book _4.jpgபேச்சு வார்த்தையின் ஆரம்பத்தில் இடைக்கால நிர்வாகச்சபை என்பதைப் புலிகள் கோரவில்லை. அதை எள்ளி நகையாடினர். அமைதி சமாதானப் பேச்சின் ஊடாக நிதி, தமக்கே கிடைக்கும் என்ற அடிப்படையில் இடைக்கால நிர்வாகச் சபையை நிராகரித்தனர். ஆனால் நிதி கிடைப்பது என்பது ஒரு நிர்வாக அலகின் ஊடாகவே சாத்தியம்  என்ற நிலையில் தான், இடைக்கால நிர்வாகம் என்ற பேச்சுவார்த்தையை முன்வைத்தனர். பாலசிங்கம் இதை ~~வடக்கு - கிழக்கு இடைக்கால நிர்வாகம் அவசியமென புலிகளின் தலைவர் பிரபாகரன் பிரேரிப்பதற்குக் காரணமாக அமைந்த விடயங்கள் அல்லது அத்தகைய விரக்தியை ஏற்படுத்திய சூழ்நிலைகள்| குறித்து ஹெல் கிஸன் மூலமாக நான் அனுப்பிய கடிதத்தில்|| காணக் கோரும் அடிப்படையில் தான், இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை||க்கான தீர்வுத் திட்டத்தை முன்வைத்தனர் என்று கூறியுள்ளார்.


  ~~இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை||க்கான புலிகளின் தீர்வுத் திட்டம், தமிழ் தேசியத்துக்கு எதிராக ஏகாதிபத்திய உலகமயமாதலை முன்னிறுத்துகின்றது. இது இலங்கை என்ற அமைப்புக்குள்ளாகவோ அல்லது தனியாகவோ புலிகள் தமது அதிகாரத்தை நிலைநாட்டுவதை அடிப்படையாகக் கொண்டது. இதைத் தெளிவாகவே தீர்வுத் திட்டம் வரையறுக்கின்றது. தமிழ் மக்களின் அதிகாரத்தை நிராகரித்து, புலிகள்; தமது அதிகாரத்தைத் தக்கவைக்கும் உள்ளடக்கத்தை கூட்டி அள்ளி, தீர்வுத் திட்டமாக முன்மொழிந்துள்ளனர். எந்த விதத்திலும் தமிழ் மக்களின் சமூக அதிகாரம், அவர்களின் வாழ்க்கை நலன்கள் என எதையும் இந்தத் தீர்வுத் திட்டம் முன்வைக்கவில்லை. மாறாக அதை நிராகரிக்கின்றது. அரைகுறையாக எஞ்சி இருப்பதையும் ஏகாதிபத்திய நலனுக்குத் தாரைவார்க்க தயாராக இருப்பதையேக் கொள்கைப் பிரகடனமாக ~~இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை|| ஊடாக புலிகள் செய்கின்றனர். தமிழ் மக்களின் அடிப்படையான தேசிய நலன்களை மறுத்து, தமது சொந்த குழு மற்றும் வர்க்க நலனை முன்நிறுத்தியதன் மூலம், ஏகாதிபத்தியத்துக்குச் சேவை செய்ய காத்திருப்பதை ~~இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை|| பிரகடனம் செய்கின்றது. இதில் எந்த சந்தேகத்தையும் அவர்கள் விட்டுவிடவில்லை. இதையே தமிழ் மக்களின் தேசிய நலனாகக் கட்டமைக்கின்றனர். தமது சொந்த நலனை முதன்மைப்படுத்தியதன் மூலம், உலகமயமாதலுக்கு இசைவாக மக்களின் அனைத்துச் சமூக வாழ்க்கையையும் தியாகம் செய்ய "இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை"  கோருகின்றது.


 தேசியம், தேசிய நலன் என்பது தமிழன் ஆள்வது என்பதில் இருந்து தீர்மானமாவதில்லை. தேசியம், தேசிய நலன்கள் என்பது, மக்கள் தமது சொந்த உழைப்பை எப்படி எந்த வகையில் அனுபவிக்கின்றனர் என்பதில் இருந்தே தீர்மானமாகின்றது. இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் மக்களைப் பொறுத்த வரையில், அவர்களின் வாழ்க்கை நிலையைப் பொறுத்த வரையில் ஒன்றுதான். தேசத்தில் வாழும் மக்களின் நலன்கள் என்ன என்பதில் இருந்தே, அனைத்தும் தீர்மானமாகின்றது. பெரும்பான்மையான தமிழ் மக்கள் எந்த வகையான சமூக உழைப்பில், எந்த வகையான உறவை உழைப்பில் கொண்டு இருக்கின்றனர் என்பதைக் கொண்டு, எப்படியான வாழ்வை வாழ்கின்றனர் என்பதைக் கொண்டே தேசிய நலன்கள் தீர்மானமாகின்றது. இந்தத் தேசிய நலன் தான் மக்களின் வாழ்வை மேம்படுத்தவும், அவர்களின் சமூகத் துயரங்களைப் போக்குவதை இலட்சியமாகக் கொண்டதாகும். மாறாக மக்களுக்கும், உழைக்கும் மக்களின் நலனுக்கும் வெளியில் தேசியம், தீர்வு என்பதெல்லாம் கெடுகெட்ட மோசடியாகும். இது குறுகிய தீய நோக்கம் கொண்டவை. மேலும் இது சொந்தக் குழு மனப்பான்மையைத் தாண்டி எதையும் மக்களுக்கு முன்வைப்பதில்லை. மக்களை மேலும் அடிமைப்படுத்தவும், ஒடுக்கவும் முன்வைக்கும் தீர்வாகவும், முன்மொழிவாகவும் தான் எஞ்சி நிற்கின்றது. "இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை" இதையே செய்கின்றது.


