Language Selection

பி.இரயாகரன் 2004-2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

book _4.jpgபுலிகளின் சர்வதேசக் கப்பல் போக்குவரத்து கடுமையான தொடர்ச்சியான சில நெருக்கடிகளை, சமாதானம் மற்றும் அமைதி மீது ஏற்படுத்தியது. இந்தக் கப்பல்கள் புலிகளுக்கு ஆயுதங்களை ஏற்றி இறக்குவது தெரிந்ததே. ஆனால் பிரபாகரன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இதைத் தடுக்கின்ற போதும், இதை அடிக்கடி அவர்களே மீறினர். 


 புலிகளின் சர்வதேசக் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், தெளிவாகவே இலங்கைக்கு உதவி வருகின்றன. கப்பல் இலங்கைக் கடலில் புகும் முன்பே தெளிவான செய்திகளை அரசு பெற்று விடுகின்றது. இதில் இருந்து தப்பிச் செல்லுதல் அல்லது அழிதல் என்ற நெருக்கடி, அமைதி, சமாதானம் மீதான இழுபறியான நிலையை உருவாக்கின்றது. ஒப்பந்தத்தைத் தொடர்ந்து மீற முயலும் புலிகள், தகவலை ஒட்டுக் கேட்கும் முறை ஊடாகக் கப்பலை நகர்த்திச் செல்ல முனைகின்றனர். நெருக்கடிக்கு உள்ளாகும் போது, ஐயோ அது சரக்கு கப்பல் என்றும் அதைத் தாக்கி விட்டதாகக் கூறி ஒரு உப்புச்சப்பற்ற பிரச்சாரமும் செய்கின்றனர். இதை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மீடியாக்கள் பக்கம் பக்கமாக கட்டுரைகள் எழுதுகின்றனர். முதலில் இது பிரபாகரன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு எதிராக இருப்பதை இட்டு அலட்டிக் கொள்ளாது, தர்க்கமற்ற வகையில் நியாயப்படுத்துகின்றனர்.


 புலிகளின் நேர்மை தொடர்பாக இவை பலதரம் நெருக்கடியை உருவாக்கியது. முதலில் இது ஒப்பந்தத்தை மீறுகின்றது. கட்டாயம் ஆயுதமல்லாத பொருட்களைக் கொண்டு வர வேண்டியிருந்தால், ஒரு கப்பலின் வருகையை நேர்மையாக அறிவித்துவிட்டு வருவதைத் தெரிவு செய்து இருக்க வேண்டும். இது ஒரு சரக்கு கப்பல் எனின், வருகையைக் கண்காணிப்பு குழுவுக்கு அறிவித்து, அவர்களின் கண்காணிப்பின் கீழ் சரக்கை இறக்க முனையலாம்;. ஆனால் இதை எதையும் புலிகள் செய்யவில்லை. பின் விதண்டாவாதமாகவே வாதாடுகின்றனர். இது தொடர்பாகப் பாலசிங்கம் கிளிநொச்சியில் ஆற்றிய உரையில் ~~விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு வர்த்தகக் கப்பல் சேவையை நடத்தி வருவது உங்களுக்குத் தெரிந்ததுதானே. கடந்த 15 ஆண்டுகளாக தென்னாசியாவில், தென்கிழக்காசியாவில் எமது கப்பல் போக்குவரத்துகள், வர்த்தகச் சேவைகள் நடைபெற்று வருகின்றன என்பது ஒரு இரகசியமான விடயம் அல்ல.... அந்தக் கப்பல் எந்த விதத்திலும் சட்டவிரோதமான வர்த்தகத்தில் ஈடுபடவில்லை. அது எமது வர்த்தகக் கப்பல். அதாவது சட்டபூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட கப்பல.|| என்று விளக்கினார். இப்படியெல்லாம் கூட வாதம் செய்வது எப்படி தான் முடிகின்றது. ஐயா உங்களால்? சட்டப்பூர்வமான கப்பலாக இருக்கலாம். ஆனால் சட்டப்ப+ர்வமாக எங்கே சரக்கை ஏற்றி, இலங்கைக்குள் சட்டபூர்வமாக எங்கே புக முனைந்தனர்? அல்லது எங்கே கொண்டு செல்ல முனைந்தனர்? இதை இலங்கைக் கடலுக்குள் அல்லது அதற்கு அருகில் எதற்காகக் கொண்டு வந்தனர்? சட்டப்ப+ர்வமாக அதை எங்கே ஏற்றி இறக்க முனைந்தனர்? சட்டப+ர்வமான விடயங்கள் இரகசியமானவை அல்ல. சர்வதேசச் சட்டத்தையே மீறுகின்ற இந்த நடவடிக்கையை முதலில் சுயவிமர்சனம் செய்ய வேண்டும். அது அரசியல் நேர்மை.


