தோழனே,
காலம் பறிக்கமுடியா வலிமை
தோழமையின் துடிப்புக்கிருக்கிறது
மானுடத்தின் விடியலிற்காய்
உன்வீச்சு
முரசறைந்திருக்கிறது
மக்களோடு கரம் இணைத்து
தெருவிறங்கு
தேசம் விடியுமென
இறுதிப்பொழுதிலும் இதயம் தவித்திருக்கிறது
களத்தில் கால்பதித்து
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகட்காய்
ஓங்கி ஒலித்தே சென்ற உயிர்மூச்சு
ஊடுருவிப்பாயும்!!
மக்கள் எழுச்சியில்
அசையும் செங்கொடியோடு
சேர்ந்து அணிவகுப்பாய்
மானுடத்தை நேசித்த தோழனே
மரணமேது,
செந்திரளாய் வாழும்!!
காலம் பறிக்கமுடியா வலிமை
தோழமையின் துடிப்புக்கிருக்கிறது
...... கங்கா