ராஜேஸ் அக்கா உங்களின் கருத்துப்படி அங்கு ஒன்றும் நடைபெறவில்லை எனக் கூற வருகிறீர்கள் அப்படித்தானே? நாங்கள் பல பெண்கள் அமைப்பினருடன் தொடர்பு கொண்ட போது இப்படியான பல சம்பவங்கள் அங்கு நடைபெறுவதாகவும் அதற்கு பொலிசும், இராணுவமும் குறிப்பாக அதிரடிப்படையினரும் ஒத்துழைப்பதாகவும் கூறுகிறார்கள்.

 இப்படியான சம்பவங்கள் நடந்ததையோ அல்லது நடப்பவற்றையோ எந்தவித ஆதாரங்களோ அல்லது தடயங்களோ இல்லாமல் செய்துவிடுகின்றனர் என்றும் அண்மையில் கல்குடாவில் இருபெண் பிள்ளைகள் கடத்தப்பட்டு பின்னர் பெற்றோரின் (வசதிபடைத்த) அக்கிராம மக்களின் பலத்த எதிர்ப்பின் பின்னர் இருமாதங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அப் பெண்களை தாங்கள் கடத்தவில்லை என்று கூறியவர்களாலேயே பின்னர் அப் பெண்கள் விடுவிக்கப்பட்டதாகவும் கூறினார்கள். அதே போல் அண்மையில் ஏறாவூரில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அது பற்றி விசாரிக்க போன இடத்தில் பொலிசார் அனுமதி வழங்கவில்லை என்றும் இப்படியான பல சம்பவங்கள் அங்கு நடைபெறுகின்ற போதிலும் ஊடகவியலாளரோ அல்லது பெண்கள் அமைப்புக்களையோ பொலிசார் இராணுவத்தினர் அனுமதிப்பதில்லையென்றும், இப்படி பல பிரச்சினைகள். இந்த அடாவடித்தனம் செய்பவர்களால் புதைதோண்டி புதைக்கப்படுகிறதாகவும் அதனால் தம்மால் பல பிரச்சினைகளை வெளியில் கொண்டு வரமுடியாதுள்ளதாகவும் துப்பாக்கிக்கு முன்னால் தாங்கள் வாய் மூடி மௌனித்து இருப்பதாகவும் கூறுகிறார்கள். அதை நீங்கள் பொய் என்கிறீர்கள்.

 

உங்கள் கருத்துப்படி இச்சம்பவம் பொய் என்றால் ஆசியமனித உரிமை அமைப்பிற்கு எதிராக நீங்கள் வழக்கு தொடரலாம். அல்லது கல்முனை பொலிஸ், இலங்கை அரசாங்கம் பகிரங்கமாக ஆசிய மனிதஉரிமை அமைப்பிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும். அதைச் செய்யுங்கள். இப்படியான சம்பவங்கள் அங்கு நடைபெறுவதேயில்லை என்று கூறும் நீங்கள் இச்சம்பவம் சம்பந்தமாக தொடர்புகொண்டவர்களை பார்க்கும் போது எமக்கே உங்கள் மேல் சந்தேகம் வருகிறது.

 

ஆனந்தசங்கரியிடம் எப்படி இதைப்பற்றி விசாரித்தீர்கள். அந்தளவுக்கு ஆனந்தசங்கரி மக்களுடன் ஒன்றிபிணைந்து வாழ்பவரா அல்லது பொலிஸ் மா அதிபர் தான் சாதாரண மக்களுடன் சகஜமாக பழகுபவரா அந்தளவுக்கு இலங்கையில் ஜனநாயகம் இருக்குமாயின் ஆசிய மனிதஉரிமை அமைப்போ மனிதஉரிமை அமைப்புக்களோ தேவையில்லை. நீங்களும் நாங்களும் இங்கிருந்து வாய்ச்சவடால் விடத் தேவையில்லை என்றே நினைக்கின்றேன்.

 

றஞ்சி

தேசம் இணைய வாசகர்