இறுதி வணக்கமல்ல இது என் நெடுவணக்கம்.....!
நனவெரிந்த சாம்பலில் என்ற தலைப்பில் ஒரு கவிதைப் புத்தகம்
அவரது படைப்பு, புதிய விடுதலைக்காய், புதிய பண்பாட்டுக்காய், புதிய ஜனநாயகத்திற்காய் பேசும் அப்படைப்பில் ஒவ்வொரு கவிதையும் புனலினூடாக ஊற்றப்படும் பால்போல் சிந்தனையில் நேர் செல்கிறது; அவற்றைச்சுருக்கமாகக் கூறினால்......!
அவலங்களை மூட்டைகட்டி வைத்திருக்கும் தனியுடமைச்சமூகமைப்பற்றி..!
அதிகாரங்களைத் தக்கவைக்க கொடூரங்கள் நிகழ்ந்ததை, நிகழ்வதைப்பற்றி..!
அதிகாரவெறியர்களின் சமாதனைப் பேச்சுக்கூட சமாதானத்திற்கானதல்ல என்பதைப்பற்றி..!
மதமென்ற மாயை அறியாமையில் அடர்த்தியாக வளர்ந்த களைஎன்பதைப்பற்றி...!..!
போலித்தனமும் தற்பெருமையும் பேசிக்கடத்தும் வாழ்வைபற்றி...!
இவ்வாறான சிந்தனையாளரை இழந்த துயரில் கவலையைச் சுமந்திருக்கும் அவரது
குடும்பத்தாரோடும், புதியஜனநாயக மக்கள் முன்னணித் தோழர்களோடும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைப்பகிர்ந்து கொள்கிறேன்.
தோழமையுடன்
திலக்
22.2 2015