07242021
Last updateசெ, 20 ஜூலை 2021 1pm

பாஜக - தேச வெறி நெருப்பில் நேபாள மீன் சுட்டு சாப்பிடும் திட்டம் ரெடி!!!

ர்நாடக வெற்றியை தொடரந்து மத்தியில் ஆட்சி அமைக்கும் நோக்கத்துடன் காய் நகர்த்த துவங்கியுள்ளது பாஜக. தனது வெளிநாட்டு கொள்கை அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது பாஜக. அதனையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நேபாளம் குறித்து சொன்னவைதான் கீழே உள்ள பத்திரிகை செய்தி.

கொழுப்பெடுத்த பாரதிய ஜனதாவின் கருத்துக்களை நோக்குங்கள். ஏற்கனவே காக்கி அரைடவுசர்கள் நேபாளத்தில் மன்னராட்சியை காப்பாற்ற பகிர பிரயத்தனம் செய்து மண்ணை கவ்வியுள்ளனர். தமது நேரடி முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில். நியாயவான்கள் போல வேசம் கட்டிக் கொண்டு புரளி பேசி வருகின்றனர் தற்போது. வழக்கம் போல தனது புரளி பிரச்சாரங்களை மெது மெதுவாக செய்து பிறகு தாக்குதல் தொடுக்கும் அதே தந்திரத்தை கைகொள்ள தொடங்கியுள்ளது இந்த பயங்கரவாத கட்சி.

இந்த சின்ன செய்தியில்தான் எத்தனை பொய்களை சொல்கிறது பாஜக...(சிகப்பு எழுத்தில் உள்ளவற்றை கவனிக்கவும்).

மாவொயிஸ்டுகள் பயமுறுத்தியே இத்தனை வோட்டு வாங்கியதாக பொய் சொல்கீறார்கள் இவர்கள். இதே குற்றச்சாட்டை மன்னர் ஆதரவு கும்பல் (வேற யாரு RSS நாய்கள்தான்) வைத்த போது. முன்னாள் அமெரிக்க அதிபர் கார்ட்டர் உள்ளிட்டோ ர் மாவொயிஸ்டுகள்தான் பிற கட்சியினாரால் மிரட்டி தாக்கப்பட்டுள்ளனர், கொல்லப்பட்டுள்ளனர் என்பதை குறிப்பிட்டதுடன் இந்த தேர்தல் மிக ஜனநாயகமான முறையில் நடந்துள்ளது என்று பாராட்டுகிறார்கள்.

//The elections were given a clean chit by international observer missions, including the United Nations, the European Union and the Carter Centre. All these bodies praised Nepal's Election Commission -- assisted by the United Nations Mission in Nepal (UNMIN) -- for smoothly executing the elections across the country. //

இதுவும் சர்வதேச சமூகம் இந்த தேர்தல் குறித்து சொன்னதுதான். இந்த தேர்தல் வாக்கு எடுப்பு திறந்த வெளியில் நடந்ததால் மொள்ளமாறித்தனம், கள்ளவோட்டு போன்றவை செய்ய வசதியில்லாமல் போய்விட்டது. விசயம் இப்படியிருக்க வழக்கம் போல பொய்களை நம்பியே அரசியல் செய்யும் பயங்கரவாத அமைப்பான கா(லி)வி கும்பல் இதிலும் பொய் சொல்கிறது.

மூன்றில் ஒரு பங்கு ஓட்டுதான் மாவோயிஸ்டுகள் வாங்கியுள்ளனர் எனவே மாவோயிஸ்டுகள் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று பாஜக மிரட்டுகிறது. அடுத்த நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட்டு நாட்டாமைத்தனம் செய்வது அநாகரிகமானது என்ற அடிப்படை நாகரிகம் இவர்களுக்கு ஆதரவான ஒரு வெறியன் ஆட்சி செய்தால் மட்டுமே இவர்களுக்கு ஞாபகம் வரும் போலும். இதே நேபாளத்தில் இந்நேரம் அந்த மன்னன் ஆட்சி செய்து அயோக்கியத்தனமாகா ஏதேனும் செய்திருந்தால் இவர்கள் அது அடுத்த நாட்டு விவகாரம் என்று கள்ளமௌனம் சாதித்திருந்திருப்பர். மக்களின் ஆதரவே இன்றி இதுவரை ஆட்சி செய்த மன்னருக்கு பாஜக வெறியர்கள் காவடி தூக்கிய பொழுது இந்த வோட்டு Sharing விசயம், people's Mandate போன்ற விசயங்கள் மறைந்த இடம் தெரியவில்லை. அதை விடுங்கள், இவர்கள் தற்போதைய கர்நாடக தேர்தலில் கூட காங்கிரசை விட கம்மியாகத்தான் வோட்டு வாங்கியுள்ளனர் (பாஜக 33.9, காங்கிரஸ் 34.6). ரொம்ப நன்னூல் எனில் ஆட்சியமைக்காமல் வெளியே செல்ல வேண்டியதுதானே காக்கி அரைடவுசர் பயங்கரவாதிகள்? மாறாக வந்த மறு நிமிடத்திலிருந்தே தமது வெறித்தனங்களை அரங்கேற்றி வருகின்றனர். தமிழ் சினிமா ஷூட்டிங் செய்தவர்கள் தாக்கப்பட்டதிலிருந்து, ஹொகேனாக்கல் பிரச்சினையில் திமிர்த்தனம் செய்வது வரை.

