மன்செராற் - - - - - 97 1,99 - 77,49 - - -
மொசாம்பிக் 5,2 - - - 300 21 6,19 4 50,9 1975 1977 15,7
நமீபியா - - - - 370 31 6,43 29 64,9 1989 1989 6,9
நாறூ - - - - - - 2,08 - 69,18 1968 1986 5,6
நேபாளம் 0,7 0,7 - - 830 13 5,15 23 53,34 1961 - 3,4
நிக்கராகுவா - - 866 19,68 - 57 4,17 49 57,3 1955 1958 16,3
நைகர் - - - - 700 5 7,35 4 46,67 1948 1989 6
நைஜீரியா - - - - 800 40 6,31 6 57,3 - - -
நியூதீவுகள் - - - - - - - - - - - -
நோர்வே 49 10 10170 234,87 3 - 1,76 76 81,15 1907/17 1911/21 5,8
நியூகலிடோனியா- - - - - 90 2,57 - 77,48 - - -
நியூசிலாந்து 132 30 9188 262,51 13 - 1,99 70 80,42 1893 1933 16,5
ஓமான் - - - - - - 6,16 9 72,29 - - -
உகன்டா 7 - - - 550 45 6,7 5 36,91 1962 1962 12,6
உஸ்பெக்கிஸ்தான் - - - - - 96 3,67 - 72,24 - - -
பாக்கிஸ்தான் - - - - 500 21 6,35 12 58,56 1937 1947 0,9
பலாஊ - - - - - 90 2,85 - 73,02 - - -
பலஸ்தீனம் - - - - - - 7,74 - 72,69 - - -
பனாமா - - 1872 71,72 60 88 2,8 58 77,97 1941/46 1946 7,5
பாப்புவா நியூகினி 81 70 - - 900 38 4,55 4 54,74 1975 1977 0
பரகுவா 3,2 - - - 300 88 4,22 48 75,18 1961 1963 2,5
நெதர்லாந்து 73 11 28300 182,58 10 - 1,56 76 81,17 1919 1918 23,3
பெரூ 42 - - - 300 74 3 59 68,38 1950 1956 6,3
பிலிப்பைன்ஸ் - - - - 100 93 3,81 40 68,25 1937 1941 10,6
பித்கைன் - - - - - - - - - - - -
போலந்து 8,3 5,2 35000 90,43 11 98 1,92 75 77,33 1918 1919 9,6
பொலினீசியா பிரான்ஸ்- - - - 98 3,3 - 73,29 - - - -
போட்டோறிக்கா - - 13695 370,13 - 88 1,98 - 79,66 - - -
போத்துக்கல் 2 1,5 10170 102,72 10 82 1,47 66 79,16 1931/76 1934 8,7
குவாட்டார் 67 3,4 358 89,5 - 72 4,63 - 75,5 - - -
றியூனியன் - - 753 114,09 - 80 - - - - - -
ரூமேனியா 6,6 4,7 32966 145,22 72 95 1,82 58 75,35 1929/46 1946 3,5
இங்கிலாந்து 173 18 165658 282,96 8 - 1,82 72 79,95 1899 - -
ரஷ்யா 11 9,2 - - - 97 1,82 - 74,35 1898 - -
றுவாண்டா 10 - - - 210 37 8,12 21 40,19 1961 1965 17,1
சென்ற்கெலன் - - - - - - - - - - - -
செனற்கிற்அன்ட்நெவிஸ்- - - - - - - - - 1951 1984 6,7
செயின்ட்லூசி- - 44 29,33 - 69 2,37 - 73,67 1951 1979 0
செயின்ட் மாற்றன் - - 22 88 - 95 1,52 - 85,29 1960 1974 11,7
செயின்ட்பியர்ஏமிக்குலன் - - - - - - - - - - -
செயின்ட் வின்சன் - - 19 17,43 - 96 2,08 - 74,21 1951 1979 9,5
சொலமன் தீவுகள் - - - - - - 1,43 - 78,81 1945 - -
சல்வடோர் - - 2239 40,7 - 70 3,69 53 7,23 1961 - 8,3
அமெரிக்கன் சாமோஆ- - - - - - - - - 1990 - 4,3
கீழைத்தேய சாமோஆ - - 49 23,52 - 97 4,04 - 70,88 - - -
சாதோமா பிரின்சிப் - - - - - 18 4,44 - 65,59 1975 1975 10,9
செனிகல் 8 5,1 - - 600 - 6,03 7 58,71 1945 1963 11,7
சேர்பி மொந்தேநிக்ரோ- - - - - - 1,89 - 77,05 1949 1943 3
சீசெல்ஸ் தீவுகள் 52 7,1 86 113,51 - 60 2,16 - 73,73 1948 1976 45,8
சீராலியோன் - - - - 450 11 5,9 - 49,69 - - -
சிங்கப்பூர் 32 2,8 4419 147,3 10 83 1,87 74 73,25 1948 1984 3,7
சிலோவாக்கியா12 - - - - - 1,98 74 77,57 - - -
சிலோவானி - 5 - - - - 1,64 - 78,76 - - -
சோமாலியா - - - - 1100 14 7,13 1 56 - - -
சூடான் - - - - 550 21 6 9 55,65 - - -
சிறிலங்கா 2,2 2,1 2732 15,01 80 84 2,08 62 74,82 1931 1931 4,9
சுவிஸ் 43 4,6 13183 188,32 5 - 1,6 71 81,88 1971 - -
சுவீடன் 81 19 19000 213,48 5 - 1,97 78 81,39 1918/21 1921 33,5
சுவிற்ஸலாந்து110 89 - - - 65 6,1 - 60,96 1996 1971 17,5
சூரினாம் - - 375 89,28 - 95 2,73 - 72,41 1953 - 5,9
சிரியா 7 0,8 8335 59,53 140 51 6,55 52 58,71 1949 1958 8,4
தாஷ்கிஸ்தான்- - - - - 97 4,55 - 72,1 - - -
தைவான் - - - - - 79 1,81 - 78,93 - - -
தான்சானியா - - - - 340 48 6,15 10 44,22 1959 - 11,2
தாட்ஷ் - - - - 960 18 5,33 1 42,38 - - -
செக் குடியரசு16 6,9 - - - 1,84 1 77,41 1920 1920 10
தாய்லாந்து 10 4,8 36602 61,2 50 91 2,04 66 72,08 1932 1949 4,2
தாகோ - - - - 420 31 6,83 12 59,6 1956 - 6,3
தொங்கோ - - 63 31,50 - 100 3,56 - 70,62 1960 - 3,3
ரினிடாட் 30 22 - - 110 96 2,01 53 72,6 1945 1971 13,5
ரியூனிசியா - - 12695 142,64 70 45 2,73 50 75,44 1959 1959 4,3
டாக்மென்ஸ்தான் - - - - - 97 3,72 - 69,02 - - -
தேர்க் ஏ கெய்க் 36 7,1 1085 8346,2 - 98 - - - - - -
துருக்கி 0,5 - 25376 41,19 150 68 3,12 63 73,96 1930/34 1935 1,8
துவாலு - - - - - - 3,11 - 64,34 - 1989 7,7
உக்ரெய்ன் 5,2 4,5 192800 368,64 - 97 1,81 - 74,87 - - -
உருகுவே - - 6376 201,13 36 96 2,41 - 77,83 1932 1942 6,1
வெனிதூ - - - - - 48 4,14 - 61,61 1980 1977 -
வத்திக்கான் - - - - - - - - - - - -
வெனிசுலா 44 18 21876 100,34 - 89 297 49 76,29 1947 1948 10
அமெரிக்ககன்னித்தீவுகள்- - - - - - - - - - - -
பிரித்தானியாகன்னித்தீவுகள் - - 332 844,4 - 98 - - - - - -
வியட்னாம் - - - - 120 83 3,21 53 67,91 1946 1946 18,5
வால்ஸ அன்ட் பூட்டுனா - - - - - - - - - - - -
ஜேமன் - - - - - 26 7,15 7 63,5 1967/70 1970 0,7
செயர் - - - - 800 61 6,7 1 49,46 1967 1970 -
சாம்பி 3,5 3 - - 150 65 6,62 15 43,03 1962 1964 6,7
சிம்பாப்வே39 26 - - - 72 4,93 43 43,01 1967 1924/80 12
- புள்ளிவிபரம் அற்றவை
உலகில் பல்வேறு நாடுகள் சார்ந்து பல்வேறு பெண்கள் பிரச்சினை சார்ந்த புள்ளி விபரம் அட்டவணை:9-இல் உள்ளது. இந்தப் புள்ளி விபரம் தொடர்பான விடயங்கள் கீழே தனித் தனியாக ஆராய உள்ளதால், பொதுவாக இது பற்றிய சிறு குறிப்புடன் கீழே விபரமாக ஆராய்வோம்.
