நீர்ப்பறவைகள் மூலமாகவோ அல்லது உலகமயமாக்கலின் விளைவாக நாடு விட்டு நாடு பாயும் கோழி மற்றும் அதன் சார்ந்த பொருட்கள் மூலமாகவோ 2005ஆம் ஆண்டு முதல் நம் நாட்டு கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் நோய் இருப்பதாக செய்தி கசிந்து கொண்டிருந்தது. பண்ணைகளில் கணிசமாக கோழிகள் இறக்க ஆரம்பித்தன. இது பறவைக் காய்ச்சல் என்று தொழிற்துறை வட்டாரத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தரகு முதலாளியான வெங்கடேஷ்வரா நிறுவனம் ""ஆட்டோகிளேவ்'' என்கிற முறையில் பறவைக் காய்ச்சல் தடுப்பூசியை உற்பத்தி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. இச்செய்தியை ஒப்பந்த விவசாய நிறுவனங்களில் பணிபுரியும் கால்நடை மருத்துவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். ஆனால், கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கும் வெளியுலகத்திற்கும் இது பற்றி தெளிவாகத் தெரியாது.
இந்த விசயத்தை கோழி வளர்ப்பில் (முட்டை மற்றும் இறைச்சி) ஏகபோக கட்டுப்பாட்டை வைத்திருக்கும் தரகு மற்றும் பன்னாட்டு ஒப்பந்த நிறுவனங்களான வெங்கடேஷ்வரா, சுகுணா, பயனீர், சரன்பாக்ஸ்பான்ட் (இந்தியா) போன்றவை திட்டமிட்டே மூடி மறைத்தன. கோழி, கருவறை முதல் கறியாகி உணவு மேசைக்கு வரும் வரை ஒட்டுமொத்த சங்கிலியும் இவர்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இதில் ஒரு விவசாயி ஒப்பந்த தொழிலாளிதான். அதற்கு மேல் எந்த ஒரு உரிமையும் இல்லை. கோழி வளர்ப்பில் கோடிகளைப் பார்க்கும் நிறுவனங்கள் இச்செய்தியை மறைப்பதன் மூலம் வியாபாரத்தை நீட்டித்தார்கள். அதாவது, மனித இனத்திற்கு ஆபத்துகள் ஏற்படும் சூழலைப் பற்றிக் கடுகளவு கூட கரிசனம் காட்டாமல் ""பிணம் விழுந்தாலும் பரவாயில்லை; பணம் (வருமானம்) குறைந்துவிடக் கூடாது'' என்பதில் தெளிவாக இருந்தனர்.
ஒரு வழியாக பறவைக் காய்ச்சல் பற்றிய செய்தி, பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் வந்தபிறகு கூட வெங்கடேஷ்வரா மற்றும் சுகுணா நிறுவனங்கள், தங்களது கூட்டமைப்பின் மூலம் ""வந்தது பறவைக் காய்ச்சல் இல்லை'' என்று அறிக்கை மேல் அறிக்கை விட்டன. இப்படிப்பட்ட சூழலில், ஒப்பந்த அடிப்படையில் கோழிகளை வளர்த்து வரும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து பணம் பட்டுவாடா செய்வதை நிறுத்திவிட்டன. இதன் மூலம் 10 லட்சம் ஒப்பந்த கோழி விவசாயிகள் என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கின்றனர். இலாபம் என்றால் ஒட்டுமொத்தமாக அள்ளிச் செல்ல நிற்கும் இந்நிறுவனங்கள், நட்டம் என்ற உடனே பண்ணைகள் பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை.
உலகளவில் பறவை காய்ச்சலின் ஊற்று மூலமே மேற்குறிப்பிட்ட வகையிலான ஒப்பந்த விவசாய நிறுவனங்களே ஆகும். இவர்களின் அதீத இலாபத்திற்காக, பரவலாக பல்இனக் கோழிகள் கொண்டு இயற்கை சார்ந்த பாரம்பரிய உற்பத்தியாக இருந்த புறக்கடை (ஆச்ஞிடுதூச்ணூஞீ கணிதடூtணூதூ) கோழி வளர்ப்பை ஒழித்துக் கட்டினர். அதற்கு மாறாக, ஒரு சில இனங்களைக் கொண்டு கோடிக்கணக்கான கோழிகளை குறிப்பிட்ட வட்டாரத்தில் குவித்து தொழிற்மயமாக்கி இயற்கைக்கு முரணாக அராஜக உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். இதனால் கோழிகளுக்கு இடையே நோய் பரவுவதும், கோழிகளிலிருந்து மனிதர்களுக்கு பரவுவதும் எளிதாக்கப்பட்டன. இப்படி கால்நடை மற்றும் கோழி வளர்ப்பில் தொழிற்மயமாக்கப்பட்டதன் விளைவாகவும், வனம் மற்றும் சுற்றுப்புற சூழலை நாசமாக்கியதாலும் புதிய புதிரான நோய்களான சார்ஸ் (குச்ணூண்), எபோலா (உஞணிடூச்), பற வைக் காய்ச்சல் போன்றவை மனித இனத்தை உலுக்க ஆரம்பித்துள்ளன என்கிறார்கள், வல்லுனர்கள். (பிப். 23, 2006, தி இந்து)
ஒப்பந்த விவசாய நிறுவனங்களில் ஒன்றான வெங்கடேஷ்வரா அரசுக்குத் தெரியாமல் பறவைக் காய்ச்சலுக்கான தடுப்பூசியை உற்பத்தி செய்து, அதை பற்றி எந்த ஒரு உண்மையையும் தெரிவிக்காமல் (லேபிள் கூட ஒட்டாமல்) சிறு, நடுத்தர மற்றும் இதர ஒப்பந்த நிறுவனங்களுக்கு விற்று கோடிகளை அள்ளிக் கொண்டுள்ளது.
