07022022
Last updateபு, 02 மார் 2022 7pm

பார்ப்பினிய பயங்கரவாத பாசிஸ்டு கோமாளிகள் I - எடியூரப்பா

பொதுவாக பார்ப்பனிய பத்திரிகைகளின்/ஊடகங்களின் மிக முக்கியமான தந்திரம் பார்ப்பனிய எதிர்ப்பாளர்களை கோமாளிகளாக சித்தரிப்பதும், பார்ப்பனிய பயஙகரவாதிகளை மிக ரீஜெண்டாக சித்தரிப்பதும் ஆகும். பார்ப்பனிய எதிர்ப்பு என்பது நக்கிப் பிழைப்பதற்க்கான எதிர்ப்பாக இருந்தாலும் சரி அல்லது சுத்த சுயம்புவான பெரியாரிய பாணி எதிர்ப்பாக இருந்தாலும் சரி பார்ப்பனிய ஊடகங்களின் இலக்குக்கு அவை ஆளாகி விடுகின்றன.


எடுத்துக்காட்டுக்கு, கர்நாடகாவின் தேவ கௌடாவை எடுத்துக் கொண்டால் அவர் ஒரு சோம்பேறி, தூங்கு மூஞ்சி, கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதி என்ற விசயங்களை வெகு விமரிசையாக அதற்க்கு தோதான படங்களுடன் தொடர்ந்து செய்தி வெளியிட்டு இந்த பத்திரிகைகள் பிரச்சாரம் செய்கின்றன. இதே போல லல்லு பிரசாத் யாதவ், கருணாநிதி, வீரமணி, திருமாவளவன், ராமதாஸ் போன்றவர்களை கோமாளிகளாகவும், உண்மையான திறமையற்றவர்களாகவும் சித்திரித்தே இந்த பத்திரிகைகள் எழுதுகின்றன(அதாவது அப்துல் கலாம், அத்துவானி போல மெஜஸ்டிக்கான திறமையில்லாதவர்கள்). விசயம் என்னவென்றால் இவையெல்லாம் உண்மைதான். இவர்கள் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள், காரியவாதிகள் என்பதிலெல்லாம் சந்தேகமேயில்லை. ஆனால் இவர்களை மட்டும் குறிப்பிட்டு பிரச்சாரம் செய்யும் பார்ப்பனிய கொழுப்பெடுத்த பத்திரிகைகள் இதேவிட பல மடங்கு கோமாளித்தனமான, சந்தர்ப்பவாத பார்ப்பன பயங்கரவாதிகளை ஏதோ ஆகச் சிறந்த பண்பாளர்களாகவே சித்தரிக்கிறது.

ஒரு எடுத்துக்காட்டுக்கு: நம்ம இராம. கோபாலன் ஒரு ஆள் போதும். இன்னொரு வக்கிர வில்லன் கம் காமெடியன் என்றால் அது காஞ்சி போன காம கேடி ஜெயேந்திரன். தேவகௌடாவிற்கு இணையான ஆளாக வாஜபேயி என்ற பொய்யர் இருக்கிறார். குறிப்பாக உழைக்கும் மக்களை அவர்களின் கோரிக்கையின் அடிப்படையிலேயே அணி திரட்டியுள்ள தலைவர்களாயிருந்தால் பார்ப்பனிய கும்பலுக்கு அல்வா சாப்பிடுவது போல. படு கேவலப்படுத்தி எழுதுவார்கள். உண்மையிலேயே அந்த தலைவர் அந்த உழைக்கும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டிய அவசியம் கூட இருக்க வேண்டியதில்லை, மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் மக்களை அணி திரட்டியிருந்தாலே போதும். எடுத்துக்காட்டுக்கு: திருமா, கிருஷ்ணசாமி உள்ளிட்டோர். இந்த கும்பலில் இவர்களின் ஆதரவாளர்களே இருந்தால் கூட கேவலப்படுத்துவார்கள். எடுத்துக்காட்டுக்கு: மும்பையின் பால்தாக்கரே, அவனோட அரசியல் வாரிசுகள் (இவர்கள் பாசிஸ்டுகளாய் இருந்தால் கூட இவர்கள் மக்களை அணி திரட்டியுள்ளது அவர்களின் பிரச்சினைகளின் அடிப்படையிலேயே). இதே மக்களை சும்மா வேறு போதைகளை காட்டி அணி திரட்டியவர்கள் எனில் பார்ப்பனிய பத்திரிகைகளுக்கு ரொம்ப பிடிக்கும். அவர்களின் படு கேவலமான கோமாளித்தனங்களைக் கூட வீர சாகசமாக சிலாகித்து எழுதும் இந்த பத்திரிகைகள். எடுத்துக்காட்டுக்கு: விஜயகாந்த், எம்ஜிஆர், ரஜினிகாந்த், மோடி.