 ஆயுதங்களைக் கொண்டு வருவது, போராடுவது என்பதெல்லாம் போரில் இயல்புதான். எதிரி அதை சட்டவிரோதமானது என்று சொல்லலாம். ஆனால் அமைதி, சமாதானம் என்ற அடிப்படையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துள்ள நிலையில் அதை மீறுவது, ஒட்டு மொத்த மக்களையே ஏமாற்றுவதுடன், போராட்டத்துக்கே துரோகம் இழைப்பதாகும்;. இது போலவே அரசும் இராணுவ உபகரணங்களையும், ஆயுதங்களையும் வாங்கும் பட்சத்தில், அமைதி சமாதானத்தின் பெயரில் நிறுத்தக் கோரி போராடலாம். அதை நிறுத்த மறுக்கும் பட்சத்தில், ஆயுதத்தை நீங்களும் கொண்டு வரும் உரிமையைக் கோரியிருக்கலாம்;. இதனடிப்படையில் மக்களை மந்தைகள் அல்லாத ஒரு நிலையில் அணிதிரட்டியிருக்க வேண்டும். இதனடிப்படையில் இதை மக்களின் உணர்வுபூர்வமான கோரிக்கையாக்கி, இலங்கையின் ஆயுத இறக்குமதியைக் கட்டுப்படுத்த நிர்பந்தித்திருக்க வேண்டும். இலங்கை சட்டப் பாதுகாப்பு என்ற சட்டப்ப+ர்வமானத் தேவைக்கு, கனரக மற்றும் தேவைக்கு மிஞ்சிய ஆயுதங்கள் வாங்குவதை நிறுத்தக் கோரியிருக்கலாம்;. அதைப் புலிகள் நேரடியாகக் கண்காணிக்கும் உரிமையைக் கோரியிருக்கலாம். ஆனால் அதைப் புலிகள் செய்யவில்லை. ஆனால் எப்போதும் போல் இது போன்ற நடவடிக்கைகள் மூலம் சட்டப்ப+ர்வமான சர்வதேசக் கண்கணிப்பை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டனர். இது உண்மையில் மக்களின் மேலான அடிமை விலங்கை இறுக்கி வருகின்றன.


 புரிந்துணர்வு உடன்பாட்டுக்குப் புறம்பாக, ஆயுதங்களைத் தமது கட்டுப்பாடு அல்லாத பிரதேசத்துக்கு கடத்திச் சென்ற பல சம்வங்கள் பிடிபட்டுள்ளன. ஒவ்வொன்றின் போதும் அமைதியையும், சமாதானத்தையும் தூக்கில் தொங்கவிடவே முயன்றனர். இந்த வகையில் ஆயுதங்களுடன் நெடுந்தீவுக் கடலில் கைப்பற்றப்பட்ட வள்ளம் (ஒருவகை சரக்கு கப்பலை போன்றது) கடும் நெருக்கடியை உருவாக்கியது. கவனமாகப் பராமரிக்கப்பட்ட நிலையில், வள்ளத்தின் விளிம்புகளின் இடையில் புதைக்கப்பட்ட நிலையில் கொண்டு சென்ற ஆயுதங்களை, நெடுந்தீவில் இறக்க முனைந்த சம்பவம் இலங்கை கடற்படையால் இனம் காணப்பட்டது. கண்காணிப்புக் குழு நேரடியாகவே வள்ளத்தில் இருந்த ஆயுதங்களைக் கண்டறிந்தனர். இந்த நிலையில் கண்காணிப்புக் குழுவுடன் வள்ளத்தைப் புலிகள் தகத்தனர். இதில் எச்சரிக்கை அடைந்த கண்காணிப்புக் குழு தப்பித்துக் கொண்டது. வள்ளம் புலிகளின் உறுப்பினர்களுடன் வெடித்துச் சிதறியது.


