Language Selection

பி.இரயாகரன் 2001-2003
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

book _6.jpgபெண்ணுரிமை, பாலியல் என இலக்கியங்கள் திடீரென புலம்பத் தொடங்கியுள்ளது. தங்கள் சொந்த வக்கிரங்களையும், அரிப்புகளையும் படைப்பாக்கத் தொடங்கியவர்கள் இன்று உலகமயமாதலில் பெண்ணுரிமை, பாலியல் எதுவோ அதையே எடுத்துப் பாதுகாக்கவும், முன்வைக்கவும் தொடங்கியுள்ளனர். ஏகாதிபத்தியக் கலாச்சாரம், பண்பாடு என எதுவும் இல்லை என மார்தட்டுமளவுக்கு இவர்களின் படைப்புகள் புற்றீசல் போல் வெளிக் கிளம்பத் தொடங்கியுள்ளது.


இந்த வகையில் ஏங்கெல்ஸ்சைத் திரித்தும், மறுத்தும் ஆணாதிக்க எழுத்தாகக் காட்டியும் தங்கள் ஏகாதிபத்திய உலகமயமாதல் பெண்ணியத்தை, ஏங்கெல்ஸ் பெயரால் ஏகாதிபத்தியப் பாலியலை நியாயப்படுத்த பின்நிற்கவில்லை. ஏங்கெல்ஸ் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தில் மார்க்சியத்தை நிறுவும் தொடர்ச்சியில், பெண்கள் எப்படி வாழ்ந்தனர்? என்பது முதல் சமூகம் எப்படி இருந்தது என்பது வரை நிறுவிய ஆய்வுகளின் தொடர்ச்சியில், கம்யூனிசச் சமூகத்தில், சமூகம் எப்படி இருக்கும் எனக் கோடிட்டுக் காட்டிய விடயத்தைத் திரித்தும், மறுத்தும் தனது ஆணாதிக்க நோக்கத்துக்குப் பயன்படுத்துகின்றனர். உலகமயமாதல் இன்று இரு தளத்தில் நடைபெறுகின்றது. ஏகாதிபத்தியம் தமது சுரண்டலிலும், பாட்டாளி வர்க்கம் சுரண்டலுக்கு எதிரான தளத்திலும் உலகமயமாதலை வேகப்படுத்தியுள்ளது. இந்தத் தளத்தில் கலாச்சாரம், பண்பாடு என அனைத்தும் நேர் எதிர் திசையிலானது. ஆனால் சமூகச் சீரழிவாளர்கள் இன்று பாட்டாளிவர்க்கம் அல்லாத பாதையில் தமது காலை எடுத்து வைத்துள்ளனர்.


ஏங்கெல்ஸ்சைத் திரித்து தனது நோக்கத்துக்குப் பயன்படுத்தும் போதும் சரி, அதற்கு முன்னாலும் சரி, பின்னாலும் சரி ஒருக்காலும் ஏங்கெல்ஸ்சையோ, மார்க்சியத்தை ஏற்றது கிடையாது. ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைக்கு என எந்தத் தீர்வையும் கொண்டு இராத நிலையில் மக்களின் பிரச்சனைகளில் வம்பளந்து தமது அரிப்புகளுக்குத் தீனிதேடித் திரிகின்றனர். மக்கள் சந்தித்து வரும் துயரத்துக்கு என்ன தீர்வு? எனக் கேட்டால் அதுபற்றி அக்கறை கிடையாது என்பர்.


ஆனால் பெண்ணுரிமையிலும், பாலியலிலும் தீவிர அக்கறை திடீரென முளைத்துள்ளது. பாலியல் வக்கிரத்தைப் புறஉலகம் ஏற்படுத்த, அதற்கு தீனி தேடியதின் தொடர்ச்சியில் இன்று பலர் காமக் கதைகள், காமக் கவிதைகள் காமக் கட்டுரைகள் எழுதத் தொடங்கியுள்ளனர். உதாரணமாக ஐரோப்பாவில் உள்ள தமிழ் ஆண்கள் தொகைக்கு ஏற்ப தமிழ்ப் பெண்கள் இன்மையிலும், தமிழ் விபச்சாரிகள் இன்மையிலும், தொடரும் பொது மகளிர் முறையைத் தேடி பெண்களை வீதியிலும், வீடுகளை நோக்கி ஆபாசத் தொலைப்பேசிச் சேவை எடுத்தும் அரிப்புகளைக் கொட்டித் தீர்க்கின்றனர். இதன் மூலம் விபச்சாரச் சமூகத்தைப் பொதுமகளிர் முறையில் உருவாக்க முடியும் என்ற நப்பாசையில் அலைகின்றனர். இதில் இருந்து வேறுபட்டு, இன்று எழுத்தாளர்களின் பெயரில் அதை எழுத்தில் அதே வக்கிரத்துடன் கையாள்கின்றனர்


பெண்ணுரிமை என்றால் என்ன? புணர்ச்சியின் நிலை என்ன? என்ற விடயத்தை ஆராய்ந்;து கொண்டு ஏங்கெஸ்சை எப்படி தனது நோக்கத்துக்குப் பயன்படுத்துகின்றனர் என ஆராய்வோம்.


பெண்ணுரிமை என்றால் வரைமுறையற்ற பாலியல் உரிமை என இன்று விளக்கம் கொடுக்கவும், அதை விமர்சித்தால் மார்க்சியவாதிகள் என்று முத்திரை குத்தி தாக்கவும் பின் நிற்கவில்லை. பெண்ணுரிமை என்ற பெயரில் பெண்கள் பாலியல் சுதந்திரம் கோரியா அலைகின்றனர்? இல்லை. மாறாக ஆணாதிக்க ஆண்கள் தான் அதைப் பெண்ணுரிமையின் பின்னால் தமது பாலுறவு (ளுநஒ) வேட்கையைத் தீர்த்துக் கொள்ள, எப்படிப் பொது மகளிர் விபச்சாரிகளை உருவாக்கி பாதுகாத்தனரோ, அதே பாணியில் பெண்களை ஒட்டு மொத்தமாக மாற்றிவிட முனைகின்றனர்.


