கொரில்லாவை முன் வைத்துச் சில ....

கொரில்லாவை முன் வைத்துச் சில கோட்பாட்டுருவாக்கக் கோடுகளும், கீறல்களுமான முகங்களின் கேள்விகளும் -நியாய விசாரிப்புகளும். (கொரில்லா: நாவல்|எழுதியவர்: ஷோபா சக்தி)

"தொட்டிலுக்குள் போட்ட குழவி

தொலைந்துவிடும் ஒரு நொடியில்

தோள் கொடுக்கப் போனதாக

சேதி வரும் மாலைதனில்

மாறி மாறிப் பார்த்துவிட்டு

மயங்கிவிடும் தாய் மனது

மடி கடித்த நினைவுகளும்

மங்கலாக வந்து போகும்

வார்த்தையின்றிச் சோர்ந்து விடும்

 

வந்து போகும் உணர்வுகளும்

வானுயர்ந்த நோக்குக்காகவா

வாழ்விழந்தோம் இன்று வரை?"

இன்று வரை கேட்கப்படும் கேள்வியிது.

 

ஈராயிரம் ஆண்டுகளாய் தாழ்தப்பட்டு "தாழ்ந்தவர்கள்"என்று நகைப்போடு நோக்கப்பட்டவர்கள் நாம்! நமது வாழ்வுமீது மிகவும் கேவலமான நெருக்குவாரங்களை-சேறடிப்புகளை,கள்ளப்பட்டங்களை-தீண்டாமையை சுமத்திய "மேல் சாதிய சைவ வேளாள அரசியலை" இன்று வரையும் ஒரு வடிவத்துக்குள் வைத்து அவிழ்த்துப் பார்க்க நமக்கான அரசியல் விழிப்புணர்ச்சி விஞ்ஞானப+ர்வமாகக் கைகூடிவரவில்லை.அத்தகையவொரு நிலமையையேற்படுத்திய இலங்கைக் கல்வியமைப்பும்,அதன் உள்ளீடாகவிருக்கும் சாதிய நலனும் அதையெமக்குத் திட்டமிட்டே சுமத்தியது!

 

இந்த நிலமைக்குக் காவோலை கட்டிக் கொழுத்தப் புறப்பட்ட இயக்கமே தலித்திலக்கியம்!!(இந்தியாவில் தலித்துவச் செயற்பாட்டாளர்கள் உலக ஆதிக்கச் சக்திகளின் பினாமி அமைப்புகளுடன்(வேர்ல்ட் விசன்,இன்னபிற...)சேர்ந்தியங்குவது பற்றி எம்மிடம் பாரிய விமர்சனமுண்டு).

 

கொரில்லா'வின் மொழிய+டான சித்தரிப்பும்,அதன் பகுப்பாய்வு மீதான நாளாந்த சமூக சீவியம் -இதன் நம்பகத்தன்மை யாவும் அதன் அநுபவ வழிபட்ட வாழ்வை வாழ்ந்து,சுமந்தவர்களாலேயே புரியக்கூடிய நிர்ப்பந்தம் இயல்பானதே. இந்த நிர்ப்பந்தத்துக்குள் நிலவுகின்ற நமது வாழ்வும்-சாவும் எங்கோவொரு மூலையில் நிகழ்ந்து,ஆரவாரமற்ற மனிதர்களால் உணரப்படாமலேயே அமிழ்ந்துவிடும் நிலையைத் தடுத்து-இதுதாம் எமது வாழ்வினது சமூக இருப்பு,இதுவே எமது கால அரசியல் சமூக-பொருளியல் வாழ்வைத் தீர்மானிக்கும் காரணிகள்,கண்ணிகள் என்பதைப் பறையடித்துச் சொல்லும் ஒரு ஊடகமாக- இயக்கமாக சோபா சக்தி என்ற எழுத்தியக்கம் கொரில்லாவை முன் வைத்திருப்பது ஒரு வரலாற்று நிகழ்வே,தேவையே!

