'அதிகமா சோறு திங்காதடா வீட்டுல தரித்திரம் பிடித்தாட்டும்' 

என்று நம் தாய்மார்கள் சொல்வதுண்டு. ஆனால் அடுப்பே எரியாத வீட்டைப் பார்த்து ஏண்டா அதிகமாக திங்கிறிங்க என்று எவனாவது கேட்டால் நமக்கு எவ்வளவு கோபம் வரும். இதைத்தான் வேறு வகையில் கொடுங்கோன்மையின் மொத்த உருவமாக இருக்கும் புஷ் என்கிற ஓநாய் நம்மை பார்த்து ஊளையிட்டுள்ளது. இந்தியர்கள் அதிகமாக உண்கிறார்கள் அதனால் தான் இன்று விலைவாசி உயர்வும் , உணவு பஞ்சமும் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளான்.


இதை கேட்கும் அரை வயிற்றுடன் தூங்குபவனும், உணவுக்காக தனது வருமானத்தில் முழுமையாக ஒதுக்கும் எவனுக்கும் சுரீரென்று கோபம் வரும்.80 கோடி மக்களின் வருமானம் ரூ.20 -க்கும் கீழே என்ற புள்ளி விவரம் அரசு தந்ததுதான். ஆனால் அதே அரசின் பிரதிநிதி தான் 35 கோடி நடுத்தர வர்க்க மக்கள் சத்தான உணவை உண்கிறார்கள் என்கிறான். எப்படி தான் கூறிய கருத்தில் தானே முரண்படுகிறான் என்பதிலிருந்து இந்தியா வளர்ச்சியடைகிறது வாஷிங்டன் ஆகிறது என்பதெல்லாம் எவ்வளவு கேவலமான பிரச்சாரம் என்பது புலனாகிறது.


பல்வேறு மூன்றாம் உலக நாடுகளில் அடிவாங்கிய இந்த ஏகாதிபத்திய அமெரிக்க நாய் இன்று ஈராக் மக்களிடம் சிக்கித் தவிக்கிறது. அமெரிக்காவை எதிர்த்து அந்த மானமுள்ள மக்கள் நடத்தும் எதிர்தாக்குதலால் பீதியடைந்துள்ள அமெரிக்காஆளும் வர்க்க பிரதி நிதிகள் அதை மறைக்க இந்தியாவும் சீனாவும் தான் அதிகம் பெட்ரோல் டீசலை பயன் படுத்துகிறார்கள் எனவே தான் எண்ணைத் தட்டுப்பாடும் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது என்கிறது. இப்படிபட்ட சாக்கடைப்புழுக்களை மூன்று வேளையும் துதிபாடி அவன் இடும் கட்டளைகளை வேதமாக நிறைவேற்றும் அடியாள்படையான காங்கிரஸ் கட்சி இது குறித்து அப்பட்டமாக ஆதரித்தது ஒன்றும் வியப்பானது அல்ல ,ஆனால் இந்து,இந்து இராஜ்ஜியம்,இந்து தேசியம்,பாரத் மாதா கி ஜெய் என்று எந்நேரமும் பஜனை பாடிக்கொண்டிருக்கும் பா.ஜ.க என்ன சொன்னது ? மன்மோகன் சிங் இதை கண்டிக்க வேண்டும் என்று கூறியதோடு நிறுத்திக்கொண்டது. ஏய் இதுல உன்னோட கருத்து என்ன அதைச் சொல்லுடா என்று கேட்டால், பா.ஜ.க என்கிற இந்த அடிமை நாயும் ஒன்றும் சொல்லவில்லை, ஏனெனில் பா.ஜ.க வின் உலகமய பகவான்,ராமபிரானின் சர்வதேச அவதாரம் புக்ஷ் தான் என்பதை பா.ஜ.க பயங்கரவாத கும்பலின் ஆட்சியை அறிந்தவர்கள் நன்றாக புரிந்துகொள்ள முடியும். அடுத்ததாக நமது ஜால்ராக்கள்(வலதுசாரி நுழைவு வாயிலில் நிற்கும் இடதுசாரிகள்) என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தால் " நாங்கள் கண்டிக்கிறோம்" என்று வழக்கம் போல சொல்கிறார்கள். போர்குணமிக்க(!)இடதுசாரிகளிடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்கமுடியாது. நாமம் போட்டும்,வயிற்றில் ஈரத்துணியை கட்டிக்கொண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தும் கட்டைப்பஞ்சாயத்து சங்கங்களை வைத்திருக்கும் இந்த போலிகள் கண்டித்ததே பெரிய விசயம் தானே. தொழிலாளிகளின் போர்க்குணத்தை மழுங்கடிக்கும் இவர்களா அமெரிக்காவிற்கு எதிராக போராடுவார்கள் ?


