09212023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

நீயும் இரயாகரனைப் போல் தேசத்துரோகிதான்!

Anonymous said...

இரயாகரனுக்கு ஆதரவளிக்கும் நீ விடுதலைப்புலிகளுக்கு எதிராளி என்பதை நிருபித்துவிட்டாய். நீயும் இரயாகரனைப் போல் தேசத்துரோகிதான்!

27 May, 2008 9:23 AM

 

தமிழச்சி said...

ஷட் அப் நாயே!
எங்களை துரோகி என்று சொல்லும் உரிமையை உனக்கு யாரடா நாயே கொடுத்தது?

27 May, 2008 9:32 AM

 

ஏகலைவன் said...

மதிப்பிற்குரிய அனானி நண்பரே!

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கும் நீர்தான் துரோகிகளின் பட்டியலில் இடம்பெறப் போகிறீர்கள்.

 

தமிழர்களை வேட்டையாடுவதில் சிங்கள இராணுவத்திற்குச் சளையாமல் துரோகத்தனம் புரியும் புலிகளை உயர்த்திப் பேசமுடியுமா?

 

இங்கே வந்து அங்கலாய்த்துக் கொள்ளும் நீங்கள், இரயாகரனின் தளத்தில் பதிவிடப்படும், புலிகளை விமர்சிக்கும் கருத்துக்களுக்கு எதிராகச் சென்று மறுமொழியிடலாமே, அதன் மூலமாக நல்லதொரு விவாதத்தைத் தொடங்கலாமே. உங்களை யார் தடுத்தது.

27 May, 2008 2:18 PM

 

தமிழச்சி said...

என்ன ஏகலைவன் இது?

காலையில் போட்ட இந்த பதிவுக்கு எவ்வளவு அனானி பின்னூட்டங்கள்? எவ்வளவு மிரட்டல்கள்? எனக்கு அரசியல் தேவையில்லை என்று ஒதுங்கிப் போனாலும் இவர்கள் விடுவதாயில்லை!

 

யார் இவர்கள் முகம் தெரியாத கபோதிகள் என்னை துரோகி என்று சொல்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது. போய்த் தொலைகிறது என்று இருந்தால் தமிழ்மணத்தில் நான் ஆபாச எழுத்தாளரா? சிறந்த இலக்கியவாதியா? என்று ஓட்டெடுப்பு நடத்துகிறது. அந்த தளமும் அந்த பதிவரும் யாருக்கு ஆதரவாளரென்று படிப்பவர்களால் ஊகித்துக் கொள்ள முடியும். அதையும் போய் தொலைகிறது என்று விட்டால் ஓட்டெடுப்புக்கு விளம்பரப்படுத்தி இன்னொரு வலைதளம் விளம்பரம் செய்கிறது?

 

இங்கே பாருங்கள் தோழர்! தோழர் இரயாகரனைப்பற்றி எழுதிய பிறகே இவ்வளவு கூத்துக்களும் ....

 

http://tamilulagam.wordpress.com/2008/05/27/தமிழச்சி-பற்றி…/

http://thamiloli.com/?p=35

27 May, 2008 3:12 PM

 

www.pathmanhypnoterapi.no said...

Hei
We are suppot to you Thamilachi, Anonymus have many psycologiacl problems . I can treat him free.
I can treat him in tamil or Norwegian .
I have enough success in Hypnoterapi trearment with Norwegin and tamils
We are supporting to Thamizachi.
You Have many silent supporters .
They are many thousands of tamil.
Please continue Thamilachi...
Pathmanathan Nalliah
From Norway
Oslo
PS : Plaese publish this comment
I am not affraid to any body in the world.

27 May, 2008 5:38 PM

 

ஏகலைவன் said...

///காலையில் போட்ட இந்த பதிவுக்கு எவ்வளவு அனானி பின்னூட்டங்கள்? எவ்வளவு மிரட்டல்கள்? ///

 

இதில் வியப்பதற்கோ அல்லது கோபப்படுவதற்கோ ஒன்றுமில்லை தோழர்.