 

இந்த "வாழ்வு விவரணம்"தொழில்படும் தளம் இலங்கையின் தீவுப்பகுதியிலுள்ள குஞ்சன் வயலெனினும்,இஃது முழுமொத்தப் ப+மிப்பந்தில் வாழ்வு மறுக்கப்பட்டு-உரிமை பறிக்கப்பட்ட உழைக்கும் மக்களனைவருக்கும் பொருந்தும்.நாம் வாழும் வாழ்வானது "ஏதோ எமது "அறிவற்ற வாழ்வோட்டத்தால் நிகழுமொரு போக்காகக் காட்ட முனையும் கபட ஆதிக்க சாதியவ+டகங்களால் இத்தகைய எழுத்துக்கள் எப்பவும் கண்டு கொள்ளப்படா(கொரில்லா பற்றிய இத்தகைய விமர்சனங்களுட்பட).என்றபோதும் வரலாற்று இயங்கியலைப் புரிந்தவர்களுக்கு இஃதொரு தடையாகா!

 

மானுடநேயம், மகத்துவம்,ஜனநாயம் என்பதெல்லாம் சாதிய இந்துக்களுக்கான சமூக விழுமியமாகப் புரிந்து வைத்திருக்கும் புலம் பெயர் "வானொலி-ஒளி,பத்திரிகைகள் இந்த எழுத்துப் படையலை தெருவோர வேப்பமரத்து முனியப்பருக்கோ அன்றி அந்தோனியாருக்கோ வைத்ததாகப் பொருட் படுத்துகிறது!!!

 

எமக்குள் முகிழ்த்திருக்கும் சமூகக்கோபம் இன்று நேற்றைய கதையல்ல,பல்நூறு வருடங்களாக நமது மூதாதையர்கள் கொண்டிருந்த -அநுபவித்த பகை முரணே இப்போது சமுதாய ஆவேசமாக-விஞ்ஞானத்தன்மை பெற்று யுத்த தந்திரோபாயத்திற்காக கிரமமாக வாசிப்புக்குள்ளாகிறது.நாம் நுகர்ந்த-நுகரும் ,நமது முன்னோர்கள் புழுவிலும் கேவலமாக வாழ்ந்த -சமூக வாழ்வை இப்போது நாம் கட்டுடைத்துப் பார்க்கிறோம்! அதுவே தலித்திலக்கிய முயற்சிகள் கோரியும் நிற்கின்றன,இதுவே கொரில்லாவினது இலக்கிய கோட்பாட்டு வடிவமும்.வருவது எதுவானாலும் நாம் நமது கடந்தகால வாழ்வுமீதான தார்மீகக் கோபம் குறித்து மிகக்கவனமாக இருக்கவேண்டும்!எக்காரணங்கொண்டும் இதன் வீச்சுக் குன்றக்கூடாது-தணியக்கூடாது.இதுவே நம்மை வழிநடாத்திச் செல்லும் ஊட்டச்சத்து,நமது வாழ்வை நாயிலும் கேவலமாக்கி,இழி நிலைக்கிட்ட வர்க்க-சாதிய நலன்களை,கண்ணிகளைத் தனியே மார்க்சிய வர்க்கக்கோட்பாட்டுப் புரிதலுக்குள் அடக்கிப்பார்க்க முடியாது.இன்றைய நிலையில் உழைக்கும் மக்கள் பல் வகை சாதிகளாகப் பிளவுபட்டு மிகக் கீழான நிலைமைகளுக்குள் வாழ்வு நகர்கிறது.இப்பிளவு மென்மேலும் மேற்சாதிய ஒடுக்குமுறைக்கு ஒத்திசைவாகிவிடும் நிலைவேறு.

 

மனிதர்களை மனிதர்கள் ஒடுக்குதல் என்பது இந்த நூற்றாண்டோடு ஒரு முடிவுக்கு வந்தாகவேண்டும்,இதற்கொரு முற்று வைப்பதற்கான முன்னெடுப்பாக நாம் தலித்திய கருத்தமைவுகளை நோக்கியாக வேண்டும். கூடவே தலித்தியத்தை நாம் எவ்வாறு புரிகின்றோம்? ஒருசில மேட்டுக்குடி "படிப்பாளிகள்"-மார்க்சியர்கள் அஃது ப+தம்,மார்க்சியத்திற்கு விரோதமான பிற்போக்கு பிளவு வாத-முதலாளிய நலனுடன் பின்னப்பட்ட சந்தர்ப்பவாதமாகக் கருதவது தத்துவார்த்த அநுபவின்மையின் போக்கு மட்டுமல்ல கூடவே மேல் சாதிய"மேல் குல" கருதுகோளுமேயிதை இயக்கி வருகிறது.