இன்று உள்ள ஒருதாரக் குடும்ப அமைப்பில் பெண் மீதான ஆணின் பாலியல் மேலாதிக்கத்தை முழுப் பெண்கள் மீதும் திணித்து, அதை ஆண்கள் அனுபவிக்கக் கோருவதே இந்த ஏகாதிபத்திய உலகமயமாதல் என்ற காட்டுமிராண்டித்தனம்;;. பெண்ணாதிக்கம் நிலவிய காட்டுமிராண்டிச் சமூகத்தின் தொடர்ச்சியில் தனிச் சொத்துரிமை ஆணாதிக்கத்தை நிறுவிய தொடர்ச்சியில், கட்டுப்பாடற்ற வரையறையின்றி பெண்கள், ஆண்கள் உறவு கொண்ட சமுதாயத்தில், ஆணாதிக்கம் பெண்களின் புணர்ச்சி மீது சூறையாடித் துன்புறுத்திய போக்கில் பெண்கள் ஓர் ஆணைத் தெரிந்தெடுத்து, ஆணாதிக்கச் சொத்துரிமை ஆண்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ள எடுத்த தற்காப்பு நிலையை, சொத்துரிமை கொண்ட ஆண்கள் தமக்கு உரிமையாக்கிய தொடர்ச்சியில் தான் ஒருதார மணம் உருவானது. இங்கும் ஆணாதிக்கம் பெண்களின் தற்காப்புத் தெரிவைப் பறித்தெடுத்துத் தனக்குப் பெண்களைச் சொத்துரிமையாக்கியது.


தனிச் சொத்துரிமை சமூகத்துக்கு வெளியில் சிலரிடம் குவிவது வேகம் பெற்ற போது, பெண்ணின் தற்காப்புரிமை பறிக்கப்பட்டு அடிமைப்படுத்துவது தீவிரமாகியது. இது பெண்களின் மீது ஆண்களின் ஆணாதிக்கம் திணித்த நிகழ்ச்சியில், அதே ஆணாதிக்கம் புதிய சிறைக்குள் பெண்ணை நகர்த்தியது. இந்த வரலாற்று உண்மையை ஏகாதிபத்திய உலகமயமாதல் மறுத்து, பெண்களின் தேர்வைத் திரித்துக் கொச்சைப்படுத்திப் பெண்ணுரிமையின் பெயரில் மீளவும் வரைமுறையற்ற புணர்ச்சிக்கு, அதே ஆணாதிக்கத்திடம் பெண்ணின் கழுத்தைப் பிடித்து தள்ளிச் செல்கின்றது.


பாட்டாளி வர்க்கம் வரைமுறையற்ற ஆணாதிக்க விபச்சாரப் புணர்ச்சியையும், ஒருதாரமணத்தில் உள்ள காட்டுமிராண்டித்தனமான ஆணாதிக்கத்தையும் மறுத்து, மாறாகப் பரஸ்பரம் தெரிவைக் கோரும் ஒரு ஆண் - ஒரு பெண் மணமுறைக்குள் சுயாதீனமான வகையில் வாழவும், பிரியவும் உள்ள உரிமைக்குள் பெண்ணுரிமையிலான புணர்ச்சியை முன்வைக்கின்றது. இங்கு ஒருதாரமணம் என கூறுவது ஆணினால் மட்டும் தீர்மானிக்கப்படும் திருமணம், புணர்ச்சியைத்தான்;. பாட்டாளித் திருமணம் என்பது ஆண், பெண் என இருவரும் திருமணம் மற்றும் புணர்ச்சியில் ஆணாதிக்கத்துக்கு வெளியில் இணைவதையும், பிரிவதையும் குறிக்கும்.


அடுத்து ஒருதாரமணம் என்பது ஓர் ஆணும், பெண்ணும் ஆயுள் பூராவும் வாழக் கோரும் சமூக அமைப்பில் இது ஆணாதிக்கம் சார்ந்தது மட்டுமின்றி, அங்கு பெண் ஒருதார மணத்தில் சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையில் மட்டும்தான் வாழ்கின்றாள்.
இதனால் இந்தச் சமூக அமைப்பு தகரும் போது ஓர் ஆணும் பெண்ணும் நீடித்து வாழும் இன்றைய குடும்பங்கள் இல்லாது போய்விடுமா? போய்விடும் என்கின்றனர் ஏகாதிபத்தியப் பெண்ணிலைவாதிகளும், ஆணாதிக்கவாதிகளும். ஆகவே அதை இன்றே ஏகாதிபத்திய உலகமயமாதல் வழியில்; வரைமுறையற்ற புணர்ச்சில் தொடங்குவோம் என எச்சில் வழிய எழுதுகின்றனர்.


இதையே தமிழ் மக்களின் தேசியவிடுதலைப் போர் தொடங்கிய காலத்தில் பிளாட் (Pடுழுவு) இயக்கத்தில் மார்க்சியச் சாயம் பூசியவர்கள் ஏங்கெல்ஸ்சின் பெயரிலும், பெண்ணுரிமையின் பெயரிலும் ஆண், பெண் என ஒன்றாக வைத்து நடத்திய பாசறையில் வரைமுறையற்ற புணர்ச்சி பாட்டாளி வர்க்கச் சமுதாயத்தில் நிலவும் என்று ஏமாற்றி, அன்றே பெண்களைத் தமது ஆணாதிக்க வக்கிரத்துக்குப் பயன்படுத்தியவர்கள், இன்று அதே ஆணாதிக்கத்துடன் ஆய்வாளர்களாகவும், இராஜதந்திரிகளாகவும் உயிருடன் நடமாடுகின்றனர்.


கடந்த பத்து வருடத்துக்கு மேலாக ஐரோப்பாவில் இலக்கியம், அரசியல் பேசும் இலக்கியச் சந்திப்புகளின் வாரிசுகள் பெண் விடுதலையை ஒருதாரமணத்துக்கு எதிராகப் பலதாரமணத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்தனர். சமூக அக்கறை கொண்ட பெண்களை இக்கோட்பாட்டுக்குள் வழி நடத்தி தமது ஆணாதிக்கப் பாலியலுக்குப் பயன்படுத்தி விட்டு முரண்பாடு வருகின்ற போது அப்பெண்களை ''வேசை" எனப் பலர் முன்னிலையில் கூறவும் தயங்காத இலக்கிய வாரிசுகளையும், இன்றும் பெண்ணுரிமை பேசும் வாயடிப்புகளையும் இதன் பின் தெளிவாகக் காணமுடியும். அ.மார்க்ஸ் ''வெள்ளைத் திமிர்" என்ற நூலில் தமிழ்ப் பெண்ணை ''லெஸ்பியன்" என வாய்க் கூசாது தனது நோக்கத்துக்குப் பொய் எழுதியதையும் இதன் பின்னணியில் காணமுடியும்;.