 புலிகளின் தலைவர்கள் அதை மீன்பிடி படகுகள் என்றனர். ஆயுதங்கள் எதுவும் இல்லை என்றனர். ஆயுதங்கள் கண்டுபிடித்த போது, கண்டுபிடித்தவர்களுடன் வெடிவைத்து தகர்த்து விடுவதன் மூலம், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறவில்லை என்று காட்ட முனைந்தனர். வெடிப்பை அரசின் மேலான குற்றச்சாட்டாக்கவே முனைந்தனர். இதன் மூலம் புலிகளின் இழிவான நடத்தைகள், உலகுக்கு மீள ஒருமுறை அம்பலமானது. அரசியல் செயல்பாடுகளை விட, புலிகளின் இராணுவச் செயல்பாடுகள்தான் ஒப்பந்தத்தையே கேள்விக்குள்ளாக்கியது. அமைதியை, சமாதானத்தின் போலித் தனத்தை  சிலுவையில் அறைந்துவிடவே விரும்பினர் புலிகள்.


 அடுத்து நெடுந்தீவில் இருந்து ஈ.பி.டி.பி யை அரசியல் ரீதியாக அல்ல, இராணுவ ரீதியாக வெளியேற்ற முனைந்த வழிமுறை மீண்டும் சர்வதேச தலையீட்டை ஆழப்படுத்தியது. ஈ.பி.டி.பி. உண்மையில் இலங்கை அரசுடன் இணைந்து இயங்கும் துரோகக் குழு தான். புலிகள் வரையறுக்கும் அடிப்படையில் இதை நாம் வரையறுக்கவில்லை. இந்தத் துரோகக் குழுவை பலாத்காரமாக வெளியேற்ற எடுத்த முயற்சி, புலிகளின் அரசியல் வங்குரோதத்தையே மீண்டும் எடுத்துக் காட்டியது. தமிழ் மக்களின் தேசிய நலனுக்கு எதிராக இலங்கை அரசுடன் கைகோர்த்துள்ள ஈ.பி.டி.பி யை, அரசியல் ரீதியாக அம்பலப்படுத்;தி அதை தனிமைப்படுத்தியே அழிக்க வேண்டும்;. இதைச் செய்ய முடியாத புலிகளின் அரசியல், ஜனநாயக விரோதத் தன்மையால் புழுத்துக் கிடக்கின்றது.


 புலிகளின் மக்கள் விரோத நடத்தைகளால், ஈ.பி.டி.பி போன்ற குழுக்கள் அரசியல் பலம் பெறுகின்றன. புலிகளுடன் முரண்படுகின்ற மாற்று அரசியலை வைக்க முடியாத வக்கற்றவர்கள் அனைவரையும் படிப்படியாக தன் பின்னால் அணிதிரட்டுகின்றது. இந்த நிலைமையை ஊக்குவிக்கும் புலிகளின் மக்கள் விரோத அரசியல், அதை இராணுவ ரீதியான வன்முறை மூலம் அழித்துவிட முனைகின்றனர். அதுவும் சமாதானம், அமைதி என்ற கோஷத்தின் கீழ், இன்றைய உலக ஒழுங்கில் (உலகமயமாக்கத்துக்கு புடழடியடளையவழைn) விசுவாசமாக இருக்க ஏகாதிபத்தியங்களுடன் கொஞ்சிக் குலாவும் ஒரு நிலையில், மக்களைக் காப்பாற்றுவது எனும் பெயரில் புலிகளால் இராணுவ ரீதியான வன்முறைகள் புலிகள் மேலான ஏகாதிபத்திய அச்சுறுத்தலை சட்டப்பூர்வமாக்கி விடுகின்றது. இதை விட ஆங்காங்கே சுட்டுக் கொல்லப்படும் மாற்றுக் குழு உறுப்பினர்களின் கொலைகள், மேலும் புலிகளைத் தனிமைப்படுத்தி வருகின்றது.