 

தலித்துவ அடையாளமென்பது "பாட்டாளி வர்க்க முன்னணிப் படை,பாட்டாளி வர்க்கச் சர்வதிகாரம்"என்பவற்றின் பிரதியீடாகவும்,இந்திய-இலங்கை போன்ற சாதிய ஒடுக்குமுறை நிகழும் நாடுகளுக்கு உழைக்கும் மக்களை இனம் காணும் பொதுமைப் பண்புடைய சுட்டலாகவுமிருக்கும்.உழைக்கும் மக்கள் பல் வகைச் சாதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒடுக்கப்படும் நாடுகளுக்கு"தலித்திய வர்க்கம்,தலித்திய மொத்த அதிகாரம்,தலித்திய முன்னணிப் படை"என்பதே சாலப் பொருந்தும்! இவற்றின் புரிதலோடுதாம் நாம் சமூகமாற்றை நோக்கிப் பயணிக்கமுடியும்.தலித்துவ பண்பாடுதாம் சாதியவேர்களை அறுக்க முடியும், இஃது நடைமுறையிலுள்ள எல்லா விண்ணாணங்களையும் கேள்விக்குட்படுத்தி உடைத்தெறிவதில் நோக்கமாகவிருக்கும்.

 

இந்த வகைப் புரிதலோடு கொரில்லாவை முன் நிறுத்தி தலித்துவ இலக்கியக் கோட்பாடு நோக்கிய சிறு பயணம்:

 

இன்றைய உழைக்கும் விளிம்பு மனிதர்கள்(புலம் பெயர்ந்து மேற்குலகில் உடலுழைப்பை நல்கும் தமிழர்கள் தம்மைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தால் இந்த விளிம்பு மனிதர்கள் யாரெனப் புரிந்து விடும்)தம்மை உருவாக்கிக் கொள்வதற்கான எந்த வடிவமுமில்லை.உலகியல் வாழ்வு இதுவரையிலிருந்த நம்பிக்கைகளை திரும்பத்திரும்ப புதியமொந்தையில் தந்தபடி.இவைகளால் சரிந்துவிடுகின்ற பொருளியல் வாழ்வைச் செப்பனிட்டு தனது முரண்நிலைகளில் மழுப்பல்களைக் காட்ட முனைகிறது.என்றபோதும் "உழைக்கும் வலு"வளைந்து கொடுக்கும் அடிமைப்படுத்தலுக்குள் திணிக்கப் பட்டபடி,இந்தச் சமூக சீவியம் எந்தவொரு உழைக்கம் பிரிவையும் சுதந்திரமான தனித்தன்மையுடைய உற்பத்தியுறுவுகளாகப் பார்க்க விடுவதில்லை. இந்த பொது இறுக்கமே இப்போது பல மட்டங்களிலும் (மூளை உழைப்பாளிகளிடமும்,நிர்வாகயந்திரத்திடமும்) "முட்டாள்த் தனத்தின்விய+கம்" ளுவசயவநபநைn னநச னரஅமநவை என்று விவாதிக்கப் படுகிறது, இவ்வுளவியல் ஒடுக்குமுறையென்பது ஒரு காலக்கட்டத்தின் தேவையைப் ப+ர்த்திப் படுத்தும் மூலதனத்தின் திட்டமிட்ட விய+கமே.இதையே முன் வைத்து புத்திஜீவ மட்டம் கருப்பொருளாக விரிந்துரைக்கிறது.