ஓர் ஆணும் பெண்ணும் நீடித்து வாழ முடியாதா? அல்லது தனித்தனியாக வாழவும்; திடீர்திடீரென கூடும் வரைமுறையற்ற புணர்ச்சியா? மனிதச் சமுதாயத்தின் இலக்காக இருக்கும். இது இன்று அடிப்படையான முக்கியமான கேள்வியாக எம்முன் உள்ளது. கடந்து சென்ற சமுதாய நடைமுறையும் நிகழ்கால வாழ்வும் எதிர்காலத்தை வழிகாட்டுவதில், தீர்க்கமானவை.


இது சமுதாயம் தனக்குத் தேவையான பொருளாதாரத்தை எப்படி எதன் ஊடாக நிவர்த்தி செய்தது என்பதன் ஊடாக மட்டும்தான் ஆண் - பெண் உறவுமுறை தீர்மானிக்கப்படுகின்றது.


காட்டுமிராண்டிச் சமூகமாக மனிதன் இருந்த போது இயற்கை மீது மட்டும் உணவைச் சார்ந்து இருந்த போது, உணவுக்கான போராட்டத்தில் மிருகத்துடன் மனிதன் போராட வேண்டியிருந்தது. இதன் போது அவன் கூட்டமாக வாழ்வதும், போராடுவதுமே வாழ்க்கையாகக் கொண்ட நிலையில், ஆண் பெண் உறவும் எந்தக் கட்டுப்பாடுமின்றி கூட்டத்துக்குள் நீடித்தன. இந்தப் போக்குதான் மனிதத் தோற்றத்தின் மிக நீண்டகாலம் நீடித்த ஆண் - பெண் உறவுமுறையாக இருந்தது.


இங்கு உணவுப் போராட்டம் என்பது மற்றொரு மனிதக் குழுவுக்கிடையிலானதாகவும், மிருகத்துடனானதாகவும் இருந்த காலம் முழுக்கவும் குழுவைத் தாண்டிய ஆண் - பெண் உறவு நிகழவில்லை. இக்காலம் பெண்களை அடிப்படையாகக் கொண்டு மட்டும் குழந்தையை அடையாளம் காணக் கூடியதாக இருந்ததுடன் பெண்களே குடும்பத்துக்குத் தலைமை தாங்கவும் செய்தனர். அத்துடன் முதல் விவசாயியாகப் பெண் இருந்ததுடன், உயிருடன் பிடிபட்ட மிருகங்களைப் பெண் வளர்க்கவும் கற்றுக் கொண்டாள்;. பெண்ணின் இக் கண்டுபிடிப்பு மனிதக் குலத்தின் முக்கியமான பாய்ச்சலுக்குரிய ஒன்றாக இருந்தது. இதனால் உணவு கிடைக்காத நிலையிலும் பெண் உணவு கொடுக்கும் ஒரு பொருளாதார அடிப்படையைக் கொண்டு இருந்ததால் பெண்ணின் மதிப்பு மேலும் உயர்ந்தது. இதுவே பின்னால் பெண்ணை அடிமைப்படுத்த நெம்புகோலாகவும் மாறியது.


பின்னால் கால்நடை வளர்ப்புடன் விரிவுபடத் தொடங்கியது முதல், வேலைப் பிரிவினையும், நிலத்தில் நடந்த உற்பத்தியும் உபரியை (மேலாதிக்கத்தை) உருவாக்கியதால் மனிதன் மேலதிக உற்பத்திக்கான வழிவகைகளைக் காணத் தொடங்கினான். இதில் இருந்தே முதல்; வர்க்கப் பிளவு உருவானதுடன், இதுவே பெண்ணை அடிமையாக்கியது.


இதன் தொடர்ச்சியில் மற்ற குழுக்களுக்கிடையிலான யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டவரைக் கொன்று விடும் மரபில் இருந்து அவனை வைத்திருப்பதன் மூலம் மேலதிக உபரியைச் சேகரிக்க முடியும் என கண்டு கொண்ட நிலையில் உபரி ஆணைச் சார்ந்ததால், பெண் தனது அதிகாரத்தைச் சொத்துரிமையின் பின்னால் மேலும் இழந்தாள்;. யுத்தத்தில் கூடுதலாக ஆண்கள் ஈடுபட்டதால் கைதான மனித அடிமைகள் அவனின் சொத்தாக மாறவும், அதன் மூலம் மேலதிக உபரியை ஆண் பெறத்தொடங்கிய நிகழ்ச்சிப் போக்கில்தான், ஆண் பெண்ணிடம் இருந்து அதிகாரத்தை நீண்ட பல போராட்டத்தினூடாகப் பொருளாதார ஆதிக்கத்தின் ஊடாகக் கைப்பற்றிக் கொண்டான்.


இக்காலத்தின் முன் நீடித்து வந்த வரைமுறையற்ற குழுவுக்கிடையிலான புணர்ச்சியில் அன்பு, காதல் என எதுவும் இருந்தது கிடையாது. இங்கு ஜனநாயகம் என எதுவும் இருந்ததில்லை. ஆண் பெண் இனவிருத்தி வேறுபாட்டுக்கு அப்பால் யாரும் அடிமையாக வேறுபட்டு இருக்கவில்லை.


