12072022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

இந்தியர்கள் வாயினால் சாப்பிடக் கூடாது - உலக பயங்கரவாதி புஷ் எச்சரிக்கை!

 
ஏழை எளிய நாடுகள் முழுவதும் இன்று விலைவாசி உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்திற்காக அந்நாடுகளில் உணவு உற்பத்தி திருப்பிவிடப்பட்டது, ஊக வணிகம் என்ற பெயரில் உணவில் சூதாடிகளை நுழைத்தது என பல காரணங்கள்.

இந்தியாவில் உணவு உற்பத்தி, கொள்முதல், விற்பனை என அனைத்திலும் இருந்து அரசு தன்னை விடுவித்து கொண்டு அதனை பன்னாட்டு நிறுவனங்களிடமும் தரகு முதலாளிகளிடமும் ஒப்படைத்தது காரணம்.

இதனை எந்த ஓட்டுப்பொறுக்கி நாய்களும் சொல்வதில்லை. ஏனென்றால் இதனை அரங்கேற்றியதில் "அனைத்து ஓட்டுப்பொறுக்கிகளுக்கும் குறிப்பாக 4 ஆண்டுகளாக காங்கிரஸ் துரோகிகளை ஆதரிக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளுக்கும்" முழு பங்கு உண்டு.

இன்று உலக நாடுகளை சூறையாடும் உலகப்போலீஸ்காரனும், அமெரிக்காவின் தலைவனும் ஆன புஷ் அறிவிக்கிறான் "விலைவாசி உயர்வுக்கு இத்திய மக்கள் அதிகம் சாப்பிடுவதே" காரணம் என்று.

இலவசமாக உணவு பொருக்களை இந்தியர்கள் பெறுவது போல சித்தரிக்கும் இந்த பயங்கரவாதி தான் 'பயோ ப்யூல்' காக ஏழை எளிய நாடுகளின் குறிப்பாக இந்தியாவின் விவசாயத்தை உணவு உற்பத்தியிலிருந்து விலகி காட்டாமணக்கு போன்றவற்றை பயிரிட வைத்தவன்.

விலைவாசி உயர்வுக்கு காரணமான தனியார்மயம், ஊகவணிகம் என அனைத்தையும் இத்திய ஓட்டுப்பொறுக்கிகள் நிறைவேற்ற காரணமானவனே இவனுடைய அமெரிக்கா தான். அங்குள்ள ஆக பெரும்பாண்மையான பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காக தான்.

புஷ் சொல்லும் இதைதான் இந்திய ஓட்டுப்பொறுக்கிகளும் முன்னர் சொன்னது, "தேவை அதிகரித்ததே" என்று. அதனை வெளிப்படையாக "அதிகம் திண்ணுகின்றனர்" என புஷ் அறிவிக்கிறான் இன்று.

புஷ்யை கண்டிக்கும் அருகதை இந்திய ஓட்டுப்பொறுக்கிகளுக்கு இல்லை என்பதே இதிலிருந்து தெரிவது.

கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்