 சிறிலங்கா அரசுக்கு எதிராகப் போராடும் ஒரு இயக்கம், தனது தீர்வுத் திட்டத்தில் எதை முன்னிறுத்தி இருக்கவேண்டும்? தேசிய அழித்தொழிப்புக்கு எதிராகச் சகல இராணுவ மற்றும் சமூகப் பொருளாதாரக் கூறுகளையும முதன்மைப்படுத்தியிருக்க வேண்டும்;. இலங்கை என்ற தேசத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் ஒன்றுபட்டு வாழ, சில அடிப்படையான மக்களின் நலன் சார்ந்த, ஜனநாயகக் கோரிக்கையை அமுல்படுத்தக் கோரியிருக்க வேண்டும். இதை தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, சிங்கள மக்களுக்கும் அமுல்படுத்தக் கோரியிருக்க வேண்டும். பேச்சு வார்த்தையின் சாரம், இங்கு தான் கட்டமைக்கப்பட்டு இருக்க வேண்டும். இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை|| இதன் அடிப்படையிலான முன்வரைவை முன்வைத்திருக்க வேண்டும். சுரண்டப்படும் தமிழனின் சமூகப் பொருளாதாரச் சுரண்டல் உறவை நீக்கக் கோரியிருக்க வேண்டும். தேசியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க, அன்னியப் பொருட்களின் வருகையை இலங்கை முழுக்க தடை விதிக்கக் கோரியிருக்க வேண்டும். அன்னிய இராணுவப் பொருளாதார ஒப்பந்தங்களை இரத்து செய்யக் கோரியிருக்க வேண்டும். சகல உள்நாட்டு வெளிநாட்டுக் கடன்களுக்கான மீள் கொடுப்பு மற்றும் வட்டி கொடுப்பனவை நிறுத்தக் கோரியிருக்க வேண்டும்;. அந்த சுமையை தமிழ் மக்கள் முதுகில் ஏற்றுவதை எதிர்த்து இருக்க வேண்டும்;, இராணுவம் சார்ந்த வரவு செலவை நிறுத்தக் கோரியிருக்க வேண்டும். மாறாக அவற்றைத் தேசிய உற்பத்தி மீதும், மக்களின் அடிப்படைத் தேவையான மருத்துவம், கல்வி, குடியிருப்பு மற்றும் சமூகப் பணபாட்டுக் கலாச்சார துறைகளுக்கு பயன்படுத்தக் கோரியிருக்க வேண்டும்;. இதன் எல்லையில் குழுக்களின் ஆயுதக் களைவை உறுதி செய்ய வாக்குறுதியை அளித்து இருக்கவேண்டும்;. மக்கள் ஆயுதம் ஏந்துவதைக் கோரியிருக்க வேண்டும்;. தமிழ்ப் பெண்கள் மேலான ஆணாதிக்க ஒடுக்குமுறையையும், இலங்கை முழுக்க இந்த சமூக ஒடுக்குமுறையையும் நீக்கக் கோரியிருக்க வேண்டும். இனரீதியான ஒடுக்கு முறைகளை இலங்கை முழுக்க இனம் காட்டி அவற்றை நீக்கக் கோரியிருக்க வேண்டும். இப்படிப் பல நீண்ட கோரிக்கைகளை முன்நிறுத்தியிருக்க வேண்டும். இதைத்தான் ஒரே இலங்கையில் ஒன்றுபட்டு வாழ விருப்பமான நிபந்தனையாக வைத்திருக்க வேண்டும்;. உண்மையில் தமிழ் மக்களின் கோரிக்கையுடன் அக்கபக்கமாக இணைந்து இருக்கும், சிங்கள மக்களின் ஜனநாயகக் கோரிக்கையையும் இணைத்து இருக்க வேண்டும். ஜனநாயகக் கோரிக்கையை யாரும் கொச்சைப்படுத்த முடியாது. அதைப் பயங்கரவாதமாக சித்தரிக்கவும் முடியாது. ஒன்றுபட்ட இலங்கையில் வாழ உடன்படும் போது, தமிழ் மக்களுக்கு எந்த எந்த உரிமைகள் அடிப்படையானதும் அவசியமானதோ, அதை சிங்கள மக்களுக்கும் அமுல்படுத்தக் கோரியிருக்க வேண்டும்;. மாறாகப் புலிகள் தமது சொந்தக் குழுவின் அதிகாரத்தை நிறுவும் நோக்கில், தமிழ் மக்களின் அடிப்படையான ஜனநாயகக் கோரிக்கைகளின் முதுகெலும்பை முறிக்க வைக்கபட்டதே, புலிகளின் ~~இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை||கான தீர்வுத் திட்டம்.


