Language Selection

பி.இரயாகரன் 2001-2003
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

1949ம் ஆண்டுக்கு பின் திட்டமிட்ட வகையில் மலையக தமிழ் பாடசாலைகளின் எண்ணிக்கை குறைந்தே வந்துள்ளது. அவை சிங்கள பாடசாலையாக மாற்றப்பட்டன. மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது போன்று, அவர்களின் கல்வி வளங்கள் சூறையாடப்பட்டன. இதற்கு தமிழ் தேசிய தலைவர்கள் தூணாக துணையாக நின்றனர், நிற்கின்றனர்.

 

ஆண்டு                         பாடசாலை எண்ணிக்கை          தமிழ் மாணவர்கள் எண்ணிக்கை

1903                                                     43                                                                     1765

1949                                                   997                                                                  56168

1951                                                   942                                                                  60924                      

1952                                                   935                                                                  59554

1955                                                   891                                                                  67110

1960                                                   874                                                                  78733

1964                                                   859                                                                  81695

1966                                                   746                                                                191881

 

 

 மாணவர் எண்ணிக்கை சிறு அதிகரிப்பு என்பது இயல்பான சமுதாய விழிப்புணர்வுடன் நிகழ்ந்தது. ஆனால் அந்த அதிகரிப்பும் கூட பெரியளவில் நிகழவில்லை. கல்விக்கான சமூக பொருளாதார பண்பாட்டுச் சூழல் இதற்கு தடையாக இருந்தது. வர்க்க ஒடுக்குமுறை, இனவாதம் மற்றும் பிரதேசவாதம், சாதியம் இந்த மாணவர்களின் கல்விக்கு எதிராக கையாளப்படுகின்றது.


பல்வேறு தடைகளை மீறியும் இயல்பாக சமுதாயத்தில் ஏற்படுத்தும் விழிப்புணர்ச்சி, கல்வியில் அக்கறை எடுப்பது அதிகரிக்கின்றது. மாணவர்கள் வரவு மலையகத்தில்

ஆண்டு                                                                    1986                         1996

மாணவர் சேர்வு விகிதம்                               59.3                          94.6

இடையில் விலகல் விகிதம்                          9.4                            4.6

திரும்பக் கற்றல்                                                16.9                          16.0

கல்வியில் முன்னேற்றம்                              46.0                          78.4

 

பாடசாலை இடைநிறுத்தம்

 

படாசாலை ஆண்டு                                   தேசியவிகிதம்                     பெருந்தோட்டம்

                                                                         (இடைநிறுத்தம்)                   (இடைநிறுத்தம்)
 ஆண்டு -5                                                                4.6                                           28.5
 ஆண்டு -6                                                                5.4                                           29.4
 ஆண்டு -7                                                                6.1                                           14.1
 ஆண்டு -8                                                                7.3                                           24.0
 ஆண்டு -9                                                                8.4                                           20.0
  
மலையக தமிழ் மக்களின் வாழ்வுக்கான போராட்டத்துடன் கல்விக்கான போராட்டமும் இணைந்து செல்வதை இது காட்டுகின்றது. மலையகத்தில் உள்ள 718 பாடசாலையில் 79 வீதமானவை (570) மூன்றாம் தர நிலையில் உள்ள ஆரம்ப பாடசாலைகளே. இது சிங்கள பாடசாலையில் 35 சதவீதமாகவும், முஸ்லீம் பாடசாலையில் 21 வீதமாகவும் உள்ளது. அடிப்படை கல்வியை மட்டுமே மலையக மாணவர்கள் பெறுகின்றனர் என்பதை பாடசாலைகளின் தரநிர்ணயம் காட்டுகின்றது. இதை தெளிவாக புரிந்து கொள்ள மாணவர் எண்ணிக்கையை ஆராய்வோம்;

 

மலையகத்தில் வகுப்புவாரியாக மாணவர் நிலவரம் 1994 இல்

 

                                                                ஆண்                          பெண்

1 முதல் 5                                          67000                          61500

6 முதல்11                                          35000                          33600

க.பொ.த உ.த                                        706                              670

 

உயர் கல்வி மலையக மக்களுக்கு மறுக்கப்படுவதை காட்டுகின்றது. ஒரு சமுதாயத்தின் அடிமைத் தனத்தை, கூலி வாழ்வையும் தொடர்ச்சியாக கட்டி காப்பதற்கு கல்வியை மறுப்பது நிபந்தனையுடன் கூடிய அவசியமாயுள்ளது. இலங்கையில் 10000 பாடசாலைகள் உள்ளன. இதில் 2000 மிகவும் பின்தங்கிய பாடசாலைகள். இவை பெருமளவில் மலையகத்திலும், தாழ்த்தப்பட்ட சமூகங்கள் வாழும் கிராமங்களிலும், நகர்புற சேரிகளிலும் காணப்படுகின்றது.

 

மலையக மக்கள் செறிந்து வாழும் கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டத்தில் கல்வித் தன்மையை ஆராய்வோம்.