இதன் பின்னான சமுதாயத்தில் பெண்ணாதிக்கம் ஆணின் பொருளாதார மேன்மையுடன் ஆணாதிக்கத்துக்குக் கை மாறிய நிலையில், ஆணாதிக்கம் பெண்கள் மீது பொருளாதார மேலாதிக்கம் மூலம் பாலியல் வன்முறையைக் கையாண்டது, கையாள்கின்றது. பெண்கள் மீதான ஆணாதிக்கமும், பெண்கள் மீதான ஆணின் ஒருதலைபட்சமான பாலியல் வேட்கையும் பெண்களைச் சூறையாட, பெண்கள் இதிலிருந்து தப்பித்துச் செல்ல, குறித்த ஆணைப் பெண் தேர்ந்தெடுப்பதன் மூலம் தற்காப்பைப் பெற்றாள். இந்தப் போக்கில் தனிச் சொத்துரிமைக்குத் துணையாகப் பெருகிய உபரியும் சேர அங்கு காதலும், அன்பும் இணைந்து கொண்டது. அதாவது சொத்துரிமையின் மேலும், ஆணாதிக்கக் கொடூரத்தின் மேலும், காதல் - ஜனநாயகம் - அன்பு என்பன சமுதாயத்துக்குள் புகுந்து கொண்டது.
பெண் ஒரு தலைபட்சமாக ஒருதாரமணத்தைத் தேர்ந்தெடுத்த சமூகப் போக்கிற்கு ஆணின் கொடூரமே காரணமாகும். இங்கு அக்கம்பக்கமாக இணைமணங்கள் கூட இதன் தொடர்ச்சியில் தனிச்சொத்துரிமை ஆதிக்கம் பெறாத நிலைகளில் நீடித்தும் இருந்தது. பெண்கள் மீதான ஆணின் நெருக்குதல்களில் இருந்து பெண் மீள்வதுக்குப் பெண் தெரிவு செய்த ஒருதாரமணம் பாதுகாப்பான வடிவமாக இருந்தது. இதற்கு எதிராக ஆணாதிக்கம் பெண் மீதான அனுபவிக்கும் ஆணாதிக்க உரிமையைக் கோரி நின்றது.


ரிக் வேதத்தில், ''ஹே குமாரி! உன்னுடைய முலைகள் பரந்திருக்கின்றன. நீ நினைப்பது போல நீ இப்போது சிறு பெண் இல்லை. உன்னுடைய முலைகள் புருஷனால் பிசையப்பட வேண்டியவையாகும்;. உன் தாயார் அவரது முலைகளைப் புருஷர்களிடம் கொடுக்காததால் தொங்கிப் போய் விட்டது. தகராறு செய்யாமல் நீ இடத்திற்கு வருவாயோ?"18 என்ற பார்ப்பனிய ஆணாதிக்க வேதச் சூத்திரங்களின் பின் பெண்களின் போராட்டத்தையும், பெண்ணின் தெரிவையும் துல்லியமாக்குகின்றது. ஒருதாரமணம் ஆணின் தெரிவல்ல பெண்ணின் தெரிவு என்ற ஏங்கெல்ஸ்சின் சரியான கண்டுபிடிப்பை இது நிறுவுகின்றது. ஆனால் ஒருதாரமணத்தைப் பெண்ணின் தெரிவாகக் காட்டும்போதே, அதைத் திரித்து பெண் பல கணவன் மணத்தைப் போராடிப் பெற வேண்டியதாகக் காட்டும் வடிவங்கள் ஏகாதிபத்தியப் பெண்ணியச் சீரழிவின் பாதையில் இணைவதாகும்.


பெண்கள் ஆணின் துன்புறுத்தலில் இருந்து ஒதுங்கியதையும், பெண்ணின் ஒரு தலைப்பட்சத் தெரிவையும் காட்டுகின்றது. இதில் தாய், மகள் என்ற இரு தலைமுறையின் போராட்டத்தில் ஆணாதிக்கத்தின் இழுபறியான போராட்டத்தையும், ஆணாதிக்கப் பலதாரமணத்தின் போக்கையும் வெளிப்படுத்துகின்றது. பெண் ஒருதாரமணத்தின் ஊடாக தற்காப்பு பெற்றதையும் காட்டுகின்றது. அத்துடன் பெண்ணின் விபச்சாரத்தைக் கோருவதில் பின் நிற்காத ஆணாதிக்க விளக்கமும் முன்வைக்கப்படுகின்றது.


இன்று உயிரியல் ஆய்வாளர்கள் தமது ஆய்வைக் குரங்கு இனங்களின் வளர்ச்சி பெற்ற இனங்கள் மீது நடத்திய போது பல உண்மைகளைப் படமாக்கி உள்ளனர். பெண் குரங்கு மீது பாலியல் வேட்கையுடன் ஆண் குரங்குகள் போட்டி போடுவதையும், பெண் குரங்கு மறுத்து போராடுவதனூடாகப் பெண் குரங்கு தன்னை ஓர் ஆண் குரங்கிடம் ஒப்படைப்பதையும் காண முடிகின்றது. ஆண் குரங்கு இந்தப் பாலியல் வேட்கையில் சண்டை செய்து வெல்வது அவசியமானதாக இருக்கின்றது. இது மட்டும்தான் பெண் குரங்கின் மீதான மற்ற ஆண் குரங்கினால் ஏற்படும் பாலியல் வன்முறையில் இருந்து தடுக்கின்றது. யுத்தத்தில் வெல்லும் ஆண் குரங்கின் பலம் தான் மற்ற ஆண் குரங்குகளின் வன்முறைக்கு எதிரான தற்காப்பைப் பெண் குரங்கிற்கு வழங்குகின்றது. இங்கு பெண் குரங்கு விரும்பி அனுமதிப்பது நிபந்தனையாகின்றது. வேறு சில இனங்களில் ஆண் குரங்கானது பெண் குரங்கு விரும்பும் அன்பளிப்பை வழங்குவதன் மூலம், பெண் குரங்கு ஏற்றுக் கொண்டால் மட்டுமே உறவு வரையறுக்கப்படுகின்றது. இங்கு பல ஆண் குரங்குகள் ஒரு பெண் குரங்குடன் உறவு கொள்ள போராடும் போது, பெண் குரங்கு ஒன்றை மட்டும் தெரிவு செய்கின்றது. இந்த ஜோடி அந்தப் பாலியல் தேவையின் காலத்துக்குள்ளும், சில குறித்த காலத்துக்கும், சில நீண்ட ஆயுளுக்கும் என பலவாகக் குரங்கு இனத்துக்குள் மாறுபடுகின்றன. இது மனித இனத்துக்குள்ளும் வேறுபாடு இன்றி பல பண்புகள் நீடிக்கின்றன.


