Language Selection

03_2005.jpgஏழை எளிய மக்கள் என்ன, வேண்டாத கழிவுப் பொருட்களா? நகருக்கு வெளியே கொண்டு போய்க் குவிக்கிறது, அரசு!

 

சிங்காரச் சென்னையில் ஏழை எளிய மக்களுக்கு வாழும் உரிமை இல்லையா? இரண்டாண்டுகளில் 20,000 குடும்பங்களை வேரோடு பிடுங்கிக் கொண்டு போய் 20 மைல்களுக்கு அப்பால் (துரைப்பாக்கத்தில்) குப்பையாகக் கொட்டியது, அரசு.

 


சுனாமி பீதியூட்டி சூழ்ச்சி செய்த அரசு, ஆயிரக்கணக்கான கடற்கரைக் குடிசைகளைத் திடீரென்று இயந்திரங்களைக் கொண்டு இடித்துத் தள்ளியது. ஒரே நாளில் 2000 குடும்பங்களை அங்கு குடியமர்த்தியது.

 

 

இதுவொன்றும் நிவாரணப் பணியல்ல் மக்கள் நலச் சேவையல்ல. கொள்ளை இலாபத்தைக் குறிவைத்து அரசே நடத்தும் மோசடி. நகரக் குடிசைகளை இடித்து வீட்டுமனைகளைக் கைப்பற்றுவதால் அரசுக்கு இலாபம் பலகோடி ரூபாய்!

 

ஏழைள் வாழும் குப்பைமேடுதானே என்று கருதி அரசும் அதிகாரிகளும் அங்கு குடி தண்ணீர், மின்சாரம், பள்ளி, மருத்துவமனை, போக்குவரத்து, தொழில் என்று மக்கள் வாழ்வதற்கான எந்த அடிப்படைத் தேவையையும் எண்ணிப் பார்க்கவில்லை.

 

பிப்.22, செவ்வாய்க்கிழமை, இளங்காலை. பிழைப்புத் தேடிப் புறப்பட்ட உழைப்பாளிகள், படிப்பு நாடிக் கிளம்பிய பிள்ளைகள் என்று பழைய மாமல்லபுரம் சாலையில் குவிந்தனர். போக்குவரத்துக்கு வழியின்றி அலைமோதிய மக்களை எதிர்கொண்டது போலீசுதான்.


சமாதானம் பேசிக் கொண்டே அதிரடி கமாண்டோ போலீசைக் குவித்து கொலைவெறித் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டு சிறுவர்கள், பெண்கள் மண்டையைப் பிளந்து, இளைஞர்களைத் தாக்கி, பொய் வழக்குப் போட்டு சிறையிலடைத்தனர்.


நாசவேலையில் சுனாமியை விஞ்சியது, பாசிச ஜெயலலிதா அரசு. பார்வையாளர்களாகிப் போயின ஓட்டுக்கட்சிகள்.