 

1. சிங்கள பாடசாலை
 2.சிங்கள பாடசாலை %  
 3.தமிழ் பாடசாலை
 4.தமிழ் பாடசாலை %  
 5.முஸ்லீம் பாடசாலை
 6.முஸ்லீம் பாடசாலை %  

 பாடசாலை வகை                 1          2              3                4               5               6

உயர்தரம் அனைத்தும்     121        5 %          8               1  %        15            10  % 

 உயர்தர கலை மட்டும்    475      20  %      29              4  %         38            25  % 
 11ம் வகுப்பு வரை              967      40  %    110             15  %       66            43  % 

 5ம் வகுப்பு வரை                859      35  %    599             80  %       34            22  % 
 மொத்தம்                              2422    100  %    746           100  %     153          100  % 
 

இந்நிலையில்

                                                                             சிங்களவர்              தமிழர்                முஸ்லீம்

மொத்த சனத் தொகை                           34.86லட்சம்        9.10லட்சம்            3.12லட்சம்

(1)உயர்தர  மாணவகளின் தொகை     2.88லட்சம்        1.13லட்சம்            20.86ஆயிரம்

(2)உயர்தர மாணவர் தொகை            73.41ஆயிரம்        31.42ஆயிரம்         8.2ஆயிரம்

 

மலையக மக்களின் கல்விக்கான போராட்டத்தை எடுக்காத தேசியம் மேலுள்ள சமூக அவலத்தை என்றுமே பேசியதில்லை இந்த தேசியம் தரப்படுத்தலை எதிர்த்த போது, அனைத்து மாணவர்களின் கல்வியை இட்டுச் சிந்திக்கவில்லை. இதற்கு எதிராகவே செயற்பட்டனர். இலங்கையின் எழுத்தறிவு கிராமிய விவசாயிகளிடையே 92.5 சதவிகிதமாகும். நகர்புறத் தொழிலாளர்களிடையே 73.4சதவீதமாகும். ஆனால் மலையக மக்களிடையே  59.7 சதவீதமாகவும், இதில் பெண்களிடையே 38.1 சதவீதமாகவும் உள்ளது. தமிழ் மொழி பேசுகின்ற வௌ;வேறு சமூக தளத்தில் உள்ள மனித அவலங்களையும், கொடுமைகளையும் மாற்றப் போராடாத தமிழ் தேசியம் என்பது, எதையும் மக்களுக்காக பெற்றுத் தரப் போவதில்லை என்ற உண்மையை யாரும் மறுக்கமுடியாது. இது வெறுமனே மலையகம் மட்டுமல்ல யாழ் சமூகத்தின் உள்ளும் கூட தெளிவாக பொருந்தும்.

 

இனவாத யுத்த சகதியில் தமிழ் குறுந்தேசியவாதிகள் இறங்கியதன் மூலம் தேசியத்தை அழிப்பதில் வெட்கப்படவில்லை. மக்களினதும் மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதில் கடுமையான நெருக்கடிகளை சிங்கள இனவாதிகளுக்கு சமாந்தரமாக தொடர்ச்சியாக எற்படுத்துகின்றனர். இதை அண்மைய கல்வி நிலைமைகளே பிரதிபலிக்கின்றது.

1997 இல் மொழி அடிப்படையில் உயர்தரமாணவர் வீகிதங்கள்

 

மொழி              மொத்த மாணவர்கள்               உயர்தர மாணவர்கள்                உ-த மாணவர் சதவீதம்
 சிங்களம்                  3 156 000                                            187 400                                                    6.9
 தமிழ்                             968 000                                              40 400                                                    4.6
 

 பல்கலைக்கழக அனுமதிகான உயர்தரப் பரீட்சையில் பங்கு கொண்டோர்.

 

 
                            சிங்கள மாணவர்கள்                மொத்ததில் சதவீதம்            தமிழ் மாணவர்கள்          மொத்ததில் சதவீதம்
 1994                            120 538                                                    80.9                                            26.438                                            17.7
 1995                            129 510                                                    79.9                                            30.653                                            18.9
 1997                            141 076                                                    81.4                                            31.072                                            17.9
 1998                            144 208                                                    80.2                                            33.604                                            18.7
 

 பல்கலைக்கழக அனுமதியில் இன அடிப்படையில்

 
                                                          1993-1994                   1994-1995                  1995-1996
மொத்தம்                                           8015                              8663                              9130
 தமிழ் மாணவர்கள்                     1025                              1092                              1559
 சதவீதத்தில்                                     12.7                               12.6                                16.9
 

 

பாடரீதியாக 1998ம் ஆண்டு உயர்தர பரீட்சையில் பங்கு கொண்டோரை ஆராய்யின்

 
                                            சிங்கள மாணவர்கள்            மொத்ததில் சதவீதம்            தமிழ் மாணவர்கள்             மொத்ததில் சதவீதம்
பௌதீகம்                                    21645                                                 94.5                                              1207                                              5.27
 இரசாயணம்                              23783                                                 95                                                  1215                                              4.8
 தாவரவியல்                              14920                                                 95                                                    739                                              4.7
 விலங்கியல்                              15192                                                 95.2                                                 740                                              4.6
 தூய-கணிதம்                              8715                                                 95                                                    478                                               5
 பிரயோக-கணிதம்                    8754                                                 94.7                                                 480                                               5
 விவாசய விஞ்                           4301                                                99.6                                                    17                                               0.3
 பொருளியல்                             59700                                                94.1                                                3611                                               5.6
 

