வாங்க... வாங்க... வாங்க...
போனாக்கிடையாது...
பொழுதுபட்டால்கிட்டாது...
மலிஞ்சவிலை...
குதிரைஓட்டத்தை மிஞ்சியசொகுசு...
குண்டு - துப்பாக்கி தூக்கியதை விடச்சிறந்த புதிசு...
வாங்க... வாங்க... வாங்க...
போனாக்கிடையாது...
பொழுதுபட்டால்கிட்டாது...
மலிஞ்சவிலை...
முகாமைத்துவபேப்பட்டங்கள் மலிவாக...
மிகஇலகுவாக...
உண்மையாய்ப் படித்திருக்கத் தேவையில்லை...
சரியாகப் படிப்பித்திருக்கத் தேவையில்லை...
சும்மா..! சுமாராகக்கதைக்கத்தெரிந்தாலே...
ரஜரட்டைபட்டம் 150,000 ரூபா
இசைநடனப்பட்டம் 81,000 ரூபா
களனிப்பட்டம் 75,000 ரூபா
பேராதெனியப்பட்டம் 3 இலட்சம்
யாழ்ப்பாணப்பட்டங்கள், தனித்தனி 5 இலட்சம்.
போனாக்கிடையாது...
பொழுதுபட்டால்கிட்டாது...
மலிஞ்சவிலை...
(சிறிலங்காவின் அதிகமான பல்கலைக்கழகங்களில் பேப்பட்டங்கள் விற்கப்படுகின்ற செய்தி)