பழைய காலத்தில் ஆண் தனது வீரத்தைப் பெண்ணுக்கு நிலை நாட்டிய நிலையில்தான் பெண் மாலையிடும் வடிவங்கள் இருந்தன. பல புராணக் கதைகள் இதை வெளிப்படுத்துகின்றன. இதேபோல் பல ஆண்களை நிறுத்தி, அதில் பெண் தேர்ந்து எடுத்து, ஒருவனுக்கு மாலையிடுவது போன்றன பெண் தனது தற்காப்பை நாடி தெரிந்த ஒருதார மணத்தின் எச்சமாகும்;. இதுபோல் சாமத்தியச் சடங்குகள் ஆரம்பத்தில் பெண் ஆணைத் தெரிவு செய்யும் ஒரு சடங்காகவே இருந்தது. தாய்மாமனுக்கு இருக்கும் உரிமை தாய்வழிச் சமூகத்திலிருந்து பின்னால் மருவியதில் ஏற்பட்டவையே. இவை பெண்ணின் உரிமையாக இருந்தது.


முன்பு யுத்த மூலம் அடைந்தவை வீரவிளையாட்டுகள் மூலம் பெண்ணைத் திருப்தி செய்ய வேண்டியிருந்தது. இவை பின்னால் ஆதிக்கம் பெற்ற தனிச்சொத்துரிமை மூலதனத்தின் பின்னால் மறுக்கப்பட்டது. குறித்த தனிச்சொத்து பலத்தைத் தீர்மானிப்பதாக மாறிய போது பெண்ணின் தெரிவு மறுக்கப்பட்டுச் சொத்து தெரிவு ஒருதாரமணத்தின் மூலமாகியது.


இன்றுவரை கூட காதலை எடுத்தால், பெண்ணுக்கு அதுவே தற்காப்பு வேலியாக உள்ளதுடன், பெண் மட்டுமே ஒருதார மணத்தில் காதலிப்பவளாகவும் உள்ளாள். ஆண்கள் எப்போதும் பலதாரமணத்தின் பிரதிநிதியாக இருந்தபடி பெண்ணிடம் ஒருதாரமணத்தைத் திணிக்கின்றான். பெண்கள் இந்த வன்முறையை மீற விரும்பும் போது ஒருக்காலும் பல ஆண்களின் ஆணாதிக்கத்தை, ஒரு ஆணுக்குப் பதில் கோரிப் போராடவில்லை. மாறாக மனமொத்து வாழும் சுயநிர்ணயத்தையே அடிப்படையாகக் கொண்ட, இணைமணமே கோரிக்கையாக எப்போதும் இருந்துள்ளது. ஆனால் இது ஆணாதிக்கத்தின் இருதரப்பால் எப்போதும் கொச்சைப்படுத்தப்பட்டு வருகின்றது.


முதலாவதாகப் பெண்ணுரிமையின் பெயரில் ஆணாதிக்கவாதிகள் தமது பலதாரப் பாலியல் வேட்கைக்குப் பெண்களைப் பயன்படுத்த, பெண்களின் சுயநிர்ணயக் கோரிக்கையைக் கொச்சைப்படுத்தி, அவர்களின் விடுதலைக்கு எதிராகத் தமது ஆணாதிக்கத் தகவமைப்பைப் பாதுகாக்க, பெண்ணுரிமையின் பெயரால் பெண்களைத் தமது விபச்சார வேட்கைக்குள் நகர்த்த வரைமுறையற்ற புணர்ச்சி கோட்பாட்டை வைக்கின்றனர். இவர்கள் இதனடிப்படையில் பெண்ணுக்கு கற்பு இல்லை என்கின்றனர். கற்பு பற்றிய திரிபுக்கூடானக் கொடூரமான ஆணாதிக்க நடத்தையைச் சாதகமாக்கும் ஏகாதிபத்திய ஆணாதிக்கம், இதனூடாக விபச்சாரத்தை முன்மொழிகின்றனர். இது ஏகாதிபத்தியப் பொருளாதார வடிவமாக நீடிக்கின்றது.


இரண்டாவது தரப்பு ஒருதாரமணத்தில் பெண் மட்டும் காதலிக்கவும், ஆண் பலதார மணத்தில் நீடிக்கவும் உள்ள சலுகைகளைத் (வரைமுறையற்ற புணர்ச்சியைத்) தக்கவைக்க, பெண்ணின் சுயநிர்ணயக் கோரிக்கையைக் கொச்சைப்படுத்தி பல கணவன் வாழ்வைக் கோருவதாகச் சேறடிக்கின்றனர். இவர்களும் கற்பு உண்டு என்கின்றனர். இதன் மூலம் திரிவுபடுத்திய கற்புக் கோட்பாட்டை விபச்சாரத்துக்கு எதிராக முன்நிறுத்தி நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க ஒருதாரமணத்தில் பெண்ணைச் சிறை வைக்கின்றனர். இது நிலப்பிரபுத்துவப் பொருளாதார வடிவமாக நீடிக்கின்றது.
பெண்ணின் சுயநிர்ணயக் கோரிக்கையான பரஸ்பரம் காதலிக்கவும் சேர்ந்து வாழும் உரிமையைத் திரிபுபட கொச்சைப்படுத்தி, ஒரு தரப்பு பலகணவன் வாழ்வைக் கோருவதாகக் காட்டி எதிர்க்க, மறு தரப்பு பல கணவன் மணத்தைக் கோருவதோடு இருவரும் அச்சொட்டாக ஒரே புள்ளியில் ஒரே நோக்கத்;துக்காக இணைகின்றனர். இரண்டையும் பெண் எதிர்க்கின்றாள் என்பதை மூடிமறைப்பதன் மூலம், ஆணாதிக்க நலன்களை மூடி கலர் (வண்ணம்) அடிக்கின்றனர்.


