முன்பெல்லாம் விலைவாசி உயர்வு என்பது இன்று அடைந்துள்ள ஒட்டு மொத்த கொடூர வடிவத்தை வெளிக்காட்டாதது ஏன்? இந்த விலைவாசி ஏன் இப்படி உயர்கிறது? முறையாக ஒரு நாட்டில் அந்த நாட்டின் விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை அந்த நாட்டின் அரசு தான் கொள்முதல் செய்ய வேண்டும்,விநியோகிக்கவேண்டும். விலைவாசியை குறைப்பதற்கும்,விவசாய உற்பத்தியை பெருக்குவதற்குமான வழிமுறைகளை அந்த அரசு தான் திட்டமிட வேண்டும்.
ஆனால் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றிக்கொள்ளும் இந்த வெத்து வேட்டு இந்திய அரசு, தனது கடமையான உணவு தானிய கொள்முதலை கொஞ்சம்கொஞ்சமாக கைகழுகி இன்று பெரும்பான்மையாக அந்த பணியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டுள்ளது. இப்படி இந்த அடிமை மகாராஜா நிராகரித்து ஒதுக்கிய கடமையை அதன் ஆண்டைகளான கமிசன் மண்டிக்காரர்களும்,தரகு முதலாளிகளும் கன்னும் கருத்துமாக செய்து வருகிறாகள்.
இதனால் உற்பத்திக்கான செலவைக்கூட பெறமுடியாமல் விவசாயி நட்டமடைகிறான்.விவசாயம் செய்ய வாங்கிய கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான்.இதன் விளைவாக சாவு எண்ணிக்கை கடந்த பத்து வருடங்களில் மட்டும் ஒன்றரை லட்சம் விவசாயிகளின் உயிரை குடித்துள்ளது.இப்படி திட்டமிட்டே உணவு உற்பத்தி அழிக்கப்படுவதாலும்,தப்பிப்பிழைக்கும் நடுத்தர மற்றும் சிறு விவசாயிகள் ஒப்பந்த விவசாயம் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்கள் கூறும் பணப்பயிறுகளை விளைவிப்பதாலும் விவசாய உற்பத்தி அடியோடு சீர் குலைந்துவிட்டது.
மட்டுமின்றி இங்கு மக்கள் பசியால் வாடிச்சாகும் போது, உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்ப்பட்டுக்கொண்டிருக்கும் போது, இந்த கேடுகெட்ட நிலையில் இந்த அடிமை வல்லரசு சோயவையும்,பாமாயிலையும் இன்ன பிற உணவுப்பொருட்களையும் உயிரி எரிபொருள் [BIO FUEL] என்ற வக்கிரமான திட்டத்திற்காக குறைந்த விலையில் அமெரிக்கா,பிரிட்டன்,பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்திய பகாசூரர்களின் எரிபொருள் தேவைக்காக ஏற்றுமதி செய்கிறது இந்த கேடுகெட்ட இந்திய அரசு. நம் நாட்டில் மக்கள் உண்ண உணவில்லாமல் சாகும் போது,அவற்றை உயிரி எரிபொருளாக மாற்றி வெள்ளைக்காரன் காரில் செல்லும் இந்த பச்சைப்படுகொலை திட்டத்தை தாங்கிப்பிடிக்கிறது இந்திய அரசு.இதனால் உணவு தாணிய கையிருப்பு குறைகிறது. இதையே சாக்காக வைத்து மற்ற நாடுகளிலிருந்து அதே உணவுப்பொருட்களை அதிக விலை கொடுத்து இறக்குமதியும் செய்கிறது இந்த அரசு. இதன் தொடர்ச்சி தான் இந்த விலைவாசி உயர்வு.
