சமூகம் மீதான நம்பிக்கை இழப்பு சோரவையும் அராஜகத்தையும் உருவாக்கின்றது. சுயநலத்தைச் சாரந்து விரக்தியும் தன்னகங்காரம் சாரந்த தனிமனிதப் போக்குகள் விளைவுகள் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் பீதிக்குள் சிதைக்கின்றது. சுய ஆளுமையுள்ள சமுதாயக் கண்ணோட்டம் சாரந்த அறிவியல் சிதைந்து சமுதாயத்துக்கே நஞ்சிடுகின்றது. சமூக அறிவியல் தளம் சுயபுராணங்களை வீம்பு பண்ணும் அளவுக்கு தனிமனித வக்கிரம் வெம்பி வெளிப்படுகின்றது.
சமூகம் மீதான நம்பிக்கை இழந்து சுயநம்பிக்கையும் இழந்து கேள்விக் குள்ளாகும் நிச்சயமற்ற தன்மை இலங்கை சமூகத்தின் பண்பாகிவிட்டது. சோரவும் விரக்தியும் நம்பிக்கை இழப்பும் தற்கொலைக்கான தூண்டு விசையாகிவிட்டது. ஒருமணி நேரத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தற்கொலைப் படி நாள் ஒன்றுக்கு 27 பேர தற்கொலை செய்கின்றனர. இலங்கையின் தற்கொலை வீதம் ஒரு லட்சத்துக்கு 55 ஆக மாறியுள்ளது. இது உலகில் ரூசியாவுக்கு அடுத்த நிலையில் அதாவது இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைக்கின்றது. அத்துடன் இலங்கையில் வருடம் ஒரு லட்சம் தற்கொலை முயற்சிகள் நடைபெறுகின்றது. இதில் தோல்வி அடைவோரில் 30 முதல் 40 ஆயிரம் பேர தொடரச்சியான உழைப்பில் ஈடுபட முடியாத உளவியல் சிக்கலைச் சந்திக்கின்றனர. நவீன சமுதாயத்தை நோக்கி முன்னேறுவதாக மாரபு தட்டும் அமைப்பில் 1950-க்கும் 1990-க்கு இடையில் தற்கொலை வீதம் 11 மடங்காக அதிகரித்துள்ளது என்ற உண்மை சமுதாயத்தின் தோல்வியைப் பறைசாற்றி நிற்கின்றது. 1950-களில் பெற்ற சுயநம்பிக்கையுடன் கூடிய ஒரு உயரந்த வாழ்க்கை தரம் இன்று எம்மிடம் இல்லை என்பதையே எமக்கு சந்தேகத்துக்கு இடமின்றி இது நிறுவி நிற்கின்றது. தற்கொலையை நாடிச் செல்வது ஒரு பண்பாக வளரச்சியுற அதற்கு எதிராக அராஜகவாதம் எதிர பண்பாக வளரச்சியுறுகின்றது. இதனால் சமுதாயத்துக்கு எதிரான குற்றங்கள் பெருகிச் செல்லுகின்றது. அவற்றை கீழ் உள்ள அட்டவனை தெளிவுபடுத்துகின்றது.