பல கணவன் முறையைக் கோருபவரின் கோட்பாடு ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு இசைவாக இருக்க, கோருவதாகக் காட்டும் (கோருவதாகக் கூறி எதிர்க்கும்) கோட்பாடு நிலப்பிரபுத்துவப் பொருளாதாரப் பண்பாட்டுக்கு இசைவாக உள்ளது. அதனால் தான் இரு பொருளாதார அமைப்பும் ஒன்றில் இருந்து ஒன்று விலகாதவாறு உலகளவில் (ஏகாதிபத்தியத்திய நாடுகளில் தேசிய முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தை ஒழித்துவிட்டது.) ஆளும் வர்க்கமாக இன்று உள்ளனர். இது பெண் பற்றிய மதிப்பீட்டிலும் ஒன்றாக உள்ளது.


இன்று பண்பாட்டு ரீதியில், கலாச்சார ரீதியில், பொருளாதார ரீதியில் எடுத்தால் ஏகாதிபத்தியப் பொருளாதார அலகு பெண்ணை வெறும் கவர்ச்சிப் பண்டமாக, தன் கூலிப் பட்டாளமாக அடையாளப்படுத்திய சமூக அமைப்பை உலகின் முன் படைத்துள்ளதுடன் அதை உலகம் தழுவிய அளவில் நகர்த்துகின்றது. இன்று ஏகாதிபத்தியப் பொருட்களின் சந்தை ஆணாதிக்க வக்கிரக் கண்முன் (இங்கு ஆண் - பெண் வேறுபாடின்றி) பெண் நிர்வாணக் கோலத்தில் அவளின் பெண் உறுப்புகள் மீது மட்டுமே குவிந்து சாத்தியமாக்கியுள்ளது.


ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள பெண்களும், மூன்றாம் உலகின் மத்தியதர வர்க்கத்துக்கு மேல் உள்ள பிரிவுப் பெண்களும், சர்வதேச வர்த்தக நலனுக்குள் கட்டமைக்கப்படுகின்றாள். பெண்ணின் அழகு, உடல் அங்கங்கள், அவளின் மாறுபட்ட உடைகள், அவளின் அழகு சாதனப் பொருட்கள், அவள் பயன்படுத்தும் சர்வதேசத் தர நிர்ணயம் பெற்ற பொருட்கள், அவள் பயன்படுத்தும் பொருட்கள், அவளின் அணுகுமுறைகள்...... என அனைத்தும் எப்படி, எங்கு, யாருக்கு என தீர்மானகரமான வகையில் வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்கு வெளியில் யாரும் சுதந்திரமாக இருக்கவோ, சிந்திக்கவோ, காதல் செய்யவோ முடியாது. இதற்கு எதிரான போராட்டம் கூட இதற்குள்ளானதே ஒழிய வெளியில் அல்ல.


இந்தச் சமுதாய அமைப்பில் பலதார மணவாழ்க்கையை ஆண்களுக்கு உள்ளது போல் பெண்களுக்கும் பல கணவன் வாழ்க்கையை ஏகாதிபத்தியம் ஏன் சிபாரிசு செய்கின்றது? என்பதை ஆராய்வோம்.


பெண்கள் தமது தற்காப்புக்காக ஓர் ஆணைத் தேர்ந்து எடுத்த (இந்தப் போராட்டத்தில் பெண்களின் மீதான ஆணின் பலதாரமண வேட்கையை விட்டுக் கொடுக்காத போராட்டத்தில், ஆணாதிக்கத்தின் ஆளும் வர்க்கம் பெண்களிடம் சமரசம் செய்யும் போது தனிச் சொத்துரிமையின் வாரிசு உரிமையூடாகவும், பெண்ணின் திருமணத்துக்கு முன்னால் அப்பெண்ணைப் பொதுவில் அனுபவிக்கவும் அல்லது பூசாரியோ, அச்சமூகத் தலைவனோ தனியாகவும், கூட்டாகவும் திருமணத்துக்கு முன் முன்னுரிமை எடுத்து அப்பெண்ணை அனுபவிக்கும் உரிமையை மிக அண்மைக் காலம் வரை தக்கவைத்த ஆணாதிக்கப் பலதாரமண முறையைப் பெண்ணின் ஒருதாரமணத் தெரிவுக்கு எதிராகத் தக்கவைத்து நீடித்தது. இதன் தொடர்ச்சியால் தான் விபச்சாரமும், பொதுவான மகளிர் பிரிவுகளும் உருவாகின.) ஜனநாயக உரிமையை ஆணாதிக்கம் மறுத்து, தனது தனிச் சொத்துரிமையின் பின்னால் இறுகிய ஒருதாரமணத்தைத் திணித்து, இன்று தனது வாரிசுகளை உருவாக்க நீடித்த குடும்ப அமைப்பு ஏகாதிபத்திய உலகமயமாதலின் பின் அவசியமற்றதாகி உள்ளது.


சொத்துரிமை என்பது பரந்துபட்ட மக்களிடம் இனி நீடிக்க முடியாது பறி போகின்றபோது வாரிசுரிமை என்பது பரந்துபட்ட மக்களிடம் அவசியமற்றதாகின்றது. ஆணாதிக்க ஒருதாரமணம் தனிச் சொத்துரிமையில் மொத்த மக்கள் முன் வாரிசுரிமையின் பெயரில் எப்படி வளர்ச்சி பெற்றதோ, அதே வழியில் சொத்துரிமை பரந்துபட்ட மக்களிடம் இல்லாது போகி;ன்றபோது, ஆணாதிக்க ஒருதாரகுடும்ப அமைப்பு தகர்கின்றது. இந்தத் தகர்வு என்பது இரு தளங்களில் நடக்கின்றது. பாட்டாளி வர்க்க வழிகளிலும், ஏகாதிபத்திய வழிகளிலும் இது வேகம் பெற்றுள்ளது.