மூன்றாமுலக நாடுகளில் வாழும் மக்களை திட்டமிட்டே படுகொலை செய்வதற்கான திட்டம் தான் இது. இந்த நோக்கத்தை தவிர இந்த கொலை பாதக திட்டத்திற்கு வேறு என்ன உள்நோக்கம் இருக்கமுடியும்? இதெல்லாம் போததென்று முன் பேர வர்த்தகம் என்ற சூதட்டத்தை சட்டத்தின் மூலம் மக்கள் மீது தினிக்கிறது இந்த அடிமை அரசு. இதன் படி உற்பத்தி செய்த பொருளுக்கு விலை நிர்ணய உரிமையை பெற முடியாமல் செத்துத்தவிக்கும் விவசாயிகளின் விளை பொருள்கள் எதையும் கண்ணில் கூட பார்த்திராத, விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாத சில பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகள் கையில் உணவுப்பொருட்களை வைத்துக்கொண்டு கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாடும் அதிகாரத்தை வழங்கியிருக்கிறது இந்த அரசு.அதன் படி உள்ளூர் கமிசன் மண்டிக்காரர்களிடம் கண்ணீர் சிந்திய விவசாயி இப்பொழுது கோட் சூட் போட்ட பன்றிகளிடம் கண்னீர் சிந்திக்கொண்டிருக்கிறார்கள்.
மொத்த உணவுப்பொருளின் விலையில் வெறும் பத்து சதவீதம் மட்டுமே முன் பணம் கட்டி அதையே நூறு சதவீதமாகவும் இரு நூறு சதவீதமாகவும் லாபத்துடன் விற்றுக்கொழுக்கும் இந்த் சூத்தாட்டத்தின் பெயர் தான் முன் பேர வர்த்தகம்[online trading].இதை தடை செய்து மக்களை காக்க வேண்டிய அரசே இதற்கு விசிலடித்து ஊக்கப்படுத்துகிறது.மேற்சொன்னவை சில உதாரனங்கள் மட்டும் தான் இந்த விலைவாசி உயர்வு என்னும் கொடிய நோயின் பிறப்பிடம் இவை அனைத்திலிருந்தும் தான் துவங்குகிறது. இவை எதுவும் தனித்தனி விசயம் அல்ல. இவை அனைத்திற்கும் ஆணி வேராக இருப்பது, கடந்த பதினைந்து வருடங்களாக இந்தியாவை ஆண்டு வந்த காங்கிரசு,பா.ஜ.க ஓட்டுப்பொறுக்கி தரகுமுதலாளித்துவ கும்பல் மாறி மாறி அமல் படுத்தி வந்த “தனியார் மயம்,தாராளமயம்,உலகமயம் என்கிற மறுகாலனியாதிக்க பொருளாதார கொள்கை” தான். இந்த் கொடிய விலைவாசி உயர்வின் மூலம் இதில் தான் உள்ளது. பஸ் டிக்கெட்டில் துவங்கி பெட்ரோல்,டீசல் என்று உயர்ந்து கடைசியில் உணவுப்பொருட்கள் வரை பாரவியிருக்கிறது இந்த விலைவாசி உயர்வு என்கிற விசம்.
உள் நாட்டு விவசாய உபத்தியை திட்டமிட்டே கொஞசம்கொஞ்சமாக அழித்து இன்று விவசாயத்துறையே ஒரு பாலடைந்த கட்டிடம் போல ஆகிவிட்டது.எப்போது தட்டிவிட்டாலும் விழுந்து நொருங்கிவிடும் நிலையில் தான் இன்று இந்திய விவசாயத்துறை இருக்கிறது.இப்படி விவசாயத்திலிருந்து விரட்டப்பட்ட விவசாயி தன் உயிரை காத்துகொள்ள நகரத்திற்கு ஓட்டமெடுக்கிறான். நகரத்திற்கு வந்து கட்டிட தொழிலாளியாக கசக்கி பிழியப்படுகிறான்,காவல்காரனாக பன்னாட்டு நிறுவனத்தின் வாசலில் காவல் காத்து நிற்கிறான். எந்த பக்கம் திரும்பினாலும் மறுகாலனிய கத்தி குத்திக்கிழிக்கிறது.மறுகாலனியாதிக்கத்தின் உண்மையான கோரமுகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத்துவங்கியுள்ளது. உழைக்கும் மக்களை மட்டுமின்றி “அணைத்து தரப்பினரையும்” அது தாக்கத்தொடங்கியுள்ளது எந்த பக்கம் போனாலும் சுற்றிச்சுற்றி அடிக்கிறார்கள் இந்த அடிமை அரசும் அதன் எஜமானர்களாகிய பன்னாட்டு முதலாளிகளும்.இனி வரும் சில காலங்களில் அரிசிக்கும்,எண்ணைக்கும்,கோதுமைக்கும் வெளி நாடுகளிலிருந்து கப்பல் வருமா என மக்கள் துறைமுகத்தில் காத்து நிற்கின்ற ஒரு கொடூரம் நிஜமாகும் நாள் தூரம் இல்லை என்று தெரிகிறது. பன்னாட்டு கம்பெனிகளின் செல்லப்பிள்ளைகள், அல்லது செல்ல நாய்களான மன்மோகன்,பா.சிதம்பரம் கூட்டணி மீதமிருக்கும் ஓராண்டையும் இதை விடக்கேவலமாகத்தான் ஆட்சி செய்யப்போகிறது. என்ன செய்வது? வாழ்த்தலாமா?