 

செப்டம்பர் 11'க்கு பின்பு விய+கங்கள் பல வடிவங்களில் உலா வருகிறது.இவை கணக்கிலெடுக்கப்பட்ட எல்லா அறிவார்ந்த தளங்களையும் கைப்பற்றி விட்டது. இந்த நிலைமையில் நம் அக நிலை, படைப்பாற்றல் இழந்துவிட்ட நிலையில் தோல்விப் பயத்துடன் புற நிலையை அணுகிறது.தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கு எந்தச் செயல் வடிவமும் அதனிடமில்லை,இஃதுதாம் இன்றைக்கு நம்மில் பலரிடம் மலிந்து காணக்கிடக்கிறது. வர்க்க உணர்வென்பது வெறும் பொருள் சார்ந்த விசயமாக சமூக உளவியல் நிறுவப்பட்டுள்ளது,இதன் உச்சபட்ச பிரச்சாரவ+டகங்களாக தொலைக்காட்சியும்,கொலிவ+ட் சினிமாவும்,கல்வியமைப்பும் செயற்பட சமூக நிலை சற்று சரிப்பட்டுவிட பலர் தாங்கள் இதுவரை உணர்ந்து வந்த வர்க்கவுணர்வை சமரச நிலைக்குள் அம்போவாக்கியபடி,இது குறித்து ஜேர்மனிய பேராசியர் பீட்டர் வி.சிமா தனது பிரபல்யமிக்க கட்டுரையான"பின் நவீனத்துள் மானிடர்களினது பயிற்றுவிப்பு"என்ற கட்டுரையில் இப்படியெழுதுகிறார்:"பல்வகைப்பட்ட கருத்து நிலைகளை,பிரச்சனைகளை அன்றி சாதாரண தவறான புரிதல்களை விவாதிப்பதற்கு யாரால் முடியவில்லையோ அதுவே சிறுபிள்ளைத் தனத்தின் வெளிப்பாடு".Peter V.zima: wer meinungsverschiedenheiten,Konflikte,oder einfache mißverstaendnisse nicht ausdiskutieren kann,der schlaegt zu wie ein unmuendiges Kind.-strategien der dumheit,seite:25.இஃதுதாம் நாம் செய்து வரும் இன்றைய செயல். இதை உடைத்தெறிவதில்தாம் தலித்தியமும்,அதன் உணர்வுத்தளமும் வெற்றிகொள்கிறது.மனிதனை மனிதன் ஒடுக்குதல் பொருளாதார ரீதியாக மட்டும் நிலவும் ஐரோப்பிய நாடுகளில் இந்த "வர்க்க இழப்பு" நிகழ்ந்துவிட்டது.ஆனால் இந்தியா|இலங்கை மாதிரியான சாதிய-சமூகவொடுக்குமுறை நிகழும் நாடுகளில் இந்த வர்க்கவுணர்வென்பது தலித்தியமாக-தலித்தாக முன்னிறுத்திப் போராடுவதில் வெற்றிகொண்டது வரலாற்று விந்தையல்ல.

 

எனவே தாம் ஒரு சோபா சக்தி விஷ்வரூபமாக தன் உயிரை நிழலாகக் கொடுத்து ஈழப்போராட்ட வரலாற்றை மக்கள் சார்ந்து வெளிப்படுத்தியது!

 

தலித்துவ இலக்கியத்தின் கோட்பாடு என்பதுதாம் என்ன?

 

படைப்பிலக்கியத்தின் ஊடாக வரலாற்றுநிகழ்வை|கொடுமையை வெளிப்படுத்துவதும் அதனூடாகக் கற்றுக் கொள்வதும்,கற்பித்தலுமே.

 

இந் நோக்குத்தாம் படைப்பிலக்கியத்தின் கோட்பாட்டு அழகியற் கட்டுமானத்தை நிர்மாணிக்கும்.இதுதாம் நாம் எழுதுவதை கேள்விக்குட்படுத்தும்.நாம் எழுதுவது முதல்தர இலக்கியமா?,நாம் உண்மையிலேயே இலக்கிய சிருஷ்டிகளா? என்றெம்மைக் கேட்க வைக்கும்.இவ் வகைப் புரிதலற்றவர் -தான் படைப்தெல்லாம் வானத்தின் உச்சியிலுள்ளதென்றறெண்ணி விமர்சனங்களை வெறுக்க முனைவார்!தலித்துவ எழுத்துக்கள் மட்டுமே இதிலிருந்து தப்பிக்கும் ஆற்றலோடு அமைகிறது.