 

இவை தவிர மற்றையவற்றில் பாட ரீதியாக 1996ம் ஆண்டு உயர்தர பரீட்சையில் பங்கு கொண்டோரை ஆராய்யின்

 

 
                                       சிங்கள மாணவர்கள்             மொத்ததில் சதவீதம்           தமிழ் மாணவர்கள்            மொத்ததில் சதவீதம்
 வரலாறு                                     53336                                             98.7                                             65                                                    1.2
 கணக்கியல்                              25076                                             92.1                                         2046                                                    7.5
 வியாபாரக் கற்கை               25260                                             90.7                                         2505                                                    8.9
  

தமிழ் மக்களின் கல்வி தரம் வீழ்ச்சி காண்கின்றது. தேசியத்தின் குறுந் தேசிய கண்ணோட்டம் தமிழ் மக்களின் கல்வியை பாதளத்துக்கு அழைத்துச் செல்லுகின்றது. புலிகளின் குறிப்பான நலன்கள் தமிழ் மக்களின் கல்வியை சிதைக்கின்றது. சிங்கள இனவாத அரசு தமிழ் கல்வியை கற்பழிக்கின்றது. இதற்கு நிகராக தேசியத்தின் குறுகிய நலன்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் மக்கள் மேல் சமுக பண்பாட்டு கலாச்சார இழிவைச் செய்கின்றது.

 

இதிலும் யாழ் உள்ளிட்ட பின்தங்கிய மக்கள் சமுகங்கள் மேலும் துல்லியமாக பதிப்புக்கு உள்ளாகின்றனர். உயர்ந்த கல்வித் தரமுள்ள யாழ்ப்பாணத்தின் பின்புறங்களில் உள்ள தாழ் சாதிக் கிராமங்களில் உள்ள பின் தங்கிய பாடசாலைகளிலும், சமூக அவலத்தைக் காணமுடியும்;. மலையகம் போல் யாழ்ப்பாணத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மறுக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் 1998-1999 இல் 20 சதவீதமான மாணவர்கள் பாடசாலை செல்லவில்லை. 5 முதல் 19 வயதுக்கிடைப் பட்ட 132 859 பேரில் 17.1 சதவீதமான மாணவர்கள் அதாவது 23000 பேர் ஒழுங்காக பாடசாலை செல்வதில்லை. 1.9 சதவீதமான 2500 குழந்தைகள் பாடசாலையில் சேர்க்கப்படவில்லை. 13.3 சதவீதமான 17700 மாணவர்கள் இடம் பெயர்ந்து காணப்படுகின்றனர்.  46.9 சதவீதமான சிறுவர் சிறுமிகள் 2000 ரூபாவுக்கு குறைவான குடும்பங்களைச் சார்ந்த வறியவர்கள். 6.9 சதவீதமான சிறுவர் சிறுமிகள் அதாவது 9200 பேர் அன்றாட கஞ்சிக்கே உழைப்பில் ஈடுபடுகின்றனர். 10.2 சதவீதமான 13500 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். 0.09  சதவீதம்; அதாவது 1200 குழந்தைகள் ஊனமுற்றவர்களாகும். 5.2 வீதமான 6908 இளம் வயதினர் சிறு வயதிலேயே திருமணம் செய்துவிட்டனர். இந்த சமூக அவலம் சாதியம், ஆணாதிக்கம், வர்க்க ஒடுக்குமுறை, இனவாதம் என்ற பல்துறை சார்ந்து காணப்படுகின்றது. மலையகத்துடன் ஒப்பிட முடியாவிட்டாலும், தேசியத்தின் காதநாயகர் வாழும் மண்ணில் தேசிய வாதிகளின் ஒடுக்குமுறைக்குள்ளாகிய ஒரு அவலமான மற்றொரு சமூகம் காணப்படுகின்றது. குறுந் தேசியம் யாழ் மையவாதமாக தனது நலனைக் கோரும் போது, அந்த யாழ் மண்ணிலும் பெரும்பான்மை மக்களின் நலனை ஒடுக்கி சிலரின் நலனை பிரதிபலிக்கத் தயங்கவில்லை. சொந்த மக்களையே ஒடுக்கவும் தயங்காத எமது போராட்டம் எப்படி தேசியத்தை பொதுமைப்படுத்தி நிற்கும்? தமிழ் தேசியம் தமிழ் மக்களின் சார்பாக பொதுமைப்படுத்தி குறுந் தேசிய யாழ் மையவாதம், மலையக மக்களின் கல்விக்காக ஒருநாளும் குரல் கொடுக்கப்போவதில்லை. அது எப்போதும் யாழ் நலன்களையே கோருகின்றது. இது தரப்படுத்தலில் மட்டுமல்ல வேலை வாய்ப்புகளிலும் இதையே அடிப்படையாக வைக்கின்றது.