கடந்த சில நாட்களாக எனது வலைப் பதிவிலும் வேறு இரு முகமூடி வலைப்பதிவிலும் ஈழப்போராட்டம் பற்றிய விவாதங்களைத் தொடரும்நோக்கில் முன் தள்ளப்பட்ட படைப்புகளுக்கு நிலவுகின்ற ஆதிக்க் கருத்தியலால் ஈடுகொடுக்க முடியவில்லை.மார்க்சியத்தைக் கரைச்சுக்குடித்த நண்பர்கள் அது ஈழுத்துக்குப் பொருத்தமில்லாத வெளிநாட்டுத் தத்துவம் என்றுவேறு குறிப்பிட்டு தம் அதீத மார்க்சியப் புரிதலை வெளிப்படுத்தியபோது நாம் இந்தப் புனிதமான ஈழப்போரை கொச்சைப்படுத்தாமல் ஒதுங்குவதாகவெண்ணி ஈழம் பற்றிய அனைத்துக் குறிப்புகளையும் எனது பதிவுகளிலிருந்து அழித்து விட்டுள்ளேன்.மார்க்சிய மூலவர்களே தாக்குப் பிடிக்க முடியாத இந்த முதலாளியக்கருத்தியற் போருக்கு சுண்டங்காயான "நான்"எந்த மட்டத்துக்கு?

 முடியவில்லை. சொல் வீச்சுக்கொச்சைப்படுத்தல்-யாழ்பாணியத்துக்கேயுரிய:"நீர்-உம்மை"போன்ற கடுப்பான ஆத்திரமூட்டல்-படுதூஷணங்கள் நெஞ்சைப் பிளந்து இதயத்தையெடுத்து அவித்துண்ணும் உளவியற்றளத்தோடு மோதமுடியாது.என்னால் இவ்வளவுதூரம் என் கருத்தக்களை முன்னெடுக்க முடியாது.நான் எதிர் பார்த்த பண்புவேறானது.எம்மினத்துள் ஊடுரிவியுள்ள கருத்தியல் ஆதிக்கமானது அதிகாரத்துவங்களின் வழி தோன்றியது.இது காலாகாலமாக மக்களை அடிமைத்தனத்துள் இருத்திவைக்கும் பண்பைத் தன்னகத்தே கொண்டியங்குகிறது.

 

நடுத்தர வர்கத்துக்கேயுரிய இறுமாப்பும்-ஆதிக்கவாதமும் நிறைந்த கூட்டுக் கலைவையான இந்த உளவியலை எந்தத் தத்துவத்துடனும் ஒப்பு நோக்க முடியாது.இதற்கான பாரிய அரசியலூக்கம் ஒழுங்கமைந்த பொருளாதாரப் பலத்தடன் உருவாகியுள்ளது.சமுதாயவாரியான பொதுப் புரிதலென்பது கெட்டிதட்டிய குட்டிப்ப+ர்சுவா எண்ணங்களால் நிரம்பி வழியும் இந்த உளவியலோடு எந்தக் கொம்பனாலும் போட்டியிட முடியாது.இது தனது ஆயுதமாக வசை பாடுதலையும்,பழிபோடுதலையும் ஒரு உளவியல் யுத்தமாகக்கொண்டு தனிநபர் வழிபாட்டை முன்நிறுத்தி கூப்பாடுபோடும்.அதையே அதீதத் தேவையாகவும் வலியுறுத்தும்.இதை ஏற்காத தளத்தை எப்படியும்.உடைப்பதில் அது கண்ணும் கருத்துமாகக் காரியமாற்றும்.இந்த விதமான போரில் யாரும் வெற்றீ கொண்டதாகச் சரித்திரமில்லை.எனவே நாம் மிகவுமொரு கொடிய ஆதிக்கக் கருத்துக்குள் முடங்கியுள்ளோம்.நமது சிந்தனா முறை மிக மிகத் தனிநபர் வாதக் கண்ணோட்டமாக விருத்தியுறுகிறது.இதிலிருந்து எந்தச் செம்மையான செல்நெறியும் வெற்றி கொள்ள முடியாது.இதுவொரு இருண்ட காலத்தை நமக்கு வழங்கிவிடுகிறது.இந்த கருத்தியற் போரானது பல தளங்களிலும் முன்னெடுக்கப் படுகிறது.பத்திரிகை-செய்தித் துறை,வானொலி-வானொளி,கல்வித்துறை மற்றும் இணையதளமென இது விரிந்து கிடக்கிறது.இதை வெற்றியீட்டி சரியான பாதையை தெரவுசெய்ய எந்தக்கொம்பனாலும் முடியாது.இதுவரை தம்மாலேயே செய்ய முடியாத காரியத்திற்கு -இத்தளத்திற்கு வெளியிலிருந்து யாராவது கருத்து வைத்தால்-அவரிடம் கணினிபோன்று டக்,டக் பதில்-முடிவு-தீர்வு கேட்பது நம்காலத்து உளவிலாகிவிடுகிறது.

 

நாமென்ன வைத்தக்கொண்டா இல்லையென்கிறோம்?முதலாளிய உலகத்தை வெற்றிகொள்ளதக்க எந்த மந்திரமும் இப்போதில்லை.இவர்களது கருத்தியற்போரை நாம் தனிநபர் சார்ந்த கண்ணோட்டமாகக் குறுக்க முடியாது.இது பாரிய தளங்களில் மனிதரின் ஆழ் மனிதில் காரியமாற்றும் மிகப்பெரும் நிறுவன மயப்பட்ட சமுதாய உளவியலைத்தோற்றுவதால் நாம் காணும் கனவானது ஒழுங்கமைந்த புரட்சிகரக் கட்சியில்லாமல் இந்த உலகச் சர்வ வல்லமையுள்ள முதலாளிய கருத்தியற் கட்டுமானத்தை வெற்றியீட்ட முடியாமல் ஒதுங்குகிறோம்.இந்த நோக்கோடு எனது பதிவில் இனி ஈழம் பற்றிய ஒப்பாரியோ அல்லது விமர்சனமோ பதியப்படமாட்டாது.மாறாக நாம் உலக அரசியற்போக்கை விமர்சனஞ் செய்வோம்.ஏனெனில் நாமிப்போ அரசு எனும் வடிவத்துள் வாழவில்லை மாறாக அரசுகளெனும் பாரிய கொடுங்கோனுக்குள் வாழ்வதால் குண்டுச் சட்டிக்குள் குதிரை விடத் தேவையில்லை.வழமைபோல் எந்த அதிக்க-அதிகாரத்துவத்தக்கும் கட்டுப்படாமற் செயற்பட முடியாத தோல்வியை ஒத்துக்கொண்டு இந்தப் பதிவைக்கூட அழித்த விட்டு-பேசமால் விஜேய்,ரிக்ஷா படம் பார்த்து பிள்ளைப்பெத்து -வேலைக்குப்போய் செக்ஸ் செய்து வாழ்வை முடிப்பதுதாம் இனிச் சாத்தியம்போலுள்ளது. எங்கேயும் எதையும் சொன்னால் ஒன்று டுமீல் அல்லது பேப்ப+னா... இவைகளே நமக்கு அனுபவமாகிறது.இதுவுமில்லாதுபோனால் அவன் அந்த அமைப்பு,டக்ளஸ் ஆள்-சிங்களவன் இத்தியாதி!பிறகென்ன? சொல்லிக்கொண்டே போகலாம்...

 

03.04.2005

வ+ப்பெற்றால்

ஜேர்மனி ப.வி.ஸ்ரீரங்கன்