பெண்கள் மீதான பாலியல் வன்முறை, கற்பழிப்பு புள்ளிவிபரங்கள் எமக்கு மனித வாழ்வியல் பற்றி புரிய வைக்கின்றது. மேலும் பாலியல் வன்முறை நாகரிகத்துடன் அதிகரிப்பதையும் காட்டுகின்றது. ஏகாதிபத்திய ஜனநாயகம் எந்தளவுக்கு ஒரு நாட்டில் காணப்படுகின்றதோ அந்தளவுக்குப் பாலியல் வன்முறையும் அதிகரிக்கின்றது. இது பாலியல் அல்லாத துறையிலும் அதிகளவில் களவு, வன்முறை என்று பல்கிப் பெருகி வருகின்றது. மேற்கில் இவை வேகமாக அனைத்தையும் சிதைத்துச் செல்கின்றது.
மூன்றாம் உலக நாடுகளில் இயல்பாக உள்ள ஆணாதிக்க வடிவம், ஜனநாயகமற்ற நீதிமன்றங்கள் காரணமாகப் பெண்கள் மீதான குற்றங்கள் கணிசமாக வெளிவருவதில்லை என்பது ஒருபக்க உண்மை. இது மேற்கிலும் அங்கிருப்பது போல் அல்லாது காணப்படுகின்றது. இருந்த போதும் மேற்கில் பாலியல் மற்றும் குற்றங்கள் மூன்றாம் உலகத்தை விட பல மடங்கு அதிகமாகும். மூன்றாம் உலகில் சமூகத்தன்மை வாய்ந்த மனித உறவுகள் இதற்கு எதிரானதாக இருக்கின்றது. மேற்கில் இது தனிமனிதத் தனிச்சொத்துரிமை ஜனநாயக வாதத்தால் சிதைகின்ற போது சமூக அவலங்கள் வன்முறையின் வடிகாலாகின்றது. இதில் இருந்தே அராஜகவாதக் கோட்பாடுகள் உதித்தெழுகின்றன. மாற்றம் என்பதை விட மறுப்பு பிரதானமாகின்றது. இது பாலியலில் மாற்றம் என்பதைவிட பாலியலில் மறுப்பு வன்முறையாகின்றது. இது பெண்ணைப் பாலியல் நுகர்வாகக் காண்பதும், அனுபவிக்க துடித்தெழுவதும் தீர்வாகின்றது.
இந்தச் சமூகத்தின் அவலம் என்பது கட்டற்ற தனிமனிதச் சுதந்திரம் சமூகச் சுதந்திரத்தை மறுப்பதில் தோற்றம் கொள்கின்றது. சமூகச் சுதந்திரத்துக்கு எதிரான தனிமனிதச் சுதந்திரம் ஆணாதிக்க வன்முறையைக் கட்டுக்கடங்காத எல்லைக்கு நகர்த்துகின்றது. இந்தச் சமூகத்தில் தனிமனிதனின் தனிப்பட்ட விவகாரங்கள் சமூகக் கண்ணோட்டத்துக்கு எதிராக வளர்ச்சி பெறுகின்றது. உலகமயமாதல் அனைத்தையும் மறுப்பதன் ஊடாக தன்னைப் புனரமைத்து வருகின்ற வரலாற்றுப் போக்கில் தனிமனிதர்கள் அதன் வடிவமாகின்றனர். இது குடும்பத்தில் சேர்ந்து வாழ்வதா? அல்லது பிரிந்து வாழ்வதா? என்ற விவாகரத்துரிமையை எப்போதும் கூட்டு மனிதச் செயலுக்கு எதிராகக் கையாள்வதில் உலகமயமாதல் தன்னை அதற்கு இசைவாகப் பயன்படுத்தப்படுகின்றது.
இயற்கையைச் சிதைத்து முன்னேறும் பணம் படைத்தோர் கூட்டம் அனைத்தையும் சிதைப்பது போல் குடும்பத்தையும் சிதைக்கின்றனர். இந்தச் சிதைவு ஆணாதிக்கத்துக்கு எதிராக அல்லாமல் உலகமயமாதலில் மனிதனின் அனைத்தையும் மறுதலித்தக் கோட்பாட்டில் சிதைக்கப்படுகின்றது. குடும்பச் சிதைவு என்பது ஆண் பெண் இருபாலரினதும் பாலியல் உணர்வை முடமாக்கியுள்ளது. இந்த முடமாக்கல் ஊடாகக் கட்டியமைக்கப்படும் வக்கிரமான பாலியல் மனிதனின் இயல்பான உணர்வைப் போதைக்குள்ளாக்குகின்றது. இது பாலியல் வன்முறையைக் கோருகின்றது. ஆண் பெண்ணினது இணைந்த வாழ்க்கை எந்தளவுக்குச் சிதைகின்றதோ அந்தளவுக்கு மனிதனின் தேவை மறுதலிக்கப்படுகின்றது. இது பாலியலில் இருந்து அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தும். தேவை என்பதை மறுக்கும் இந்த உலகமயமாதல் ஆண் பெண்ணின் தேவையைப் பாலியல் வக்கிரத்தில் இட்டு நிரப்புகின்றது. இது பாலியல் வன்முறையையும், விவாகரத்தையும் தீர்வாக முன்வைக்கின்றது.
உலகில் உலகமயமாதல் வேகம் பெற்று செல்லும் இன்றைய நிலையில் ஒரு பெண்ணின் குழந்தைப் பிரசவிப்பு என்பது மரணத் தண்டனையாகவே உள்ளது. உலகை எப்படிக் கட்டுப்படுத்துவது? எப்படி இருந்த இடத்தில் இருந்தபடி உலகின் மூலைமுடுக்கெல்லாம் குண்டு வீசுவது என்று நவீன உபகரணங்கள், ஒவ்வொரு அடி நிலத்தையும் கண்காணிக்க, நவீன கண்டுபிடிப்புகள் மனிதனைக் கண்காணிக்கின்றது. ஆனால் மனிதனின் துயரத்தை மட்டும் இவை கண்டுகொள்வதில்லை. மாறாக அதை மேலும் அதாவது துயரத்தை அதிகரிக்கவே வைக்கின்றனர். இயற்கையுடன் வாழ்ந்த பெண்ணின் பிரசவிப்பில் இவ்வளவு மரணங்கள் நேர்ந்ததில்லை. அந்தளவுக்கு இயற்கையின் பாதுகாப்பை மனிதன் அனுசரித்து வாழ்ந்தான். செயற்கையாக வாழத் தொடங்கிய மனிதன் இயற்கையை அழித்ததுடன் ஒருபகுதி மக்களுடைய வாழ்வின் ஆதாரத்தை அழித்ததன் மூலம் பெண்ணின்; பிரசவம் மரணத்தைத் தீர்வாக்குகின்றது.