 தமிழ் மக்களுக்கும் புலிகளுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் தான், ஈபிடிபி போன்ற துரோகக் குழுக்களுக்கான அரசியல் அடிப்படையைத் தொடர்ந்து கொடுக்கின்றது. இன்று கணிசமான அடிப்படைக் கட்டமைப்பைக் கொண்டுள்ள இக் குழு, புலிகளின் ஜனநாயக விரோத கட்டமைப்புக்குள் தான் உயிர் வாழ்கின்றது. மக்கள் பிரிவுகளின் அடிக் கட்டமைப்பில் இருந்து மேல் கட்டமைப்பு வரை, புலிகளின் ஒவ்வொரு மனித விரோத நடவடிக்கையையும் பயன்படுத்தி திட்டமிட்ட வகையில் தன்னை ஒழுங்குபடுத்தி வருகின்றது. புலிகளின் ஒவ்வொரு மனித விரோதச் செயலையும் தனக்கு மூலதனமாக்குகின்றது. இலங்கை அரசுடன் இணைந்து நிற்கும் இக் குழு, தனது அறுவடையை இலங்கை அரசுக்குச் சற்று எட்ட நின்றே செய்கின்றது. அதாவது பெரியளவில் மக்கள் மத்தியில் அம்பலப்படாத வகையில், மக்களின் நாளாந்த பொருளாதாரக் கட்டுமானங்கள் மேல் அதிக நுட்பத்துடன் இணைந்து இயங்குகின்றது. உதாரணமாக தன்னார்வக் குழுக்களின் நிலையில் செயல்படுவதன் மூலம், தனது சமூக அடித்தளத்தை மக்கள் மத்தியில் நிறுவுகின்றது. அதேநேரம் புலிகளின் அனைத்து மனிதஉரிமை மீறலையும் கண்டிப்பதன் மூலம், பாதிப்புக்குள்ளாகும் மக்களையும் கவர்ந்து இழுக்கின்றது.


 புலிகள் இக் குழுவைப் பலாத்காரமாக வெளியேற்ற எடுத்த முயற்;சி ஒவ்வொன்றிலும் ஏகாதிபத்தியங்கள் தலையிட்டன. ஒவ்வொரு கொலையிலும் புலிகள் மேல் அழுத்தங்களை அதிகப்படுத்தினர். அரசுடன் சேர்ந்து இயங்கும் குழுக்களை அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தி அவர்களை இல்லாது ஒழிக்கவேண்டும். இதற்கு முதலில், மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை அவர்களுக்கு வழங்கி, மக்களைச் சார்ந்து நிற்க வேண்டும்;. அமைதி சமாதானம் என்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கடந்து நின்ற வன்முறை மூலம் ஒழிக்க முடியாது. அமைதி, சமாதானம் என்பது ஏகாதிபத்தியத்தின் கண்காணிப்பில் உருவாக்கப்பட்ட நிலையில்,  இது போன்ற நடவடிக்கைகள் தமிழ் மக்களின் உரிமைகளைக் கொச்சைப்படுத்தவே செய்கின்றது. புலிகள் வழமை போல் கையாளும் குண்டர் வழிமுறைகளால், சர்வதேசக் கண்காணிப்பைத் தகர்க்க நினைத்த முட்டாள்தனம் மீண்டும் நிர்வாணமாகியது அவ்வளவே.


  இடுப்புப்பட்டி அணியும் போராட்டம் - உண்மையில் புலிகள் தாங்கள் விரித்த வலையில் தாமே சிக்கி கொண்டு வெளியேற துடிக்கும் போது, இந்தப் போராட்டம் அர்த்தமற்ற மோதலாக வெடிக்கின்றது.  ஒப்பந்ததுக்கு முரணாக இடுப்புப் பட்டியை அணிந்து செல்லக் கூடாது என்பது இராணுவத்தின் வாதமாக இருந்தது. இதை அடுத்து மக்களின் பெயரில் புலிகள் ஒரு வன்முறையை நடத்தினர். தமிழ்ப் பெண்கள் சாதாரணமாக அணியும் இடுப்புப் பட்டி அணிவதை ஒட்டி இந்த மோதல் நடக்கவில்லை. விடுதலைப் புலிகளின் பெண்கள் அணி அணியும் இராணுவ இடுப்புப் பட்டியே மோதலுக்குரியதாகியது. இப்படிப் பல பத்து மோதல்கள் மூலம் யுத்தத்துக்கு மீண்டும் திரும்பி விடுவதை அடிப்படையாகக் கொண்டு புலிகள் செயல்பட்டனர். ஆனால் இவை எல்லாம் சர்வதேச அழுத்தம், புலிகளின் கழுத்தில் மேலும் இறுகுவதற்கு அப்பால் எதையும் சாதிக்கவில்லை. அமைதி, சமாதானத்தை கத்தி விளிம்பில் நிறுத்திய புலிகளின், முரண்பட்ட சர்ச்சைக்குரிய போராட்டங்கள் அனைத்தும் புலிகளின் இராணுவ நலன் சார்ந்தே இருந்ததே ஒழிய, மக்களின் நலன் சார்ந்து எந்தப் போராட்டமும் நடக்கவில்லை. மீண்டுவிட முடியாத புதைகுழியில் சிக்கிவிட்ட புலிகள் தடுமறுவதின் விளைவுகளே இவை. புலிகளின் அரசியல் மலட்டுத்தனத்தில் உயிர்ப்பின் ஆற்றல் என்பது சாத்திமற்றதாகியதை, மீண்டும் வரலாறு போதிக்கின்றது. உண்மையில் மக்களின் பிரச்சனைகள் பல இருக்கின்றன. அவற்றைக் கையெடுக்கவும், அதை முன்நிறுத்தி போராடவும் முடியாத போராட்டங்கள் அனைத்தும்,  விதிவிலக்கின்றி தோல்வியில் முடிகின்றது.


 இது போன்ற மற்றொரு சம்பவம், காஞ்சிரங்குடா அதிரடிப் படை முகாமுக்குள், புகுந்து நடத்திய தாக்குதல். ஒரு முரண்பாட்டை எடுத்துக் கொண்டு, முகாமைச் சுற்றியுள்ள மக்களையும் கூட்டிச்; சென்ற புலிகள் ஒரு வன்முறையைத் திட்டமிட்டே நடத்தினர். முகாமுக்குள் குண்டுகளை வீசியதுடன் சில பகுதிகளையும் எரித்தனர். இவர்களால் அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் இடையில் சிக்கி கொண்டதுடன், சிலர் எதற்கு செல்கிறோம் என்று தெரியாத நிலையிலேயே அநாதையாகக் கொல்லப்பட்டனர். இத் தாக்குதலை இராணுவம் தற்காப்பு கருதி நடத்தியதாக வாதிட்டது. கண்காணிப்பு குழு வழமை போல் முழுமையான அறிக்கை தருவதை தவிர்த்துக் கொண்டதுடன், இராணுவத் தாக்குதல் தற்காப்பு கருதியே நடந்தது என்ற நிலைப்பாட்டுடன் உடன்பட்டது. இந்த விவகாரத்தில் இருந்து படிப்படியாக புலிகள் பின்வாங்கி, எதுவும் நடக்காதது போல் நடந்து கொண்டனர். பலர் காயமடையவும், சிலர் கொல்லப்படவும் காரணமான இச் சம்பவம், புலிகளின் இராணுவ நலன் சார்ந்ததாக இருந்ததே ஒழிய, மக்களின் எந்த நலனையும் அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படவில்லை. இந்த ஒரே காரணத்தினால் இதுவும் தோல்வி பெற்றது. 


 சீனாவின் மீன் பிடிக் கப்பல் மேலானத் தாக்குதல் ஒன்றின் மூலம், பலர் படுகொலை செய்யப்பட்டனர். புலிகள் இக் கொலைக்கும் தமக்கும் எந்தத் தொடர்புமில்லை என்றதுடன், அதை மூன்றாம் தரப்பின் மேல் குற்றம் சாட்டினர் கண்காணிப்புக் குழுவும் இதை மூன்றாம் தரப்பு என்ற பாணியில் கதை ஒன்றைக் கூறியது. அந்த மூன்றாம் தரப்பு யார் என்று மட்டும் கூறவில்லை. இந்தியா இதைத் தன் மீதான குற்றச்சாட்டாக வலிந்து எடுத்ததுடன், கண்காணிப்புக் குழுவின் அறிக்கையையும் கண்டித்தது. கண்காணிப்புக் குழு இந்தக் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரத்தையும் முன்வைக்காது வழமை போல் சித்து விளையாட்டில் ஈடுபட்டது.