இப்போ நாம குறிப்பாக பார்க்க போகிற ஒரு பாசிஸ்டு காமெடியன் கர்நாடகாவின் பாஜக தலைவர் எடியூரப்பா. கிட்டத்தட்ட வட்டாள் நாகராஜுக்கு இணையான கோமாளிப் பேர்வழி இந்த எடியூரப்பாதான். ஆனால் இவனையெல்லாம் ஒரு பெரிய புடுங்கி போல பில்டப்பு கொடுப்பதில் பார்ப்பனிய பத்திரிகைகள் முன்னணியில் இருக்கின்றன. ஒரு ஒப்பீடு என்ற பார்த்தால் கர்நாடகாவின் எஸ் எம் கிருஷ்ணா போன்றோ அல்லது மத்தியில் உள்ள பிற காங்கிரஸ் மாமாக்கள் போன்றோ கோமாளித்தனத்தை விட்டொழித்த காரியவாதம் இந்த பார்ப்பனிய காமெடியன்களிடம் கிடையாது.

கம் பேக் டூ எடியூரப்பா, இந்த எடியூராப்பா ரொம்பவே மூட நம்பிக்கைக்களில் ஊறிப் போனவன். எவனாவது நல்லா காவி உடுப்ப போட்டுக்கிட்டு போய் காலையில் கக்கூஸ் போகறதுக்கு முன்னாடி, பின்னாடி சில யாகங்கள் செய்யனும்னு சில சம்ஸ்கிருத வார்த்தைகளை சொல்லி சொன்னாக்க உடனே அதை அப்படியே வரி பிசகாம செய்வான். இவன் தன்னோட பேரக்கூட கொஞ்ச நாள் முன்ன இப்படித்தான் மாத்தினான். இப்போ சமீபத்தில் எல்லா கோயில்களிலும் காலையில இவன் பேருல அர்ச்சனை செய்யனும்னு அதிகாரப்பூர்வமா உத்திரவு சுற்றறிக்கை அனுப்பியிருக்கான். இவன் பதவி ஏற்ற போதும் இதே போலத்தான் பல கோமாளித்தனமான பூஜைகள், புனஸ்காரங்களுடன் கும்பாபிஷேகம் ரேஞ்சுக்கு தாடாபுடால செஞ்சான். இதுல வேற, ரெண்டு கிராஸ் பெல்டுங்களுக்கு குடுமி சண்டையாயிடுச்சு. ஒருத்தான் 10 மணிக்கு போன்னு சொன்னான், இன்னொருத்தன் 12 மணிக்கு போன்னு சொன்னான் எடியூரப்பா இன்னொருத்தன் சொன்னது கேட்டு அவன் சொன்னபடி பதவியேற்றார். உடனே முதல்ல சொன்னவன் எடியூரப்பாவிற்க்கு ஆப்பு, அவருக்கு கெட்ட நேரம் ஆரம்பமாயிருச்சின்னு பரபரப்பு கிளப்புறான்.

தேவகௌடா இவனுக்கு பதவி ஆசை காட்டி, திரும்ப ஏமாத்தி, திரும்ப பதவி ஆசை காட்டி சின்னப்புள்ளைகள விளையாட்டு காட்டுற மாதிரி சும்மா சுத்தி சுத்தி அலையவிட்டார். கட்சீல ஒரு வாரம் பதவில உக்கார வைச்சி... அப்புறமா விரட்டிவிட்டார். கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலையேன்னு இவனுக்கு ஒரே ஆத்தாமை. ஒரே அழுவாச்சி. எடியூரப்பா மூஞ்சி ஏற்கனவே நல்லா அடிவாங்கி அழுத மூஞ்சி கணக்காதான் இருக்கும். இதுல இந்த தும்பம் வேற சேர்ந்ததுல முகரகட்ட ரொம்ப அழுமூஞ்சியாகி பாக்குறதுக்கே கோறாமையா இருந்தது. இப்படி புலம்பிக்கிட்டே இருந்ததுல இவனுக்கு புத்தியே கலங்கி போச்சி. வெளியே வந்தவுடனே இவன் என்ன சொன்னான்னா தேவகௌட கும்பல் எனக்கு எதிரா பில்லி சூனியம் வைச்சி யாகம் செஞ்சிருக்கானுங்க அப்படின்னு. அதுவும் இவருக்கு யாகம் செஞ்ச இடம் மொதக் கொண்டு தெரியுமாம். அதனாலதான் பதவி போச்சாம்.