 புலிகள் பேச்சு வார்த்தையை முதலில் நிறுத்தி அமைதி சமாதானத்தைக் கேள்விக்குள்ளாக்கி முடக்கிய போது, அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதர் ஆஷ்லி வில்ஸ் நீண்ட கருத்துரை ஒன்றை வழங்கினார். அதில் ~~..புலிகளின் பொருளாதாரக் கொள்கை என்ன? சகலவற்றையும் அவர்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயற்சிக்கிறார்களா? இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்து வட, கிழக்கைத் தனிமைப்படுத்தி அங்கு சர்வாதிகாரக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வது என்று அவர்கள் கருதுகிறார்களா? இதற்கு உதவி வழங்கும் நாடுகள், அமைப்புகள் இணங்க மாட்டார்கள் என்று நான் கருதுகின்றேன்.|| எனக் கூறினார். இதற்கான புலிகளின் பதிலில், மக்களின் முதுகில் குத்துவதே தமது பொருளாதாரக் கொள்கை என்று பிரகடனம் செய்தனர். ஏகாதிபத்திய (அமெரிக்காவின்) பொருளாதார நலன்களே, புலிகளின் தேசிய நலன் என்றனர்.


 இதைப் பாலசிங்கம் தெளிவாகவும் தடுமாற்றம் இன்றியும் கூறும் போது ~~தாராள ஜனநாயகப் பெறுமானங்களை அடிப்படையாகக் கொண்ட திறந்த பொருளாதாரக் கொள்கைக்கே நாம் ஆதாரவானவர்கள் என்பதை மட்டும் என்னால் கூறமுடியும்.|| என்று பிரகடனம் செய்தார். இதன் மூலம் உலகமயமாதலுக்கு விசுவாசமிக்க தமது பங்களிப்பை, பகிரங்கமாகப் புலிகள் பிரகடனம் செய்கின்றனர். மக்களின் தியாகங்கள் அனைத்தும் திறந்த பொருளாதாரக் கொள்கையை அமுல்படுத்தச் செய்யப்பட்டது என்று கூறுவதன் மூலம், சில தமிழர்கள் எலும்புக்காக வாலாட்டத் தயாராக இருப்பதைத் தாண்டி இதற்கு வேறு விளக்கம் கிடையாது. உலகம் முழுக்க தாராளமயமாக்கலும், திறந்த பொருளாதார கொள்கையும், மக்களின் அப்பட்டமான விரோதி என்பது நிறுவப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தான், புலிகள் பிரகடனங்கள், விளக்கங்கள் தேசியத்தின் பெயரில் வெளிவருகின்றது. உண்மையில் புலிகள் அரசுக்குச் சமர்ப்பித்தத் திட்டம் கூட இதையே மீளவும் சொல்ல முனைகின்றது. இதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிரானதாக "இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை"  இருப்பது, அதன் தேசிய உள்ளடக்கமாகியுள்ளது. அதைப் பார்ப்போம்.


 "இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை||க்கான திட்டத்தில் சரத்து 11.1 இல் ''. .. அனைத்து உதவிகளிலிருந்தும் கடன்களிலிருந்தும் கிடைக்கும் பணம் ...||, சரத்து 11.1.டீ ~~...ஒப்பந்தங்களின் அடிப்படையில் வடக்குக் கிழக்கிற்கென சிறிலங்கா அரசாங்கத்தினால் குறித்தொதுக்கப்படும் நிதிகள்|| சரத்து 11.3 இல் ~~மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, மீள்கட்டுமானம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றிற்கென்றே வரும் கடன்களும் கொடுப்பனவுகளும்..|| சரத்து 12-இல் ~~உள்ள+ரிலும் வெளியூரிலும் கடன் பெறுதல், உத்தரவாதங்களையும் இழப்பீடுகளையும் வழங்குதல், நேரடியாக உதவிகளைப் பெறுதல்...|| இவை அனைத்தையும் புலிகள் நிராகரிக்கவில்லை. வரவேற்று, அதன் மேல் தமது உரிமையை நிலைநாட்டக் கோருகின்றனர். இதன் சாரம் திறந்த பொருளாதாரக் கொள்கையை அமுல்படுத்த, உலகமயமாதல் கொள்கைக்கு இணங்க செயல்படும் அதிகாரத்தைத் தம்மிடம் தாரைவார்க்கக் கோருகின்றனர். தமிழ் தேசத்தையும், தேசியத்தையும் அன்னியக் கடனில் கட்டமைப்பது பற்றி புலிகள் பேசுகின்றனர். கடன் வாங்கி நாட்டைக் கட்டமைப்பது என்பதே தமது தேசியக் கொள்கை என்கின்றனர். இதுவே உலகமயமாக்கலின் அடிப்படையான நிபந்தனையாகும்;. புலிகளின் இந்தத் தேசியம், தேசிய அழிப்பை அடிப்படையாகக் கொண்டது. தேசத்தில் திறந்த பொருளாதாரக் கொள்கையை அமுல்படுத்துவதன் மூலம், தேசிய ஆதாரங்களை ஏகாதிபத்தியம் விரும்பியவாறு ஆட்டிப்படைக்கும் உரிமையை அங்கீகரிக்கின்றது. இதற்குக் கடன் வாங்குவதன் மூலம்;, நாட்டை அடகு வைக்க போதுமானத் தேவை நிறைவு பெறுகிறது. இதில் சகுனி வேலையைப் புலிகள் செய்ய, நாட்டை அடகு வைக்கும் சூதாட்டம் தொடருகின்றது. 