 

நம்மீதான பாராட்டுக்களைவிட இதுபோன்ற எதிரிமுகாமின் வசவுகள்தான் நமது சரியான பதையை அழுத்தம் திருத்தமாக வெளிக்காட்டுகின்றன.

 

அட்ரசில்லாத அனானிகளானாலும் நாம் பதில் சொல்லவேண்டியிருக்கிறது அனானிகளையும் நாம் அம்பலப்படுத்தி திரைகிழிக்க வேண்டியுள்ளது. இது நாம் எழுதும் பதிவுகளைவிட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

 

உமது பதிவு சொல்லவரும் கருத்தை அனானியின் ஓரிரு வார்த்தைகளடங்கிய அவதூறுகள் திசைதிருப்பக் கூடும். நமது தளத்தை வாசிக்க வருகின்ற புதிய/முகம்தெரியாத நபர்களை நோக்கி அது வைக்கப்படுகிறது. நாம் அதனை தக்க முறையில் எதிர்கொண்டு நமது பதிலின் மூலமாக எதிரிகளை அம்பலப்படுத்துவதன் மூலமே அவற்றை முறையாக முறியடிக்க முடியும் என்று நினைக்கிறேன்.

 

///எனக்கு அரசியல் தேவையில்லை என்று ஒதுங்கிப் போனாலும் இவர்கள் விடுவதாயில்லை!///

 

அரசியல் இல்லாமல் இருக்கவேண்டும் என்று தயவுசெய்து விரும்பாதீர்கள். சமூகம் சார்ந்து சிந்திப்பதுவும் சமூக மாற்றத்திற்காகப் போராடுவதும் அரசியல்தான். அரசியலின்றி நீங்கள் இருக்க நேர்ந்தால், நீர் களத்தில் ஒரு பெரியாரியவாதியாக நீடிக்கமுடியாது.

 

நமது ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளுக்கோ அல்லது மதவெறியர்களுக்கோ கூட அரசியல் தேவைப்படாமல் போகலாம், நம்மைப் போன்றவர்களுக்கு அதன் மீதான ஆழமான புரிதல் அவசியம் என்றே கருதுகிறேன்.

 

ஆனால் என்ன செய்வது மேற்சொன்ன சமூக விரோதிகள்தான் அரசியல் வாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களைக் கொண்டே நாமும் அரசியலைப் பார்க்க நேரிடுகிறது.

 

நமது குறைவான வாழ்வியல் காலத்தைக் கொண்டு, நமது சமுக ரீதியான போராட்டங்களோடு இருத்தலை அடர்த்தியாக்குவதன் மூலமே, நாம் இறந்தபின்னும் இங்கே நீடித்து இருக்க முடியும்.

 

///போய்த் தொலைகிறது என்று இருந்தால் தமிழ்மணத்தில் நான் ஆபாச எழுத்தாளரா? சிறந்த இலக்கியவாதியா? என்று ஓட்டெடுப்பு நடத்துகிறது. அந்த தளமும் அந்த பதிவரும் யாருக்கு ஆதரவாளரென்று படிப்பவர்களால் ஊகித்துக் கொள்ள முடியும். அதையும் போய் தொலைகிறது என்று விட்டால் ஓட்டெடுப்புக்கு விளம்பரப்படுத்தி இன்னொரு வலைதளம் விளம்பரம் செய்கிறது?///

 

முதலில் இதுமாதிரியான கேவலமான வேலைகளில் ஈடுபடுகின்ற 'சைவப் பூனை'களுக்கு எனது ஆழ்ந்த அநுதாபங்கள்.

 

உமது எழுத்துக்களின்மூலம் இவர்களைச் சென்று சேர்ந்தது வெறும் ஆபாசம் மட்டும்தான் என்றால், அது குறித்து வெட்கப்படவேண்டியது அவர்கள்தான்.