 

இதற்கு கொரில்லா'வே சாட்சி! சோபா சக்திக்குள் நிகழ்ந்தது என்ன? இலக்கியத்திற்காகத் தன்னை வழங்கியதா? தனது ஆன்மாவை,உயிர்ப்பை வழங்கி வரலாற்றைப் படைப்பாக்கி முன் வைத்துள்ளார். சிந்தனையில், படைப்பாற்றலில்,வேதனையில், அநுபவங்களில் தன்னைத் தொலைத்து தேடுகிறார்.இந்தத் தேடுதலே தன்னைத் தான் இனங்காண வைத்ததும்,புரிதுணர்வை வளர்த்ததும்,சமுதாயத்துள் தாழ்தி வைத்திருக்கும் மானுடர்களினது -மனித விடுதலைக்காக வாழ்வைத் தேடுகிறார்,படைக்கிறார்,தலித்தவத்திற்காக-தலித்துவ விடுதலைக்காக தலித்தைத் தேடுகிறார்.தன்னைத் தானே திட்டுகிறார்,கேலி செய்கிறார், தன்னைத் தானே சாகடிக்கிறார். தனக்குத்தானே புத்துயிர் கொடுத்து தலித்துவ விடுதலையை கொண்டுவர முனைகிறார், உலகத்தோடு தோள் சேர்கிறார்!

 

இந்த உலகத்தோடு எப்படித் தோள் சேர்கிறார்? இவ்வுலகை நாம் எப்படி நெருங்குகிறோமோ அப்படித்தாம். துன்பத்தின்மூலம்,நெருக்கடிகளின் மூலம்,சாதிய-இந்துவத்தின் மூலம்,ஆதிகத்தின் மூலம்,மனிதர்களை மனிதர்கள் கொல்லும் அச்சத்தின் மூலம்,எமது அறிவின் மூலம்,உழைப்பின் மூலம்,யுத்தத்தின்மூலம், படைப்பின் மூலம் இந்த உலகு எமக்கே சொந்தம்.நமக்குத்தெரிந்த இவ்வுலகை நமக்குள் கொண்டுவர இதுவரை நமக்குள் அறிவாற்றல் கைகூடிவரவில்லை,தலித்துவ மக்ளாகிய எமக்கு ,எம் வாழ்வை -அற்பணிப்பை கண் முன் கொண்டு வந்து காட்சிப் படுத்தும் படைப்பு நிலை இப்போது எம்மிடமுள்ளது.நாம் நம்மைத் தெரிவு செய்கிறோம்,தெரிவு செய்வதினூடே நமது இருப்பு,நமது விடுதலையோடு சம்பந்தப்படுவதை உணர்கிறோம்.நமக்கான உலகை நாம் சிருஷ்டித்து அதனோடு கலத்தல் நிகழ்ந்து விடுகிறது! இதைக் "கொரில்லா" மிகவும் துல்லியமாகச் செய்து விடுகிறது.

 

இவ் வகைக் கலத்தலின் மூலம் கொரில்லா நம்மோடு உண்மை பேசுகிறது,பேருண்மையைக் இக் கலத்தலின்மூலம் அது தந்து விடுகிறது.கொரில்லா நம்மைப் பற்றிய குறைகளைத் தயவு-தாட்சன்யமின்றி நமக்குப் பகிரங்கப் படுத்துகிறது,இதில் நமக்கு வெட்கமேதுமில்லை.இதற்காக நாம் தீக்குளிக்க வேண்டியதில்லை.நமது குறை இன்னொருவரின் குறையின் தொடர்ச்சியாகவோ அல்லது நீட்சியாவோ தொடர்கிறது,இவ் வண்ணமே மூதாதையர்களின் தொடர்ச்சி நமது தொடராகவும் இணைகிறது.எம் குறைகளைப் பிரகடனப் படுத்துவதன் மூலம் நாம் எத்தனையோ நபர்களைப் பிரகடனப்படுத்துகிறோம்,எம்மை நாமே திருத்த சிலுவை சுமக்கிறார் இந்த சோபா சக்தி!எமது விடுதலையை நாம் சாதிக்க வேண்டுமானால் நாம் செத்தாக வேண்டும்.சாதியின் பெயரால்,இயகத்தின் பெயரால்,கள்வனெனும் பெயரால்,துரோகியின் பெயரால் இந்தச் சாவு நம்மை நெருங்கிய படியே!! இந்தச் "சாவு"தாம் கொரில்லாவைப் படைப்பிலக்கிய நிலைக்குள் உயர்த்தி,உந்தித் தள்ளுகிறது.