செக்குலர் என்றால் சனாதன தர்மமாம். எங்கே சனாதன தர்மம் என்றால் சாதி வெறி தத்துவம் என்று சாணியடிப்பார்களோ என்று பயந்து போய் 'தி ஹிந்து' தனது சொந்த முயற்சியில் பிராக்கெட்டில் ஹிந்துயிசம் என்று விளக்கம் வேறு கொடுக்கிறது. சனாதன தர்மம் அதாவது ஹிந்துயிசம்தான் செக்கூலரானதாம்? எப்படி என்பதற்க்கு ஆதாரமாக பாபர் மசூதி இடிப்பிலிருந்து, சிதம்பரம் கோயில் பிரச்சினை, நீதிமன்ற தீர்ப்புகள், சேது சமுத்திரம் பிரச்சினைம், கோமாதாவுக்கு புண்ணாக்கு வரை பலவும் ஆதாரங்களாக உள்ளன. செக்கூலர் என்பதற்க்கு இவர்களது அகராதியில் வழக்கம் போல ஒரு தலைகீழ் அர்த்தம் வைத்திருப்பார்கள்.

சேக்கூலர் என்கிற வார்த்தையை பயன்படுத்துவது நெகடிவாம், மாறாக ஹிந்துயிசம் என்று பார்ப்ப்னியத்தை கடைபிடிப்பது மட்டும்தான் உண்மையான செக்கூலரிசமாம். ஏற்கனவே இந்தியாவில் பெயரில் சேக்கூலரிசம் என்று போட்டுக் கொண்டு நடைமுறையில் பார்ப்பனியத்தை கடைபிடிப்பதையே இவர்கள் போலி சேக்குலரிசம் என்று சொல்லும் பொழுது, நடைமுறையிலும் பார்ப்பனியத்தை கடைபிடிக்காமல் போகும் அபாயம உள்ள இடங்களை எந்தளவுக்கு வெறுப்பார்கள் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. இவர்கள் கணக்கில் உலகில் நேபாளம் மட்டுமே இது வரை செக்கூலராக இருந்த நாடு. அந்த ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. கொள்ளையடிப்பதையே உழைப்பு என்றும், ஏமாற்றி பிழைப்பதையே திறமை என்றும் கூறும் இந்த ஏகாதிபத்திய ஏவல் நாய்கள் பார்ப்பினியத்தையே சேக்கூலரிசம் என்று சொல்வது ஒன்றும் வித்தியாசமானது அல்ல.

ஒரு ஆதிக்க வெறி தத்துவம் செக்கூலராக எப்படி இருக்க முடியும் என்பதை காக்கி அரைடவுசர்களின் இணைய கோமானாண்டிகள் இதே பதிவில் நமக்கு விளக்கினால் சிறப்பாக இருக்கும். நமக்கும் அவிங்கள அடிச்சு டவுசர லைவா(Live) கழட்டி ரொம்ப நாள் ஆயிருச்சி... வருவார்களா?

அசுரன்

Nepal as a secular state, a negative development: BJP
Neena Vyas
NEW DELHI: The declaration of Nepal as a secular state is a “negative development,” but the end of monarchy in what was till recently the world’s only Hindu kingdom is the result of the “wishes of the people,” says the Bharatiya Janata Party.

Releasing the party’s seven-page foreign policy resolution here on Monday, the former External Affairs Minister, Jaswant Singh, clarified its views in response to questions.

Clearly, the BJP did not think that the recent election gave the Communist Party of Nepal(Maoists) any mandate, although it expressed its “satisfaction” with the poll. It said the CPN(M) needed to be restrained in its conduct and utterances “as they had only about a third of the popular vote, and that too, obtained through intimidation.”

As for abolition of monarchy, Mr. Singh said, “It is for the people of Nepal to decide not to have a monarchy.”Was the BJP happy about Nepal becoming a secular state? He said: “As an Indian and a believer in ‘sanatan dharma’ [Hinduism], I feel diminished. … There are four ‘dhams’ [pilgrimage centres] in India and the fifth, Pashupati Nath, is in Nepal. There is nothing more secular than ‘sanatan dharma’. … This is a negative development [in Nepal].”

Related Article:
நோபளம் : இதுவன்றோ ஜனநாயகத் தேர்தல்!


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்