இன்னொரு பக்கம் ஹெச் 5 என் 1 நச்சுக்கிருமி மனிதர்களிடத்தில் நோயை உருவாக்குவதற்கான வீரியமிருந்த போதிலும், அதன் பரவும் ஆற்றல் மிகக் குறைவாக இருக்கிறது. இக்கிருமியின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு, நோய் உருவாகும் வீரியத்துடன் பரவும் ஆற்றலை பெற்றுவிட்டால் 1918, 1957, 1968 ஆகிய ஆண்டுகளில் இதேபோன்ற நோய்க்கிருமியால் பல லட்சக்கணக்கான மக்கள் மாண்டதுபோல இப்போதும் நேரிட வாய்ப்புள்ளது.
தற்சமயம் இந்த நோயை ஓரளவு குணப்படுத்தும் திறன் கொண்ட மருந்துகள் ""தேமி புளு'' (கூச்ட்டிஞூடூத) மற்றும் ""ரிலின்சா'' (கீஞுடூஞுணத்ச்) ஆகியனவாகும். இப்பொழுது தேமிபுளு மட்டுமே உற்பத்தியில் உள்ளது. அமெரிக்காவை சார்ந்த ""கிளியெட் சயின்ஸ்'' (எடூடிஞுச்ஞீ ண்ஞிடிஞுஞிணஞு) நிறுவனம் காப்புரிமையை தேமிபுளுவுக்கு பெற்றுள்ளது. ""ரோகி'' (கீணிஞிடஞு) என்ற நிறுவனம் ""கிளியெட் சயின்ஸ்''க்கு கப்பம் கட்டி உற்பத்திக்கும் விற்பனைக்கும் அனுமதி பெற்றுள்ளது. நோயின் சிக்கலையும் ""ரோகி''யின் உற்பத்தித் திறனையும் கணக்கில் கொண்டு, சில அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்குறிப்பிட்ட இரண்டு கம்பெனிகளிடம் ஏகபோக கட்டுப்பாட்டை நீக்கி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். ஆனால், இவ்விரு நிறுவனங்களும் இந்த வேண்டுகோளை மறுத்துவிட்டு தங்களுடைய வியாபாரத்தைப் பாதுகாப்பதற்கான சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றன. இப்பொழுது இந்நிறுவனத்தின் (கிளியெட் சயின்ஸ்) பங்குதாரர்களான அமெரிக்க இராணுவ செயலாளர் ரம்ஸ்ஃபீல்ட், புஷ் தேர்தல் நிதி புரவலர் டேவிங்நன், ரீகன் மற்றும் புஷ்ஷின் முன்னாள் செயலாளர் ஜார்ஜ் சூல்ட்ச் மற்றும் புஷ்க்கு நெருக்கமான டீ விங்க் ஆகியோர் கோடிக்கணக்கான டாலர்களை இலாபமாகக் குவிக்கின்றனர்.
இன்னொரு பக்கம் இந்திய அரசு ""ரோக்கி''யிடமிருந்து துணை ஒப்பந்தம் பெற்றிருக்கும் ""ஹெட்ரோ'' என்ற நிறுவனத்திடமிருந்து ஒரு மாத்திரையை ரூ. 540க்கு வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்தத் தொகையில் பெரும்பான்மையான பங்கு ராயல்டியாகும். இதே மருந்தை இந்திய நிறுவனமான ""சிப்லா'', ""27 ரூபாய்க்கு தயார் செய்கிறோம்; எங்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு கொடுங்கள்'' என்று கேட்கிறது. ஆனால் இந்திய அரசு ""சிப்லா''வின் வேண்டுகோளுக்கு பதிலளிக்காமல் தொடர்ந்து மௌனம் காக்கிறது. ஏனென்றால், இது உலக வர்த்தகக் கழகத்தின் காப்புரிமைச் சட்டத்தை மீறுவதாகும். இப்படி உலக வர்த்தகக் கழகத்திற்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் எதிராக, இக்கட்டான சூழ்நிலையில் கூட சுயசார்புடன் மருந்தைத் தயாரிக்கும் அதிகாரத்தை இழந்து நிற்கிறது இந்திய அரசு.