 

உதாரணத்திற்கு, 'கோனேஸ்வரி'க்கு நேர்ந்த கொடுமைகளைக் கண்டித்து எழுதப்பட்ட உமது பதிவில், இவர்களை கோனேஸ்வரிக்கு நேர்ந்த கொடுமை பாதிக்கவில்லை, மாறாக அக்கொடுமையினை வெளிச்சொல்லுதலும் அதன் மீதான உமது குமுறலும் தான் இவர்களைச் சுடுகிறது. இதிலிருந்து, உண்மையில் ஆபாசம் யாரிடத்தில் மண்டியிருக்கிறது என்பது அனைவராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

 

சாதாரணமாக பெண்ணுடைலை வியாபாரமாக்கும் ஆண்(எழுத்தாள) மாமாக்கள் இவர்களின் கண்ணுக்குத் தெரிவதில்லை. இதே தமிழ்மணத்தில், இன்னபிற திரட்டிகளில், சினிமா செய்திகளை எழுதுகிறேன் பேர்வழியென்று பலர் எழுதிக் கொண்டுதான் இருக்கின்றனர். அதுபற்றி இவர்கள் எதுவும் பேச மாட்டார்கள்.

 

இவர்களுக்கு பிரச்சினை எங்கு தொடங்குகிறது என்றால், பெண்ணுடலைப்பற்றி ஒரு பெண் எழுதும்போதுதான் தொடங்குகிறது. அப்படியே எழுதினாலும் ஒரு பெண், தனக்கோ அல்லது வேறொரு பெண்ணுக்கோ நேர்ந்த கொடுமைகளை நேரடியாக எழுதினால் இவர்களால் பொறுத்துக் கொள்ளவே முடிவதில்லை. இதனை வெறும் ஆணாதிக்கச் சிந்தனை என்று சுருக்கிவிட முடியாது தோழர்.

 

அதையும் தாண்டிய ஒரு வக்கிரத்தனம் இவர்களுக்குள்ளிருந்து துருத்திக் கொண்டு வெளித்தெரிகிறது.

 

உமது எழுத்துக்களில் இவர்கள் அம்பலப்படுத்தப்படுவதை விட இதுபோன்ற இவர்களது எதிர்விணையின் மூலமாகத்தான் இவர்கள் வெகுவாக அம்பலப்படுகிறார்கள்.

 

எனவே இவர்கள் உமக்கெதிராக நடத்தும் வாக்கெடுப்புகள் அனைத்தும் இவர்களது வக்கிரத்தன்மையினை அளவிடுவதாக மட்டுமே இருக்கமுடியும்.

 

இவற்றில் உமக்கு எதிரான அல்லது ஆதரவான அல்லது இன்னபிற வாக்குகள் என்று எதுவாக இருந்தாலும், பதிவான அனைத்து வாக்குகளுமே இவர்களின் இழிநிலைக்குக் கிடைத்திருக்கும் நற்சான்றிதழ்கள் போன்றவைதான்.

 

இவர்களுக்காக நான் கவலைப்படுகிறேன்.


தோழமையுடன்,

ஏகலைவன்.

ஏகலைவன் said...

தோழர் தமிழச்சி,

மன்னிக்கவும். தங்களுடைய இந்த (http://thamizachikirukkalkal.blogspot.com)
வலைதள எழுத்துக்கள் குறித்து எனக்கு நிறைய விமர்சனம் இருக்கின்றது. இவற்றை நான் இதுநாள் வரை பார்க்காமல் இருந்திருக்கிறேன். மேலேயுள்ள என‌து பின்னூட்ட‌த்தில் நான் குறிப்பிட்ட‌து இவ்வெழுத்துக்க‌ளையும் க‌ண‌க்கில் வைத்துக் கொண்டு சொன்ன‌த‌ல்ல‌.

 

உங்களுடைய அந்த கவிதைகளில் உடல்மொழிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதோடு, கவிதைகள் சொல்ல வருகின்ற கருத்துக்கள் எதுவுமே முழுமையடையாமலும் இருக்கின்றது. பெண்களுக்கு எதிரான அத்தனைக் கொடுமைகளுக்கும் ஆண்களை உடல் மொழியால் திட்டுவதால் தீர்வு கானமுடியுமென்று நம்புகிறீர்களா?