தேவகௌடா கும்பலை சந்தர்ப்பவாதி என்று கேவலப்படுத்துகிறது இந்த கும்பல். ஏதோ தேவகௌடா அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷோட பதவி பகிர்வு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சந்தர்ப்பவாதமாக இருந்தது போல
பேசுறானுங்க. தேவகௌடா கும்பலுக்கு கிஞ்சித்தும் குறைவின்றி சந்தர்ப்பவாதமாக அவர்களுடன் உறவு கொண்டவர்கள் இந்த பார்ப்பன பயங்கரவாத கோமாளிகள்தான். ஏற்கனவே காங்கிரஸுக்கு பேப்பே காட்டிட்டுதான் தேவகௌடா கும்பல் பாஜகவோட உறவு வைத்துக் கொள்கிறது. இவர்கள் பெரிய நன்னூல் எனில் அப்போதே விட வேண்டியதுதானே. மாறாக கிடைச்ச வரைக்கும் நக்கிக்கலாம் என்று சந்தர்ப்பவாதமாக சேர்ந்து கொண்டனர். இதுக்கு பிறகு பதவி கைமாற்ற வேண்டிய நேரத்தில் ஏமாத்துனாரு தேவகௌடா. அப்போகூட இந்த சொரனையற்ற முண்டங்களுக்கு புத்தியில்ல. ஒரேடியா அத்துவிட்டு வராம, ஒப்பாரி பாடிக்கிட்டு இருந்தான் எடியூரப்பா. உடனே திரும்ப பதவி கொடுக்க ஒத்துக்கிட்டாரு தேவகௌடா. உடனே திரும்ப ஓடிப் போயி சேந்துக்கிட்டானுங்க. தேவகௌடா ஒரே வாரத்தில திரும்ப கவுத்தி எடியூரப்பாவுக்கு பல்பு சொருகினாரு. தேவகௌடாவுக்கு கர்நாடக மக்கள் பல்பு செருகினது வேற விசயம். ஆனா இங்க கவனிக்க வேண்டியது தேவகௌட கும்பல் தமது சந்தர்ப்பவாத செயல்களைக் கூட ஒரு தொழில் நேர்த்தியுடன் செய்துள்ள போது, இந்த எடியூரப்பா கோமாளி படு காமெடித்தனமாக அவர்கள் இழுத்த இழுப்புக்கேல்லாம் போயிருக்கிறான். ஒரே நோக்கம் எப்படியாவது நக்கிப் பிழைக்க முடியாதா என்கிற வேகம்தான். சந்தர்ப்பவாதத்தில் இவனுக்கும் தேவகௌடா கும்பலுக்கும் போட்டி வைச்சால் யார் ஜெயிப்பார்கள் என்பதை கணிப்பது கஸ்டமே. இவனெல்லாம் சிறந்த தலைவனாம், நிர்வாகியாம். எந்த வகையிலும் விஜயகாந்தைவிட பெரிய பாசிஸ்டு காமெடியனெல்லாம் கிடையாது இவன்.