 ஆனால் சர்வதேசச் சமூகமும், உலகமும் இதை புலிகள் மேலான குற்றச்சாட்டாகவே முன்வைத்தன. நாம் இதை ஆராய்ந்து பார்த்தால், இந்தப் பிரச்சனை மீதான புலிகளின் அரசியல், இராணுவ ரீதியான வன்முறையைத் தாண்டி வேறு விதத்தில் இதைக் கையாண்டு இருக்க முடியாது என்பது எதார்த்தம். அத்துமீறி மீன்பிடிப்பவர்கள் மீது, தொடர்ச்சியான தாக்குதல்கள் பல நடத்தப்பட்ட நிலையில், கடத்தல்கள் பல நடந்து வந்தது. இந்திய மீனவர்கள் ஆயுதம் ஏந்திய தமிழ்த் தரப்பால் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு வந்தனர். இந்த வன்முறை நிகழ்வுகள் சர்வதேசக் கடற்படைகளை இலங்கையின் எல்லைக்குள் வலிந்து இழுத்துக் கொண்டு வருவதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. தமிழ்மக்களின் மேலான சர்வதேச அழுத்தத்தைப் புலிகள் வலிந்து திணிப்பதற்கு அப்பால், புலிகளின் இராணுவ அரசியலானது மக்களுக்கு எதையும் சாதித்துக் கொடுக்கவில்லை.


 இது போன்று சிங்கள ராணுவத்தின் ஒரு வாகன விபத்தை அரசியலாக்கி அதை வன்முறையாக்கிய சம்பவம் கூட விதிவிலக்கற்றது. அன்றாடம் எத்தனையோ கோர விபத்துகள் தமிழ் தரப்பாலும், புலிகளாலும் நடத்தப்படும் ஒரு நிலையில், இராணுவம் நடத்திய விபத்தை அரசியலாக்கிய விதம் கேவலமானது. விபத்துகளின் மீதான பொதுவான சமூக நலன் சாராத தனிமனிதக் கண்ணோட்டத்தை எதிர்த்து அரசியலாக்க வேண்டுமே ஒழிய, அதை வெறும் சிங்கள இனவாத இராணுவத்துக்கு எதிரானதாக மாற்றி அமைத்தது என்பது, விபத்துக்கான அடிப்டைக் கண்ணோட்டத்தை மூடிமறைப்பதாகவே அமைந்தது. இதற்கு முன்பும், பின்பும் இதைவிடக் கோரமான எத்தனையோ விபத்துகளைப் புலிகளும் மற்றத் தமிழ்த் தரப்பும் செய்த போது, எந்த அரசியலும் கொதித்தெழவில்லை. உண்மையில் அரசியல் ரீதியாகத் தமிழ் மக்களின் நலனை முன்நிறுத்திப் போராட முடியாத, புலிகளின் வக்கற்ற அரசியலின், குறுகிய நலன் சார்ந்து கட்டமைக்கப்பட்ட போது அமைதியும் சமாதானமும் அர்த்தமற்ற வகையில் கேள்விக்குள்ளாகியது.  


 இது போன்று பல பத்துச் சம்பவங்கள் அமைதி, சமாதானத்தை யுத்த விளிம்புக்கு நகர்த்தியது. புலிகளின் இராணுவவாதம் சார்ந்து கையாளப்பட்ட எல்லா முயற்சிகளும் தோல்வி பெற்றன. மக்களின் வாழ்வுடன் தொடர்புடைய பிரச்சனைகள் மேல் அக்கறை அற்ற நிலையில், தமக்குத் தாமே ஏற்படுத்திய புதைகுழியில் இருந்து மீளமுடியாத நிலையில் தத்தளிக்கும் ஒரு போராட்டமே தொடர்ச்சியாக அரங்கேறுகின்றது.