Language Selection

தோழமை அமைப்புகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த யூன் 30ம் தகதி கொழும்பு பொது நூல் நிலைய மண்டபத்தில் ஜனநாயகத்திற்க்காக பிரச்சாரத்தை மேற்கொள்வதற்க்காக அமைக்கப்பட்ட ஆர்ப்பாட்டகாரர்கள் கலந்து கொண்ட முதலாவது பொதுக் கூட்டம் இடம்பெற்றது.

சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!
அடக்குமுறைச் சட்டங்களை சுருட்டிக்கொள்!!
குமார் குணரத்தினத்தின் குடியுரிமையை ஏற்றுக்கொள்!!!

ஆகிய மூன்று பிரதான கோசங்களை முன்வைத்து பல இடதுசாரி கட்சிகள், ஆசிரியர் அமைப்புக்கள், மாணவர் சங்கங்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், தொழிற் சங்கங்கள் என பல்வேறு அமைப்புக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தமது பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.

பல்கலைக்கழக மாணவர் சம்மேளன தலைவர் லஹிரு வீரசேகர, "புதிய தலைமுறை" அமைப்பு  மாதவா கிரேசி, கலைஞர்களை பிரதிநிதிப்படுத்திய  கிங்ஸ்லி லூஸ் மற்றும் பிரியா ரணசிங்க, ஐக்கிய சோசலிச கட்சி பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய, தொழிலாளர் மாநாடு அமைப்பை சேர்ந்த லினஸ் ஜயதிலகே,
வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தம்மிக்க முனசிங்,  தொழிலாளர் மையம் செயலாளர் ஜாகொட,  சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள் ஒன்றிய செயலாளர் அன்டன் மார்க்கஸ், இலங்கை ஆசிரியர் சங்கம் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், மீடியா சேவைகள் ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் FMETU, இலங்கை ஆசிரியர் சங்கம் முன்னேற்றம் மயூரா சேனாநாயக்க, ஐக்கிய மேலாண்மை சங்கம் மாநில செயலாளர் பி டி சரணபால, முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் குழு சமீர கொஸ்வத்த,  இடது குரல் பேராசிரியர் சுமனசிறி லியனகே, ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர் அமைப்பினை சேர்ந்த கன்வீனர் சிறிமல்வத்த, புதிய ஜனநாயக மார்க்சிய-லெனினிய கட்சியின் பொதுச் செயலாளர் கா.சி. செந்தில்வேல், சோசலிச நடவடிக்கை குழு உறுப்பினர் மையம் ரத்நாயக்க மற்றும் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றியிருந்தனர்.