சொத்துரிமையில் வாரிசுக்கான குடும்ப அலகு, ஏகாதிபத்திய உலகமயமாதலால் சொத்துரிமை பரந்துபட்ட மக்களிடம் தகர்கின்ற போதும், தொடர்ந்து சமூகம் தனிச் சொத்துரிமை வடிவில் இன்று நீடிப்பதால் ஆணாதிக்கமும் அதன் எல்லைக்குள் நீடிக்கின்றது. தனிச்சொத்துரிமை விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரிடம் நகர்த்திச் செல்லும் போக்கில் சொத்துரிமை அற்றவன், தனிச் சொத்துரிமையைப் பெற்று முன்னேற முடியும் என்ற ஜனநாயகச் சுதந்திர வடிவத்தின் மீதான நம்பிக்கைகள் நீடிக்கின்ற போக்கில், ஆணாதிக்கம் ஏகாதிபத்திய வடிவில் நீடிக்கின்றது.


மார்க்ஸ் சொத்துரிமை பற்றிய ஆய்வுகளில் கூறும்; வரிகள் தான் இதன் அடிப்படையாகும். ''ஒவ்வொரு குடிமகனுக்கும் முதற்பெரும் கடமை மூலதனம் திரட்டுதலே என விதிப்பது முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்களுக்கு மிக முக்கியமானதாய் இருந்தது."35 இங்கு ஒரு கேள்வி எழலாம். அந்தச் சிலரிடம் உள்ள சொத்துரிமைக்குப் பின்னால் உள்ள வாரிசுரிமையின் குடும்ப நிலை என்ன?
ஏகாதிபத்தியச் சொத்துரிமை வாரிசுகளான பிரிவுகள் எப்போதும் இக்குடும்ப அமைப்பைப் பாதுகாக்க விடாப்பிடியாக நிற்க முயல்கின்றன. ஆனால் சொத்து குடும்பத்துக்கு இடையில் பிரியாத பெரும் சொத்து வர்க்கத்திற்குத் தேவையான தனிக் குழந்தைகளான குடும்பத்தைப் பெரும் சொத்துடைய வர்க்கம் விரும்புகின்றது. அத்துடன் இன்றைய திருமணங்கள் பெண்களுக்குச் சொத்தில் பங்களிப்பதால், நடைபெறும் விவாகரத்துகள் சொத்தைப் பிளந்துவிடும் என்பதால், சொத்தைப் பிளக்காது குடும்பத்தை உருவாக்க, உயர் சொத்துடைய வர்க்கத்தாலும் குடும்பத்தைப் பாதுகாக்க முடியவில்லை. மாறாகப் பழைய குடும்பத்தை நவீனத்தில் விரும்புகின்றன. ஆனாலும் ஏகாதிபத்தியச் சொத்துரிமை பலம் கொண்டது என்பதால் அதன் வீச்சு பண்பாடு, கலாச்சாரம் என எல்லாவற்றிலும் ஆழப் புதைந்து போயுள்ள போது, இருந்த பாரம்பரியமான குடும்ப முறை பரந்துபட்ட மக்களிடம் சொத்துரிமை என்ற பொருளாதார அடிப்படையின்றி சிதறிவிடுகின்றது. சொத்துரிமையும் வேண்டும், பழைய வாரிசுரிமையிலான குடும்ப அமைப்பும் வேண்டும் என்ற முரண்பாட்டில் இருந்து பெருமளவு சொத்துடைய வர்க்கப் பிரிவு பழைய வரைமுறையற்ற புணர்ச்சியைத் தன்னகத்தே எடுத்துக் கொண்டது. அதாவது சொத்துரிமையின் பின்னால் நீடித்த ஒருதாரக்குடும்ப அமைப்புக்கு வெளியில் பொது மகளிர் முறையான விபச்சாரம், கோயிலுக்கு விடுவது, மன்னர் மாளிகைகள், வணிகர் அந்தப்புரங்கள், பொது களியாட்ட மையங்களில் பெண்களை அனுபவித்த பணக்காரர்கள், இன்று அதைப் பொதுவான சமூக நடைமுறைக்குள் முரண்பாட்டுடன் நகர்த்தியுள்ளனர்.


இன்று சாதாரண திரைப்படத்தில் கூட படுக்கையறைக் காட்சி நீலப் படத்துக்குப் புறம்பாக எங்கும் புகுந்து விட்டது. திரைப்படங்கள், தொலைக்காட்சிப் படங்கள் ஒரு கதாநாயகன் (இவன் இச்சமூக அமைப்பைப் பாதுகாக்கும் நேர்மையுள்ள உதாரண மனிதனாக இச்சமூகம் அங்கீகரிக்கும்.) தொலை நோக்கு கண்ணாடி கொண்டு அடுக்கு மாடிகளில் பெண்களின் நிர்வாணக் காட்சியையோ, புணர்ச்சிக் காட்சியையோ தேடும் சமூக முன்னுதாரணத்தைக் காட்டி இன்று சமூகம் அதை நடைமுறையாகக் கையாள்கின்றது.


அண்மையில் பிரெஞ்சு நீதிமன்றத்தில் நீதி கிடைக்காத ஒரு பெண், பிரான்சு தொலைக்காட்சியில் - பக்கத்து வீட்டுக்காரன் தனது சுவரில் மெல்லிய துளையிட்டு மிக நுண்ணிய கேமரா கொண்டு (உளவு அமைப்புகள் போன்று) தனது புணர்ச்சியைப் பார்த்த வக்கிரத்தை அம்பலப்படுத்தி நீதி கோரினாள். திரைப்படத்தில் சிறைக்குள் ஆய்வு செய்யச் சென்ற பெண்ணை, பொலிசுக்குத் தெரியாமல் கத்தி முனையில் பெண்ணின் உள்ளாடையைப் பறித்த காட்சி இச்சமூகத்துக்கு முன் அதைச் செய்யவும், இது கூட புணர்ச்சிக்கான பாதையாகவும் காட்டுகின்றனர். இப்படி பல.


இன்று ஜப்பான், அமெரிக்கா எங்கும் பாடசாலையைச் சுற்றிலும், வெளியிலும் பெண்கள் அணிந்த உள்ளாடைகள் முதல், வயது, பெண் பற்றிய தரவுகள் வரை படத்துடன் விற்பனைக்கு வந்துள்ளது. இது கூட புணர்ச்சியை அனுபவிக்கும் விடயமாக, தனிப்பட்ட பிரச்சினையாகக் காட்டப்படுகின்றது. இந்தப் பாலியல் (ளுநஒ) வடிவத்தை ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கும் அனைத்து முதலாளித்துவக் கோட்பாட்டு பற்றி சீரழிவாளர்கள் என்ன சொல்வார்களோ தெரியவில்லை.