மேற்கிற்கும், மூன்றாம் உலகுக்கும் இடையில் ஒரு இலட்சம் பெண்களின் பிரசவத்தின் போதான இறப்பு 1,000 மடங்கு வேறுபடுகின்றது. உலகமயமாதல் சந்தையில் உலகளாவிய ரீதியில் ஒரே விலையையும், பண்பாட்டையும் என நுகர்வுச் சந்தைக்கு ஏற்ப சூறையாடும் சுரண்டல் வர்க்கம் கொழுக்க சமுதாயம் சிதைக்கப்படுகின்றது. ஆனால் ஒரு பெண்ணின் பிரசவம் சில மூன்றாம் உலக நாடுகளில் 50 பேருக்கு ஒரு பெண்ணின் இறப்பைப் பிரகடனம் செய்து நிச்சயப்படுத்துகின்றது. இதைத் தடுக்க ஏன் முடியவில்லை? ஒருபுறம் இவர்கள் பெண்கள் என்பதும், கறுப்பு நிறத்தவர் என்பதும் மறுபுறம் அடிமட்ட உழைக்கும் வர்க்கப் பெண்கள் என்பதாலும் இந்த ஜனநாயகம் கண்டுகொள்வதில்லை. நடைமுறையில் இருக்கும் ஜனநாயகம் இந்த மக்களைக் கட்டுப்படுத்த நவீன அடக்குமுறை ஊடகங்களை விரிவாக்கவே அனுமதிக்கின்றது.
மேற்கில் பெண் பிறந்து வாழவும், மூன்றாம் உலகில் பெண் பிறந்து மரணமடையவும் கடவுளின் புண்ணியப் பாவமா காரணம்? இப்படியும் கடவுள்கள் நாட்டுக்கு நாடு புண்ணியப் பாவங்களைப் பிரிக்கின்றாரோ? அல்லது அந்த நாட்டுக் கடவுள்கள் அதிகாரம் படைத்தவர்களோ? எல்லாச் சுரண்டும் வர்க்கமும் தனது நலன் சார்ந்து மட்டுமே பெண்களின் இறப்பைக் குறைப்பதையும், (பிறப்பையும்) கொல்வதையும் தீர்மானிக்கின்றது. இங்கு பெண்களின் உயிரைப் பாதுகாக்கக் கூட முடிவதில்லை. ஆனால் அராஜகத் தீவிரப் பெண்ணியல்வாதிகள் என்போர் பெண்ணின் உடல் கட்டுப்பாட்டைப் பூர்சுவா கண்ணோட்டத்தில் கோரும் போது உயிரைப் பாதுகாக்கும் உரிமைக்கு எதிராக, ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடக் கோருவதில்லை. உடல் கட்டுப்பாட்டை ஆணுக்கு எதிராக நிறுத்துவதன் மூலம் ஏகாதிபத்திய அமைப்பைக் குலைவின்றி பாதுகாக்கமுடியும் என்பதால் அதை உயர்த்துகின்றனர்.
1988-இல், அமெரிக்காவில் மகப்பேறு மருத்துவர் 1,00,000 பேருக்கு 61.4 பேர் நகர்ப்புறத்தில் இருந்தனர். இது கிராமப் புறத்திற்கு 24.5 ஆக இருந்தது. இந்த வகையில் கிராமப்புறப் பெண்கள் மிக மோசமாக ஒடுக்கப்பட்ட அதே நேரம், நகர்ப்புறப் பெண்கள் போதிய மருந்தின்றி அவதிப்பட்டனர். அமெரிக்காவில் உள்ள முதியோரில் 58 சதவீதம் பெண்களாவர். 65 வயதிற்கு மேற்பட்ட முதியோரில் 71 சதவீதப் பெண்கள் ஏழைகளாவர். வீடின்றி அவதிப்படும் மக்கள் 30 முதல் 40 இலட்சமாக உள்ள அதே நேரம் அதில் பெரும்பாலானோர் பெண்களாவர். வீடு வசதியற்ற பெண்கள் 30 வீதமானோருக்கு மகப்பேறு காலக் கவனிப்பு ஏதுமின்றி உள்ளனர். 1000 குழந்தைகளுக்கு 17 குழந்தை இறப்பு உள்ள அமெரிக்காவில் வீடற்ற குழந்தைகளின் இறப்பு 25 ஆக உள்ளது. 1987-இல், அமெரிக்காவில் குழந்தை இறப்பு 1000 குழந்தைகளுக்கு 17 என்ற நிலையில், வெள்ளைக் குழந்தை இறப்பு 8.6 ஆகவும், கறுப்புக் குழந்தை இறப்பு 17.9 ஆகவும் காணப்பட்டது. இதைவிட அமெரிக்காவில் எந்த நேரமும் 1 இலட்சம் குழந்தைகள் வீதியில் வசித்த வண்ணம் உள்ளனர்.48
யுனிசேவ் அறிக்கையின் படி ஒவ்வொரு நாளும் 1,600 பெண்கள் குழந்தையைப் பெறும் போது இறக்கின்றனர். இது வருடம் 10 இலட்சம் பேராக உள்ளது. ஆப்பிரிக்காவில் பதின்மூன்று பெண்ணுக்கு ஒருவர் இறக்க இது கனடாவில் 7,300 பேருக்கு ஒன்றாக உள்ளது. அதாவது உலகில் பிரசவத்தின் போது மரணமடையும் பெண்களில் 98 சதவீத மரணம் வளரும் நாடுகளில் நிகழ்கின்றது.43
இன்று உலகில் 10 இலட்சம் பெண்கள் பிரசவத்தின் போது இறக்கின்றனர். இதனால் குழந்தைகள் அநாதைகள் ஆகின்றனர். 1,40,000 பெண்கள் இரத்தப் பெருக்கால் இறக்கின்றனர். 40,000 பெண்கள் குழந்தை பிறக்கும் போது இறக்கின்றனர். கருச் சிதைவால் 75,000 பெண்கள் இறக்கின்றனர். (இலக்கம்-20)49 இன்று குழந்தை பிறக்கும் போது 10 இலட்சம் பெண்கள் இந்த ஏகாதிபத்திய அமைப்பால் வருடாவருடம் கொல்லப்படுகின்றனர். உலக வங்கியின் ஆய்வு ஒன்றின் படி பெண்ணுக்கு ஒருவருடம் தாய் சேய் கல்வி புகட்டுவதன் மூலம் குழந்தைகளின் மரண விகிதத்தை ~~1,000 பேருக்கு எட்டாகக்||50 குறைக்க முடியும் என்பதை நிறுவியுள்ளது. சுரண்டும் வர்க்கத்தின் சூறையாடும் நலனால் சுற்றுச் சூழல் மாசுபட்டு வருடம் 22 இலட்சம் பெண்கள் கொல்லப்படுகின்றனர். இப்படி பல புள்ளிவிபரங்கள் உள்ளது.
கம்யூனிச நாடுகளில் மக்கள் (குலாக்குகள்) பெரு விவசாயிகள் கொல்லப்பட்டனர் என சி.ஐ.ஏ. (CIA) அறிக்கைகளை முன் வைத்து வாதிட முற்படும் இன்றைய பாட்டாளிவர்க்க எதிர்க் கோட்பாட்டாளர்கள் இவைகளை ஏன் கண்டு கொள்வதில்லை? இதற்கு எதிராகப் போராட ஏன் அழைப்பதில்லை? மாறாக உடல் கட்டுப்பாட்டைப் பற்றியும், தனிமனிதச் சுதந்திரம் பற்றியும் ஊளையிடுகின்றனர். மேற்குறிப்பிட்ட இரண்டு விடயத்தில் கொல்லப்படும் 28 இலட்சம் பெண்களின் நிலைபற்றி எதிர்க் கோட்பாட்டாளர்கள் கவலைப்படுவதில்லை. 40 கோடி பெண்கள் மூடிய சிறிய இறுக்கமான அடைந்து போன குசினி (குடிசை) அமைப்பில் விறகு புகையால் நோய்க்குள்ளாகி நசிந்து கிடப்பதையிட்டு எந்த மனித உரிமை அமைப்பும் அலட்டிக் கொள்வதில்லை. எந்தப் பெண்ணியமும் கண்டுகொள்வதில்லை.
இதைப் பாட்டாளிவர்க்கம் மட்டுமே கவனத்தில் எடுக்கின்றது. இதைத் தடுக்க சுரண்டும் வர்க்கத்தை எதிர்த்து வன்முறையைக் கோருகின்றது. இது புரட்சிக்கு முந்தியப் பிந்திய சமூகத்தில் நடைமுறைப்படுத்தும் போது இதையே மனித உரிமை மீறலாகக் காட்டி ஒப்பாரி வைக்கின்றனர். இந்தமாதிரி பெண்களின் கொலைகள் தடுக்கப் போராடும் போது, இதைக்கோரும் வர்க்கம் மீது வன்முறை நிபந்தனையானது. உடல் கட்டுப்பாடு என்பது பூர்சுவா அற்பத்தனங்களே. அப்படி உள்ளதாகக் கருதும் எந்தப் பெண்ணிலைவாதியும் சரி, மனிதனும் சரி சமூக இயக்கத்தில் இருந்து அன்னியப்பட்ட பூர்சுவா கனவுகளில் திளைப்பவர்களே. இது இலக்கியத்தில் கலை கலைக்காக என்று வாதாடியது போல் பெண் உடல் பற்றிய பிரமைகளை விதைக்கின்றனர். ஆனால் பெண்ணின் உடல் இந்த ஆணாதிக்கச் சமூகப் பண்பாட்டு, கலாச்சாரத்துக்கு வெளியில் சுதந்திரமாக இருப்பதில்லை. அதுபோல் பெண்ணின் அகாலக் (திடிர்) கொலைகள் இதன் ஊற்று மூலமாக உள்ளது.
இன்று இந்த ஏகாதிபத்தியப் பொருளாதாரத்தைத் தகர்த்ததால்தான் இந்தப் பெண்களின் இயற்கை கொலைகளை நிறுத்தமுடியும். அதுவரை இது சூறையாடும் சுரண்டும் வர்க்கத்துக்குரிய நிலையில் இருந்து அணுகி மகாநாடுகளை நடத்தும்;. வர்க்கப் போராட்டம் தீவிரமடைய சலுகை, சீர்திருத்தத்தை முன்வைக்கும். வர்க்கப் போராட்டத்தைத் தடுக்க தன்னார்வக் குழுக்களைக் களத்தில் இறக்கி, சில சீர்திருத்தத்தைத் தனது விலங்கின் எல்லையில் பாதுகாக்கும். இதை இனம் காண்பதும், எதிர்த்து வர்க்க அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் இன்று ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டமாகும்.
உலகில் இன்று, மூன்றில் ஒரு பெண் மட்டுமே கல்வியறிவு பெற்றவராக உள்ளனர். இது ஆசியா, ஆப்பிரிக்காவில் பத்தில் ஒரு பெண் மட்டுமே கல்வியறிவு பெற்றவளாக உள்ளாள்;. (இதழ்-1998.4.4)46 இன்று உலகில் பெண்ணின் கல்வி என்பது பெண்ணின் கடமையுடன் தொடர்புடையதாக உள்ளது. ஆணுக்கான கல்வி ஏகாதிபத்தியச் சூறையாடலை ஒழுங்கமைப்பதற்குப் பயன்படுவது போல் பெண்ணின் கல்வி ஆணாதிக்கக் கடமைகளைச் செய்வதில் எல்லைப்படுத்தப்படுகின்றது. ஏகாதிபத்திய உலகமயமாதல் தனது சூறையாடும் தொழில் நுட்பத்தை ஒட்டி ஆணின் கல்வி எது? என்பதைத் தீர்மானிக்கின்றது. இது போல் பெண்ணை எந்தளவுக்குக் கல்வியில் ஈடுபடுத்துவது என்பதையும் எல்லைப்படுத்துகின்றது. பெண்களின் கல்வி தொடர்பாகக் கடந்து வந்த சமூகம் மத ஆதிக்கக் கருத்துகளை ஒட்டி அது விதிந்துரைத்த பெண்ணின் கடமைக்குள் பெண்ணின் கல்வியை எல்லைப்படுத்தியது.
ஏகாதிபத்தியமும், மதச் சிந்தனையும் தன்னை ஒருமுகப்படுத்திய இன்றைய வரலாற்றில் பெண்ணின் கல்வியை எல்லைப்படுத்தி விளக்கம் கொடுக்கின்றது. ஏகாதிபத்திய உற்பத்திச் சந்தைக்குப் பெண்ணின் கல்வி தேவைப்பட்ட போது எல்லாம் பெண்ணின் கல்வி மறுசீரமைப்பதும், பின் மீண்டும் வேதாளம் மரமேறிய கதையாகவும் மாறுகின்றது.
முதலாளித்துவப் புரட்சி அந்த நாடுகளின் விரிவான உழைப்பைக் கோரியது. இது பெண்ணைக் கட்டாயமாக உழைப்பில் இறக்கியது. ஆனால் கல்வியை மறுத்தது. நவீனக் கண்டுபிடிப்புகள் பெண்ணின் கல்வியை நிபந்தனையாக்கியது. ஏனெனின் பெண்ணின் உழைப்பு நவீன உபகரணத்தைக் கையாள்வதில் நிபந்தனையாக்கியது.
பெண்ணின் மலிவு கூலியைச் சுரண்ட பெண் நவீன உபகரணத்தைப் புரிந்து கொள்ள நிபந்தனையாக்கியது. பெண்ணின் கல்வியைக் கோரிய பூர்சுவா ஜனநாயகக் கோரிக்கைகள் எல்லாம் நவீனக் கண்டுபிடிப்புக்குச் சமாந்தரமாக வந்த போது பூர்த்தியாகி விடுகின்றது. இது அந்த வர்க்கத்தின் கோரிக்கைக்கும், ஏகாதிபத்தியச் சுரண்டலுக்குமிடையிலான மையப்புள்ளியாக உள்ளது. இது பெண் கல்வி வெற்றியல்ல. மாறாக ஆணாதிக்க சுரண்டல் கல்வியின் வெற்றியாகும். இங்கு பெண் ஆணாதிக்க ஆண் கல்வியை ஆணுக்கு நிகராகப் பெற்றுவிடுகின்றாள் அவ்வளவே. என்ன கல்வி? யாருக்காக இக்கல்வி போன்றவற்றை உள்ளடக்கப்படாத பெண்ணின் கோரிக்கைகள் ஆணாதிக்கக் கல்வியைக் கோருவதாகவே எஞ்சியது. இது ஒரு ஜனநாயகக் கோரிக்கையாக இருந்ததற்கு அப்பால் பெண்ணையும் கல்வியில் ஆணாதிக்க மயப்படுத்தியதே இதன் விளைவாகும்.
இந்த நிலையில் மூன்றாம் உலகில் பெண்களின் கல்வியைப் பெரும்பான்மையாக ஏகாதிபத்தியம் மறுக்கின்றது. இதற்குப் பெண்ணின் மீதான கடமைகளை மதம் சார்ந்து நிலைநிறுத்துகின்றது. அத்துடன் வறுமை இதைத் தீவிரமாக்குகின்றது. ஆணின் உழைப்பு சார்ந்து வாழ்ந்த பெண் தனது வீட்டுக் கடமைகளுடன் நிறைவான சுயப் பொருளாதார வாழ்க்கையை ஒழுங்கமைத்து இருந்த சமூகம் தகர்ந்து முதலாளித்துவச் சொத்துரிமை மயப்பட்டதைத் தொடர்ந்து அடிமட்ட ஆண்களின் சொத்துரிமை, கூலி படிப்படியாக வேகமாகக் குறையத் தொடங்கியது. இதனால் குடும்பத்தில் ஆணின் உழைப்பு போதாமையால் பெண்ணின் உழைப்பு நிபந்தனையானது.
