அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர கைது செய்யப்பட்டு எதிர்வரும் மார்ச் 9 வரை விளக்கமறியலில் வைக்கப்ப்டுள்ளார். அவர் பிணை நிபந்தனைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அரசு கல்வி மற்றும் சுகாதாரத்திற்க்கான நிதியை குறைத்தும் இத்துறைகளில் தனியார் மயமாக்கலை முனைப்புடன் முன்னெடுத்து அதற்காக சட்டங்களை இயற்றி வருகின்றது. பொலிஸ், இராணுவம், நீதிமன்றங்கள் மற்றும் சட்ட கட்டுப்பாட்டுகளை பயன்படுத்தி இவற்றிற்கு எதிராக போராடுபவர்கள் மீது அடக்கு முறைகளை ஏவிவருகின்றது. அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் போராட்டத்தின் மீது இராணுவத் தாக்குதல்கள், டீப் பல்கலைக்கழக மாணவர்கள் மக்கள் மீது நடந்த தாக்குதல் மற்றும் சையிட்டம் தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக போராடும் மாணவர்கள் தலைவர்கள் மீதான தாக்குதல்கள் கைதுகள் தொடர்கின்றன. மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைத்து தலைமை தாங்கும் லகிரு மீதான இந்த கைது நடவடிக்கையானது, அரசு நவதாராளவாத பொருளாதார கொள்ளையை முனைப்புடன் முன்னெடுக்க கடுமையான அடக்குமுறை கொள்கையினை கடைப்பிடிக்க தொடங்கி இருப்பது தெளிவாகின்றது.