அதீத இலாபத்திற்காக, இயற்கைக்கு முரணாக, அராஜக உற்பத்தியில் ஈடுபடும் ஒப்பந்த விவசாய நிறுவனங்கள் ஒருபுறம்; இந்நிறுவனங்கள் பெற்றெடுத்த பறவைக் காய்ச்சலில் கோடிகோடியாய் கொழுக்கும் பன்னாட்டு மருந்து கம்பெனிகள் இன்னொருபுறம். இவ்விரு கொலைகார கொள்ளைக்கார கூட்டத்தின் நடுவே விவசாயிகளும் நாட்டுமக்களும் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இக்கட்டுரையின் முதல் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள மைக் டேவிஸ், அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் இவர், அயர்லாந்த நாட்டில் இயங்கிவரும் சோசலிச தொழிலாளர் கட்சியில் உறுப்பினராகவும் இருக்கிறார். பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் பொழுது இந்தியாவில் நடந்த பட்டினிச் சாவுகளுக்கும், காலனி அரசின் வரி வசூலுக்கும் இருந்த தொடர்புகளை ""லேட் விக்டோரியன் ஹோலாகாஸ்ட்'' என்ற நூலின் மூலம் மைக் டேவிஸ் அம்பலப்படுத்தியுள்ளார். அவர் எழுதிய ""நமது வாசற்படியில் வேதாளம்'' (Mணிணண்tஞுணூ ச்t ணிதணூ ஞீணிணிணூ) என்ற நூலில் இருந்து இம்மேற்கோள் எடுத்தாளப்பட்டுள்ளது.சி
மு சுடர்
இந்தியாவில், ""எய்ட்ஸ்''க்கு அடுத்துப் பரவலாக அறியப்பட்ட நோயாக பறவைக் காய்ச்சல் நோய் உள்ளது. எய்ட்ஸைப் போலவே, பறவைக் காய்ச்சல் நோயும் ஏகாதிபத்தியங்கள் உலகுக்கு அளித்திருக்கும் ""கொடை''. கோழி வளர்ப்பை இயற்கைக்கு முரணாகத் தொழில்மயமாக்கியதன் விளைவுதான் இந்த நோய்.
இந்த நோய் தாக்குவதற்கு முன்பாகவே தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காத இந்திய அரசு, இப்பொழுது கிராமம், கிராமமாகப் போய் கறிக் கோழிகளைக் கழுத்தை நெறித்துக் கொன்று புதைத்து வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் இத்தொழிலில் பல கோடி ரூபாய் நட்டமேற்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த நட்டத்தைத் தாங்குபவர்கள் யார்? கோழிக் கறிக் கடைகளின் போர்டுகளில் காணப்படும் சுகுணா, வெங்கடேஷ்வரா, பயனீர் போன்ற கறிக்கோழி விற்பனையை ஏகபோகமாக நடத்திவரும் தரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு இந்த நோயால் சல்லிக் காசு கூட நட்டம் கிடையாது. மாறாக, இந்நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு கோழி வளர்ப்புத் தொழிலை நடத்திவரும் சிறுவீத உற்பத்தியாளர்கள் விவசாயிகள்தான் இந்த நட்டத்தைத் தாங்கிக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஈரோடு, நாமக்கல் பகுதிகளில் மட்டும் ஏறத்தாழ 20,000 பேர் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் தொழிலே போண்டியாகிப் போன பிறகு, இவர்கள் வங்கிகளில் வாங்கிய கடனுக்கான வட்டியில் 4 சதவீதம் தள்ளுபடி செய்வதாக டாம்பீகமாக அறிவித்துள்ளது, இந்திய அரசு.
இது மட்டுமின்றி, உலக வர்த்தகக் கழகத்தின் காப்புரிமை சட்டத்தைக் காட்டி, உள்நாட்டிலேயே குறைந்த செலவில் பறவைக் காய்ச்சலுக்கான மருந்து தயாரிப்பதையும் தடுத்து நிறுத்தி விட்டது, மன்மோகன் சிங் கும்பல். ஒருபுறம், கறிக்கோழி விற்பனையை ஏகபோகமாகக் கொண்டுள்ள தரகு முதலாளித்துவ நிறுவனங்களும், இன்னொருபுறம் பன்னாட்டு மருந்து கம்பெனிகளும் பறவைக் காய்ச்சல் நோயால் ஆதாயம் அடைந்து வருவதை இக்கட்டுரை சுருக்கமாக எடுத்துக் காட்டுகிறது.