வாழ்வை மீழமுடியா
இராணுவமுற்றுகைக்குள் அடக்கப்பார்ப்பது
போராயுதங்கள் மட்டுமல்ல,
நல்லிணக்கம்
மனித உரிமைமீறல்
போர்க்குற்றம்
காணொளிகள்
காட்சிப்பதிவுகளும்தான்
மலாலா மீதான இரக்கத்தை
எல்லாக்
குழந்தைகளிடம் காட்டத்தயங்குவதேன்
பிஞ்சுகள் அஞ்சுகின்றன
குழந்தை நெஞ்சில் ஊறிப்போய்விட்ட
அச்சத்தை பாருங்கள் ஊடகமேதைகளே,
விருதும், பொன்னாடையுமல்ல
எழுந்து
மக்கள் வாழ்வுக்காய்
ஒளிப்படகருவி நீழுமாயின்
அது ஊடக தர்மம்.
குதூகலிக்கும் உலகப்பரப்பிற்காய்,
ஏவுகணைகளைகளைவிட வலிமையான
கருத்துப்பலத்தை காவவேண்டியவர்களே!
மனிதகுலத்தின் ஈடேற்றத்திற்காய்
உங்கள் பார்வைகள் விழுமாயின்
உலககுழந்தைகளின்
மகிழ்ச்சிப்பிரவாகத்தில்,
பேதலித்துப்போன குருத்துகள்
ஆரவாரிக்கும்!!
அஞ்சி நடுங்கி உயர்த்திய
பிஞ்சுக்கரங்கள் ஆரத்தழுவட்டும்!!
வஞ்சகமற்ற குஞ்சுகள்
சிறகடித்து சுதந்திரமாய் உலாவரட்டும்!!
03/04/2015