பாலியல் வல்லுறவு 1998-2002 ஆண்டு கற்பழிப்பு வழக்கு நடைபெற்ற வழக்கு சதவீத்தில்
தண்டனை
பெற்றவை
தண்டனை
சதவீத்தில்
1998 1076 488 45 02 0.1 1999 1309 505 39 08 0.6 2000 1202 458 38 - - 2001 1283 487 38 20 0.2 2002 1247 401 32 06 0.4 மொத்தம் 6117 2339 38 36 0.5
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சாரந்த குற்றங்களாகப் பதிவு செய்யப்பட்டவை மட்டுமே இவை. சமூக அமைப்பின் ஆணாதிக்கப் பண்பாடு சாரந்து பெரும்பாலும் பாலியல் வன்முறை குற்றங்களாக பதிவு செய்யப்பட்டவை அல்ல. அப்படி பதிவு செய்யப்பட்டாலும் அவை விசாரணைக்கு வருவதில்லை. வந்தாலும் தண்டனை வழங்கப்படுவதில்லை. விசாரணை என்ற பெயரில் குற்றங்கள் மீளவும் நடித்துக் காட்டுவதன் மூலம் ஆணாதிக்க வக்கிரம் புதிதாக மீளமைக்கப்படுகின்றது. பாலியல் குற்றங்கள் சட்டப்படியான அங்கீகாரத்துடன் நடத்தப்படுவதையே மேல் உள்ள தரவு மீண்டும் உறுதி செய்கின்றது. பாலியல் குற்றங்கள் முன்பை விட மூரக்கமாகவும் வக்கிரமாகவும் நடத்தப்படுகின்றது. அமைதி சமாதானம் நிலவிய 2002-இல் 1282 கொலைகளும் 2003 இல் 1387 கொலைகளும் நாட்டில் நடைபெற்றுள்ளது. 1998-க்கும் 2002-க்கு இடைப்பட்ட காலத்தில் பாலியல் குற்றமாக 6117 பதிவாகிய போதும் 36 குற்றத்துக்கே தண்டனை வழங்கப்பட்டது. 2303 பேர தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டனர அல்லது அவரகளின் வழக்கை காலவரையின்றி தள்ளி போட்டனர.
மற்றொரு மதிப்பீடு படி இலங்கையில் வருடாந்தம் 1300 கற்பழிப்பு முறைப்பாடுகள் அரசுக்கு கிடைப்பதாகக் கூறுகின்றது. இலங்கையில் நடக்கும் துப்பாக்கி சூட்டில் 90 சதவீதமானவை இராணுவத்தில் இருந்து தப்பி ஓடியவரகளால் நடத்தப்படுகின்றது. 2002 வருடம் 500 பேர இனம் தெரியாத நபரகளால் கொல்லப்ட்டனர. 2002 இல் பெரிய குற்றச் செயல்களாக பதிவானவை 34506 ஆகும்.
இதில்
கொலை மற்றும் தற்கொலை 3181
பாலியல் வல்லுறவு (கற்பழிப்பு) 2247
கடத்தல் 1266
தீவைப்பு 1744
கொள்ளை 26068
குற்றங்கள் பெருகி வருவதையும் அவை நவீனமாகி வருவதையும் மேலுள்ள அட்டவணை காட்டுகின்றது. ஒட்டு மொத்தத்தில் சமூக அராஜகம் சட்டப்படியான அங்கீகாரமாக மாறிவிட்டது. அரசு நீதிமன்றங்கள் பொலிஸ் மற்றும் அதிகார பீடங்கள் அனைத்தும் சமூக அவலத்தைத் தனது இருப்புக்கான அடிப்படையாகக் கொள்கின்றது. இதனால் சமூக அராஜகங்கள் அங்கீகரிக்கப்பட்டு அவை பாதுகாக்கப்படுகின்றது. சமூக அராஜகங்கள் பதிவு செய்வதால் எந்த அரத்தமும் இருப்பதில்லை. அவை பொவதுவாக முறைப்பாட்டுக்கே வருவதில்லை. தற்கொலை அல்லது அடங்கிப் போதல் அல்லது உளவியல் நெருக்கடிகளுடன் வாழ்வதே இலங்கையின் உன்னதமான வாழ்வாகி அதுவே ஜனநாயகமாகி விட்டது. பாலியல் குற்றம் உள்ளடங்கிய மற்றைய குற்றங்களை ஆராய்ந்தாலும் இதே கதி பொதுவாக உள்ளது.