இன்று நீலப்படங்களில் மட்டும் நீடிக்கும் மிருகங்கள் உடனான பாலியல் உறவும், இன்பமும்(?!) நாளைச் சமூக நடைமுறையாக வர நீண்ட காலம் செல்லாது. ஏனெனின் இன்று ஏகாதிபத்திய நாடுகளில் மனிதனின் அன்புக்குரிய வளர்ப்பு மிருகங்கள் மூலம் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய தயார் நிலையில் உள்ளதால்,

 இதைக் கொண்டே குடும்பத்தைத் தகர்க்க வேகமாகப் பயன்படுத்தமுடியும்.


இன்று வீட்டு மிருகங்களை (நாய், பூனை) மனிதனை விட அன்புக்கு உரியனவாக ஏகாதிபத்திய மக்களால் வளர்க்கப்படும் சதவீதத்தைத்தான் அட்டவணை 8-இல் பார்க்கின்றோம்.


அட்டவணை - 8


புள்ளிவிபரம்1


நாடுகள்                                 சதவீதம்
அமெரிக்கா                            60%

 

 

இத்தாலி                                  41%
பிரான்ஸ்                                 35%
இங்கிலாந்து                          29%

 


இந்த மிருகங்கள் மனிதனின் படுக்கையறைக் கட்டிலைப் பகிர்கின்றது. முத்தத்தை வழங்குகின்றது. உழைப்பைப் பகிர்கின்றது. அடிமைத்தனத்தில் அதன் மிருக எல்லைக்குள் உடலுறவுக்கு முந்திய அனைத்தையும் இம்மிருகங்கள் மனிதனுடன் பங்கிட்டுப் பெற்றுக் கொள்கின்றது. இதைத் தொலைக்காட்சிகள் பெருமைப்பட இந்தக் கேவலத்தைக் காட்டுகின்றன. பாலியல் உறவு மட்டும்தான் காட்சிப்படுத்தப்படவில்லை. ஆனால் நீலப்படம் மிருகப் புணர்ச்சியை உள்ளடக்கியே வெளிவருகின்றது.


அண்மையில் சிறைக்கு அனுப்பிய ஒரு வழக்கில், பால்குடி பேரக் குழந்தையின் பால் தேவையைப் பூர்த்தி செய்ய மறுத்து, தனது ஆண் உறுப்பின் வக்கிரத் தேவையை ஈடு செய்ததை அடுத்து, பிரெஞ்சு நீதிமன்றம் வரை சென்றது போன்ற நிகழ்ச்சிகள் இந்தச் சமுதாயத்தின் அவலத்தைக் காட்டுகின்றது. நாய், பூனைகள் தமது செல்வச் சீமான், சீமாட்டிகளின் மார்புகளிலும், மடிகளின் கீழுள்ள வக்கிரங்களைப் பூர்த்தி செய்யும் பணியை மறுப்பதுக்கு எந்தவிதமான மறுவிளக்கமும் அவசியமற்றவை.


நாளைப் பெண்ணியமும், ஜனநாயகச் சுதந்திரமும் மிருகப் புணர்ச்சி இயற்கையென்றும், தனிப்பட்ட உடலுடன் தொடர்புடையது என்று போகிற போக்கில் வாதிடுவர் என்பது அவர்களின் இழிவான சீரழிவுகள் காட்டுகின்றது.


இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டால் பாலியல் இன்பம் அடைய முடியும் என்ற விளம்பரம், திரைப்படங்கள் எல்லாம் ஏகாதிபத்திய விளை பொருளாகி நடைமுறைக்கு வந்துள்ளது.


இன்று புதிய தொழில் நுட்பமான இணையத்தில் (ஐவெநசநெவ) ஆண் பெண் சந்திக்காமலே பாலியல் நுகர்வை அடைய முடியும் என்ற விளம்பரம் மட்டுமின்றி இது எதார்த்தமாக்கப்பட்டுள்ளது. இதற்கான மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இணையத்தில்; (ஐவெநசநெவ) நேரடியாகப் பெண் தோன்றி கதைத்தபடி (பேசியபடி) ஆடையுரிவு முதல் அனைத்தையும் பாலியல் வக்கிரத்தில் பெறமுடியும்.


ஏகாதிபத்தியச் சீரழிவாளர்கள் ஓரினச் சேர்க்கை, கூட்டுக் கலவி, தொலைபேசிக் கலவி, இணையத்தில் (ஐவெநசநெவ) கலவி, உள்ளாடைக் கலவி, நீலப்படக் கலவி, மிருகக் கலவி என அனைத்தையும் நியாயப்படுத்தவும், பாதுகாக்கவும் கட்டுரையையும், இலக்கியத்தையும், கலையையும் சுதந்திரத்தின் பின் உருவாக்குகிறது, இது ஊர் உலகத்தில் இல்லாததா எனக் கூறி நியாயப்படுத்தவும் செய்கிறது. இவைகளை ஜனநாயகத்தின் பெயரில் தனிமனிதச் செயலாக, சுதந்திரமாகக் காட்டி இந்த ஏகாதிபத்திய விளைவுகளை நியாயம் கற்பிக்கப் பின்நிற்கவில்லை, அதை முன்னெடுக்கின்றனர்.


அண்மையில் பிரான்சில் ஏகாதிபத்தியப் பொருளாதார அமைப்பைப் பாதுகாத்து முன்னெடுக்கும் சோசலிச, போலி கம்யூனிச, பச்சைக் கட்சிகள் ஓரினச் சேர்க்கையைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கொண்டு வந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் முதல் சுற்றில் தோற்றுப் போனது. ஆனாலும் ஜனநாயகத்தின் பெயரில், தனி மனித உரிமையின் பெயரில் உலகைச் சுரண்டும் ஏகாதிபத்திய அரசு, பெண்களை இரண்டாம் தர பிரஜையாக வைத்துள்ள அரசு, சட்டமூலத்தைச் சமர்ப்பித்ததன் பின் ஜனநாயகம் யாருடையது என்பதைத் துல்லியமாக்கியுள்ளது.