ஒரு மாநில கட்சியின் தலைவன், முன்னாள் முதலமைச்சர் அதற்க்கான பொறுப்புணர்வுடன் பேச வேண்டும். இது நாம் சொல்வது அல்ல. கருணாநிதிக்கு எதிராக, அவரது பார்ப்பனிய எதிர்ப்பு சிறு சலசலப்புக்கும் எதிராக பார்ப்பனிய பத்திரிகைகள் பிரச்சாரம் செய்யும் அட்வைஸ். சேது சமுத்திரத்திலிருந்து, ஹொகேனாக்கல் வரை இதுதான். இந்த நல்லொழுக்க அட்வைஸ் எல்லாம் சூத்திரனுக்குத்தான். பார்ப்பனனுக்கும் பார்ப்பன கொட்டை தாங்கிகளுக்கும் இந்த அட்வைஸ் பொருந்தாது. இதற்கு இந்தியா முழுவதும் உள்ள பார்ப்பன மற்றும் பா.கொ.தாங்கிகளின் பேச்சுகள், நடவடிக்கைகளை உதாரணமாக கொடுக்க முடியும். இங்கு நாம் எடியூரப்பா என்ற பா.கொ.தாங்கியை பார்த்துக் கொண்டிருப்பதால் அவரை மட்டும் கவனிக்கலாம். ஹொகேனாக்கல் பிரச்சினையில் கருணாநிதியின் நியாயமான எதிர்வினைகளையே பொறுப்பற்ற பேச்சுக்கள் என்று அவதூறு செய்யும் இந்த பார்ப்பனிய பத்திரிகைகள், அதே ஹொகேனாக்கல் பிரச்சினையில் வாய்துடுக்கோடு மட்டும் இல்லாமல் படு பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட எடியூரப்பாவை அதுவும் அவன் அண்டை மாநிலத்துக்காரன், நமக்கு தண்ணீர் தராதவன் என்று தெரிந்தும் உயர்த்திப் பிடிக்கின்றன தமிழ்நாட்டு இந்த பத்திரிகைகள். மொழி வெறியின் மூலம் ஆட்சியை பிடிக்கும் நப்பாசையில் ஹொகேனாக்கலில் நுழைந்து பிரச்சினையை திரி கொளுத்திப் போட்டான் இந்த பாசிஸ்டு கோமாளி எடியூரப்பா.

இதனை தொடர்ந்து காங்கிரஸ் எஸ் எம் கிருஷ்ண உள்ளிட்ட பல்வேறு கர்நாடக தலைவர்களம் ஓரளவு எச்சரிக்கையாகவே பேசினர். பாஜக மற்றும் கர்நாடக இன வெறியர்கள் மட்டும்தான் அப்பட்டமாகவே மொழி வெறியுடன் பேசி வந்தனர். ஹொகேனாக்கல் தமது என்று சொந்தம் கொண்டாடினர். கர்நாடகாவின் முன்னாள் அமைச்சர் ஒருவர் தமிழ்நாட்டின் பக்கம்தான் நியாயம் என்றே பேட்டி கொடுத்தார். பிரச்சினையை ஆரம்பித்தவர் என்ற வகையில் எடியூரப்பா கோமாளியை பத்திரிகையாளர்கள் சில கேள்விகள் கேட்டனர். அதற்க்கு அவர் சொன்ன பதில் படு பயங்கர காமெடி கலந்த திமிர்த்தனத்தின் உச்சம். உண்மையில் பொறுப்பற்ற பேச்சு, வகிக்கின்ற பதவிக்கு தகுதியான பேச்சு இல்லாமை - என்பதின் சுத்தமான எடுத்துக்காட்டாக எடியூரப்பாவின் திமிர்த்தனமான பேச்சு இருந்தது. தெஹல்கா பேட்டியில் அவன் சொல்லுவதை பாருங்கள்:

மத்திய அரசிடம் அனுமதி வாங்கிய பிற்பாடே ஹொகேனாக்கலில் வேலை நடக்க வேண்டும் என்றான் எடியூரப்பா. அதுதான் அனுமதி 1998லேயே வாங்கியாச்சே, அதுல கார்நாடகவும் கையெழுத்து போட்டுருக்கேன்னு கேட்டா அதுக்கு இவன் என்ன சொல்றான்னா:

"அதப் பத்தி எனக்கு தெரியாது. அது உண்மையாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை".

விடாம தெஹல்கா கேள்வி கேட்டது: "தமிழ்நாடு மத்திய அரசின் அனுமதியில்லாமல் செய்கிறது என்று சொல்ல வருகிறீர்களா?"

இதுக்கு திரும்பவும் எடியூரப்பா கோமாளி என்ன சொல்றான்னு பாருங்க:
"எதுவும் கிளியரன்ஸ் கொடுத்தாங்களா என்னன்னு எனக்கு தெரியல"

ஒன்னு தெளிவா இல்லனு சொல்லனும், இல்ல ஆமான்னு சொல்லனும். ரெண்டுக்கும் இல்லாம இவரோட நம்பிக்கைகளின் அடிப்படையில் கொஞ்சம் கூட பொறுப்பின்றி ரத்த விளையாட்டு விளையாடுகிறான் இவன். பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்ததும், சேது பாலமும் எங்க நம்பிக்கை என்று பேசும் பார்ப்பன திமிர்த்தனமும், எடியூரப்பாவின் கோமாளித்தனமும் இணைந்த பதில் இது.