குற்றவாளிகள் சுதந்திரமாக நாடமாடும் நாடு இலங்கை என்றால் மிகையாகாது. கண்டறியப்பட்ட குற்றவாளிகள் கூட தண்டனையில் இருந்து தப்பி சுதந்திரமாக நடமாடுகின்றனர. 1990-க்கும் 2002-க்கும் இடைப்பட்ட காலத்தில் வடக்கு கிழக்கு புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசம் தவிரத்த பிரதேசத்தில் 21185 கொலைகள் நடந்த போதும் 97 குற்றங்களுக்கே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இக்காலத்தில் 10302 கற்பழிப்புகள் நடந்த போதும் தண்டனை வழங்கப் பெற்றவை 71 மட்டுமே. 57586 கொள்ளைகள் நடந்த போதும் 1689 குற்றங்களுக்கே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 1.47 லட்சம் வீடுகளை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்ட போதும் 10 ஆயிரம் குற்றங்களுக்கே தண்டனை கிடைத்துள்ளது. மிகப் பயங்கரமான திட்டமிட்ட குற்றங்களில் தண்டனை 100-க்கு ஒன்று கூட வழங்கப்படுவதில்லை. சிறிய மற்றும் பொதுவான குற்றங்களில் 100-க்கு 7 குற்றங்களுக்கே தண்டனை கிடைக்கின்றது. குற்றவாளிகள் அண்ணளவாக 100 சதவீதம் சுதந்திரமாக வெளியில் வாழும் சமூக அராஜகமாகவே உருவாகிவிட்டது. இன்னும் தெளிவாக புரிந்து கொள்வதாக இருந்தால் சமூக அராஜகத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகமாக மாறிச் செல்கின்றது. இதனால் நடைபெறும் குற்றங்களில் 24.4 சதவீதம் கண்டுபிடிக்கப் படுவதில்லை. குற்றங்கள் கண்டறியப்பட்டாலும் வழக்கு தொடரப்படுபவை 36.6 சதவீதம் மட்டுமே. மற்றவரகள் அரசு மற்றும் அதிகார வரக்கத் தொடரபுகள் மூலம் சுதந்திரமாக அராஜகத்தை அடிப்படையாக கொண்ட சமூக விரோதச் செயலைத் தொடருகின்றனர. பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் தப்பித்துச் செல்லும் சமூக அராஜகத்துக்கு அரசும் அதிகார வரக்கமும் துணைசெய்கின்றது. லஞ்சம் இலங்கையில் எல்லாத் துறையிலும் தலைவிரித்தாடுகின்றது. எதையும் யாரையும் விலைக்கு பேரம் பேசி வாங்க முடியும். 1990 முதல் 2002 வரையிலான காலத்தில் 6.72 லட்சம் பாரிய குற்றங்கள் இனம் காணப்பட்டது. இதில் 1.63 லட்சம் குற்றவாளிகள் இனம் காணப்படவில்லை. குற்றவாளிகளை இனம் கண்ட போதும் அதில் 2.5 லட்சம் குற்றங்களுக்கே வழக்கு தொடரப்பட்டது. இதில் தண்டனை பெற்றோர 41 ஆயிரம் மட்டுமே. 2.59 லட்சம் குற்றவாளிகள் மேல் வழக்கு தொடரப்படவே இல்லை. மொத்த குற்றத்தில் தண்டனை பெற்றோர அண்ணளவாக 6 சதவீதம் மட்டுமேயாகும். இதை விளக்கும் அட்டவணை கீழ் உள்ளது.