 

பெண்ணடிமைத்தனம் குறித்த உமது குமுறல் எந்த அளவுக்கு நியாயமானதோ அந்த அளவுக்கு நீங்கள் அதற்காக வைக்கும் தீர்வும் சரியானதாக இருக்கவேண்டும். உமது இலக்கு ஆணாதிக்கத்தின் பிறப்பிடத்தை நோக்கியதாகவே இருக்க வேண்டும். பெண்களை இழிவாக நடத்தும் ஆண்களை மட்டுமோ, அல்லது ஆண்களை எதிர்க்காமல் அடிபணிந்து வாழவிரும்பும் பெண்களை மட்டுமோ கண்டிப்பதால் இவற்றை மாற்றமுடியாது.

 

இங்கு நிலவும் கேடுகெட்ட பெண்ணடிமைத்தனத்திற்கு ஒரு சமூகப் பின்புலமே இருக்கிறது. அதுதான் ஆண்களைக் கொடுமை செய்யவும், பெண்களை அதை ஏற்றுச் செயல்படவேண்டுமென்றும் அறிவுறுத்துகிற‌து. இவ‌ற்றின் பின்னால் உள்ள‌ ச‌தியை அம்ப‌ல‌ப்ப‌டுத்தி வேற‌றுக்காம‌ல் பெண்ண‌டிமைத்த‌ன‌த்தை ஒழிக்க‌ முடியாது.


தொட‌ர்ந்து விவாதிப்போம் தோழ‌ர்.

தோழ‌மையுட‌ன்,

ஏக‌லைவ‌ன்.

1 June, 2008 8:24 AM

 

தமிழச்சி said...

தோழர் ஏகலைவன் அவர்களுக்கு வணக்கம் சில நாட்களாக வேலை அதிகமிருந்தால் உடனடியாக உங்களுக்கு பின்னுட்டம் செய்ய முடியவில்லை.

 

நீங்கள் 2008 மார்ச் மாத்ததில் இருந்து தான் வலைப்பதிவுக்கு வந்திருக்கிறீர்கள். இல்லையா?

 

அதற்கு முன்பாகவே பல கூத்துக்கள் நடந்தேறி இருக்கின்றன. என்னுடைய முதல் வலைதளம் அழிக்கப்பட்டிருக்கிறது. பாரீசில் நடைப்பெற்ற விநாயகர் தேர் திருவிழாவுக்கு எதிராக நோட்டீஸ் கொடுத்ததற்காக கொலை மிரட்டல் விடப்பட்டிருக்கிறது. தினமும் தொலைப்பேசியில் ஆபாசமாகவும் திட்டுக்கள் வாங்கியிருக்கிறேன். இணையத்தில் என்னை நிர்வாணமாக்கி படம் போடுவோம் என்றார்கள். நானே ஒரு 5 படங்களை இணையத்தில் போட்டு நிர்வாணப்படுத்தி போட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லி நிர்வாணப் படமும் போடப்பட்டிருக்கிறது. என்னை மிரட்டி பேசியவர்களின் பேச்சை ரெக்கார்ட் செய்து இணையத்தில் போட்டிருக்கின்றேன்.பிரான்ஸ் நாட்டு போலிசில் கம்ப்ளைன்ட் இருக்கிறது.என் குடும்பத்தினர் கூட சொல்வார்கள்.ஏன் இப்படியெல்லாம் அவமானப்பட வேண்டும் என்று? அப்போதெல்லாம் படித்த வர்க்த்தினர் புழங்கும் இணையத்திலேயே இவ்வளவு மோசமான அனுமுறை இருப்பதை கண்டு அதிர்ந்து போனதுண்டு. மேலும் சில அமைப்புகளும் சில அரசியல்வாதிகளும் என்னிடம் அனுகிய முறையும் இலக்கியத்துறையில் இருக்கும் சில ஆண்களின் தவறான போக்கும் என்னை எரிச்சல்படுத்தியதுண்டு. ஆனால் என்னுள் இருந்த இயல்பான எதிர்க்கும் குணம் கேள்வி கேட்க வைத்தது.தொடக்க காலத்தில் தந்தை பெ ரியாருடைய கருத்துக்களை மட்டும் பதிவு செய்து கொண்டு வந்த எனக்கு பெரியாரின் கருத்துக்களை இணையத்தில் பதிவு செய்ய கூடாது என்று மிரட்டப்பட்டேன். சும்மா மிரட்டல் அளவில் தானே இருக்கப்போகிறது என்று அலட்சியமாக இருந்த போது என்னுடைய கார் உடைக்கப்பட்டது. இன்னும் சில அமைப்புகள் மூலம் வேறு கோணத்தில் திசை திருப்பப்பட்டேன். இயக்கத்திற்கு எதிரான ஆள், டக்ளஸ் என்ற இலங்கை அமைச்சரிடம் பெட்டி வாங்கிக் கொண்டு இயக்கத்தினருக்கு எதிராக செயல்படுகின்றேன் போன்ற குற்றச்சாட்டு வேறு. பத்திரிக்கையிலும் இப்படியே விமர்சனம்.


எல்லாவற்றிற்கும் காரணம் பெரியார் விழிப்புணர்வு இயக்கமும், தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் ஆதரவும்... இவர்களுக்கு ஆதரவாக நான் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை.... எனக்கு தேவையில்லை அரசியல் என்று சொல்ல ஆரம்பித்தது அதற்காகத் தான் தோழர்.

 

நம் சமூகத்தில் ஜனநாயகம் தனி மனித சிந்தனைகள் என்பதெல்லாம் வெறும் வரட்டுக் கூச்சல். ஒழுக்கம், பக்தி, புனிதம் எல்லாம் வேஷம். ஆண்களும், பெண்களும் செய்யும் கள்ளத்தனங்கள் எல்லாவற்றிலும் உண்மையான விமர்சனத்தை வைக்க வேண்டும் என்பதில் மட்டும் தெளிவாக இருந்ததால் என்னுடைய சிந்தனையில் உதிர்த்த கருத்துக்களை எழுத்தாக்கினேன். அப்படி வந்தது தான் கிறுக்கல்கள் வலைதளம். உங்களுடைய கருத்துக்கள் யதார்த்த நிகழ்வுகளில் இருந்தே திசை மாறிப் போகின்றது. எல்லாவற்றிற்கும் ஆணாதிக்கத்தையே சாடிக் கொண்டிருக்கின்றீர்களே தோழர்?

 

1 June, 2008 9:42 AM

ஏகலைவன் said...

தோழர் தமிழச்சி அவர்களுக்கு,

தங்களுடைய இந்த பின்னூட்டத்தில் விவரித்திருந்த சம்பவங்கள் என்னை மிகவும் வருத்தமடையச் செய்தன. இவ்வளவுக்கும் பிறகு நீங்கள் தொடர்ந்து இயங்க முடிகிறது என்றால் அது மிகவும் ஆச்சர்யமான விசயம்தான். இவ்வளவு ஏன், எதிர்ப்புகளைச் சமாளிக்க முடியாத பல ஆண் எழுத்தாளர்களே பின்வாங்கிச் சென்றிருக்கின்றனர். உங்களுடைய இந்த உறுதி பாராட்டுக்குரியது.

 

இருப்பினும் தங்களுடைய கோபமும் குமுறலும் எதிரியை குறிப்பான இலக்காகக் கொண்டு அவர்களை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டும். ஆனால் இங்கே, அதற்கான உமது எதிர்வினைகளில் நீங்களே தனிமைப்படுத்தப் படுவதையும் சற்று கவனிக்க வேண்டும்.

 

பெண்களை எதிர்கொள்ள முடியாத நிலையில், அவர்களிடம் தோற்று நிற்கும் ஆண் தனது தோல்வியை ஏற்க மறுத்து கடைசி ஆயுதமாக கையிலெடுப்பது பாலியல் ரீதியிலான தாக்குதல்களைத்தான். நீங்கள் எதிர்கொண்ட தாக்குதல்களும் அத்தகையதே. இதில்தான் ஆணாதிக்கதின் கயமைப் புத்தி வக்கிர வேடம் பூண்டு அம்மனமாய் நிற்கிறது.

