ஈராக்கில், நீதி விசாரணை நாடகமாடி சதாமுக்குத் தூக்கு தண்டனை விதித்துள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து விழுப்புரம்கடலூர் மாவட்ட வி.வி.மு., பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு., அமைப்புகள் இணைந்து 16.11.06 அன்று விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின. ""சதாமுக்குத் தூக்கு தண்டனை என்றால், 6 இலட்சம் ஈராக்
மக்களைக் கொன்றொழித்த பயங்கரவாத புஷ்ஷûக்கு என்ன தண்டனை?'' என்ற மைய முழக்கத்துடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் ஏழுமலை (வி.வி.மு) தலைமை தாங்கினார். உலக மேலாதிக்கப் பயங்கரவாத அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்கள், கொலைகள், சதிகளைப் பட்டியலிட்டும், உலகப் பொது எதிரி அமெரிக்காவுக்கு எதிராக உலகெங்கும் போராட்டங்கள் தொடர்வதை விளக்கியும், அமெரிக்காவின் கைக்கூலியாகச் செயல்படும் இந்திய ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தியும் முன்னணித் தோழர்கள் கண்டன உரையாற்றினர். கொலைகார புஷ்ஷின் கொடூரத்தைச் சித்தரிக்கும் படங்களைக் கொண்ட தட்டிகளோடும் நகரை அதிர வைத்த முழக்கங்களோடும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், உலக மேலாதிக்கப் பயங்கரவாதி புஷ்ஷûக்கு இப்புரட்சிகர அமைப்புகள் மரண தண்டனை விதிப்பதாகத் தீர்ப்பெழுதிப் பிரகடனப்படுத்தின. அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை அம்பலப்படுத்தி முறியடிக்க அறைகூவிய இந்த ஆர்ப்பாட்டத்தை திரளான உழைக்கும் மக்கள் உற்சாகத்துடன் வரவேற்று ஆதரித்தனர். பென்னாகரம், சென்னை மற்றும் பிற பகுதிகளில் சதாமுக்குத் தூக்கு தண்டனை விதிக்கும் அமெரிக்க மேலாதிக்க வல்லரசை அம்பலப்படுத்தியும், பயங்கரவாத அமெரிக்க வல்லரசை முறியடிக்க அறைகூவியும் பரவலாக சுவரொட்டிகள், முழக்க தட்டிகள் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
— பு.ஜ. செய்தியாளர்கள்