அவளை வீட்டுக்கு வெளியில் கொண்டுவந்தது இந்த முதலாளித்துவச் சுரண்டல் அமைப்பேயாகும்;. அதற்கு முன் வீட்டிலும், விவசாயத்திலும் அதிகமாகச் சுயப்பொருளாதாரப் போக்கில் வாழ்ந்த பெண் கூலி ஆக்கப்பட்டாள்;. பெண்ணின் கல்வியைப் பின் நவீனத் தொழில்நுட்பம் தீவிரமாக்கியது. சந்தைக்குரிய நுகர்வுப் பொருட்களை உற்பத்தி செய்ய உலகில் எத்தனை பேர்@ என்ன நிலையில் தேவை? என்பதைப் பொறுத்து உலகமயமாதல் பெண்ணின் கல்வியைத் தீர்மானம் செய்கின்றது. பெண்ணின் ஆணாதிக்கக் கல்வி இதன் எல்லைக்குள் ஊசலாடுகின்றது. அத்துடன் பாடசாலைகளைத் தனியார்மயமாக்கக் கோரும் உலக வங்கியின் நிபந்தனைகள் கல்வியை மேலும் நெருக்கடியின் எல்லைக்கு நகர்த்துகின்றது. இது தற்போது கிடைக்கும் ஆணாதிக்கத் தன்மையுடைய கல்வியைப் பெண்களுக்கு மறுக்கும்;. இதைத் தகர்க்க ஏகாதிபத்திய உலகமயமாதல் தரும் ஆணாதிக்கக் கல்வியை மறுத்தும், அதன் இசைவாக்க அனைத்து முறைகளையும் மறுத்து, மக்கள் கல்விக் கூடங்களைத் தமது சொந்த நலனுக்குப் பயன்படுத்தாத வரை கல்வியைப் பெண்ணுக்கு மறுப்பதைத் தீவிரமாக்கும். தேவைப்படும் போது இலவசக் கல்வி மூலம் ஆண் பெண்ணை உருவாக்குவதும், தேவையில்லாத போது தனியார் கல்வி மூலம் கட்டுப்படுத்தவும் என ஏகாதிபத்தியம் தனது சொந்த நரிப் புத்தியூடாக மக்களை அறிவற்ற சூனியங்கள் ஆக்குவர்.
பெண்ணின் பிள்ளைப் பேறு கடவுளின் ஆசியால் கிடைப்பது என்ற நம்பிக்கைகள் தகர்ந்து போயினும், இன்றைய வரலாற்றில் பெண்ணின் நிலை இதில் இருந்து மாறி விடவில்லை. முன்பு ஆண் இன்றி பெண் குழந்தையைப் பெறமுடியாது என்ற நம்பிக்கையால் ஆணின் பங்கு அவசியமாகியது. தற்போது அனுபவத்தாலும், நவீனக் கண்டுபிடிப்புகளாலும் இந்தக் கண்டுபிடிப்பு பெண்ணின் ஒழுக்கத்தைக் கண்டறியும் ஊடகமாக மாறியது. பின்னால் இந்தக் கண்டுபிடிப்பே பெண்ணின் கர்ப்பத்தைத் தடுக்க முடியும் என்ற அறிவியலுக்கு மேலும் வலுச்சேர்த்தது. ஆணும் பெண்ணும் சேர்ந்து சமூக இயக்கமாக வாழமுடியாத ஆணாதிக்கப் போக்கில் கருத்தடை பெண்ணுக்குச் சற்று ஆறுதல்களை வழங்குவதாக இருந்தது. அது போல் ஒழுக்கத்தைச் சோதிக்கும் ஆணாதிக்க வடிவத்தைக் கேள்விக்குள்ளாக்கியது.
பெண்ணின் இந்த ஆறுதல்கள் ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்ணின் பூர்சுவா இருத்தலுக்கு ஆறுதல் வழங்கிய போதும் இது தீர்வை வழங்கிவிடவில்லை. பெண் புதிய நெருக்கடிகளை இதனால் எதிர் கொள்வது எதார்த்தமாகியது. சமூகத்தின் குடும்பக் கட்டுப்பாடு என்பது பூர்சுவா தனத்திலும், நாட்டின் பல்வேறு நெருக்கடிக்குள்ளும் தீர்மானமாகியது. குடும்ப எல்லைக்குள் குழந்தை வளர்ப்பு, தனிமனிதப் பூர்சுவா சுதந்திரக் கற்பனைகள், குழந்தை பற்றிய எதிர்மனப்பான்மை ஆகியவை குடும்பக் கட்டுப்பாட்டைத் தீவிரமாக்கியது. மேற்கில் ஒரு குழந்தைக்குப் பதில் ஒரு நாய் அல்லது பூனை அந்த இடத்தை நிரப்பிக் கொண்டது. இந்தக் குடும்பக் கட்டுப்பாட்டில் சமூக அக்கறையைவிட இந்தப் பூர்சுவா அமைப்புக்குள் போலித்தனமான சுதந்திரத்தையும், நுகர்வையும் கோரும் பாதையில் வளர்ச்சி பெறுகின்றது. மறுபுறம் வெள்ளை இன நாடுகளில் குழந்தை பிறப்புக்கு ஊக்குவிப்பும், கறுப்பு இன நாடுகளில் குடும்பக் கட்டுப்பாடும் தீவிரமாக வெள்ளை இனவெறி கொண்ட ஏகாதித்தியங்கள் அமுல்படுத்தி வருகின்றன. உலக மக்கள் தொகையில் வெள்ளை இனம் மேலும் மேலும் சிறுபான்மையாகிச் செல்வதால் பீதியடைவது அதிகரிக்கின்றது.
மறுபுறம் வறுமையும், பூர்சுவா கண்ணோட்டமும் அற்ற மக்கள் அதிக குழந்தைகளைப் பெறுவதைப் புள்ளிவிபரம் காட்டுகின்றது. இதற்கு ஆணாதிக்கக் கல்வி அவர்களிடம் செல்லாததும் ஒரு காரணம்;. இந்தப் பெண்கள் நாகரிகமடைந்த ஆணாதிக்கக் கொடூரத்தைவிட குறைவான ஒடுக்குமுறையைச் சந்திப்பதும், கடின உழைப்பாளிகளாகவும் இருக்கின்றனர். கடின உழைப்பு வறுமைக்கு மேலும் அக்கம் பக்கம் சேருகின்றது.
குழந்தை இந்த மக்களின் வாழ்வாதாரத்தைக் கொடுக்கும் ஒரே செல்வமாக இருக்கின்றது. அத்துடன் இதுவே அவர்களின் வாழ்க்கையின் பெரும் பாகத்தை எடுத்தும் விடுகின்றது. பிள்ளைகளின் வறுமை, அன்றாடத் தேவை என பெண் அவைகளையிட்டே போராடுவதும், வாழ்க்கையின் துயரத்தால் துன்புறுவதும் மிகக் கடினமான வாழ்வை வாழக் கோருகின்றது. பெண்ணின் அன்றாடப் பொழுதுபோக்கு என்பது சுமையாக மாறும் அளவுக்கு வறுமை உள்ளது. குழந்தைகள் இந்த வறுமையில் தத்தளிக்கின்ற போது. பெண் கண்ணீரில் புலம்புவது சகிக்கமுடியாத வேதனையாகின்றது.
கடினமான ஆணின் உழைப்பும், வீட்டில் எதிர்மனப்பான்மையும், பெண்ணின் இயலாமையிலான குடும்பச் சுமையும் பெண்ணினதும், ஆணினதும் வாழ்க்கையைச் சகிக்க முடியாத நெருக்கடியில் சிக்க வைத்து விடுகின்றது. குழந்தைகள் தம்மை வயதுவந்த பின் பராமரிப்பர் என்ற எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் அதிகமான குழந்தைகளைப் பெறக் கோருகின்றது.
