Language Selection

03_2006.jpgடேவிட் இர்விங் பிரிட்டனைச் சேர்ந்த நாஜி வரலாற்றாசிரியர். 10 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்பார்த்து ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நீதிமன்றத்தின் முன் இவர் நின்று கொண்டிருக்கிறார். ""இலட்சக்கணக்கான யூதர்களை பெருங்களப்பலிக்கு (ஏணிடூணிஞிச்தண்வ) ஆளாக்கியதாக இட்லர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு பொய்யானது. உண்மையில் யூதர்களின் முன்னேற்றத்திற்குத்தான் இட்லர் உதவியிருக்கிறார்'' என்று தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார் இர்விங். நாஜிகளின் போர்

 குற்றங்களை மறைப்பதே ஆஸ்திரிய சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாம். எனவே, சென்ற டிசம்பர் மாதம் ஆஸ்திரிய நாட்டின் எல்லைக்குள் நுழைந்தபோது இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மன்னிப்புக் கேட்டாலும் தண்டனை உறுதி என்கிறார்கள் வழக்குரைஞர்கள்.

 

இராக்கின் அபு கிரைப் சிறைக் கொடுமைகள் குறித்த புதிய வீடியோ படங்களை வெளியிட்டிருக்கிறது ஆஸ்திரேலியாவின் எஸ்.பி.எஸ். தொலைக்காட்சி. இராக் கைதிகளை மலத்தில் அமிழ்த்துவதும், கோழி அறுப்பது போல கைதிகளின் கழுத்து நரம்பை அறுப்பதும், பெண்கள் மீதான வன்புணர்ச்சியும் மட்டுமல்ல் ஆண் கைதிகளைக் கும்பல் கும்பலாக அம்மணமாக்கி துப்பாக்கி முனையில் அவர்களைச் சுய இன்பம் மேற்கொள்ள வைத்து, அதை வீடியோவும் எடுத்திருக்கின்றன, அமெரிக்க இராணுவ மிருகங்கள்.

 

"பிரிட்டிஷ் சிப்பாய்கள் நாகரிகமானவர்கள்' என்ற பொய்ப் பிரச்சாரத்தை அம்பலமாக்கியிருக்கிறது "நியூஸ் ஆஃப் த வேர்ல்ட்' எனும் இலண்டன் நாளிதழ். இராக்கின் பாஸ்ரா நகர இளைஞர்களை பிரிட்டிஷ் சிப்பாய்கள் துப்பாக்கிக் கட்டையால் அடித்து நொறுக்குவதையும் அதை வீடியோவில் பதிவு செய்யும் அதிகாரி ரசித்துச் சிரிப்பதையும் அந்நாளேடு அம்பலப்படுத்துகிறது.

 

""இவ்வாறு நம் இராணுவத்தைக் கொச்சைப்படுத்தும் நாற்காலி அறிவாளிகளுக்குப் போரைப் பற்றி என்ன தெரியும்? நமது இராணுவம் அறவுணர்ச்சி கொண்டது, நெறிகளுக்குக் கட்டுப்பட்டது. எதிரிகளுக்கோ (இராக் போராளிகளுக்கு) அறம், ஒழுக்கம், மனித உரிமை பற்றிய கவலை எதுவும் கிடையாது'' என்று இதற்குத் திமிராகப் பதிலளித்திருக்கிறார், பிரிட்டிஷ் பாதுகாப்புத்துறை செயலர்.

 

""அமெரிக்காவின் குவான்டனமோ சித்திரவதைக் கூடத்தை உடனே மூடவேண்டும்'' என்று ஐ.நா. செயலர் கோபி அன்னான் கூறியிருப்பதை, ""விவரம் புரியாதவரின் பிதற்றல்'' என்று நக்கலடித்திருக்கிறார் அமெரிக்க பாதுகாப்புத்துறைச் செயலர் ரம்ஸ்ஃபீல்டு.

 

கொலைக் குற்றம் நடக்கவில்லை என்று பொய்யுரைத்த நாஜி குற்றவாளிக்கு 10 ஆண்டு தண்டனை என்றால், ஆக்கிரமிப்புப் படுகொலையும் சித்திரவதையும் நியாயம் என்று பேசும் அமெரிக்க, பிரிட்டிஷ் ஆதிக்க வெறியர்களை எந்த நீதிமன்றத்தில் விசாரிப்பது? சித்திரவதை செய்த அமெரிக்க சிப்பாயை விடவும் சிரித்து மகிழும் பிரிட்டிஷ் அதிகாரியை விடவும் பன்மடங்கு கொடியவர்கள் இந்த மேலாதிக்கவாதிகள். "இவர்களுக்கு மக்கள் மன்றத்தில் மரணதண்டனை உறுதி' என்பதை இந்தியா வரவிருக்கும் போர் கிரிமினல் புஷ்ஷக்கு உணர்த்துவோம்! அது அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடி மடிந்த லட்சோபலட்சம் மக்களுக்கு நாம் செலுத்த வேண்டிய அஞ்சலி!