 

எமது வாழ்வை விபரிக்க "நாம் எப்படியெல்லாம் செத்தோம்,நமது முன்னோர்கள் எப்படியெல்லாம் அடிமைப்படுத்தப்பட்டு-அவமானப்படுத்தப்பட்டார்கள்,எங்கள் வாழ்வை எப்படியெல்லாம் இழந்தோம்"விளக்க-பொருள்தேட கொரில்லா முனைகிறது.இதுவேதாம் இன்றைய தலித்துவக்கோட்பாடு-தலித்திலக்கியக்கோட்பாடு-இதுவே படைப்பிலக்கிய அழகியலும் கூட! இலங்கையின் வரலாற்றில் தமிழ் பேசும் மக்களில் கணிசமான பகுதி மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக தான் சிலுவை சுமந்து,செத்து-உயிர்த்து,மீளவும் தன் உயிரையே நிழலாக விரித்து,ஈழத்து ச் சாதிய ஒடுக்குமுறை வரலாற்றின் முகத்தில் காறீ உமிழ்கிறார்,உதைக்கிறார்.இதுவே மனித நேயமும்கூட.

 

கொரில்லா மகத்தான நாவலாகவிருப்பதற்கான காரணம் :அஃது வரலாற்றின் ஒருபகுதி,ஈழப்போரின் வரலாறை அது தனக்குள் பகுதியாகவும்-முழுமையாகவும் பிரதிபலிக்கிறது.மனிதர்களாகிய நாம் வரலாற்றின் ஓட்டத்தில் மிதக்கின்றோம்,வரலாற்றோட்டத்தை இயக்கிய படி.எமது செயல்களை,சிந்தனைகள் வரலாற்றோடு பிணைத்துப் பார்ப்பது சாத்தியமே!இதைச் செய் நேர்த்தியோடு கொரில்லா செய்து முடிக்கிறது.

 

கதையோட்டம் ஒன்றோடொன்று தொடர்ந்தும்-தொடராமலும் ,பின்னிப்பிணைந்தும்,ஆழ்ந்தும் -ஒடுங்கியும் வரலாற்றில் முன்னும் பின்னும் செயற்படுகிறது.இங்கு சோபா சக்தி மிகப்பெரிய சோதனையை மிக லாவகமாகச் செய்கிறார்.அதாவது பாத்திரங்களை கால இடச்சூழலில் வைத்துப்பார்ப்பதும்,நிகழ்வை விபரிப்பதுமே அஃது! காலங்கடந்த (காலத்தை விட்டு-வெளியில்,காலத்துக்குள் நிலவாத) கருத்துரீதியான மனிதர்களைக் காட்டும் கபட இலக்கியச்சூழலுக்குள் கடப்பாரை கொண்டு வரலாற்றுச்சூழலுக்கேற்ற மனிதர்களை அவர்தம் நிஜ முகங்களோடு படைக்கின்ற இலக்கிய நாணயம் இந்தச் சோபா சக்தியிடமே நாம் காணக்கூடியதாக இருக்கிறது.மனிதர்களை-அவர்தம் வாழ்வை விரிந்த பின்னணியில் வைத்துப்பார்ப்பதும்,பொதுவயப் படுத்துவதும்,பின்பு அதையே பிரித்துப்பார்த்து சாதிய ஒடுக்குமுறைக்குள் நிலவும் சங்கதிகளை விபரிப்பதும்தாம் தலித்தவ இலக்கியக் கொள்கை|அழகியற் கோட்பாடாகும்,இதைச் சேபா சக்தி கைநேர்த்தியுடன் கச்சிதமாக் கையாளுகிறார்.