ஏண்டா பாசிஸ்டு கோமாளி, ஒரு பிரச்சினையை பத்தி ஆதி முதல் அந்தம் வரை தெரிஞ்சுக்கனும்னு அவசியமில்ல. குறைஞ்ச பட்சம் ஒரு பத்து வருசம் முன்னால முக்கியமாக நடந்த விசயத்தை பத்தி எனக்கு எதுவும் தெரியாது என்றும், அது பத்தி கவலையில்லை என்ற தோணியிலும் பதில் சொல்லும் இவன் பொறுப்பானவனாம், ஆனால் நியாயமான கருத்துக்களை தெரிவிக்கும் கருணாநிதி பொறுப்பற்றவராம். சூத்திரனுக்கு ஒரு நீதி பார்ப்பனன் மற்றும் பார்ப்பன கொ.தாங்கிகளுக்கு ஒரு நீதின்னு இதத்தான் சொல்றோம்.

இதே மாதிரி சமீபத்தில் விதை நெல் தட்டுப்பாடு குறித்த பிரச்சினையில் இவனோட ஸ்டேட்மெண்டுகள் படு காமெடி. பிரச்சினை ஆரம்பிக்கிறதுக்கு முன்னயே உளவுத் துறை மூலமா மோப்பம் பிடிச்சானா என்னன்னு தெரியல, ஒரு நாள் முன்னயே அறிக்கை விட்டான். அதாவது கர்நாடகாவில் தேவையான அளவு விதைநெல் இருக்கு, யாரும் யார் பேச்சையும் கேட்டு கலவரம் செய்யாதீங்க, கலவரம் செய்றதுக்கு சிலர் சதி செய்றாங்க அப்படின்னு. இது மட்டுமில்ல மத்திய அரசை பாராட்ட வேற செஞ்சான். கலவரம் நடந்தது. இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் குண்டடி பட்டு மருத்துவமனையில். இப்போ என்ன சொல்றான்னா, விதை தட்டுப்பாடு இருக்கு, அதுக்கு காரணம் மத்திய அரசும், கவர்னரும்னு சொல்றான். விதை இருக்குன்னு சொல்லி மத்திய அரசு போதுமான சப்ளை இருக்க வழி செஞ்சதுக்கு பாராட்டுனது உண்மையா இல்ல இப்போ ரெண்டாவது நாளு அப்படியே தலைகீழா மாத்தி பேசுறது உண்மையா அப்படிங்கறத விட வேற ஒரு கேள்விதான் பெரிதாக மனதில் நிற்கிறது. விதை இருக்குன்னு சொல்லி அதுக்காக போராடினத சதின்னு சொன்னான் நேத்து. இன்னைக்கு விதை இல்லைனு அவனே சொல்றான் ஆனா இன்னமும் போராடுனவங்கள சதிகாரங்கன்னுதான் சொல்றான். உண்மையிலேயே பாசிஸ்டு கோமாளி யாருன்னு மக்களே... நீங்களே முடிவு செஞ்சிகோங்க..

விசயம் என்னன்னா, கோமாளித்தனமும், பாசிசமும் ஒட்டி பிறந்த இரட்டையர்கள். கோழைத்தனமே பாசிசத்தின் இன்னொரு முகம். எனவே பிரச்சினைகளை நேர்மையாக அணுக பயப்படும் பாசிஸ்டுகள் குறுக்கு வழி தேடி கோமாளிகளாக, சந்தர்ப்பவாதிகளாக வெளிப்பட்டுவிடுகிறார்கள்.

பாசிஸ்டு பார்ப்பன பயங்கரவாதிகளை பிரச்சாரம் செய்யும் ஊடகங்களோ அவர்களை ஹீரோக்களாக முன் நிறுத்தி, ஜனநாயக கோரிக்கைகளை ஏதோ ஒரு வகையில் பிரதிபலிப்பவர்களை காமெடியன்களாக சித்தரிக்கின்றன. நாம்தான் எச்சரிக்கையாக இவற்றை புரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி கட்டுரை ஆதாரம்: இமெயிலில் எழில்


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்