மூச்சுக்கு முன்னூறு முறை கண்டதற்கும் அறிக்கை விடும்,உடம்பெல்லாம் தேசபக்தி என்கிற திரவம் சுரக்க,சுரக்க பாக்கிஸ்தானை வெறிகொண்டு திட்டித்தீர்க்கும் கருப்பு எம்.ஜி.ஆர் விஜையகாந்த் எங்கே போனான் ? ஏன் இதற்கெதிராக போராடவில்லை ?


புஷ் குடும்பத்தில் சம்பந்தம் கிடைத்தால் வெட்கமின்றி அதையும் செய்துகொண்டு தனது குடும்பம் சர்வதேச சமத்துவக்குடும்பம் என்று அதற்கு விளக்கமும் அளிப்பார் கருணாநிதி. இந்த சதைப்பிண்டங்கள் இந்த நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும் பேசாது,இவர்களின் குறி அடுத்த ஆட்சி, விஜயகாந்த் என்கிற அடி முட்டாளுக்கு உடனடியாக முதல்வர் பதவியில் உட்கார வேண்டும் அதற்கு இது உதவுமா,அதற்கு ஏதாவது செய்ய வேண்டும்,அதற்காக அறிக்கை விடலாம் மற்றபடி இந்த அறிவாளியை பொருத்தவரை இதெல்லாம் முக்கியத்துவமற்ற பிரச்சனை.மக்களின் வாக்குகளை பொறுக்கிக்கொண்டு, மக்கள் தீர்ப்பளித்துவிட்டார்கள்,மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம் என்கிற இந்த கூட்டத்திற்கு இந்த நாட்டின் ஏழைகள்,பஞ்சைப்பராரிகள்,விவசாயிகளும்,தொழிலாளிகளுமான அணைத்து உழைக்கும் மக்களும் மிகச்சரியான ஒரு தீர்ப்பை விரைவில் அளிப்பார்கள் அந்த தீர்ப்பு வரும் நாளும் தொலைவில் இல்லை.

http://sivappualai.blogspot.com/2008/05/blog-post.htmlஓட்டுப்பொறுக்கிகள் அணைவரின் நிலையும் ஒன்றே தான்.ஆளும் கட்சியாக இருந்தால் மவுனமாக இருப்பதும் எதிர் கட்சியாக இருந்தால் கொஞ்சம் போல மட்டும் உதார் காட்டுவது அதுவும் அமெரிக்க எஜமானுக்கு எதிராக அல்ல, தனது சீட்டில் உட்கார்ந்திருக்கும் சக ஓட்டுப்பொறுக்கி ஆளுவதை சகிக்க முடியாமல் திட்டுவது,அறிக்கை விடுவது அதில் கூட தவறியும் கூட எஜமானை புன்படுத்தும் சொற்கள் தவறியும் கூட பிரயோகிக்கப்படாமல் பார்த்து வெற்று அறிக்கைகள் விடுவதோடு முடித்துக்கொள்வார்கள். இந்த ஓட்டுப்பொறுக்கிகள் தங்களுடைய அமெரிக்க ஆண்டானின் ஏவல்களுக்கு வாலாட்ட மட்டுமே பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர்.தனது ஆண்டையின் மனது எந்த வகையிலும் புன்படாமல் பார்த்துக்கொள்வதே இவர்களின் தலையாய கடமையாக உள்ளது.எனவே தான் எந்த ஒரு ஓட்டுப்பொறுக்கி பயலும் இந்த நாடும்,மக்களும் இந்த அளவிற்கு இழிவுபடுத்தப்பட்ட பிறகும் கூட எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அடுத்த தேர்தலில் எப்படி ஒட்டைப்பொறுக்கித்திங்கலாம் என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். வாயைத்திறந்தாலே கருணாநிதியை கரித்துக்கொட்டும் ஜெயலலிதா எங்கே போனாள் ? ஏன் இதைப்பற்றி பேசவில்லை, அறிக்கைவிடவில்லை?

நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் தான் வாழும் நாட்டில் விவசாயம் செய்ததற்காகவே தற்கொலை செய்து கொள்ளும் மானக்கேடு வேறு எங்கேயும் நடந்ததில்லை. நம் நாட்டில் தான் அதுவும் ஒன்று, இரண்டு என்று விரல் விட்டு என்னும் அளவில் இல்லாமல் சுமார் 1.5 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் இதே நாட்டில் தான் அம்பானி என்கிற அட்டைப்பூச்சி சுமார் 8000 கோடி ரூபாயில் தன் குடும்பத்திற்காக மட்டுமே வீட்டையல்ல ஒரு நகரத்தையே கட்டிக்கொண்டிறிருக்கிறான்.