 கடன், உதவி என்ற பெயரில் தரும் பணம் அனைத்தும் நிபந்தனைக்கு உட்பட்டவை. இந்த நிபந்தனைகள் கடன் மீள கொடுக்கப்படவும், அதற்கான வட்டி வழங்கப்படுவதையும் உறுதி செய்கின்றது. கடன் மற்றும் உதவியை எந்தத் துறையில், எப்படி, எந்த நிபந்தனையின் கீழ் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும், எந்தத் துறையைப் புறக்கணிக்க வேண்டும் என்பதையும் அடிப்படையாகக் கொண்டது. அரசுத்துறையை முற்றாக அகற்ற வேண்டும் என்ற திட்டவட்டமான நிபந்தனைக்கு உட்பட்டதே கடன்கள் மற்றும் உதவிகள். உதாரணமாக இலவசக் கல்வி, இலவச மருத்துவம் போன்ற அனைத்து அரசுத்துறைகளையும் நிறுத்தி, அதைத் தனியார்மயமாக்க வேண்டும் என்பது திறந்த பொருளாதாரக் கொள்கையின் சித்தாந்தம் மற்றும் நிபந்தனையாகவே உள்ளது. தாராள ஜனநாயகக் கொள்கைக்கு இதைத் தாண்டிய அரசியல் விளக்கம் வழங்கும் அகராதி உலகில் எங்கும் கிடையாது. அனைத்தும் எதார்த்தமானதாகவே உலகில் நீடிக்கின்றது. இதைப் புலிகள் அங்கீகரித்து ~~இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை|| தீர்வுத் திட்டத்தில் முன்வைப்பதுடன், அதை அமுல் செய்யும் உரிமையே தமக்கு வேண்டும் என்கின்றனர். இதை யாரும் மறுத்து மறுவிளக்கம் சொல்லமுடியாது என்பதே உண்மை.


 உலகளவில் ஏகாதிபத்தியத்திடம் கடன் பெற்ற எந்த நாடும் கடனை மீளக் கொடுக்க முடியாமல் போனதுடன், கடன் பெருகிச் செல்வதே உலக நியதியாகியுள்ளது. கடனுக்கான வட்டியைப் பல மடங்காகக் கட்டுவதே நிகழ்கின்றது. வட்டி கட்ட முடியாத நிலையில், உள்நாட்டு நெருக்கடிகளைத் தணிக்கவும், வாங்கிய கடனுக்கு வட்டியைத் தொடர்ச்சியாகப் பெறவும் மானியங்கள், உதவிகள் என்ற பெயரில் வட்டியின் ஒரு பகுதியைக் கழிப்பதே எப்போதும்; நிகழ்கின்றது. இந்தக் கழிப்பும், மானியமும் மேலும் நாட்டை அடகு வைப்பதை நிபந்தனையாக்கி உறுதியைப் பெறுகின்றது. கடன் கட்டுவது என்ற பெயரில் உள்நாட்டுப் பொருளாதாரத்தையே கடன் கொடுத்தவனின் நிபந்தனைக்கு ஏற்ப மாற்றி அமைப்பதை, கடன் கொடுத்தவன் உறுதி செய்கின்றான். கடனை மீளக்கட்ட ஏற்றுமதிக்கான உற்பத்தி ஆணையில் வைக்கப்படுகின்றது. கடன் கொடுத்தவன் ஏற்றுமதியாகும் பொருளின் சந்தையைக் கைப்பற்றி வைத்திருப்பதன் மூலம், ஏற்றுமதியாகும் பொருளின் விலையைக் கட்டுப்படுத்தி நாட்டை மேலும் அடிமையாக்கின்றனர். இதற்கு உலகில் பல உதாரணங்கள் உண்டு.


 கடன் ஒட்டு மொத்தத்தில் மக்களின் வாழ்க்கை ஆதாரத்தை அழிக்கின்றது. மக்கள் தமது அடிப்படைத் தேவைக்கான உற்பத்தியை இழப்பதுடன், வாழவழியற்ற சமூகமாக மாறிவிடுகின்றது. இந்தப் பாதையில் புலிகள் தாமும் நாலுகால் பாய்ச்சலில் செல்ல ~~இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை||கான தீர்வில் பிரகடனம் செய்கின்றனர். அதில் தேசத்தையும், தேச மக்களையும், தேச மக்களின் தேசிய உற்பத்திகளையும் அடக்கியொடுக்க சபதம் ஏற்கின்றனர். ~~இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை||  முன்வைக்கப்பட்ட போது, தேசம் தேசியம் என்ற பெயரில், புலிகள் பல பத்தாயிரம் தியாகங்கள் அனைத்தும் நாட்டை அடகுவைக்க செய்யப்பட்ட தியாகமாகப் பிரகடனம் செய்துவிடுகின்றனர். ~~இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை|| தீர்வுத் திட்டம் மூலம் இலங்கை அரசங்கத்துடன் கூட்டாகவும், தனியாகவும் கடன் வாங்கி குவிக்கவும், அடகு வைக்கவும் உள்ள உரிமையை அங்கீகரிக்கக் கோருவதே, புலிகளின் தேசிய இடைக்காலத் திட்டமாகும்;. இதன் மூலம் இதையே நிரந்தரத் திட்டமாக மாற்றுவது தான் தேசிய இலட்சியமாகும்.


 மக்களின் அடிப்படையான தேசியப் பொருளாதார நலன்களில் இருந்து, புலிகள் தமது தீர்வுத் திட்டத்தைப் பற்றிப் பேசவில்லை. கடன் வாங்காமல் தேசத்தை நிர்மாணம் செய்ய முடியாதா? ஏகாதிபத்திய வழிகாட்டல் மற்றும் பணம் இன்றி நாட்டை முன்னேற்ற முடியாதா? தேச மக்களால் நிச்சயமாக முடியும்;. தேச மக்களின் மனித உழைப்பு தான் அனைத்தையும் நிர்மாணம் செய்கின்றது. அதுவே பணத்தை உற்பத்தி செய்கின்றது. மனித உழைப்பு தான் பணமாக வருகின்றது. இதைக் கொள்ளை அடிக்கத்தான் ஏகாதிபத்தியங்கள் மானியம், உதவி, கடன் என்ற பெயரில் பணத்தைக் கொடுக்கின்றனர். பணம் மனித உழைப்பை உற்பத்திச் செய்யவில்லை. உழைப்பு தான் பணத்தை உற்பத்திச் செய்கின்றது. உழைப்பின் பின் தான் பணம் வருகின்றது. வெற்றுப் பணப் பேப்பர்கள்; எதையும் தன்னிச்சையாக உற்பத்தி செய்யாது. ஒருவனிடம் பணம் குவிகின்றது என்றால், பல மனித உழைப்புகள் கொள்ளையிடப்பட்டது என்பதைத் தாண்டி பொருளாதாரத் துறையில் வேறு விளக்கம் கிடையாது. 


 உழைக்கும் மக்களின் வாழ்வுகளில் உழைப்பு தான் பணத்தை உற்பத்தி செய்கின்றது என்பதுதான் நிர்ணயமாக, எதார்த்தமாக பிரதிபலிக்கின்றது. உழையாது இருப்பவன் மட்டுமே இதை எதிர் நிலையில், பணம் தான் அனைத்தையும் உற்பத்தி செய்வதாக முன்வைக்கின்றான். ஒரு உழைப்பாளி உழைத்த பின் தான் பணத்தைப் பெறுகின்றான்;. இங்கு உழைப்பு முதன்மையானதாக உள்ளது. பணம் உழைப்பில் இருந்தே உருவாகின்றது. உழையாதவன் பணத்தைக் கொண்டு உழைப்பைப் பல மடங்காகச் சுரண்டுகின்றான்;. பணம் குவிகின்றது. இதையே கடன் கொடுத்தவன் செய்கின்றான். புலிகள் மக்களின் உழைப்பில் இருந்து, அதன் சாரத்தைப் பெறவில்லை. மக்களுக்கு எதிரான கண்ணோட்டத்தில் இருந்துக் கொண்டு, பணத்தைக் கொண்டு உழைப்பைச் சுரண்டி ஏகாதிபத்தியத்துக்குக் கொடுக்க விரும்புகின்றனர்.


 பண நோட்டுகள் எப்போதும் எங்கும் வெறும் வெற்றுப் பேப்பர்களே. அதில் குறிக்கப்படும் பெறுமானத்தை அது உண்மையில் கொண்டிருப்பதில்லை. கட்டநோட்டுகள் மற்றும் விளம்பரக் காசுகள் இதை எப்போதும் உறுதி செய்கின்றன. அதாவது ஒரு பேப்பரை உற்பத்தி செய்யும் போது உண்டாகும் செலவை, அந்தப் பணப் பேப்பர் கொண்டிருப்பதில்லை. பணத்தில் குறிக்கப்படும் பெறுமானம், மனித உழைப்பின் அளவைக் குறிக்கின்றது. எவ்வளவு உழைப்புக்கு சமமான பெறுமானம் என்பது குறித்து முடிவு செய்து அச்சடிக்கப்பட்ட பின்பே, பணத்தாள் பணமாகின்றது. தமிழ்ப் பிரதேசத்துக்குள் ஒரு பண நோட்டும் ஊடுருவும் போது, தமிழ் மக்களின் உழைப்பின் அளவே பணத்தின் பெறுமானத்தைத் தீர்மானிக்கின்றது. உலகில் ஒரேயளவு உழைப்பும் கூட, அந்தப் பண நோட்டின் பெறுமானங்களை பிhதிபலிப்பதில்லை. நேரடியாக எப்போதும் எங்கும் உழைப்பு தான் பணத்தை உற்பத்தி செய்கின்றது. உழைப்பு இன்றி பணத்தை வாங்கவும் முடியாது கொடுக்கவும் முடியாது. பணம் வரவுக்கு முன்பு பண்டைய சமுதாயத்தில் பண்டப் பரிமாற்ற முறை இருந்த போது, உழைப்பின் முக்கியத்துவத்தைத் தெளிவாக யாரும் யாருக்கும் விளக்க வேண்டி அவசியமற்றதாக இருந்தது.


 மக்களின் உழைப்பின் மதிப்பு புலித் தேசியவாதிகளுக்கு புரியாதவரை, உழைப்பை இழிவுபடுத்தும் வரை, அதைச் சுரண்டிக் கொழுக்கும் ஒரு ஊடகமாக கருதி சூறையாடும் வரை, நாட்டை அடகு வைப்பதன் மூலம், கடன் வாங்கி, நாட்டை முன்னேற்றுவது பற்றி பீற்றுவதையே புலிகள் தேசியமாக பிதற்றுவர். பிதற்றுகின்றனர். மனித உழைப்பே அனைத்தையும் தீர்மானிக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டால், அன்னியனிடம் ஏன்? சிறிலங்கா இனவாத அரசிடம் கூட கையேந்திப் பிச்சை கேட்க வேண்டிய அவசியமில்லை. சிறிலங்கா அரசை எதிர்த்துப் போராடிக் கொண்டு, அவர்களிடம்; கையேந்தி நிற்பது ஒரு முரணாக இருப்பது தேசியவாதிகளுக்கு தெரியாமல்; போனது வேடிக்கையான மோசடியாகும்.


 மக்களின் உழைப்பு ஆதாரம் இருக்கும் வரை, அந்த மக்களின் நலன்களை முன்வைத்து தேசத்தை, தேசியத்தை நிர்மாணம் செய்தால், உலகில் எந்த நாட்டிடமும் அடிமைப்பட வேண்டிய அவசியம் கிடையாது, மற்றவனிடம் பிச்சைக் கேட்டு பல் இளித்து கடன் வாங்க வேண்டிய அவசியம் கிடையாது, உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வியல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உற்பத்தி முறை மீது, எமது தேசம் கட்டமைக்கப்பட வேண்டும். இந்தத் தேச நிர்மாணத்துக்கு உழைப்பை முதலிடுவதற்கு பதில், அன்னியக் கடன் மூலம் பிச்சை எடுத்து நிர்மாணிக்க வேண்டிய அவசியம் கிடையாது, நாட்டையே ஏன் தேசியத்தையே அடகு வைக்க வேண்டிய அவசியம் கிடையாது, மாறாக தேச மக்களின் உழைப்பின் மதிப்பை புரிந்து, மக்களுடன் மக்களாக மாறுவதன் மூலம் தனித்து தலை நிமிர்ந்து நிற்கமுடியும். உலகின் எந்த சூப்பர் ஏகாதிபத்தியத்தாலும் எம்மை அடக்கியாள முடியாது. இதற்கு மக்களைச் சார்ந்து நின்றுப் போராடுவதா அல்லது கடன் வாங்கி நாட்டை அடகு வைத்து அடிமையாக இருப்பதா என்பதை தீர்மானிக்க வேண்டும். புலிகளின்; ~~இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை|| தீர்வுத் திட்டமோ தேசத்தையும், தேசியத்தையும் அடகு வைத்து, மக்களை அடிமைப்படுத்தவே அழைக்கின்றது. இதை இலங்கை அரசாங்கத்துடன் கூட்டாகவும், தனியாகவும் செய்யும் உரிமையையே ~~இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை|| மூலம் கோருகின்றனர்.


 இந்த ~~இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை|| தீர்வுத் திட்டம் சரத்து 4, 5, 6 மனித உரிமை பற்றியும், சமுதாயப் பாகுபாடுகளை நீக்குவது பற்றியும் முன்வைக்கின்றது. இதை சிறிலங்கா அரசிடம் முன்வைப்பதுதான், ஏன் என்ற கேள்வி எழுகின்றது. இதை சிறிலங்கா அரசிடம் முன்வைத்து நிற்பதன் மூலம், அதை தாம் சொந்த மக்களுக்கு மறுப்பதாக சொல்லி விடுகின்றனர். இடைக்கால அரசு நிர்வாகம் தரப்படின், இதைத் தாம் கடைப்பிடிக்க உள்ளதாகக் கூறுவதன் மூலம், உண்மையில் அதைக் கடைப்பிடிக்க மறுப்பதைப் பிரகடனம் செய்கின்றனர்.


 மனித உரிமையைப் பேணவும், மதச் சார்பின்மையை நிலைநாட்டவும் இடைக்கால நிர்வாக சபையான ~~இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை|| தரவேண்டும் என்கின்றனர். இனம், சாதி, மதம், தேசியம், பிராந்தியம், பால், வேறுபாடுகளை ஒழிக்கவும் தம்மிடம் இடைக்கால நிர்வாகமான ~~இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை||யை தம்மிடம் தரப்பட வேண்டும் என்கின்றனர். இதை மக்களை ஒடுக்கும் அரசிடம் கோருவது விசித்திரமான முரணான மனித உரிமை மீறலாகும். இதை சொந்த மக்களின் வாழ்வியல் நடைமுறை மீது, நடைமுறைப்படுத்த, சிறீலங்கா அரசு எந்தவிதத்திலும் உங்களை கட்டுப்படுத்தவில்லை, தடுக்கவுமில்லை. உண்மையில் இதைக் கொடுக்க மறுப்பது புலிகளின் அரசியல் சித்தாந்தமாகும். தமிழ் மண்ணில் தமிழ் மக்களுக்கு மனித உரிமையைப் புலிகள் மறுக்கின்றனர். புலிகள் மத வேறுபாடுகளைக் கட்டிப் பாதுகாத்து, மக்களைப் பிளக்கின்றனர். சாதிய, பிராந்திய, இன, பால் வேறுபாட்டை பாதுகாப்பதுடன், இதன் பிளவை புலிகள் அகலமாக்குகின்றனர். இதை நீக்க சிறீலங்கா அரசு உங்களை அமைப்பு ரீதியாக, சித்தாந்த ரீதியாக கட்டுப்படுத்தவில்லை.


  சிறிலங்கா அரசு தனது சொந்த மக்களுக்கு இதை கொடுக்கவில்லை என்பது உண்மை தான். அதேபோல் அதை நீங்களும் கொடுக்கவில்லை என்பதே உண்மை. உலகையும் மக்களையும் ஏமாற்ற, இதை ~~இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை|| என்ற தீர்வுத் திட்டத்தில் முன்வைத்து, இடைக்கால நிர்வாக அலகை கைப்பற்ற நினைப்பது என்பது ஒரு கடைந்தெடுத்த மோசடியாகும். சொந்த மக்களுக்கு இதை நீங்கள் வழங்க, என்ன தடை உங்களுக்கு உள்ளது? இதற்கு எந்த வகையில் சிறிலங்கா அரசு உங்களைத் தடுக்கின்றது? உங்களை நீங்களே தடுத்துக் கொண்டு, அதை சிறிலங்கா அரசிடம் வைப்பது மோசடியாகும். மக்களிடையேயான சமத்துவத்தையும், மக்களின் ஜனநாயக உரிமையையும் நாங்கள் வழங்குவோம் என்பதும், அதை அரசிடம் முன்வைப்பதும் கோமாளிக் கூத்தாகும். சொந்த மக்களிடையே சமத்துவத்தை நிலைநாட்டுவது, ஒரு தேச விடுதலை இயக்கத்தின் அடிப்படையான தேசியக் கடமை. மக்களின் ஜனநாயக உரிமையை நிலை நாட்டுவது, தேசிய இயக்கத்தின் ஆன்மாவாகும். இதை வழங்க மறுத்து, ~~இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை|| தீர்வுத் திட்டம் மூலம் வழங்குவதாக அறிவிப்பது என்பது, விடுதலைப் புலிகள் இயக்கம் மக்களுக்கு எதிராக இருந்து வந்ததை ஒத்துக் கொள்வதாகும். அதை சிறிலங்கா அரசிடம் சமர்பிப்பது என்பது, தமிழக மக்களின் அடிப்படை உரிமைகளையும், அவர்களின் தேவைகளையும் சிங்கள இனவாதிகளிடம் தாரைவார்ப்பது தான்;. புலிகளின் வேலை வரி அறவிடுவதும், அடக்கி ஆள்வதும் என்பதைத் தாண்டி எதுவும் இல்லை என்ற நிலைக்கு, புலிகளின் ''இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை" தீர்வுத் திட்டம் தன்னைத் தானே பிரகடனம் செய்கின்றது.


 அடுத்து சிங்கள இனவாதிகள் தமிழ் மக்களுக்குச் சமர்ப்பித்த உப்புச் சப்பில்லாத முன்மொழிவுகளைப் போல், புலிகள் பினாமிகளுடன் கூடித் தயாரித்து சமர்ப்பித்த உள்ளடக்கமும் அதைத் தாண்டி விடவில்லை. சிறிலங்கா இனவாத அரசு தமிழ் மக்களுக்கு செய்தது போல், புலிகளும் முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமையை நிராகரித்தே இடைக்காலத் தீர்வை வைத்துள்ளனர். முஸ்லிம் மக்களின் அடிப்படையான உரிமையை முன்னின்று அங்கீகரிக்க வேண்டியது புலிகளின் அடிப்படையான தேசியக் கடமை. கிழக்குமாகாணம் என்று எடுத்தால், பெரும்பான்மை இனமாக முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். இதைவிட முஸ்லிம் மக்கள் செறிவாக கிழக்கில் பல இடங்களில் வாழ்கின்ற நிலையில், அவர்கள் மேலான தொடர்ச்சியான ஒடுக்குமுறை தொடருகின்ற நிலையில் புலிகளின் ''இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை"யும் அவர்களை அங்கீகரிக்க மறுக்கின்றது. இதையே தமிழ் மக்களுக்கு சிறிலங்கா அரசு செய்கின்றது. ஒரு விடுதலை இயக்கம் முஸ்லிம் மக்களின் தனித்துவத்தை அங்கீகரிக்க மறுப்பதன் மூலம், சிறுபான்மை இனமான முஸ்லிம் மக்களை அடக்கியொடுக்கவே வழிவிட்டுள்ளனர். சரத்து 1. முஸ்லிம் பிரதி நிதித்துவத்தை உறுதி செய்த போதும், அவர்களின் தனியான அலகை அங்கீகரிக்க மறுக்கின்றனர். இதன் மூலம் அவர்கள் ஒரு தேசிய சிறுபான்மை இனமாக இருப்பது மறுக்கப்படுகின்றது.


 சரத்து 1, 2-இல் பெரும்பான்மையைப் புலிகள் தமக்குச் சார்பாகத் தக்க வைப்பதன் மூலம் அதன் தலைவரின் அதிகாரத்தை ஆணையில் வைக்கின்றனர். உண்மையில் ஜனநாயக விரோதப் பிரதிநிதித்துவத்தைச் சட்டமூலமாக்கக் கோருகின்றனர். பல்வேறு இன மற்றும் சமூக பிரதிநித்துவம் மூலம் ஜனநாயகத்தைப் பன்மைப்படுத்தி, உரிமைகளை நிலைநாட்டுவதற்குப் பதில், சர்வாதிகார வடிவங்களில் சொந்தக் குழுவின் ஆட்சியமைப்பைத் தக்கவைக்க முனைகின்றனர். அத்துடன் அதிகார அலகின் பிரதிநிதித்துவம் தொடர்பாக மக்களின் சமூகப் பங்களிப்பை மறுக்கின்றனர். உழைக்கும் மக்களின் வௌ;வேறு பிரதிநித்துவம் மறுக்கப்படுகின்றது. தேசத்தை, தேசியத்தைப் பிரதிநிதித்;துவப்படுத்தும் விவசாயிகள், தொழிலாளர்கள், தேசிய முதலாளிகள் போன்றோரின் பிரதிநிதித்துவத்தை ~~இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை|| மறுக்கின்றது. சாதிய ஒழிப்பு, ஆணாதிக்க ஒழிப்பு, மதச்சார்பின்மையை அடிப்படையாக கொண்ட பிரநிதித்துவம் இவையெல்லாம்  "இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை||யால் மறுக்கப்பட்டள்ளது. வெறும் நிர்வாக இயந்திரமாக எண்ணிக்கை அடிப்படையில் ஆட்சியைப் பெறவும், அதைத் தக்க வைக்கவும், அதிகாரத்தை சர்வாதிகார வழிகளில் நிறுவவும் இந்த ''இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை|| தீர்வு திட்டம் முனைப்பு கொள்கின்றது. அரசியல் ரீதியான சமூக வெற்றிகளைச் சார்ந்து இருப்பதை மறுக்கின்றது. மக்களின் அடிப்படையான தேச நலன்களில் இருந்து இந்த தீர்வு முன்வைக்கப்படவில்லை. மாறாகப் புலிகள் என்ற சொந்தக் குழுவின் நலன்களில் இருந்து, போலியாக இனத்தின் பெயரால் முன்வைக்கபட்டத் தீர்வே ''இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை" என்ற இந்தத் தீர்வுத் திட்டம். இந்த உள்ளடக்கம் தான் "இடைக்காலத் தன்னாட்சி - அதிகாரசபை" தீர்வுத்திட்டம் முழுக்க மண்டிக்; கிடக்கின்றது. எப்படி சிறிலங்கா இனவாத அரசு தனது தீர்வுத் திட்டம் மூலம் இனவாதத்தைப் பாதுகாக்க முனைகின்றதோ, அதே போன்று தமிழ்க் குறுந்தேசிய அடிப்படையில் புலிகள் முன்வைத்தத் திட்டமே ~~இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை||யாகும். சிறிலங்கா அரசுக்கும் சரி, புலிகளுக்கும் சரி மக்களை இட்டு எந்த விதமான சமூக அக்கறையும் கிடையாது என்பதை, கடந்த இரண்டு வருடமாக அமைதி சமாதானம் என்ற பெயரில் மீண்டும் மீண்டும் நிறுவி வருகின்றனர்