 

இதில் உங்களுடைய எதிர்வினையானது அவர்களை மேலும் அம்மனமாக்கி அம்பலப்படுத்துவதாக மட்டுமே இருக்கவேண்டும். அதற்காக கோபப்பட்டு நாமும் உடல்மொழியிலேயே பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எதிரிகள் உங்களிடமிருந்து இத்தகைய எதிர்வினையைத்தன் எதிர்பார்க்கிறார்கள். அது அவர்களுக்குச் சாதகமாகவும் உங்களுக்கு எதிராகவும் மாறிவிடுகிறது.


///நம் சமூகத்தில் ஜனநாயகம் தனி மனித சிந்தனைகள் என்பதெல்லாம் வெறும் வரட்டுக் கூச்சல். ஒழுக்கம், பக்தி, புனிதம் எல்லாம் வேஷம்.///

 

இதில் எனக்கேதும் மாற்றுக் கருத்து கிடையாது. இதைத்தான் நாம் போலி ஜனநாயகம் என்று உரக்கச் சொல்லுகிறோம். இது அம்பானி, டாட்டா போன்ற தரகு முதலாளிகளுக்கான ஜனநாயகம். இது அவர்கள் வடிவமைத்த, அல்லது அவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட சமூகம்.

 

சினிமா, போதை, கலாச்சாரம், சட்டம் ஒழுங்கு, நீதி, கடவுள் பக்தி என மக்களைக் ஆழக் கவ்விப் பிடித்திருக்கும் அத்தனை அமைப்புகளும், மேற்சொன்ன தரகு முதலாளிகளுக்காகவும் ஏகாதிபத்தியத்துகாகவும் சிறப்பாக கட்டமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

 

இவைதான் சினிமாவாகவும் பக்தியாகவும், மக்களுக்கு அறிவுரை சொல்லுகிறேன் பேர்வழியென்று கிளம்பி வந்து, மேற்கண்ட சுரண்டல்வாதிகளுக்கு ஆதரவாக மக்களை இருக்கச் சொல்லி தயாரிக்கிறது. தங்களது இழிநிலையினை உணர்ந்து கோபப்படும் மக்களுக்கு சமூக ரீதியான தீர்வை மறைத்து, அனைத்தும் அவரவரின் தனிப்பட்ட பிரச்சினை என்பதாகக் காட்டி, மக்களுக்குள் இடைவெளியினை உருவாக்குகிறது.

 

சமூகத்தில் வேலையின்மை என்பது இளைஞர்களை மிகவும் அலைகழிக்கிறது. இந்தியாவில் சுமார் 41கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்களாம். அவர்களுக்கு இச்சமூகமோ அதன் ஊடகங்களோ சொல்லுகின்ற அறிவுரை என்ன? "நீங்கள் வேலை தேடுபவர்களாக இருக்கக் கூடாது, மாறாக அனைவருக்கும் வேலை கொடுப்பவர்களாக மாறவேண்டும்" என்று அறிவுறுத்துகிறார்கள்.

 

இதைவிட இளைஞர்களை அவமதிக்கும் செயல்கள் வேறெதாவது இருக்கமுடியுமா?

 

இத்தகைய அவலநிலைதான் சமூகத்தில் அனைத்து மக்களுக்கும் எதிராக நிற்கிறது.

 

நாம் இதனை உணர்ந்து இதற்கெதிராக செயலாற்றுவது தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் எதிரான நிரந்தரத் தீர்வை நோக்கிச் செல்வதாக இருக்கும் தோழர்.

 

தோழமையுடன்,
ஏகலைவன்.

2 June, 2008 7:56 AM

 

 

தமிழச்சி said...