இந்திய ஓட்டுப்பொறுக்கிகளுக்கும், அரசு எச்சங்களும் இந்த 8000 கோடியும், நான்கு வழிச்சாலையும், பளிங்கு பங்களாக்களும், பல வண்ண கார்களும் வளர்ச்சியாகவும் 80 கோடி மக்களின் பஞ்சை பராரி நிலை தாராளமய, உலகமய திருவிழாவிற்கு அவர்கள் தர வேண்டிய பலிகடாவாகவும் தெரியும் பொழுது இவர்களிடம் நாம் எதை எதிர் பார்க்க முடியும், அடிமைத்தனத்தை தவிர. மக்களை ஆட்டிப்படைக்கும் இந்த கொள்ளை கூட்டத்திற்கு பெயர் அரசியல்வாதிகள் "மக்களுக்கான அரசியல் என்றுமே மான உணர்ச்சியில் இருந்து மட்டுமே பிறக்க முடியும்" , "பிரிட்டிஷார் எங்களை ஆண்ட பொழுது எங்களுக்கு செய்த நன்மைகள்" என்ற தலைப்பில் அவன் காலடியில் நின்று துதிபாடிய மன்மோகன் சிங் போன்ற பிணங்களிடம் நாம் சூட்டையும், சொரனையையும் எதிர்பார்க்க முடியாது.

இந்த உணவு பற்றாக்குறைக்கு காரணம் தான் என்ன ?

(1) விவசாயம் திட்டமிட்டே அழிக்கப்ப்ட்டு வருகிறது. விவசாயிகள் கூலித்தொழிலாளிகளாக நகரங்களை நோக்கி துரத்தப்படுகின்றனர். விவசாய மானியம் குறைக்கப்பட்டும், அரசு கொள்முதல் நிறுத்தப்பட்டும் உள்ளது இதனால் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அரசிடம் கடன் கிடைக்காமல் கந்து வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்து நட்டமடைந்து கடன் தொகையும், வட்டியையும் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

(2) மேலும் உலகின் வல்லரசு நாடுகள் தங்களுடைய கார்களுக்கான எரிபொருளில் பெரும் பகுதியை உயிரி எரிபொருள் (Bio fuel) மூலமே பூர்த்தி செய்ய முடிவு செய்துள்ளார்கள். இதனால் விவசாயிகள் அனைவரும் உயிரி எரிபொருள் தயாரிக்க ஏதுவான சோளம், காட்டாமனக்கு போன்றவற்றை பயிரிட நிர்பந்திக்கிறார்கள். ஒரு காரின் டேங்கை ஒருமுறை நிரப்ப ஒரு ஆப்பிரிக்கரின் ஓராண்டு முழுவதுக்குமான உணவுப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

உண்மை நிலை இவ்வாறு இருக்க புஷ் வக்கிரமாக நமது நாட்டைப் பார்த்து குற்றம் சாட்டியுள்ளான்.உலக மக்களின் முதல் எதிரியான இந்த முட்டாளுக்கு அரசியல் அறிவோ, ஏன் பொது அறிவோ கூட கிடையாது. அவனுடைய அமெரிக்காவில் தான் வாகனங்களுக்கு உணவுப்பொருட்கள் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதை எல்லா மக்களும் காறி உமிழ்கிறார்களே என்ற அறிவு கூட இல்லாமல் துப்பியதை துடைத்துக்கொண்டு இந்தியர்கள் அதிகமாக உண்கிறார்கள் என்கிறான்.

உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவின் இத்தகைய குற்றச்சாட்டுக்கு, உலகின் மிகப்பெரிய ஜனநாயக(?) நாடான இந்தியாவின் பதில்தான் என்ன? மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் எந்த ஓட்டுப்பொறுக்கிக்கும் கோபம் வரவில்லை. மன்மோகன்சிங்குக்கு இது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை, எனவே இதற்கு கருத்து கூறவும் மறுத்துவிட்டார். திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளிடம் வேலை செய்பவனுக்கு இருக்கக்கூடிய மனப்பான்மையில் திருவாளர் மானங்கெட்டசிங்கின் உதவியாளர் மாண்புமிகு சியாம்சரண், உடனே "இல்லை..,இல்லை , இந்தியா பொருளாதார வளர்ச்சியடைந்து அதனால் 35 கோடி நடுத்தர வர்க்க மக்கள் அதிகம் சத்தான உணவையே வாங்கி உண்கிறார்கள். எனவே தான் புஷ் இப்படி கூறுகிறார்" என்று நியாயப்படுத்துகிறார். இதில் இந்தியா வளர்கிறது என அவர் கூறும் கூற்று முற்றிலும் பொய்யான கேவலமான கருத்து.

கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் விவசாயிகள் விதர்பாவில் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள நிலைதான் இந்திய பொருளதாரத்தின் வளர்ச்சியா? இந்தியாவில் 80கோடிக்கும் அதிகமான மக்களின் தினசரி வருமானம் 20 ரூபாய்க்கும் கீழே என்று அரசே புள்ளி விவரம் அளிக்கிறதே. இது தான் இந்தியா வல்லரசாகும் லட்சணமா?