ஆனால் இது எதிர்காலம் மீதான நம்பிக்கைகளின் மேல் நிகழ்கால வாழ்க்கையைத் தியாகம் செய்ய குழந்தைகளைப் பெறுவது அவசியமாகின்றது.
இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? சுரண்டும் வர்க்கம் வறுமையை நிபந்தனையாக்குகின்றது. வறுமை செல்வத்துக்கு எதிரான நிபந்தனையாகும். வறுமையுள்ள வரையில் குழந்தை பிறப்பில் ஏற்றத்தாழ்வு நிபந்தனையானது. ஏழை முதியோருக்கான எந்தவிதமான கொடுப்பனவும் அற்ற சமூகத்தில் அதிக குழந்தைகள் முதியோரைப் பராமரிக்கின்றனர். வறுமை ஏகாதிபத்திய ஆணாதிக்கக் கல்வியைப் பெறுவதற்குத் தடையாகின்றது. கர்ப்பத்தடை முறையைத் தெரிந்து கொள்ள அறிவற்ற தன்மையும், சமூக வாழ்வின் மீதான நீதியற்ற தன்மையும் அதிகமான குழந்தைகளைப் பெறுவதை நிபந்தனையாக்குகின்றது.
காட் ஒப்பந்தம் கல்வி மற்றும் மருத்துவத்தைத் தனியார்மயமாக்க கோரும் நிபந்தனைகள் பெண்களின் கல்வி, கர்ப்பத்தடை போன்றவற்றை மறுக்கவும், மகப்பேறு இறப்பை அதிகமாக்கவும் எதிர்கால உலகமயமாதல் வழிகாட்டும். மொத்த மக்களையும் குறிப்பாக ஏழைகளையும், குறிப்பாகப் பெண்களையும் குழந்தைகளையும் மிக மோசமாகச் சிதைக்க அறைகூவுகின்றது காட் ஒப்பந்தம். இதற்கு எதிராகப் போராடாத பெண்கள் அமைப்பு பெண்களுக்கு எதிரான ஆணாதிக்கக் கோட்பாடுகளால் உருவாக்கப்பட்டவைதான். காட் ஒப்பந்தத்திற்கு எதிரான போராட்டம் என்பது சீர்திருத்தத்தை முன்வைப்பதில்லை. மாறாகப் பொருளாதாரத்தை மக்கள் நலன் சார்ந்து மாற்றியமைப்பதே. அனைத்துச் செல்வத்தையும் மக்கள் சொத்தாகப் பிரகடனம் செய்வதாகும்;. அனைத்துச் செல்வத்தையும் மக்கள் மயப்படுத்துவதாகும். இது வர்க்கப் போராட்டத்தால் மட்டுமே சாத்தியமானது. தனிநபர் சொத்துக் குவிப்புக்கு எதிராக அதை மக்கள் தமதாக்குவதற்கு உள்ள ஒரே பாதை வர்க்கப் போராட்டமாகும். இது மட்டுமே இருக்கும் பெண்களின் கல்வியை, மருத்துவத்தை, தேவையைக் கூடப் பாதுகாக்கமுடியும். அத்துடன் இல்லாத ஏழை மக்களுக்குப் பெற்றும் கொடுக்கும். இதை மறுத்த எந்தப் பாதையும் ஆணாதிக்க வழியில் ஏகாதிபத்திய உலகமயமாதலைத் தீவிரமாக்கும்.
அதிகார அமைப்புகளில் பெண்களின் பங்கு குறித்து மேல் உள்ள புள்ளிவிபரம் அதிர்ச்சியளிக்கின்றது. நடைமுறையில் இருக்கும் இன்றைய ஆணாதிக்க ஜனநாயக அமைப்புகளில் பெண்ணின் பங்கு மிகக் குறைவாகவே உள்ளது. பெண் தன் வாக்குரிமை, பிரதிநிதித்துவம், அதில் எண்ணிக்கை உள்ளடக்கிய கோரிக்கை ஆணாதிக்க எல்லைக்குள் பெற்றுக் கொள்வதற்குக் கூட உலக நெருக்கடிகள் அவசியமாக இருந்தன.
முதலாம் உலக யுத்தமும் பின்னால் சோவியத் ரஷ்யாவின் அக்டோபர் புரட்சியின் வீச்சும், இரண்டாம் உலக யுத்தமும் பின்னால் சீனா உள்ளடங்கிய பல நாடுகளுடைய புரட்சிகளின் வீச்சுகளும், மற்ற நாடுகளில் நடந்த தேசிய மற்றும் வர்க்கப் புரட்சியின் வீச்சுகளும்தான் பெரும்பாலான நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமையைக் கொடுக்க நிர்ப்பந்தித்ததை மேல் உள்ள தரவுகள் காட்டுகின்றன. சமுதாயப் போராட்டங்களின் வரலாற்றில் பெண்ணின் பங்கு பெற்றல் தவிர்க்க முடியாத நிலையில் அவர்களுக்கு வாக்களிக்கும் ஆணாதிக்கச் சலுகைகளை வழங்க நிர்ப்பந்தித்தது.
வாக்களித்த பெண்ணால் சமுதாய ஆணாதிக்கத்தையோ, பெண் மீதான கொடுமையையோ ஒழித்துக் கட்டமுடியவில்லை. வாக்களிக்கும் உரிமை பெண்ணை விடுவிக்கும் என்பது பொய்த்துப் போனதால் பின்னால் அதிகாரத்தில் பெண்கள் பங்கு கொண்டால்தான் பெண்ணின் பிரச்சினையைத் தீர்க்கமுடியும், என்று தமது கோஷத்தைப் பூர்சுவா பெண்ணியம் மாற்றிக் கொண்டது. இதன் போது ஆணாதிக்க அதிகாரத்தில் பங்கு கொண்ட பெண்கள் பெண்ணுக்கு எதிராகச் செயற்படுவதில் தம்மைச் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிறுவினர். இதுவும் பொய்த்துப் போனதால் இன்று பெரும்பான்மை இருந்தால் அல்லது சரிபாதியிருந்தால் தீர்க்கமுடியும் என்று வசதியாகத் தமது கோஷத்தை மீளவும் அதைச் சட்ட மூலம் உறுதி செய்ய பிரகடனம் செய்கின்றனர். ஆணாதிக்க அமைப்பில் ஆணாதிக்கப் பெண்ணின் அதிகாரப் பங்கீட்டை ஆணாதிக்க எல்லைக்குள் கோருவது சர்வதேச நிகழ்வாக உள்ளது. இந்த அதிகார ஜனநாயக வடிவங்கள் சுரண்டும் வர்க்கம் சார்ந்ததால் அது தீவிரமாக ஆணாதிக்க அமைப்பைப் பாதுகாக்கும். இதில் பெண்ணின் பங்கு நூறு சதவீதமாக மாறினாலும் ஆணாதிக்க அமைப்பில் மாற்றத்தை வைக்கும் அருகதையைச் சுரண்டல் வடிவம் அனுமதிக்காது. அதுவாகவே இருப்பது நிதர்சனமாக இருக்கின்றது.