 

தற்காலத்துக்குள் வாழும் நாம், வரலாற்றின் இறந்த காலத்தை தற்காலத்திற்கூடாகப் பிரதிபலிக்கும் ஆபத்தையறிவோம்.இந்த ஆபத்தை எப்படியிந்தக் கொரில்லா நாவல் வென்றது? இஃது ஆச்சரியமானது! ஆனால் படைப்பாளியின் பின்னணி கடந்த காலத்தை தானே அநுபவப்பட்டு-தானே பிரதிமை செய்ததால் இஃது வெற்றியாகத் தவிர்க்கப்பட்டுள்ளது.எனவேதாம் கொரில்லாவின் எந்தப்பாத்திரமானாலும் வரலாற்றில் விரிகிறார்கள்,சம்பவங்கள்-பிரச்சனைகள் யாவுமே அந்தந்த வரலாற்றுச் சூழலை நமக்கு விபரிக்கிறது.எந்தப் பகுதியை வாசித்தாலும் அஃது வரலாற்றில் ஒரு பகுதியாக-துண்டம்மாக ,பிரதியாகப் பிரதிபலிக்கிறது.

 

பாத்திர வளர்ச்சியென்பது மிகவும் அசாதாரண விஷயமாகவுள்ள தமிழ் இலக்கியச் சூழலில், கொரில்லா மிகவும் சாதாரணமாகவே அவ் வளர்ச்சியை எட்டிவிடுகிறது.

 

கீர்கேகோர்ட் Kirrkegaard $WfpwhH:"Man muss die irdische Hoffnung abtoeten,dann erst rettet man sich in die wahre Hoffnung"-Die Reinheit des Herzens.தமிழில்: மனிதர்கள் உலகத்தின் மீதான நம்பிக்கைகளை கட்டாயம் கொன்று விட வேண்டும்.பின்பு உண்மையான நம்பிக்கைகளை காப்பாற்றி விட முடியும்.

 

சோபா சக்தி கற்பனையான நம்பிக்கைகளைக் கொன்று விட்டார்.மணலில் கயிறு திரித்து வானத்தில் ஊஞ்சல் கட்டும் நோக்கம் அவருக்கில்லை.எனவே கொரில்லா வரலாற்று விவரண நாவலாகவும்,படைப்பிலக்கியத்துள் தலித்துவ அழகியலாகவும்-கோட்பாடாகவும் முகிழ்க்;கிறது!

 

ஈழ மக்களின் வாழ்வும் சாவும் போலிப் பிரச்சார ஊடகங்களால் உருமாற்றப்பட்டு மூழ்கடிக்கப்பட்டு விட்ட நிலையில் கொரில்லாவின் பாத்திரங்கள் நம்மோடு அந்த உண்மைகளைப் பேசுகின்றன.

 

வில்லியம் சேக்ஸ்பியரின் William Shakespeare கோம்லேட் நாடகத்தில்:"Gott hat euch ein Gesicht gegeben, und ihr macht euch ein andres."-Romeo und Julia;Othelo;Hamlet seite::244."இறைவன் உங்களுக்கு ஒரு முகத்தை வழங்கினார்,நீங்களோ உங்களுக்கு வேறொன்றைச் செய்தீர்கள்".என்று கோம் லேட் பாத்திரம் வழியாக சேக்ஸ்பியர் கூறுகிறார். நமக்கு நாம் எத்தனை முகங்களைப் படைத்துள்ளோம்? இந்த முகங்களை சோபா சக்தி கொரில்லாவினூடே நமக்கு விபரிக்கிறார்.இறுதியாகக் கொரில்லா பற்றிக் குறிப்பிடுவதாக இருந்தால் "முழுமையானது என்பது பொய்யானது."

 

வ+ப்பெற்றால், ஜேர்மனி .-ப.வி.ஸ்ரீரங்கன்