ஆண்டு பதிவான
குற்றங்கள்
இடம் பெற்ற
வழக்கு
சதவீதம் தண்டனை
பெற்றது
சத வீதம் இனம்
காணப்படாதது
சத வீதம் 1990
48264
18699
39
3562
7.4
14950
31
1991
48356
21119
44
3951
8.1
12836
27
1992
46963
21334
45
3639
8.1
11246
24
1993
43990
20541
47
4129
9.3
10139
23
1994
52344
21353
41
3557
8
11034
21
1995
53062
22580
43
3963
7
10720
20
1996
51809
19150
37
3053
6
12484
24
1997
57366
20957
37
3470
6
13760
24
1998
56767
19545
34.4
3109
5.4
13777
24
1999
57376
18689
35.3
2827
5
13828
26
2000
52871
17205
33
2339
4.4
14256
27
2001
48978
15179
31
2138
4.3
11389
23.2
2002
49095
14330
29.1
1877
4
12630
26
மொத்தம் 667241 250681 37.6 41614 6.23 163049 24.4
சமூக நெருக்கடிகள் குற்றங்களை பெருக்கி வருகின்றது. பண்பாட்டுச் சீரழிவே உலகமயமாகும் போது சமூக அராஜகத்துக்கு வித்திடுகின்றது. குற்றவாளிகளும் அதிகார வரக்கமும் ஒன்றாகி கலந்து விடுகின்றனர. இதனால் குற்றவாளிகளுக்குத் தண்டனை என்பது ஜனநாயகத்துக்கு எதிரானதாகப் பண்பு மாற்றம் பெற்றுவிடுகின்றது. சமூகக் குற்றவாளிகள் மக்களைச் சூறையாடி பிழைக்க கூடிய ஒரு நாடாக மாறிவிடுகின்றது. குற்றங்கள் என்பவையே வாழ்வதற்கான ஒரு சமூக வழியாகிவிடுகின்றது. ஒருபுறம் தற்கொலை சமூகத் தீரவாக மறுபக்கம் குற்றம் செய்தே வாழ முடியும் என்ற நிலை உருவாகிவிடுகின்றது. நேரமையாக உழைத்து வாழமுடியும் என்ற நிலைமை உணரவியல் ரீதியாகவே அற்றுப் போகின்றது. கடுமையாக உழைத்து வாழ்வதைக் கேவலமாகக் கருதும் போக்கு உருவாகிவிடுன்றது. இன்ப நுகரச்சியும் நுகரவு வெறியும் கொண்ட ஒரு வக்கிரமான சமூகமாகிவிட்டது. இதை அடைய எதையும் செய்யும் இழிபண்பாடு ஒட்டுமொத்த சமூக அங்கிகாரம் பெற்ற நடத்தையாகி விடுகின்றது. இது சமூக அராஜகத்தைப் பரந்துபட்ட மக்கள் மேல் கையாளுகின்றது. இதனுடன் அரசு இயந்திரமே ஒன்றாகிவிடுகின்றது. இதன் மற்றொரு உதாரணமாக சட்டவிரோதமான பொருட் கடத்தல் குற்றத்தை எடுக்கலாம். இந்தக் குற்றத்துக்கு எதிராக அரசுக்கு 133.5 கோடி ரூபா குற்றப்பணமாக கிடைத்தது என்கின்றது. அதே சமயம் அந்த குற்றங்களைக் கண்டுபிடித்த சுங்க அதிகாரிகளுக்கு 181.8 கோடி ரூபாவை ஊக்குவிப்பு என்ற பெயரில் லஞ்சமாக அரசு கொடுத்தது. இந்த ஊக்குவிப்பு இல்லை என்றால் சுங்க அதிகாரிகள் குற்றவாளிகளாக மாறிவிடுவர என்ற நிலை. அரசே குற்றவாளிகளுக்கு சம்பளத்துக்கு வெளியில் லஞ்சம் கொடுக்கின்றது. இப்படி வக்கிரமாகிப் போன இலங்கை சமூக அமைப்பில் பாதாள கோஷ்டி என்று அழைக்கப்படும் நவீன மாபிய குழுக்கள் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட இரகசிய உறுப்பினரகளை அங்கத்தவராக கொண்டு இயங்குகின்றது. தமிழ்ப் பகுதிகளில் கூட இது புலிகளின் இயக்கத்துக்குள்ளானதாகி விடுகின்றது. புலிகள் ஒரு அராஜக இயக்கமாக இருப்பதால் சமூகவிரோத அராஜாக நடத்தைகள் இயக்க நடத்தை சாரந்த அங்கமாகிவிடுகின்றது. தமிழ் சிங்கள வேறுபாடு அற்ற அராஜகம் இலங்கையில் சமூகப் போக்காகிவிட்டது. சமூகக் குற்றங்கள் பெருகவும் அவை அராஜகப் பண்பை பெற்று வரும் போக்கின் பின்னால் ஆழமான சமூக அவலமே அடிப்படையாக உள்ளது.
சமூகச் சீரழிவினால் உருவாகும் பண்பாட்டின் விளைவு ஆழமானது
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode