புலிகள், முஸ்லீம் மக்களை வடக்கில் இருந்து துரத்தியதினாலும், காத்தான்குடி பள்ளிவாசலில் வைத்து தொழுது கொண்டிருந்தவர்களை கொன்றதினாலும் கோபங் கொண்ட அல்லா தானாம் புலிகளை அழித்து விட்டார் என்று சில அறிவிலிகள் உளறுகிறார்கள். அவர்கள் இதோடு நிறுத்தியிருந்தால் நமக்குப் பிரச்சனை இல்லை. ஏனென்றால் இது நமக்கு அறிவீனம், மூடநம்பிக்கை, முட்டாள்தனமாக இருந்தாலும் மதவாதிகள் எப்போதுமே இப்படித்தான் இருப்பார்கள். அவர்கள் மதம் என்ற கற்பனையை நம்புபவர்கள், எனவே தமது கற்பனைக்கதைகளுடன் காலத்தை கழிக்கட்டும் என்று விட்டு விடலாம்.
ஆனால் இந்த மதவெறி பிடித்த மிருகங்கள் எமது பெண் போராளிகளையும், பிரபாகரனின் மனைவியையும் மிகவும் வக்கிரமான முறையில் கொச்சைப்படுத்துகிறார்கள். பெண்கள் என்றால் பாலியல் உறவிற்கான கருவிகள் மட்டுமே என்ற ஆணாதிக்க வெறியில் வளர்ந்த இந்த மிருகங்கள் பெண் போராளிகளை பாலியல் நிந்தனை செய்கின்றன. இந்த நாய்கள் மதநம்பிக்கை கொண்டவர்களாம். இறைமொழிகளிற்கு கட்டுப்பட்டு நடப்பவர்களாம். பெண்களை பாலியல் வன்முறை செய்வது தான் இவர்களின் மத ஒழுக்கமா?. பெண்களை கேவலமாக பேசுவது தான் இவர்களின் மத போதனையா?.
ஏற்கனவே தமிழர்களிற்கும், முஸ்லீம்களிற்கும் இடையே இருந்த பகைமை உணர்வை இலங்கையின் இனவெறி அரசுகள் திட்டமிட்டு தூண்டி விட்டன. தொலைநோக்கில்லாத, தமிழ்க் குறுந்தேசிய இயக்கங்கள் முஸ்லீம்களைக் கொலை செய்தன. மதவெறி கொண்ட முஸ்லீம் ஜிகாத் குழுக்கள் தமிழ் மக்களைக் கொன்றன. சிங்கள இனவாதத்தினால் ஒடுக்கப்படும் தமிழ்மக்கள் இலங்கையில் நசுக்கப்படும் எல்லாமக்களையும் இணைத்துக் கொண்டு போராடாமல் இலங்கை அரசை வீழ்த்த முடியாது என்ற அரசியல் அடிச்சுவடியை காலில் போட்டு மிதித்து தமிழ் இயக்கங்கள் போராட்டத்தை சிங்கள இனவெறி அரசிடம் தாரை வார்த்தார்கள்.
தமிழ்த்தலைமைகள், தமிழ் இயக்கங்கள் செய்த அதே தவறை முஸ்லீம் அரசியல் கட்சிகளும், ஆயுதக்குழுக்களும் செய்தன. சிங்கள இனவெறியினால் இலங்கையில் முதலாவதாக ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை இந்த தலைமைகள் தமது பதவி சுகத்திற்காக ஒடுக்கிய அதே சிங்களத் தலைமைகளிடம் அடகு வைத்தன. இலங்கை அரசுகள் வழங்கிய ஆயுதங்களை கொண்டு முஸ்லீம் ஆயுதக்குழுக்கள் தமிழ் மக்களைக் கொன்று இனி ஒரு போதும் தமிழ், முஸ்லீம் மக்கள் இணைய முடியாது என்ற நிலையை உருவாக்கி இலங்கை அரசுகளின் நோக்கத்தை நிறைவேற்றினார்கள். ஜிகாத் குழுக்கள் கொலைகளினால் இனங்களிற்கு இடையிலான ஒற்றுமையை கொலை செய்தார்கள். இந்த மதவெறியர்கள் பெண் போராளிகளை கொச்சைப்படுத்துவதன் மூலம் அதை தொடருகிறார்கள்.
உலகம் முழுக்க முஸ்லீம்கள் எதிரிகளாக, பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் தமது எண்ணெய் தாகத்திற்காக அப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் மக்களின் குருதி குடிக்கிறார்கள். காஸ்மீரில் குழந்தைகள் கூட பயங்கரவாதிகள் என்று இந்திய இராணுவத்தால் கைது செய்யப்படுகிறார்கள். சோமாலியாவில் நிலம், பாலையாகி பசியிலும், பட்டினியிலும் மக்கள் மடிகிறார்கள். பாலஸ்தீனத்தில் அகதியாக பிறந்து அகதியாகவே முகாம்களில் வாழ்கிறார்கள். உலகின் மிகவும் ஏழை நாடுகளாக சோமாலியா, வங்கதேசம், சாட் போன்ற முஸ்லீம் நாடுகள் முடிவுறா வறுமையில் வாடுகின்றன. இந்த துன்பங்களும், துயரங்களும் அல்லாவின் கண்களில் படவில்லை. பசியிலும், தாகத்திலும் துடிக்கும் மக்களிற்கு ஒரு பிடி உணவு, ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்க அந்த ஆண்டவன் வரவில்லை. ஆனால் அல்லா புலிகளை மட்டும் அழித்து விட்டாராம்.
மத வெறியர்கள் எந்த மதத்தில் இருந்தாலும் பெண்களைக் கேவலப்படுத்துவதில் ஒரே மாதிரியாகவே இருக்கிறார்கள். பாரதிய ஜனதாக் கட்சி என்ற பண்டாரப் பரதேசிகளின் கட்சியைச் சேர்ந்த ராஜா என்பவன் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழியை இந்துமதவாதிகளின் பொறுக்கித்தனத்தோடு, பகுத்தறிவுக் கொள்கைகளின் மீதான தீராப்பகையோடு திட்டுகிறான். பெண்ணடிமையின் சின்னங்களான பொட்டு, தாலி என்பவற்றை அருள்மொழி தூக்கி எறிந்ததை அவனால் பொறுக்க முடியவில்லை. அருள்மொழி தாலி கட்டாவிட்டால் தான் அவரிற்கு தாலி கட்டி விடுவேன் என்று அந்த நாய் ஊளையிடுகிறது.
மதங்கள் மக்களைப் பிரித்து ஆட்சியில், அதிகாரத்தில் உள்ளவர்களிற்கு சேவகம் செய்கின்றன. மதவெறியர்கள் உழைக்கும் மக்களை, பெண்களை, சமுகத்தின் அடித்தட்டு மக்களை கீழ்மைப்படுத்துவதன் மூலம் மக்களிடையே பகையை மூட்டி அதிகாரவர்க்கங்களின் நோக்கங்களை நிறைவேற்றுகிறார்கள். மத நம்பிக்கையற்ற இடதுசாரி, முற்போக்கு சக்திகளே மக்களின் ஒற்றுமைக்காக போராடுகிறார்கள். அதிகார வர்க்கத்திற்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடுகிறார்கள். பொதுபலசேனா என்ற பெளத்த மதவெறி அமைப்பினால் அளுத்கம பிரதேசத்தில் முஸ்லீம் மக்கள் தாக்கப்பட்ட போது எந்த முஸ்லீம் அமைப்பும் குரல் கொடுக்கவில்லை. எந்த முஸ்லீம் மதவாதியும் வாய் திறக்கவில்லை. மகிந்த ராஜபக்சவின் காட்டாட்சிக்கும், பொதுபல சேனாவின் மதவெறிக்கும் பயந்து போயிருந்தார்கள். இடதுசாரிய அமைப்பான சமவுரிமை இயக்கமே எதிர்த்து குரல் எழுப்பியது, கொழும்பில் ஆயிரக்கணக்கானவர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்தது.
மக்களிற்கு எதிரான மதங்களை விலக்கி மனிதத்தை வலியுறுத்தும் சமத்துவக் கொள்கையை தூக்கிப் பிடிப்போம்.