கொலைகார ஒப்பந்தம்
கொழுந்து விட்டு எரிகிறது
எமையான இதயங்கள்
உறவறுந்து வேகிறது.
மீரியபெத்த தோட்டத்தின்
மலையணைத்த மண் சரிந்து
மக்கள் அழிந்த அவலத்தை
ஹல்தமுல்ல கொஸ்லந்த
மீரியபெத்த பகுதியெங்கும்
சோகத்தில் மூழ்கியது.
உறவிழந்து கதறுகின்ற ஓலத்தில்
மனிதர்கள் உறங்கிய லயன்களும்
கடவுள் முடங்கிய கோயிலும்
இன்றைய உலகத்து வரைபடத்தில்
திடீரென்று மறைந்து போன
பன்னூறு தொழிலாள மக்களின்
உயிரிழப்பின் ஏம்பலிப்புகள்
பாலும் தேனும் சேர்ந்தோடும்
பக்கமெலாம் பவுண் காயும்
செல்வங்கள் குவிந்த தேசம்
சிலோனாம் என்ற வஞ்சகமாம்.
வெளிநாட்டு வேலையென்று
வெள்ளைப் பண ஆசை வீசி
இரு நூற்றாண்டின் வக்கிரங்கள்
காலனியத்தின் மலைகள் எங்கும்
நாட்டி வைத்த தே மரத்தில்
பறித்தெடுக்கும் கொழுந்துகளில்
இம் மனிதர் இரத்தத் தேனீரும்
உடல் உருக்கிய ரப்பரும்
உலகெங்கும் சிவப்புக் கருப்பாய்த் தந்துவிட்டு..,
வெறும் நான்கு நிமிட நேரத்தில்
சிறிலங்கா மீரியபெந்த வன்மலை
தன் மண் முகட்டைச் சரிந்தோட
பன்னூறு மனித உயிர்களினை
டக்கென்று பிரிந்தோமாம் - இதில்
குழந்தைகளை இழந்த பெற்றோரும்
பெற்றோரை இழந்த குழந்தைகளும்
உறவுகளை இழந்த ஊராரும்
உற்ற துணையை இழந்த குடும்பங்களும்
அத்தனை வாழ்வின் அன்றாடக் கனவுகளும்
மன நிம்மதி அற்றுப்போன நித்திரையும்
மண் மூடி அமுக்கியாச்சு.