அல்லது இந்த கூட்டணியின் ஆட்சியை வாழ்த்தி, பாதுகாப்பவனை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்?
மாமாக்களுக்கு மாமா வேலை பார்க்கும் மாமா என்றா?
குண்டைப் போடப்போறோம்,போடப்போறோம் என்று சொல்லிக்கொண்டிருந்தவன்
எவ்வளவு
பெரிய குண்டைப்போடப்போகிறான் என்று பார்த்துக்கொண்டுந்தார்களே தவிர யாரும்
ஏன்டா குண்டைப்போடுற என்று கேட்கவில்லை.கடைசியில் குண்டும் விழுந்தேவிட்டது.
ஏற்கெனவே பள்ளமான மண்ணுல குண்டைத் தூக்கிவீசி மேலும் குழியை
படுபாதாளபள்ளமாக்கிட்டானுங்க மன்மோகன் மாமா தரகு கம்பெனி.
கதகதப்பான,மோன நிலையிலிருந்த ஆத்மாக்களுக்கு விலைவாசி உயர்வு என்கிற சில்லிடுகிற பச்சைத்தண்ணீர் முகத்தில் ஸீரோ டிகிரி ஊசியைப்போல அறைந்து ஏற்படுத்திய பிரக்ஞ்சையால் மிகப்பெரிய களேபரமாகிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஒருத்தன் மட்டும் ஓரமா நின்னு கத்திக்கிட்டுப்பானே எங்கே அவங்கன்னு தேடுனா,அதாங்க நம்ம பன்றித்தொழுவத்தின் கிளீனர் பாய்ஸ் CPM காரங்க. அவங்க என்ன பன்னப்போறாங்கன்னு காத்திருந்தோம்,காத்திருந்தது வீன் போகவில்லை. கடைசியாக அவர்களிடமிருந்தும் ஒரு குண்டு வந்து விழுந்தது! என்னடா இது ஒரே குண்டா இருக்குன்னு பயப்படாதீங்க, இந்த குண்டு மன்மோகன் மாமா கம்பெனிக்கு எதிரான குண்டு,அதன் அஸ்திவாரத்தையே ஆட்டம் கானவைக்கிற குண்டு.
அதாவது "ஒரு வாரத்திற்கு விலைவாசி உயர்விற்கு எதிராக போராடப்போகிறதாம்" நம்ம CPM செக்கு மாடுங்க.
எட்டப்பன் மன்மோகனின் ஆட்சியில் இது எத்தனையாவது பாம் என்பதற்கு CPM காரன் தான் சரியா கணக்கு வச்சிருப்பான்.இது டைம் பாமா,மைன்ஸா என்கிற ரகசியமும் அவங்களுக்கு தான் தெரியும்.