/// தங்களுடைய இந்த பின்னூட்டத்தில் விவரித்திருந்த சம்பவங்கள் என்னை மிகவும் வருத்தமடையச் செய்தன.///


உங்களுக்கு வருத்தமளித்த சம்பவங்கள் எனக்கு ஆவேசத்தை கொடுத்தன.

என்ன நேரினும்.....


எது வரினும் சரி.........


கொண்ட லட்சியத்தில் இன்னும் தீவிரம் கூடுகிறதே தவிர குறையவில்லை.

ஆனால் மற்றவர்கள் மீது நம்பிக்கை வருவது குறைந்து போய்விட்டது. யாரைப்பார்த்தாலும் சந்தேகம். எதைப்பார்த்தாலும் சந்தேகம். இரயாகரன் எனக்கு ஆதரவாக பதிவு போட்டும் அவர் மீது எனககு சந்தேகம் இருந்தது. இவர் எந்த அமைப்பைச் சேர்ந்தவரோ எதற்காக நமக்கு வலைவிரிக்கிறார் என்று தோன்றியது. ஓரு நிகழ்ச்சியில் இரயாகரனிடம் நேரில் பேசிய பிறகு அவருடைய எழுத்துக்களை படிக்க ஆரம்பித்த போது தான் அவர் ஒரு சமூகவாதி என்பதை தெரிந்து கொண்டேன்.

 

இப்போது உங்கள் மீது சந்தேகம்! யார் இவர் எதற்காக நம்மிடம் அக்கறையாக பேசிக் கொண்டு வருகிறார் யாருக்காக வேலை செய்கிறார் என்று...

என்ன செய்து தொலைப்பது தோழர் ...?

 

இரயாகரன் என்னைப் பற்றி எழுதிய பதிவுகள் :

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/03/blog-post_9308.html

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/03/blog-post_1051.html

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/03/blog-post_3568.html


/// தங்களுடைய கோபமும் குமுறலும் எதிரியை குறிப்பான இலக்காகக் கொண்டு அவர்களை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டும். ஆனால் இங்கே, அதற்கான உமது எதிர்வினைகளில் நீங்களே தனிமைப்படுத்தப் படுவதையும் சற்று கவனிக்க வேண்டும். ///

100/100 உண்மை தான்.


போராடும் போர்குணம் இருக்கின்றது. சாதிக்க வேண்டும் என்ற வெறி இருக்கின்றது. அதை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பதில் தான் பிரச்சனை. மொழிப் பிரச்சனை ஒரு காரணம். நான் இருக்கும் சூழலில் இருந்து என் சிந்தனை வெளிப்படுகிறது. உள்வாங்குபவர்கள் அவரவர் சூழலில் உருவகப்படுத்திக் கொண்கின்றனர்.

 

தமிழில் மயிர் என்பது மட்டும் தான் கெட்ட வார்த்தையென தெ ரியும். தமிழ்மணத்திற்கு வந்த பிறகு தான் யோணியில் இருந்து தெ ரிந்து கொண்டேன். ஆனால் அந்த வார்த்தையை உபயோகப்படுத்தும் போது சமூகத்தில் கிளம்பி எதிர்ப்புகள் ஆச்ச ரியத்தை கொடுத்தது. பெண்ணின் அங்கத்தை கேவலமாக மறைமூகமாக பேச 1008 வார்த்தையை உருவாக்கி வைத்து விட்டு நேரடியாக உறுப்பின் பெயரை குறிப்பிட்டு பேசுவது தவறாம். ஆபாசமாம். ஒரு மனிதனின் இயற்கையாக உறுப்பு எப்படி ஆபாசமாக முடியும்? அதனால் தான் எனக்கு அது குறித்து எழுத தோன்றியது. மற்றபடி கவிதை படிப்பதிலும், சிறுகதை படிப்பதிலும் எனக்கு என்றுமே ஆர்வம் இருந்ததில்லை. அதனால்தான் கிறுக்கல் என்ற பெயரில் கிறுக்குகிறேன்.

 

2 June, 2008 8:56 AM

http://thamizachi.blogspot.com/2008/05/blog-post_6613.html

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்