உலக ஜனத்தொகையில் 52 சதவீதமாக உள்ள பெண்கள் அரசியலிலும் அதிகாரத்திலும் அதாவது முடிவு எடுக்கும் பதவிகளில் பதினொரு சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளனர். (1.5.1993)6 இது ஒருபுறம் பெண்ணின் ஜனநாயகக் கோரிக்கையாக உள்ளது. ஆனால் ஆணாதிக்க அமைப்பில் பெண்ணின் பங்கு பெற்றல் பெண்ணுக்கு எதையும் பெற்றுத்தராது என்பது எதார்த்தமாகும். இதைபோல் இப்பெண்கள் ஆணாதிக்கச் சுரண்டல் வர்க்க அதிகாரத்தைப் பெண்கள் மீது திருப்புவர் என்பதும் எதார்த்தம் ஆகும். இருந்தபோதும் கூட பெண் ஆணுக்கு நிகராக அதைப் பெற்றுக் கொள்ளும் உரிமையை மறுக்கும் அனைத்து ஆணாதிக்கக் கண்ணோட்டத்திற்கும் பாட்டாளி வர்க்கம் எதிரானது. இதற்கு எதிராகப் போராடும் அதே நேரம் இந்தப் பாராளுமன்றத்தில் பெண்ணின் எண்ணிக்கை பெண்ணை விடுவிக்காது என்பதையும் அம்பலப்படுத்தும்;. ஆணுக்குச் சமமாகக் கிடைக்கும் பெண்ணின் அதிகாரம் பெண்ணை ஒடுக்கவே மீளவும் பயன்படுத்தப்படும் என்பதைப் பாட்டாளி வர்க்கம் அம்பலப்படுத்தும்.
ஆணாதிக்கம் விட்டுக்கொடுக்க மறுக்கும், ஆணாதிக்கப் பெண்ணின் பிரதிநிதித்துவ எண்ணிக்கை கோரிக்கையை ஆதரிக்கும் அதேநேரம் அதில் பங்கு கொள்வது ஆணாதிக்கத்தை அமுல்படுத்தி மக்களைச் சுரண்டவே பயன்படும் என்பதைப் பாட்டாளிவர்க்கம் அம்பலப்படுத்தும். பாட்டாளிவர்க்கம் ஆணாதிக்க அமைப்பில் பங்கு கொள்வது என்பதற்குப் பதில் தனது சொந்த அதிகாரத்தைக் கைப்பற்ற இந்த ஆணாதிக்கப் பாகுபாட்டைப் பயன்படுத்தும். இந்தப் போராட்டம் வீட்டுக்கு வெளியில் பெண்ணைக் கொண்டு வரவும், அரசியலில் பங்கு கொள்வதையும், புரட்சியில் பங்கு கொள்வதையும் ஊக்குவிக்கும். இதன் மூலம் பெண்ணின் பங்கைக் கட்சியின் தலைமை முதல் அணிகள் ஈறாக உள் இழுத்துக் கொள்ள இது பயன்படுத்துகின்றது. இதன் மூலம் உண்மையான பெண்ணின் பிரதிநிதித்துவத்தை அதிகார அமைப்புகளில் உறுதி செய்கின்;றது. பரந்துபட்ட பெண் பிரதிநிதித்துவக் கோஷத்தைப் பாட்டாளி வர்க்கம் தனது சொந்த வர்க்கப் போராட்டத்தின் ஊடாக அரசியல் மயப்படுத்தி ஆணாதிக்கத்தைத் தனது சொந்த அதிகாரத்தின் ஊடாகக் களைந்தெறிய போராடும். பெண்களின் அரசியல் மட்டத்தில் பின்தங்கிய போக்கை மாற்றியமைப்பதன் மூலம் முன்னேறி வழிகாட்ட இக்கோஷத்தைப் பாட்டாளி வர்க்கம் அரசியல் மயப்படுத்தும்;. இது பெண்ணின் விடுதலைக்குத் தீர்க்கமான வழிகாட்டுதலைச் சொந்த வர்க்கத் தலைமையில் ஆணாதிக்கச் சுரண்டல் சமுதாயத்திற்கு எதிராக முன்நிறுத்தி போராடுவதைத் தீவிரமாக்கும.;
உலகில் பெரும்பான்மையான நாடுகளில் இன்றும் ஆண்களை விட பெண்கள் 80 சதவீதம் அதிகமாக வீட்டில் வேலை செய்கின்றனர். உலகில் 70 சதவீதமான பெண்கள் வறுமையில் வாடுகின்றனர். உலகில் பெண்களின் கூலி ஆணைவிட 50 முதல் 80 சதவீதம் குறைவானதாகும். உலகில் 20 முதல் 50 சதவீதமான பெண்கள் பாலியல் வதைக்கு உட்படுத்தப்படுகின்றனர். உலகில் 22 இலட்சம் பெண்கள் சுற்றுச் சூழல் மாசடைவதால், அசுத்தப்படுவதால் வருடாவருடம் இறக்கின்றனர். ஆரம்பக் கல்வியை உலகில் ஆண்கள் 90 சதவீதம் பெற பெண்கள் 75 சதவீதமே பெறுகின்றனர்.2
இப்புள்ளி விபரங்கள் எமக்கு எதை விளக்குகின்றது? வீட்டில் பெண் உழைப்பதைக் காட்டுகின்றது. அதுவும் ஆணைவிட அதிகமாக 80 சதவீதத்தைச் சம்பளமின்றி அழுந்திக் கிடப்பதைக் காட்டுகின்றது. வீட்டுக்கு வெளியில் உழைக்கப் புறப்பட்டால் உலகளவில் 50 முதல் 80 சதவீதமான சம்பளத்தை ஆணைவிடக் குறைவாக வழங்கி புறக்கணிப்பதும் வெளிப்படுகின்றது. பின்னால் இப்பெண்கள் உலகளவில் வறுமையில் சிக்கியிருப்பதையும் காட்டுகின்றது. கடின உழைப்பு மதிப்பற்று பட்டினியில் உழலும் உலகத்தில் ஜனநாயகம் பூத்து குலுங்குகின்றது?! கடின உழைப்பைப் செய்யும் மனிதனைச் சுரண்டி சொகுசாக விதம்விதமாக உழையாதவன் வாழ, உழைத்தவன் பட்டினியில் பரிதவித்து கிடக்கின்றான்;. இது போல் பெண்களின் கடின உழைப்பு சந்தைப் பெறுமானம் இழந்து பட்டினியில் சிக்கித் தவிக்கின்றது.
பெண்ணின் உழைப்பு மதிப்பிழந்து இருக்க காரணம் என்ன? இந்த சந்தையமைப்பு முறையே ஒழிய வேறு ஒன்றுமல்ல. இந்தச் சூறையாடும் சந்தையமைப்பு முறை மாறாமல் பெண்ணின் உழைப்பு மதிக்கப்படமாட்டாது. மாற்றப்பட வேண்டுமாயின் அது உழைப்பை உழைப்பாக மதிக்கும் சமூகத்தின் தேவையை ஏற்றுக் கொள்ளும் புரட்சி அவசியமாகின்றது. வேறு சீர்திருத்தங்கள் கோரிக்கைகள் இதில் இருந்து பளுவைக் குறைக்கவும் அல்லது மீள அதிகரிக்கவும் காலத்துக்குக் காலம் முடிகின்றதே ஒழிய மாற்றம் ஏற்படுவதில்லை. இம்மாற்றம் கூட நவீனக் கண்டுபிடிப்புகளை ஒட்டி நிகழ்கின்றதே ஒழிய ஆணாதிக்கத்தைக் கடக்கும் பாதையில் நிகழ்வதில்லை. இப்படி முன்னேறுவதாகக் காணும் போக்கு கானல்நீர்தான்.
பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் 20 முதல் 50 சதவீதமாக உள்ளது. பெண் என்பவள் பாலியல் பண்டமே. இதை அனுபவிப்பது ஆணின் கடமை என்ற உலகமயமாதலின் நுகர்வுச் சந்தைக் கண்ணோட்டம் என்றுமில்லாத அளவில் பெண்ணை வன்முறைக்கு உள்ளாக்குகின்றது. கடின உழைப்புடன், சந்தைப் பெறுமானம் இழந்து, பட்டினியுடன் இருப்பவள் மீது குதறும் பாலியல் வக்கிரம் இந்த ஜனநாயகத்தின் சிறந்த கொடையாகும்?! இந்தப் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டு வீட்டில் வேலைக்காரியாகவும், எதிர்த்துக் கேளாத முதலாளியின் நாயாகவும் வாழ அவளின் கல்வி சூனியம் நிபந்தனையாக உள்ளது.