இப்படி விலைவாசி உயர்வு,பஞ்சம்,பட்டினிச்சவுகள்,விவசாயிகளின் கொத்துக்கொத்தான தற்கொலைகள் என்று இவ்வளவு கொடூரமாக இந்த ஆட்சி மக்களை குலை குலையாக காவு வாங்கிக்கொண்டிருக்கிறதே இந்த நேரத்திலாவது மக்களுக்கான கட்சி என்று கூறிக்கொள்ளும் CPM நியாயமாக என்ன செய்ய வேண்டும்? மக்களுக்கு குழி தோண்டும் உனக்கு நான் குழி தோன்டுறேன் பார் என்று கூறி ஆதரவை திரும்பப்பெற்று கைக்கூலிகளின் காலை வாரிவிட வேண்டும்,அவனை கவிழ்க்க வேண்டும் என்று தானே யாரும் நியாயமாக எதிர் பார்ப்பார்கள். அனால் இவர்கள் அவ்வாறு செய்வார்கள் என்று நாம் எதிர்பார்த்தால் அது தான் மோசமான மூட நம்பிக்கை ஆனால் அவர்களின் அணிகளே அவ்வாறு ஒரு மூட நம்பிக்கையால் தான் பீடிக்கப்பட்டுள்ளார்கள்.
விலைவாசி உயர்வு மக்களை விசம் போல கொஞ்சம்,கொஞ்சமாக கொல்கிறது. வாடிய வயிற்றுடனும்,கடன்காரனிடம் வசவு வாங்கிய மிரட்சியுடனும் நடைபினமாவே மாறிவிட்ட விவசாயிகளுக்கும்,பிற உழைக்கும் மக்களுக்கும், மாத வருவாயில் துன்டு விழுந்துடுச்சே கடன் வேற கூடிட்டே போகுதே, இனி எப்படி பிழைப்பை நடத்துவது என்று இடிந்து போய் நிற்கும் நடுத்தர வர்கத்திற்கும் இந்த விச வித்தின் ஆணி வேர் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் இருக்கலாம்,ஆனால் “முற்போக்கூ..” கூட்டணி கட்டி ஆட்சி நடத்தும் CPM கம்யூனிஸ்டு தோழர்களுக்கு தெரியாதா என்ன ?
இந்த கழுதைகளுக்கு தெரிந்து என்ன சார் ஆகப்போகிறது,அதுக்கு பீக்கும் கற்பூரத்துக்குமே வித்தியாசம் தெரியல.உண்மையில நமக்கு தான் சார் அறிவு இல்லை இது குதிரையில்ல கழுதையின்னு தெரிஞ்சுக்க நமக்கு இவ்வளவு நாள் ஆகியிருக்கு.என்று இந்த போலி கம்யூனிஸ கழுதைகளை காறித்துப்பினார் ஒரு கடைக்காரர்.
இது கழுதையும் கூட இல்லை,கழுதைப்புலி என்று சொல்வார்கள் அல்லவா அது போல இவைகள் நரித்தனமான கழுதைகள்,அதாவது கழுதை நரிகள்.
இப்போது ஏறியிருக்கும் இந்த விலைவாசி உயர்வு என்பது என்றைக்காவது குறைந்து விடும் என்று எண்ணுவது வெறும் கனவு மட்டுமே மாறாக ஏறத்தான் செய்யும்.இதற்கு முன்பு ஏறிய விலைகள் என்றைக்காவது இறங்கியதுண்டா? இந்த போலி ஜனநாயக அடிமை அரசும்,அதன் கொள்கைகளை காத்து நிற்கும் மறு'காலனிய' காலகட்டத்தின் எட்டப்பன்கள்,தொன்டைமான்கள்,மீர் ஜாபர்களை ஒழித்துக்கட்டும் வரை விலைவாசி குறைவதைப் பற்றி நீங்கள் உங்கள் சொந்த வீட்டில்,சொந்த கட்டிலில் படுத்துக்கொண்டு கனவு கண்டால் கூட உங்களை கைது செய்ய புதிய சட்டம் இயற்றப்படலாம் யார் கண்டது,ஒரு வேளை CPM காம்ரேடுகளிடம் கேட்டால் தெரியும்.