ஐக்கிய நாட்டுச்சபை அறிக்கை ஒன்றில், ஆப்பிரிக்காவில் 1,000 குழந்தைகள் பிறக்கும் போது 175 குழந்தை இறக்க, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 100 ஆக இருக்க, முன்னேறிய நாடுகளில் 15 ஆக உள்ளது. அதாவது வறுமையில் உள்ள 100 கோடி மக்களில் 55 கோடி மக்கள் இரவுப் பட்டினியுடன் படுக்கச் செல்கின்றனர். 100 கோடி முதியோர்கள் கல்வி அறிவு அற்றவராக இருக்க 50 கோடி சிறுவர்கள் பாடசாலை செல்வதில்லை. உலக மொத்த வருமானத்தில் 83 சதவீதத்தை உலகில் உள்ள மேல்மட்டத்தைச் சேர்ந்த 20 சதவீதம் பேர் அனுபவிக்க, இன்னுமொரு அடிநிலை மக்களான 20 சதவீதத்தினர் உலக வருமானத்தில் 1.5 சதவீதத்தையே பெறுகின்றனர். இதையும் கொள்ளையடிக்க பின்நவீனத்துவப் பொருளாதார ஏகாதிபத்தியம் தீவிரமாகக் களத்தில் இறங்கி களமாடுகின்றது. மிகுதி 15.5 சதவீதத்தையே 60 சதவீதமான பிரிவு, தனது மத்தியதர வர்க்கக் கனவுடன் வறுமையில் ஊசலாடுகின்றது. உலகில் எழுத்தறிவின்மை 60 சதவீதமாக இருக்க, பெண்ணின் வறுமை 70 சதவீதமாக உள்ளது. இந்த பெண்களில் 37.4 கோடி பெண்கள் இந்தியாவில் உள்ளனர்.
உலக ஜனத்தொகையில் இருந்து ஆண்டுக்கு ஒரு இலட்சம் பெண்கள் காணாமல் போகின்றனர். அமெரிக்கா அல்லாத உலகில் ஒரு சதவீதப் பெண்களே ஆண்களுக்குச் சமமான உயர் பதவிகளில் உள்ளனர். இதைக் கடந்து ஆண்கள் நிலையை அடைய 475 ஆண்டுகள் செல்லும்.6
உலகளாவிய ரீதியில் பட்டினி வாழ்க்கை என்பது விதியாக உள்ளது. 55 கோடி மக்கள் இரவுப் பட்டினியுடன் படுக்கின்றனர் எனின் அவர்களில் பெரும்பான்மையோர் பெண்கள் என்பதும் அதிசயமற்றது. ஒருபுறம் உலகச் செல்வத்தில் 20 சதவீதத்தினர் 83 சதவீதமான செல்வத்தை அனுபவிக்க, இன்னுமொரு இருபது வீதம் பேருக்கு உலகச் செல்வத்தில் கிடைப்பது 1.5 சதவீதம் மட்டுமே. இந்த நிலையைத்தான் நாம் ஜனநாயகத்தின் வடிவமாக நியாயப்படுத்துகின்றோம்;. மிகுதி 15.5 சதவீதச் செல்வத்தை அனுபவிக்கும் 60 வீதமான மத்தியதர வர்க்கம் மேல் வர்க்கத்திற்கு முண்டு கொடுக்கின்றது.
வறுமையில் பெண்களின் சோகமும், கண்ணீரும் இந்த ஜனநாயக அமைப்பில் வளர்த்தெடுக்கப்படுகின்றது. ஆணாதிக்கச் சுரண்டல் அமைப்பில் பெண்கள் இரண்டாம் தர பிரஜையாக வாழும் வரை பட்டினியும், கண்ணீரும் அவர்களின் உடன்பிறப்பாகின்றது.
முதலாளித்துவ அமைப்பில் சிறுவர் உழைப்பு அதன் அஸ்திவாரமாகியதால் இன்று 100 கோடி மக்கள் கல்வி அறிவற்ற இயந்திரமாக்கப்பட்டனர். இதில் பெண்கள் தொகையே அதிகமானது. ஆணாதிக்கக் கல்வி சுரண்டும் வர்க்கத் தேவையுடன் அமைவதால் அது ஏற்றத் தாழ்வான அலை வீச்சுக்குள்ளாகின்றது. ஏகாதிபத்தியப் பொருளாதார நெருக்கடி கல்வியை மறுப்பதைத் தீவிரமாகவும், சந்தை விரிவு அடையும் போது கல்வி வேகமாகவும் வளர்ச்சி காண்கின்றது. மக்களின் தேவைக்கு உரிய கல்வி என்பதற்குப் பதில் சுரண்டும் சந்தைக்கு ஏற்ற சுரண்டும் கல்வி மனிதனை முடமாக்குகின்றது. அத்துடன் நுகர்வுச் சந்தையை விரிவாக்கும் கல்வி கட்டமைக்கப்படுகின்றது. இன்றைய கல்வி என்ன என்பதைக் காட் ஒப்பந்தமும், உலக வங்கியும் தீர்மானித்து அமுல் செய்யக் கோருவது அப்பட்டமான நிர்வாணமாக உள்ளது.
இன்றைய நிலையில் பெண் சமுதாயத்தில் உயிர் வாழ்தல் என்பது அர்த்தமற்றதாக மாற்றப்படுகின்றது. இது வருடாவருடம் ஆணாதிக்கக் கொடூரத்தில் இருந்து தப்ப, பெண்ணாகப் பிறப்பதைச் சமூகம் அங்கீகரிப்பதில்லை. இதனால் வருடாவருடம் ஒரு இலட்சம் பெண்கள் உலக ஜனத்தொகையில் இருந்து காணாமல் போகின்றனர். இது பூர்சுவா பெண்ணின் உடல் சுதந்திரமான கரு அழிப்பிலும், பின் ஆணின் ஆணாதிக்கக் கருஅழிப்பிலும், (சிசுக்கொலை) குழந்தைக் கொலையிலும், வரதட்சணைக் கொலையிலும் அரங்கேறுகின்றது.
பெண் இன்றைய நிலையில் இருந்து இந்தச் சுரண்டல் அமைப்பில் ஆணின் நிலையை வந்தடைய 475 வருடங்கள் தேவை என்பதைப் புள்ளிவிபரக் கணிப்பு தெரிவிக்கின்றது. இன்றைய பூர்சுவா பெண்ணியல்வாதிகளும், அராஜகப் பெண்ணியல்வாதிகளும் (தீவிரப் பெண்ணியல் என்று கோஷம் போடுபவர்கள்) பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு எதிராக வெட்டிப் பிடுங்கும் இந்தச் சமுதாய அமைப்பில் ஆணுக்குச் சமமான வகையில் அதிகாரத்தைப் பங்கு போட்டுக் கொள்ள தேவையான காலம் சில நூறு வருடங்கள்.
ஆனால் பாட்டாளி வர்க்கப் புரட்சி இதைவிட வேகமான பாய்ச்சலைக் கொண்டது. இந்த நீண்ட காலத்தில் (475 வருடம் கழித்து) அதிகாரத்தைப் பெறுபவர்கள் ஆண் அதிகாரத்தை ஒழிக்க முடியாது என்பது இதில் உள்ள அடுத்த உண்மையாகும். ஆனால் பூர்சுவா வர்க்கப் பெண்கள் இதைப் புரிந்துக் கொள்ள மறுக்கின்றார்கள். அவர்கள் ஆணாதிக்கச் சொத்துரிமையைத் தகர்ப்பதை எதிர்ப்பதால் பாட்டாளி வர்க்க எதிர்ப்பைக் கட்டமைக்கின்றனர் அல்லது பாட்டாளி வர்க்க உயிரோட்டமான வர்க்கப் புரட்சியைச் சிதைத்து அதைப் பூர்சுவா கண்ணோட்டத்துக்கு இசைவாக்குகின்றனர்.